திங்கள், 12 செப்டம்பர், 2011

சைக்கிள் காலங்கள்..!



சைக்கிள்..!
70 களின் மத்தியில் இருந்து 80பதின் இறுதி வரைக்கும் பிறந்தவர்களின் பருவ வயது காதல் இந்த சைக்கிள்.!
ஆனால் என்னுடைய காதல் அதுவல்ல..அடுத்த பதிவில் சொல்கிறேன் என்னுடைய காதல் எதுவென்று..

ஆனால் என்னுள் மறையாத பசுமையான சைக்கிள் காலங்கள் இன்னும் இருக்கின்றது..பொதுவாக இரண்டு மூன்று வயதில் மூன்று சக்கர சைக்கிள் கொஞ்சம் வசதியான குழந்தைகளுக்கு கிடைத்துவிடும்(அந்த காலத்தில்) அரசாங்க உத்யோகத்தில் என் தந்தைக்கு அவ்வளவு பணம் நிற்கவில்லை கைகளில். ஆக எனக்கு சைக்கிள் 7 வயதில்தான் அறிமுகம். ஆனால் சைக்கிள் பற்றிய கனவு உள்ளுக்குள் ஊற ஆரம்பித்தது மூன்று வயதில். அப்பா அலுவலகம் முடித்து இரவு வீடு வந்த உடன் என்னுடைய முதல் வேலை..அப்பாவுடைய சைக்கிளில் டைனமோ உயிர்பிக்கும் பொத்தானை அழுத்தி டைனமோவை சைக்கிள் டயரில் உராயவிட்டு பின் பெடல்களை வேகமாக சுற்றுவேன்...பளீரென எறியும் முன் விளக்குகளை பார்க்கும்போது பரவசம் பரவும் அவ்வயதில்.

மண்ணெண்ணெய் ஊற்றி திரியிட்டு தீ கொளுத்தி கொள்ளும் வகை முன் விளக்குகளும் அப்பொழுது பார்த்திருக்கிறேன். சுவாரசியமான தகவல் சொல்லவா? அப்பொழுது முன்விளக்குகள் பொருத்தாத சைக்கிள்களை போக்குவரத்து காவலர்கள் பிடித்து அபராதம் போட்டு விடுவார்கள். மேலும் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கொள்ளும் சம்பவங்கள் சாதரணமாக நடக்கும். இப்பொழுது சீரிசெல்லும் பைக்குகளை காணும்போது நம்மக்களின் சாலை அறிவு முன்னேறியிருப்பதை அறிய முடிகிறது.

ஒரு மணி நேரத்திற்கு 50 பைசா என எடுத்தேன் என் முதல் சைக்கிளை. பெரிதாக யாருடைய துணையுமின்றி இரண்டே நாட்களில் கற்றுக் கொண்டேன். இறக்கை முளைத்ததை போல உணர்த்த தருணம் அது. குறைந்தது இரண்டு மணிநேரம் சைக்கிள் ஒட்டவில்லை என்றால் கை கால் ஓடாது என்னும் நிலைக்கு போய்விட்டேன். இப்பொழுது போல அந்த காலத்தில் வாகன நெரிசல் கிடையாது என்பதால்..சாயந்திர நேரத்தில் சக நண்பர்களுடன் பந்தயம் வைத்து கொண்டு வேகமாக வண்டியோட்டியாக வந்தது இன்னும் பசுமையாக மனதினில். ஒரு பெரிய கல்லை போட்டு வேகமாக வந்து அதன்மீதேறி பரந்த படி சைக்கிளில் தாவுவது ஒரு சாகசம். தவறி விழுந்து இடுப்பில் அடிபட்டு ரத்தகளறியாக வீடு சென்றதும் நினைவிற்குள் வருகிறது..!

