வெள்ளி, 27 நவம்பர், 2009

மாவீரன் பிரபாகரன்...!

இன்று மாவீரர்கள் தினம். மாவீரர்களுக்கு வீர வணக்கம். இந்த பதிவை இடும் முன் நிறைய யோசித்தேன்....வலையுலகில் ஏற்கனவே புலிகள் பற்றியும் தமிழ் தலைவர் பிரபாகரன் பற்றியும் கருத்துரைகள் கொட்டி கிடக்கிறது...இதில் நாமும் எழுத வேண்டுமா என்று...ஆனாலும் அந்த மாவீரனைப் பற்றி ஒரு இடுகை இடும் போது அது என் வலை பூவை மேலும் மெருகூட்டும் என தோன்றியதால் இந்த பதிவு.

மிகச் சிறு வயதில் ஜூனியர் விகடன் மூலமே எனக்கு தமிழீழ தலைவரை தெரியும்....பின்பு தலைவர் இறந்துவிட்டார் என்ற வதந்தியை ,அதை தாங்கி வந்த செய்தி தாளை படித்து கொண்டிருப்பது போல தலைவனின் படம் தாங்கி வந்த நக்கீரன் படிக்கும் போது ஓரளவிற்கு இலங்கை விவகாரம் எனக்கு பிடி பட்டிருந்தது....என் தந்தை எனக்கு அறிமுகம் செய்த ஓரிரு நல்ல பழக்கங்களில் ஒன்று புத்தகம் வாசிப்பது...அப்போதைய அரசியல் நாளிதழ்கள் பெரும்பாலும் நடுநிலைமை வகித்தன இலங்கை விவகாரத்தில்....

என்னையுமறியாமல் சிறு வதிநிலேயே பிரபாகரன் மேல் மிகப் பெரும் ஒரு மரியாதையை ஏற்ப்பட்டு விட்டது...நினைத்து பார்க்க முடியா சாகசங்களுக்கு சொந்தக்காரர்....பல நாடு உளவுத் துறையினரின் கொலை முயற்சி....துரோகங்கள்...அனைத்தையும் தாங்கி தமிழினம் தலை நிமிரச் செய்தவர் தலைவர் பிரபாகரன்...எந்த அரசாங்கத்திடமும் சில கேள்விகளுக்கு பதில் கிடைக்காத போது புலிகளிடம் மட்டும் ஏன் இத்தனை கேள்வி....

இதில் ஒரு படி மேலே போய் சில கத்து குட்டிகள் வலையுலகில், இயக்கத்தையும் அதன் கொள்கைகளையும் கேள்விகளோடு கேலியும் செய்திருக்கிறது.......கத்தியை கைகளில் பிடித்து ஒழுங்காக வெங்காயம் வெட்ட தெரியாத நண்டு சிண்டுகளெல்லாம் மௌஸ் பிடித்து இந்த விவகாரத்தில் கருத்து சொன்னது சற்று ஆதிரமூட்டினாலும்....ஆதவனை நாய் பழிப்பதால் அதன் புகழ் எப்படி மங்காதோ அதே போல தலைவனின் புகழும் காலத்தால் அழியாதது....

வல்லாதிக்க அரசாங்கங்களோடு நிராதரவாக மோதி லட்சக் கணக்கான தமிழர்களை வாழ வைத்த பிரபாகரன் மாவீரன். அவர் கேள்விகளுக்கப்பாற்பட்டவர்....அந்த மாவீரனின் புகழும் வீரமும் உலகம் அழியும் வரையிலும் மங்காதிருக்கும், அதுவே தனி ஈழம் பெற தமிழர்களை வழிநடத்தும் என்றும் நம்புவோம்.

9 கருத்துகள்:

இளந்(இழந்த)தமிழன் சொன்னது…

நானும் அலுவலகத்தில் இந்த மாவீரனை பற்றி பேசினால் இவனுக்கு வேற இல்லை என்று சொல்கிறார்கள். நம்மால் ஒன்றும் செய்து விட முடியாது என்றாலும் , இலங்கையில் நடப்பதை பற்றி யாருக்கும் தெரிந்து கொள்ளும் உணர்வில்லை.
சூரியனை பார்த்து நாய் குலைக்கும் உவமையை நீங்கள் நினைவுபடுத்திய பிறகுதான் மனது கொஞ்சம் ஆறுதல் அடைகிறது. உலகம் உள்ள வரைக்கும் தலைவர் புகழ் இருக்கும்.

