வியாழன், 4 நவம்பர், 2010

ரகசிய சிநேகிதன்... (2 )

தோழியின் விடுதிக்கு சென்று காத்திருக்கையில் ஒரு குறுஞ்செய்தி..அலைபேசியில்..HI என்று வந்திருந்தது...கண்டிப்பாக இது ஆல்டோ தேவதையாகத்தான் இருக்க வேண்டும் என கணித்து விட்டேன்... HELLO ALTO ANGELஎன பதிலனுப்பினேன்.. இரண்டு SMILEYக்களுடன் எப்டி கண்டு பிடிச்சே நாந்தான்னு என்று ஒரு ஆச்சிரிய குறி வேறு?? :) :) இந்த நிமிடம் எனது அலைபேசி உனக்காக மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கிறதென நினைக்கிறேன் என பதிலிட்டேன்...

பொய் சொல்கிறாய் நீ...உனக்கு நிறைய தோழிகள் இருக்க வேண்டும்...இல்லையென்றால் எப்படி ஒரு பெண்ணிடத்தில் அதுவும் முன்பின் அறிமுகம் இல்லா பெண்ணிடம் இரண்டு நிமிடங்களில் அலைபேசி என்னை பரிமாற்ற முடியும் என்றாள்?? :) :) இந்த கேள்வியில் LOGIC இல்லை என்று சொல்லிவிட்டு எனது பெயரை அனுப்பினேன்...

இரண்டு நிமிடங்கள் கழித்து அவளிடத்திலிருந்து அழைப்பு...நிர்மலா என்றாள். நிம்மி என்று அழைப்பேன் என்றேன்.. :) :) சிரித்து கொண்டே பொதுவாக அவளது குடும்ப வட்டத்தில் அப்படித்தான் எல்லோரும் அழைப்பதா தெரிவித்தாள்....சரி அப்போ நிம்மு ஓகே வா ?? என்றேன்?? இப்படி யாரும் அழைத்ததில்லை என்றாள்... ஏனோ அவளிடத்தில் பேசிக் கொண்டிருக்கும் போது அதிக படபடப்பு மனதிலும் உடலிலும்.....முதல் காதல் தோன்றும் பருவ வயதில் ஏற்ப்படும் நிலையில் நானிருப்பதாக
அவளிடம் கூற....பொய்...... பொய் என்று அவள் சிரிக்க...அலைபேசி வழியே கன்னத்தில் அறைந்தது அவளின் வெட்கம்.....

எனக்கு சிறிது ஆச்சிரியம்தான்...அறிமுகமே ஒரு பெண்ணிடம் இவ்வளவு சகஜமாக பேச முடியுமா என்று.....எங்க இருக்கீங்க என்றேன்?? கார்ல இருக்கேன் என்றாள்.
நான் சிறிது மௌனம் காக்க...அவர் குழந்தைங்கள அழைசிண்டு SWEETS N ICE CREAM வாங்க போயிருக்கார் என்றாள்..பின்பு சிறிது நேரம் பரஸ்பர அறிமுகப் படலம் ஓடியது....பின்பு அழைப்பு அணைக்கப்பட்டது...அவர் வருகிறார் என்ற ஒற்றை சொல்லோடு... சிறிது நேரம் கழித்து ஒரு குறுஞ்செய்தி...எக்காரணம் கொண்டும் தன்னை அழைக்கவோ அல்லது குறுஞ்செய்தி அனுப்பவோ கூடாது...நான் சொல்லும் வரை என்றிருந்தது.

தோழியும் தன்னுடைய LUGGAGE உடன் வரவேர்ப்பரைக்கு வந்திருந்தாள்...சென்ட்ரல் சென்றோம் ஆட்டோவில்..என்னடா வழக்கத்துக்கு மாற ஒரு பிரகாசம் தெரியுதே மூஞ்சில என்றாள்...நீதான் சென்னைல இருந்து கேளம்ப்ரேல...அதான் என்றேன்...சில கிள்ளல்களும் சில அடிகளும் வாங்கிக் கொண்டேன்... இரண்டாம் வகுப்பு ஏ.சீ யில் அவளை ஏற்றி விட்டு அவளின் LUGGAGEகளை ஒழுங்கு படித்து வைத்து விட்டு சுற்றிலும் பார்த்தால் எல்லாம் வட இந்திய முகங்கள்....பின்பு அமர்ந்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம்....சரி நா கிளம்றேன் என்றேன்...சில நொடிகள் பேசவில்லை...அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்...என்ன என்றாள்...ஒரு முத்தம் வேண்டும் என்றேன்... :( அல்ப்பம்டா நீ என்றாள் மென்புன்னகயோடு...கட்டிக் கொண்டு உதடுகள் சுவைத்தோம்...பக்கத்தில் அமர்ந்திருந்த வட இந்தியக் குடும்பம் அதீத ஆர்வத்தோடு எங்களை கவனித்தது.... ரயில் கிளம்பும் போது அடிக்கடி புனே வந்துட்டு போடா என்றாள்...சரி என்றேன்...சிறிது விழி நீர் அவள் விழிகளில்...

