ஞாயிறு, 8 ஜூலை, 2012

புகை..!


எனக்கு நினைவு தெரிய வரும்பொழுது நான் ரசித்து உள்வாங்கிய புகை நிலக்கரி ரயில் எஞ்சினில் இருந்து வரும் கரும்புகை. ஏனோ அந்த மனமும் அந்த புகையும் சுவாசித்தாலே ஒரு சந்தோசம் பிரதிபலிக்கும்.பின்பு சிறிது வளர்ந்த பிறகு அம்மாவுடன் பேசிக் கொண்டிருக்கையில் அவர்களுக்கும் என்னைப் போலவே கரி எஞ்சினில் வரும் புகை பிடிக்கும் என தெரியவந்தது.

அப்பாவிற்கு புகைக்கும் பழக்கம் இருந்தது. சிறு வயதில் அப்பா வீட்டிலேயே புகைப்பார். அப்பா காலைகடன் முடித்து வந்த பிறகு அடுத்ததாக யாரவது அந்த கழிப்பறையை பயன்படுத்தும் போது அங்கு முழுக்க முழுக்க சிகரெட் புகை படர்ந்திருக்கும். ஆனாலும் புகை பிடிப்பது தவறு என்றும் அது பெரியவர்கள் செய்ய வேண்டிய காரியம் என்றும் பார்த்து கற்றுக் கொண்டோம் நானும் அக்காளும்.

இயல்பிலேயே சிறுவர்களுக்கு பெரியவர்கள் போல வாழ வேண்டும் ,அவர்கள் செய்யும் செய்கைகளை நானும் செய்ய வேண்டும் என்ற ஒரு எண்ணம் வரும். அது எங்களையும் தொற்றிக் கொண்டது. அக்காளும் நானும் அப்பா போல புகைத்து பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்த போது எனக்கு நான்கு வயது. அக்காளுக்கு ஆறு வயது. அப்பொழுது சிசர்ஸ்..ப்ரீக்லே வகை சிகரெட்டுகள் சற்று அதிகம் விற்ற பிராண்டுகள். அப்பா அப்போது சிசர்ஸ் தான் பிடிப்பார்.

அப்பொழுது பொழுது போக்க பெரிய விஷயங்களெல்லாம் கிடையாத எண்பதுகளின் ஆரம்பம். ஆல் இந்திய ரேடியோ கூட சில மணித்துளிகள் செய்தியும் சில திரைப் பாடல்களுடன் நிகழ்ச்சியை முடித்துக் கொள்வார்கள். வீட்டு பெண்கள் பெரும்பாலும் புரணி பேசியே காலம் களிப்பர். அம்மாவிற்கு அடுத்தவர் பற்றி பேச பிடிக்காத காரணத்தால் பக்கத்துக்கு வீட்டுகாரர்களுடன் பழகவே மாட்டார். வானொலி கேட்ட பிறகு புத்தகம் படிக்கவோ அல்லது படுத்துரன்கவோ செய்வார் பெரும்பாலும். குழந்தைகள் நாங்கள் எப்பொழுதும் தெருவினில் திரிவோம்.ஆதலால் அம்மாவிடம் இருந்து பெரிய கண்காணிப்பு எங்களுக்கு இல்லாத காரணத்தால் புகை திட்டம் சற்று தைரியத்தோடு ஆரம்பித்த்தது.