பின்பு சடாரென ராணுவ பள்ளிக்கு சென்றதால் சைக்கிள் சாகசங்கள் முடிவுக்கு வந்தது. ஆனால் அவை நெடு நாட்கள் நீடிக்கவில்லை. நான்காண்டுகளில் அப்பள்ளியை விட்டு வெளியேறி மீண்டும் நெல்லைக்கு வந்த பொழுது சைக்கிள் மீது ஒரு அன்பு மிஞ்சி இருந்தது. ஆனால் காதல் இல்லை. நெல்லையில் ஒரு பள்ளியில் சேர்ந்த இரண்டாவது நாள் அப்பா என்னைக் கூட்டிச் சென்ற இடம் ஒரு சைக்கிள் விற்பனை நிலையம். என்ன சைக்கிள் வேண்டும் என்ற பொழுது நான் சொன்னது BSA.SLR. கருப்பு வண்டி என்னுடையது.வண்டி வாங்கிக் கொண்டு வீடிற்கு வந்த உடனே பக்கத்துக்கு வீட்டு ரிட்டயர்டு போலிஸ் தாத்தா வந்தார். தினமும் சைக்கிளை எப்படி என்னை ஊற்றி துடைத்து வைக்க வேண்டும் என்று வகுப்பெடுத்தார். அந்தகாலத்து மனிதர்கள் சைக்கிளை துடைத்து வைப்பதை ஒரு கலையாகவே கொண்டிருந்தனர். முதல் இரண்டு நாட்கள் மட்டுமே துடைத்து வைத்தேன். பின்பு இது என்னுடைய சைக்கிள் என்ற மனநிலை மட்டும்தான் இருந்தது. அதை துடைத்து பராமரிக்க வேண்டும் என்பது மனதில் நிற்கவில்லை.

பதின்ம வயது என்பதால் மற்ற எந்த விஷயத்தையும் விட பெண்களே அதிமுக்கியமாக தெரிந்தனர். பள்ளி விட்டதும் ரோஹிணியை பின்தொடர்வதுதான் என் தலையாய பணி. பருவடையும் வரை சகஜமாக பேசிதிரிந்தவள்தான் இவள்.ராணுவப் பள்ளியில் இருந்து ஒவ்வொரு விடுமுறைக்கு வரும்பொழுதும் அவளுடன் கொஞ்சம் அதிகமாகவே நேரம் செலவழிப்பேன். ஆனால் நான் ஒரேடியாக இங்கு திரும்பி வரும்பொழுது அவளிடம் நிறைய மாற்றம். என்னை பார்த்த உடன் வரும் குறும்பான சிரிப்பை காணவில்லை. தலைகுனித்து செல்கிறாள். பெயர் சொல்லியளைத்தால் நிற்காமல் சென்று விட்டாள். பின்பு தொடங்கியதுதான் இந்த சைக்கிள் பின்தொடர்தல். பேசிக்கொள்ளவே மாட்டோம். சமயங்களில் சாலையில் ஆள் அரவமற்று இருந்தால் அவள் அருகே சென்று பேசுவேன். சமயங்களில் காதல் மொழி கூட சொல்வேன். தலைகுநிதவாறே அவள் சைக்கிளில் வந்து கொண்டிருப்பாள். முதலில் சற்று வேகமாக போக எண்ணினாள். நானும் அவள் வேகத்திற்கு ஈடுகொடுக்க...பின்பு வேகம் பற்றிய என்னத்தை கை விட்டாள்.

ஆனாலும் நான் அவளை தொடர்வதை சமயங்களில் சிறிதே புன்னகை செய்து ரசிப்பதாக தெரிவித்தாள். கனவினில் எல்லாம் அவள் மட்டுமே. முதன்முதலாக அவள் தாவணி கட்டிக் கொண்டு சிறப்பு பயிற்சி வகுப்பிற்கு ஒரு சனிக்கிழமை மாலை போகும் போது ஆள் அரவமற்ற சாலையில் வைத்து அவளில் இடுப்பை கிள்ளி விட்டேன். கண்கள் கலங்கிய படி சொன்னாள் இனி என் பின்னால் வராதே என்று. அதோடு அவள் என்னை பார்ப்பதை கூட தவிர்க்க ஆரம்பித்தாள். வலிகளோடு முடிந்து போன ஒரு முதல் காதலை உயிர் கொடுக்க முயன்று தோற்றது எனது BSA.SLR.