இரவு வீடு திரும்பியிருந்த பொழுது நிறைய எதிர்பார்ப்பு மனதினுள்...எப்போ அழைப்பு வரும் அவளிடம்(நிம்மு) இருந்து என்று?? இரவு ஒன்பதரை மணிக்கு நிம்முவிடம் இருந்து அழைப்பு... சிறிது பயத்தோடுதான் எடுத்தேன் அலைபேசியை.....நல்ல வேளை அவள்தான்....ஹாய் நிம்மு என்றேன்...சாப்டீங்கள வீடு வேலை முடிசிடீங்க்ளா போன்ற பேச்சுக்கள் தாண்டி வந்த பொழுது அவள் கேட்டாள் எதற்க்காக உனது அலைபேசி என்னை எனக்கு கொடுத்தாய் என்று...சிலரை பார்த்த உடன் அவர்களிடம் பேசத் தோன்றும்...அவ்வகை சேர்ந்த பெண் நீங்கள் ...அதனால்தான் என்றேன்...எதற்காக என்னுடைய எண்ணை குறித்து கொண்டீர்கள் என்ற பொழுது ...தெரியவில்லை என்றாள்...நாளை காலை காபி டே வில் சந்திக்கலாமா?? உங்களுக்கு விருப்பம் இருந்தால் என்றேன்.

இருபது நிமிடங்களுக்கு முன்னமே COFFEE DAY சென்று காத்திருந்தேன். நீல நிற சல்வார் கமீஸில் நிம்மு. அழகா இருக்கிறீங்க என்றேன். சிரித்துக்கொண்டே வாங்க போங்கலாம் வேண்டாம் பேர் சொல்லி கூப்டுங்கோ..நா சின்ன பொண்ணு என்றாள்.. :) ஆன்ட்டி ய பொண்ணுன்னு கூப்டா சமுதாயம் என்னை உதைக்கும் என்றேன்...சின்ன குழந்தைகளுக்கு வேணா நா ஆன்ட்டியா இருந்துட்டு போறேன்....உங்களை மாதிரி வளந்தவாளுக்கேலாம் இல்லை என்றாள்... :)

கல்லூரி முடித்த உடன் தனக்கு திருமணம் முடிந்து விட்டதெனவும்...வேலைக்கு செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டதாகவும் சொல்லியது நிம்மு...கல்லூரி முடித்த வருடத்தை கணக்கில் கொண்டு பார்த்தல் நிம்மு என்னை விட இரண்டு வயது சிறியவள்..சிரித்துக் கொண்டே அவளிடம் இதை சொன்ன பொழுது அவ்வளவு சந்தோசம் அவளுக்கு...உங்களை அங்கிள் நு கூப்டலாமா என்றாள் :) :) எல்.கே.ஜி படிக்கும் குழந்தைகளை தவிர்த்து மற்றவருக்கேலாம் நான் அங்கிள் இல்லை என்றதும்...சப்தம் இட்டு சிரித்தோம்... சரி அப்போ அண்ணான்னு கூபிட்றேனு சொன்னாள்....LOGIC ஒத்து வராதுமா என்றேன் :) :) என்னவரையே நா அப்டிதான் கூபிட்றேன் என்றாள் கண் சிமிட்டி...அய்யோ எனக்கு தெரியாம போச்சே...சரி சரி....அப்போ அப்டி கூப்ட்டா மட்டுமே சந்தோசம் என்றேன்.... நிறைய சிரித்துக் கொண்டே இருந்தோம் இருவரும்....