அது ஒரு செவ்வாய் அல்லது புதன்கிழைமை என நினைக்கிறேன். அப்பா பயன்படுத்தி மீதி வைத்திருந்த பெட்டியிலுள்ள சிகரெட்டுகளில் ஒரு முழு சிகரெட் எடுத்துக் கொண்டு நானும் அக்காளும் வீடிற்கு பின்புறம் உள்ள தோட்டத்திற்கு சென்றோம். அப்பா வரக்கூடாதே என்ற பயமும் சக தோழர்கள் பார்த்தால் போட்டு குடுத்து விடுவார்களே என்ற பயம் வேறு புரட்டி எடுத்தது.சிகரெட்டை அக்காள் வாயில் ஸ்டைலாக பிடித்துக்கொள்ள நான் பற்ற வைத்தேன். அப்போது பில்டர் சிகரெட் புழக்கத்திற்கு வராத நேரம். புகை நேராக நுரையீரலுக்கு இறங்கும். பற்ற வைத்த உடன் அக்க ஒரே இழு இழுத்து விட்டாள். கதறி இருமிக் கொண்டே அழுகிறாள் தொண்டை எரிச்சலால். ஆனாலும் எனக்கு ஆர்வம் விட்டு போகவில்லை. வாங்கி நானும் ஒரு இழுப்பு புகையை இழுத்தேன்....நெஞ்சாங்கூடு எரிந்தது போல இருந்தது...இருமிய இருமலில் பார்வை வரவில்லை சில நொடிகளுக்கு...கண்களில் இருந்து நீர் கொட்டுகிறது...இருந்தாலும் சில நொடிகள் கழித்து சிரித்துக் கொண்டே அழுகிறோம் நானும் அக்காளும்.

சரியாக அப்பா தெருவில் வந்து வீட்டிற்க்கு முன்னே உள்ள கதவை திறந்து சைக்கிளை உள்ளே ஏற்றிக் கொண்டிருக்கிறார். என் கையில் பற்ற வைத்த சிகரெட். என்ன செய்வதென்று தெரியவில்லை. கண்ணுக்கு புலப் படுகிற பகுதியில் எறிந்தால் கண்டிப்பா அப்பா கண்டுபிடித்து விடுவார். சமயோசிதமாக சட சடவென்று அக்கா மண்ணில் சிறிய குழி பறித்து சிகரெட்டை குழியுனில் போட்டு மூடிவிட்டாள்.வாயில் அந்த சிகரெட் மனம் வருமே என்பதெல்லாம் அப்பொழுது தெரியாது...ஆனாலும் அப்பா வீடிற்கு வந்துடன் ஒரு சிகரெட் பற்றவைத்ததால் நாங்கள் தப்பித்தோம். இன்றும் அக்காவை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும்போது இந்நிகழ்வை அசைபோட்டு சிரித்துக் கொள்வோம்.

அப்பா பெரும்பாலும் என்னை கடைக்கனுப்புவார் சிகரெட் வாங்கிவரசொல்லி. அப்படி செல்லும் பொழுதெல்லாம் சிகரெட் போக மீதம் உள்ள காசினில் ஒரு ஐம்பது பைசா பர்பி (அப்பொழுது அதற்க்கு பெயர் பால்கோவ) வாங்கிக் கொள்வேன். அப்பா ஒன்றும் சொல்ல மாட்டார். இதற்காகவே கடைக்கு எப்பொழுதும் நானே செல்வேன்.பல விஷயங்களில் அப்பா போல பெரியவனான பிறகு வர வேண்டும் என்று எண்ணிய எண்ணங்களில் ஏனோ சிகரெட் பிடிக்க வேண்டும் என்று தோணவே இல்லை.