பின்பு பல பெண்களை காதல் தொல்லை கொடுக்க எனக்கு உற்ற தோழனாக என் SLR இருந்தாலும் ஓராண்டிற்குள்ளாகவே எனக்கு அப்பா TVS.CHAMP வாங்கிக் கொடுத்து விட்டார். அதே காலத்தில் தான் நம் பெண்கள் எல்லாம் SUNNY ஓட்ட ஆரம்பித்தனர். பிரச்சினை என்ன வென்றால்..CHAMPஐ விட SUNNY வேகமாக செல்லும். இந்த பெண்கள் வேறு வண்டியில் பையன்கள் துரத்தினால் இன்னும்வேகமாக செல்வார்கள். ஆனாலும் விடக் கூடாது என மனம் சொல்லி துரத்திய தேவதைகள் இரண்டு.

அதிலும் மென்மையான சித்ரா மேல் எனக்கு பைத்தியமே பிடித்து விட்டது. காமராஜ் மெட்ரிக் பள்ளியில் இருந்து அவள் கிளம்பிய உடன் நானும் அவளை பின்தொடர்வேன். எங்காவது ஜன நடமாட்டம் கம்மியான பகுதியில் அவள் வண்டியின் முன்சென்று நிறுத்தி அவளை சற்று நிலைகுலைய செய்து அவள் வண்டியின் சாவியை உருவி விடுவேன். பின்பு அவள் தலை குனித்து அழுத படியே நா TUTION போகணும் LATEஆ போன அம்மா திட்டுவாங்க சாவிய குடுங்க என்று கெஞ்சுவாள். என்னிடம் பேசு. உன் VOICE எவ்ளோ நல்ல இருக்கு தெரியுமா என்பேன்.(சற்று சைக்கோ தனமாக இருந்திருக்கிறேன் அப்பொழுது என நினைக்கிறேன்).

சில நாட்கள் இந்த கெஞ்சலும் அழுகையுமாக அவளுக்கு பொழுது போய்க்கொண்டிருந்தது. பின்பு சிலநாட்கள் சித்துவை(செல்லமா சித்ராவை அப்டிதான் கூப்பிடுவேன்) காணவில்லை. பின்பு ஒரு நாள் பள்ளிக்கு வந்திருக்கிறாள் என அவள் வகுப்பு நண்பர்கள் கொடுத்த தகவலின் படி அவள் வருகைக்காக காத்திருந்து பொழுது வந்தது அவளும் அவளுடன் ஒரு நடுத்தர வயதுடைய அழகிய பெண்ணும். சித்ராவின் அம்மா என அறிமுகபடுத்திக் கொண்டார்கள். எனக்கு கை காலெல்லாம் சற்று நடுங்க ஆரம்பித்து விட்டது. சித்ரா படிக்கனும்பா..பப்ளிக் பரீட்சை வேற நல்ல மார்க் எடுத்தாதான் நல்ல குரூப் கிடைக்கும். அவள இனி தொந்தரவு பண்ணாதப்பா. என்றார்கள். சாரி ஆண்டி என்றேன். அதோடு அவள் படிக்கட்டும் என்று விட்டு விட்டேன். பெட்ரோலுக்கு அதிகமாக காசு செலவழிக்கிறேன் என்றும் அதிவேகமாக வண்டி ஒட்டுகிறேன் என்றும் என் மீது பிராது கொடுக்க பட்டதால் மீண்டும் சைக்கிள் காலத்திற்கே வந்தேன். ஆனால் இப்பொழுது பெட்ரோலுக்கு ஈடாக கிடைத்த பாகெட் மணியை சேமிக்க ஆரம்பித்தேன். பின்பு தான் கரடி பானம்(BEER) என்னுடன் நட்பு பாராட்ட ஆரம்பித்தது.

எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்தவாறு சற்று நிறம் மங்கிப் போயிருந்தது என்னுடைய SLR. பெண்களை துரத்தும் பொழுது சங்கிலி கழண்டு போவதும், மழை நேரத்தில் அவசரமாக பெடல் போடும்போது காற்று இறங்குவதும் என என் SLR என்னை இம்சித்து கோபமேர்ப்படுதியிருக்கிறது. இருந்தாலும் என் உலகத்தில் எனக்கான மனிதர்களை வரிசை படுத்த முயன்றால் முதலில் வந்து நிற்கிறது என் SLR.

