திங்கள், 11 ஏப்ரல், 2011

காலணி..!

பிறந்த நாளுக்கு தங்கை அளித்த பரிசை பிரித்து பார்த்ததும் சற்று அயர்ச்சி சிறு வருத்தம்..! அது ஒரு நைக் வகையை சேர்ந்த விலையுயர்ந்த காலணி.!அதன் விலை ஐந்தாயிரம்.

எனக்கென்று சில கொள்கைகள் வைத்திருந்தேன்..! அதில் ஒன்று இந்த ஆசிய ரத்தத்தை உறிஞ்சிக் கொண்டு அமெரிக்காவில் தயாரனாதாக கம்பனியின் பெயர் பொறித்த பொருட்களை வாங்க கூடாதென்பது..! ஆனால் எதை கூடாதென நினைத்தேனோ அதே பொருளே எனக்கு பரிசாக..! மறுக்க முடியவில்லை, எனது உயிரினும் மேலாக நான் நேசிக்கும் என் தங்கையிடம் வந்த பரிசாதலால்..!

லேசாக பின்னோக்கி பயணிக்கையில் ...மனது ரணம் கொள்கிறது....இந்த காலணிக்காக எத்தனை எத்தனை உயிர்ப்பலிகள்....சக உயிரிடத்தில் வித்தியாசம் காணும் ஒரே கூருர மனம் படைத்த மிருக இனம் நம் மனித இனம் என நினைக்க தோனுகையில் கேவலமான ஒரு பிறவி இந்த மனித பிறவி என எண்ணத தோன்றுகிறது ...!

இன்றும் கூட இந்த இந்திய துணைக் கண்டத்தில் இதே கூருர மனம் படைத்த மிருக இனங்கள் நிறைய உலவுகின்றன சிறிதும் குற்றவுணர்வின்றி...பெரிதாக பெருமை பேசியபடிய தங்கள இனங்களை..!

கால்கள் கூசினாலும் பெருமையாகவே உணர்கின்றேன் எல்லோர்க்கும் ஈடாக நானும் காலனி அணிதிருக்கிறேன் இந்த தகவல்தொடர்பு மென்பொருள் பூங்காவில்..!
என்னைப்போல் எத்தனை எத்தனை தலித் இளைஞன் அன்னைவருக்கும் ஈடாக காலனி அணிந்து நடக்கிறான் எனும்போது..!

மாற்றங்களை நோக்கி ...மனித மனங்களின் மாற்றத்தை மனதில் கொண்டு இன்னும் இரு கைகளை விரித்து நேசத்துடன் சமமான வாழ்க்கை வேண்டி எதிர்நோக்குகிறோம்...ஆனால் எங்கள் கைகள் தட்டி விட பட்டு உதாசீனபடுத்தபட்டு அவமாங்களுடனான வேதனைகளையே பரிசளிக்கின்றன உயர் குடிகள் என சொல்லிக் கொள்ளும் இனங்கள்...

இவ்வளவு பொறுமையுடனும் சகிப்பு தன்மையுடனும் உலவும் இனங்களை உலகில் வேறெங்கும் காண இயலாது...காரணம் இப்படி அடிமை படுத்தப்பட்ட பல இனங்கள் தங்களுக்கென ஒரு நாட்டை உண்டாக்கி காட்டி கொண்டிருக்கின்றன சம காலத்தில்..!

ஆறாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக சந்தோஷத்துடன் அடிமையா இருக்க பழகிய இனம் இந்த திராவிட இனம்..! இவ்வளவு காலம் ஆன பிறகும் மனதி சிறிதும் குற்ற உணர்வின்றி நான் உயர்குடி என சொல்லிக் கொள்வதில் பெருமையடையும் இனங்களை நான் அணிந்திருக்கும் உயர்ரக காலனி கொண்டு அடித்தாலும் தகாது என்றே எனக்கு தோன்றுகிறது.