பின்பு அதுபற்றியெல்லாம் மறந்து போக கூடிய பருவ வயதிற்கு வந்த பிறகு பார்வைகள் மாறிப்போனது பார்க்கின்ற விசயங்களில்.நண்பர்களெல்லாம் புகைக்க கற்றுக் கொள்ள பழகியிருந்தனர். ஆனால் நான் அதில் பெரிதாக ஈடுபாடு காணவில்லை. ஆனால் குடிக்க பழகியிருந்தேன் என்னுடைய எட்டாம் வகுப்பில். பத்தாம் வகுப்பில் நண்பர்கள் கேலி செய்தனர்..புகைக்காமல் இருப்பதற்காக....சரி குடிப்பது எப்படி என கற்றுக்கொடுத்த எனக்க இந்த சில்வண்டுகள் சவால் இடுகின்றன என்ற நெனைப்பில் ஒரு வில்ஸ் வாங்கி பற்ற வைத்தேன் முதன்முதலாக...இதற்க்கு முன் புகைத்ததில்லை என்றாலும் குமார் மாமாவின் நண்பர்கள் எப்படி புகைக்க வேண்டும் theoritical class எடுத்திருந்தனர். ஆதலால் மற்றவர்கள் போல புகையை உள்ளிழுத்து இருமி கற்றுக்குட்டி என காமிக்காமல்...புகையை உள்ளிழுத்து வாய்க்குள் வைத்துகொண்டு ஆனால் கன்னம் உப்பாமல் புகை உள்ளிழுத்து விடுவதை போலவே வெளியிட்டேன்...நண்பர் கூட்டம் வாய் பிளந்தது...மீண்டும் கூட்டத்தில் பெரிய பையன் அந்தஸ்தை பிடித்தேன்..அவர்களுக்கெல்லாம் ஆச்சரியம் என்னவென்றால் எப்படி அவர்களுக்கு தெரியாமல் அவர்களுக்கு முன்னமே நான் புகைக்க கற்றுக் கொண்டேன் என்பதுதான்.(நீங்கலாம் தின்னைய பிடிச்சு நடக்குபோதே நான் சு.....யை பிடிச்சு நடந்தவண்டா என்ற வசனத்தில் அப்படி ஒரு இமேஜ் உருவாகி விட்டது )


உண்மையில் புகையை ஆழ உள்ளிழுத்து அந்த புகையை அப்படியே நுரையிரல் முழுவதும் நிரப்பி வைத்து சில நொடிகள் கழித்து வெளியிடும் போது சில நொடிகள் கண்கள் சொருகி தலை லேசாக கிர்ரடித்து மீண்டு சமநிலைக்கு வரும் இந்த புகை இன்பத்தை நான் கல்லூரி முடித்த பின்பே உணர பழகியிருந்தேன். மேலும் கல்லூரி இறுதி வரையிலும் தவறாமல் உடற்பயிற்சிக் கூடத்திற்கு போனதால் உடல் மீது அலாதி கவனம் வைத்திருந்தேன். அதற்கேற்ற வாறு அகலமான புஜங்களும் சற்றே பெரிய சதுர மார்பும் கொண்டிருந்த நேரம். பசும்பொன் உடற்பயிற்சி கூடத்தில் உடன் பயிற்சி செய்யும் நண்பர் கூட்டம் தட்டு கெட்டவன் என செல்லமாக அழைப்பர்.

புகையின் இன்பம் உணர ஆரம்பித்த பொழுது சென்னை வந்துவிட்டேன் வேலைக்காக. ஒரு முன்னணி வாகன உற்பத்தி நிறுவனத்தில் வேலை. வேலை இடைவேளையில் ஒரு தம் அடித்துவிட்டு வேலை செய்வது சற்று கெத்தாகவும் சற்று பெரிய ஆள் என்பதைபோலவும் உணரவைத்தது. மேலும் புகை பழக்கத்தால் ஒரு பெரிய நண்பர் கூடம் உருவானது அங்கு.

பின்பு மெதுவாக புகையினில் ருசி தேட ஆரம்பித்தது. வித விதமான சிகரெட் பிரண்டுகளை சுவைக்க பழகி இருந்தேன். மால்பரோ லைட்ஸ் திருப்பில் பைவ்..கிங் எட்வார்டு, கிளாச்சிக் மெந்தால், கிளாசிக் மைல்டு, இன்னும் பல சுவைகளில் புகை பிடித்தேன். இதில் சிகார் வேறு பின்பு சேர்ந்து கொண்டது..அதிலும் ஒரு சிகார் 90 ரூபாய்க்கு வாங்கி புகைப்பேன்.அதில் ஸ்ட்ராபெரி ப்லேவர்களும் ஒயின் பிலேவரும் எனக்கு பிடித்தவை. சிவந்திருந்த உதடு சிறிது சிறிதாக கருக்க ஆரம்பித்திருந்தது. ஊருக்கு போகும்போளுதேல்லாம் அம்மா கேட்க்கும் முக்கிய கேள்விகளில் உதடு ஏன்டா இப்டி கருத்து கிடக்கு என்பதும் ஒன்றானது.