லெமூரியன்... சொன்னது…

ம்ம்ம்....கேட்க சற்று வருத்தமாகவே இருக்கிறது இளன்தமிழா...நாம் என்று நம்முடைய இனத்தின் அடையாளத்தையும் மொழியின் மேன்மையையும் புரிந்து கொள்கிறோமோ அன்றுதான் இனம் தளைத்தோங்க விதை இடப் பட்டிருக்கிரதென நம்பலாம். நிற்க. ஈழத்தில் கண்டிப்பாக ஒரு சமரச தீர்வை எட்டுவார்கள் என எதிர்பார்ப்போம்...எல்லா விஷயங்களுக்கும் ஒரு மறு பக்கமும் மாற்று கருத்தும் உண்டென்பதை சிங்களர்கள் அறியாமற் போகமாட்டார்கள்...அதையும் மீறி தமிழினம் அழிய வேண்டும் என்று அவர்கள் நினைப்பார்களேயானால்....கண்டிப்பாக இன்னொரு போர் இலங்கையில் நிகழும்..அது நேரடியான ஆயுத போராக இருக்க வேண்டிய அவசியமில்லை....இலங்கையின் தொழில் துறையை துவம்சம் செய்ய வேண்டும்....அங்குள்ள தொழில் சாலைகளை தகர்க்க வேண்டும்...சுற்றுலாவை முடக்க வேண்டும்....இதற்க்கான சாத்திய கூறுகள் முற்றிலும் இல்லை என்று சொல்லி விட்டு போக முடியாது...!

புலவன் புலிகேசி சொன்னது…

மாவீரன் பிரபாகரன் வருவார்....என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது....

ஹேமா சொன்னது…

உங்கள் பதிவு மனதில் இன்னும் ஆரோக்யமான ஆவேசத்தை நெகிழ்வோடு தருகிறது நன்றி தோழரே.

லெமூரியன்... சொன்னது…

நன்றி ஹேமா......பிரபாகரன் என்ற அந்த ஒரு மந்திரச் சொல்லே போதும் .....ஒவ்வொரு தமிழனக்குள்ளும் ஆயிரம் யானை பலத்தை உண்டாக்கவல்ல மந்திர பெயர் அது....காலச் சக்கரம் எப்போதும் ஒருவருக்கு சாதகமாக சுழல்வதில்லை ஹேமா....இன்று வேண்டுமானால் இந்த இந்திய உளவுத் துறை வேசி மகன்களுக்கு ஆதரவாக அந்த சக்கரம் சுழன்றிருக்கலாம்..........ஆனால் நமக்கான சுற்று ஒன்று விரைவில் வரும்.......அப்போது நமது ஆடுகளம் நாமே ஆட்டக்காரர்கள்......சுழன்றாடுவோம் சூழ்ச்சிகளையருப்போம்..........வெற்றி வாகை சூடுவோம்............நம்பிக்கையோடு இருங்கள் ஹேமா............

லெமூரியன்... சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
லெமூரியன்... சொன்னது…

நன்றி புலிகேசி...அவர் கடவுள்....திராவிட இனத்தில் கடவுள்களெல்லாம் இனத்துக்காக பாடுபட்டவையே ஆகும்..........(ஐயனார், முனியசாமி, மாயாண்டி,சுடலைமாடன்) அந்த வகையில் நமது தலைவர் பிரபாகரன்........உடலால் எல்லாரும் இப்பூவுலகில் அழியும் தன்மை உடையவரே.......ஆனால் உள்ளத்தால் அழியாத் தன்மை பெற்றவர் சிலரே.......அதில் நம் கடவுள் பிரபாகரனும் உண்டென்பதை காலத்தாலும் காலனாலும் மறுக்க முடியாது.........உங்கள் நம்பிக்கையே எங்கள் நம்பிக்கை............நமது நம்பிக்கை என்றும் வீண் போகாது நண்பரே...........!

தியாவின் பேனா சொன்னது…

நம்புவோம்

ஜோதிஜி சொன்னது…

இலங்கையில் நடப்பதை பற்றி யாருக்கும் தெரிந்து கொள்ளும் உணர்வில்லை.

இது ஒன்றே உங்களுக்கான தகுதி.