எட்டு வயதில் ஒரு பையனும், ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தையும் அவர்களுக்கு...அவளின் கணவர் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் ப்ராஜெக்ட் மேனேஜர்....வேலைக்கு செல்ல வேண்டும் ...அப்புறம் என்னவனை கண்டு பிடித்து அவனோடு பழக வேண்டும்...அவனுடன் இறுக்கி கட்டிக் கொண்டு மோட்டார் சைக்கிள்லில் பறக்க வேண்டும் என்று நிறையா ஆசைகள் வைத்திருந்தேன் கல்லூரி காலத்தில்..ஆனா ஆண்களை நிமிர்ந்து பார்க்கவே பயமா இருக்கும் அப்போ.....படித்து முடித்த உடனே திருமணம் ஆகிவிட்டது ...இவர் அப்போவே CAR வைத்திருந்தார், ஆக அந்த கனவெல்லாம் கனவாவே போச்சு எனச் சிரித்தாள் ..ஆனா ....ரொம்ப சந்தோஷமா இருக்கேன்..என்றாள். காபியும் கேக்குகளும் சாப்பிட்டு முடித்திருந்தோம். விடைபெற மனதில்லை ...யோசித்துக் கொண்டே கேட்டேன் ஒரு ரைட் போலாமா நிம்மு என்று?? வேண்டாம் என்று சொல்லி ஆட்டோவில் ஏறி கிளம்பி விட்டாள்...! ஒரு சிகரெட் பிடித்தால் நன்றாக இருக்கும் என்று தோணவே பக்கத்தில் உள்ள கடைக்கு போக எத்தனிக்கும் போது ஆட்டோ திரும்ப வந்து என்னருகில் நின்றது :) சம்பல் பள்ளத்தாக்கு விடுதலை வீரர்கள் போல தன்னுடைய துப்படாவினால் முகம் மறைத்திருந்தாள் நிம்மு...கால் மெட்டிகளை பத்திரமாக கைப்பையில் வைத்திருந்தாள். போகலாம் என்றாள்.

அவள் கண்களிலே அவ்ளோ ஒரு சந்தோசம். கிளப்பினேன் எனது பைக்கை. கோடம்பாக்கம் பாலம் வரை எங்கள் இருவருக்குமிடையே சிறிது இடைவெளி இருந்தது வண்டியில். ராதா கிருஷ்ணன் சாலையை தொட்ட பொழுது பறக்க வைத்தேன் வண்டியை...இருக்க கட்டிக் கொண்டு தோள்களில் முகம் புதைத்துக் கொண்டது நிம்மு...
அவ்வளவு வேகம்.நெடிய சென்னை சாலையில் பறந்து கொண்டிருக்கும் காதலர்களின் வாகனகளில் ஒன்றானது எனது வாகனமும்........ பயத்திலும் பரவசத்திலும் மிக மிக இறுக்கமாக எனை பற்றிக் கொண்டதால் நிம்முவின் நகங்கள் அழுந்தக் கீறி விட்டது எனக்கு...வண்டியை எங்கும் நிறுத்தவில்லை..தென் சென்னை முழுவதும் ஒரு சுற்று சுற்றி பின்பு நிம்மியின் வீடருகில் சென்ற பொழுது வண்டியை நிறுத்த சொல்லி ஒரு பக்கமாக உட்கார்ந்து கொண்டது நிம்மு...துப்பட்டாவை தோள்களில் போர்த்திக் கொண்டது...உயர்தட்டு அடுக்குமாடி குடியிருப்பு காவலாளி பவ்யமாக அவளுக்கு வணக்கம் வைக்க, வண்டியை பார்க்கிங்கில் நிறுத்தினேன்.

வீடு ரொம்ப அழகாக இருந்தது. காபி கொடுத்தது நிம்மு. குடித்து விட்டு கிளம்பும் வரை பேச தோன்றவில்லை. அமைதியாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே இருந்தோம் புன்னகையோடு. சரி கிளம்பறேன் என்றேன். சரி என்ற நிம்மு என்னருகில் வந்து எனை மெலிதாக அனைத்துக் கொண்டது. கன்னங்களில் முத்தம் வைத்தது....இது என்ன உறவென்றேன். FRIENDSHIP என்றது நிம்மு. சிரித்து விடை பெற்றேன் நிம்முவிடம். கண்டிப்பாக நிம்முவின் வாழ்வில் மறக்க முடியா நாளாக இது இருக்கும் என்று எனக்கு தோன்றியது.

வண்டியை கிளப்பி வெளியே வரும்பொழுது வாயிற் காவலாளி என்னை வித்தியாசமாக பார்ப்பது போல இருந்தது....வானம் இருட்டி விட்டிருந்தது...லேசாக தூறல் விட்டுக் கொண்டிருந்தது... ஒரு சிகரெட் பிடித்தால் நன்றாக இருக்கும் என தோணுது .