இந்த நேரத்தில்தான் ஜிஷா என்னை விட்டு பிரிந்து சென்றாள்...அப்பொழுதுதான் கஞ்சாவை சுவைக்க கற்றுக் கொள்ள நேர்ந்தது...பின்பு அதிலேயே மிதக்க ஆரம்பித்தேன் சிறிதுகாலம். பின்பு தகவல் தொழில்துறையில் வந்ததால் ஆறாம் விரலாய் மாறிப் போனது சிகரெட்.

பின்பு வாழ்வில் வந்த அத்தனை பெண்களும் தங்களுக்கு என்னிடம் பிடிக்காத விஷயமாக சொன்னது இந்த புகைப் பழக்கத்தை.

வீட்டில் யாருமற்ற சமயம் வர சொல்லும் லாவண்யா கூட சிகரெட் பிடிச்சிட்டு வராதடா வீடு முழுக்க சிகரெட் ஸ்மெல் தெரியுமா என படுக்கையில் அவளுடன் இருக்குபோழுது தலைகோதி சொன்னாள்.

சற்று விதிவிலக்கு என் இசைநாயகி. குறைசிக்கோடா என மட்டும் சொல்வாலோயிய நிறுத்து, பிடிக்கல போன்ற வார்த்தைகள் அவளிடம் வராது. ஆனால் அவளை பார்க்க போகிறேன் என்றால் அதற்க்கு மூன்று மணிநேரதிகும் மேலாக புகைப்பதை நிறுத்திவிட்டுதான் அவளை சந்திப்பேன்.
புகைப்பதில் உள்ள ஒரு மந்திர விஷயம் என்னவென்றால் ...கன நேரத்தில் சிறு புன்னகையோடு ஒரு நட்பு உருவாக காரணமாகிவிடும்.கடும்பனிப் பொளிவிர்க்கிடையில் அமெரிக்கா சென்று இறங்கிய பொழுது ஒரு டெர்மினலில் இருந்து இன்னொரு டெர்மினலுக்கு ரயிலில் செல்ல வேண்டும். அப்படி செல்ல காத்திருக்கும்பொழுது கடும் குளிர். (குளிருடை போர்த்தியும் கூட)
ரயில் நிலையத்தை சுத்தபடுத்தும் ஒரு கறுப்பின தோழனும் ரயிலுக்காக காத்திருந்த சில வெள்ளையரையும் தவிர அங்கு யாரும் இல்லை. எனக்கு வெள்ளையரிடத்தில் பேச பிடிக்கவில்லை(தாழ்வுமனபான்மையாகவும் கூட இருக்கலாம்) கறுப்பின தோழனிடம் ஒரு சிகரெட் வேண்டும் என்றேன்.சிரித்தபடியே கொடுத்து விட்டு பற்ற வைத்தபடியே நீ தென்னமெரிக்க நாட்டை சேர்ந்தவனா என்றான். இல்லை இந்தியன் என்றேன். அவனும் பற்ற வைத்துக் கொண்டான். சிறிது பேசிய பிறகு நான் போவதற்கான ரயில் வந்தது. எனக்கு விளக்கமாக எங்கு இறங்க வேண்டும் என்று சொல்லி அனுப்பினான். பின்பு அமெரிக்காவும் அமெரிக்கர்களும் பரிச்சயமான பொழுது புகைபழக்கதால் கம்பனியின் மிகபெரிய பொருப்பிலுள்ளவர்களிடம் கூட மிக எளிமையாக ஒரு அறிமுகம் கிடைக்க உதவியது.

இவ்வளவு தூரம் புகையும் நானும் பின்னிப்னைதிருந்தாலும் நான் புகைக்கு அடிமையல்ல என்பதை என் உள்மனம் சொல்லிபடியே இருந்தது. அதற்கேட்ட்ரவாறு சத்தியசோதனை செய்ய சில நிர்பந்தங்கள் நேர்ந்த பொழுது சிலகாலம் புகைக்காமல் இருந்தேன்..ஆனால் அவையெல்லாம் ஆறு மாதங்களில் முடிவுக்கு வந்தது. உன்னால் புகைக்காமல் ஒரு மணி நேரம் இருக்க முடிந்தாலே நீ புகைக்கு அடிமையில்லை என ஒரு மருத்துவ அறிக்கை மேற்க்கொள்காட்டியது நினைவுக்கு வந்து தெம்புதந்தது. ஆயினும் சிலசமயம் நம்மால் நிறுத்த முடியாதோ என ஒரு அச்ச உணர்விற்கு கொண்டுசெல்லும் நண்பர்கள் புகையை நிறுத்த முயன்று தோற்ற கதையை கேட்க்கும்பொழுது.


இப்படியான ஒரு நாளின் மாலைப் பொழுதில் ஏதோ ஒரு காரணத்தினால் மனம் சோர்வுற்றிருந்த பொளுநிதில் அடுத்தடுத்ததாக மூன்று சிகரெட்டுகள் பிடித்து விட்டிருந்தேன்...நான்காவது சிகரெட்டை பிடிக்க ஆரம்பித்த பொழுது மனதிற்குள் எழுந்த கேள்வி எதற்க்காக இதை புகைக்கிறேன்?என்ன கிடைத்தது இந்த புகையினால்? எந்த கிக்குகாக பிடிக்க ஆரம்பித்தேனோ..அதெல்லாம் ஒரு மாத புகைப்புக்கு பின் காணாமல் போனது...அதையும் மீறி எதற்காக இதை பிடிக்கிறேன் என எண்ணம் ஓடிக்கொண்டே இருக்க...பிடித்துக் கொண்டிருந்த சிகரெட்டை தூக்கி தூர வீசினேன். அதன்பின்பு ஒரே ஒரு சிகரெட் மட்டும் என் காரினில் வைத்திருந்தேன். ஒரு வாரத்திற்கு மட்டும் சிறிது அந்த புகை எண்ணம் வரும்போது காருக்கு சென்று வைத்திருக்கும் சிகரெட்டை ஒருமுறை முகர்ந்து பார்ப்பேன். அப்டியே திரும்ப என் இருக்கைக்கு வந்துவிடுவேன். பதினைந்துனாட்க்களுக்கு பிறகு அந்த மிச்ச ஒரு சிகரெட்டையும் வீசிவிட்டேன். இன்றோடு ஒன்றரை வருடம் ஆகிவிட்டது நான் புகைப்பதை நிறுத்தி. 21 வயதில் ஆரம்பித்து 32 வயது வரை பிடித்திருக்கிறேன். இதுவே சற்று அதிகம் என தோனுகிறது. இன்னொரு முறை எனக்கு சிகரெட் ஆசை வருகிறதென்றால் அது கண்டிப்பாக என்னுடைய 52ஆவது வயதில்தான் என முடிவெடுத்திருக்கிறேன். :-) ஆனால் அப்பொழுது அப்படி ஒரு ஆசை வருமா என்பது சந்தேகமே. இப்பொழுதே புகைபிடிப்பவர்களை கடந்து செல்கையில் அந்த புகையை சுவாசித்தாலே எனக்கு இருமல் வருகிறது. :-)

என் கூட இருந்து என்னை கவனிக்கும் அலுவலக நண்பர்கள் மற்றும் சக அலுவலர்கள் கூட வியப்போடு எப்படி முடிந்தது உங்களால் என கேட்க்கிறார்கள். வியப்படைய ஒன்றுமில்லை....ஏனென்றால் புகை எனக்கு அடிமையாய் இருந்ததே தவிர நான் அதற்க்கு அடிமை இல்லை.
இதை மனதில் நிறுத்திக்கி கொள்ளுங்கள் என்றேன்..வரிகளை சிலாகித்து கூறி விட்டு மற்றுமொரு தம் போட கிளம்பி விட்டார்கள் சக தோழர்கள். :-)