90களிலும் அதற்க்கு பின் வந்த சந்ததிகளும் எங்களைப்போல (70 களின் கடைசியிலிருந்து 90களின் பாதி வரையில்) சைக்கிள் காலங்கள் கொண்டவர்கள் குறைவே என்று நினைக்க தோன்றுகிறது இன்றைக்கு உள்ள வாகன நெருக்கடிகளும் குறுகிய சாலைகளும்.

வெள்ளி, 24 ஜூன், 2011

முக புத்தத்தில்(FACE BOOK) பதிந்த சில STATUS MESSAGES

காளைகளை அடக்குவது சவாலான விஷயம் தான்..(ஜல்லிக்கட்டில்)
மான்களை அடக்க முற்ப்பட்டு நான் கற்றுக் கொண்டது..! :) :)
.........................................................................................................

நள்ளிரவு நேரத்தில் அலைபேசியில் அழைத்து எங்கிருக்கிறாய் என்கிறாள்....

உனது இதயத்தில் என்றேன் சட்டென்று.....!
பதிலற்று அவள்...வெட்கத்தில் சிவந்த இரவு விடியலானது..! :) :)
..........................................................................................................

இப்போவே TICKET BOOK பண்ணுடா..அப்போதான் போனோமா ஜம்முனு கால் மேல கால் போட்டு படம் பாத்துட்டு
வந்துட்டே இருந்தோமான்னு இருக்கும் என்றாள்....

மெதுவாக அவள் பக்கம் திரும்பி, யார் கால் மேல யார் கால போட்டு என்றேன்? :( :(
முறைத்து பார்க்கிறாள்...
(26 ம் தேதி தனியா தான் படம் பாப்பேன்னு நினைக்கிறேன்)
.........................................................................................................

What's the best way to send frnds request to gals in FB???????(hardly thinking..!)
.........................................................................................................

நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருக்கும் போது அவளது அழைப்பு(அலைபேசியில்)..

நான் உன்னுடன் இப்பொழுது பேச விரும்பவில்லை என்றேன்...!

சற்று அதிர்ச்சியுடன் எதற்கு என்றாள்? :(

உன்னுடன் பேசுவதும் ஒரு K.F STRONG BEER அருந்துவதும் ஒன்றுதான் என்றேன்.
BEER அருந்திக் கொண்டே உன்னுடன் பேசினால் போதையின் உச்சத்திற்கு சென்று மயங்கிவிடுவேன்
என்றேன்.

வாய் இல்லேன்னா உன்ன நாய் தூக்கிட்டு போயிடும் என்றாள் சிரித்துக் கொண்டே. :) :)
........................................................................................................

பூஜை புனஸ்காரங்கள் மற்றும் விரதம் இருந்துதான் தேவதைகளின் அருள் பெற
முடியுமா என்ன???

உற்சாகமான,கள்ளம் இல்லா மனதிருந்தாலே போதுமே.! :)
தேவதைகளின் அருள் கிடைக்குமே?
கிடைத்தது எனக்கு..இன்று.
570 AC பேரூந்தில் அலுவலகம் சென்ற பொழுது..!
:) :)
....................................................................................................

சீரான விசையில் சென்று கொண்டிருக்கும் பொழுது..
இடறி விழுந்து சிதறிப் போகிறது மனது.
கடந்து போகும் தேவதைகள் விட்டுச் செல்லும் அதிர்வுகளால். காயம்பட்டு வெற்றிடங்கள் உருவாகி வெறுமை கொண்டது மனது.
சுவாசம் தடைபட்டு தவிக்கிறேன்..
இதயம் முழுவதும் வெற்றிடமாய் ..

இட்டு நிரப்ப காத்திருக்கிறாளோ எவளோ ஒருத்தி?? :)
வரம் கொடுப்பதும்.. வதம் செய்வதும்..
தேவதைகளுக்கு விளையாட்டாகிப் போவதேன்?
................................................................................................
..............................................................................................

எனது உயிரினும் மேலாக உன்னைக் காதலிக்கிறேன் எனும்போதும்
சரி என்று ஒற்றை வார்த்தையில் நி கடந்து போகையில்...
கோபம் உன் மேலல்ல...

உன் மீதான என் காதலை சரியான வார்த்தைகள் கொண்டு கோர்க்க கூட முடியவில்லையே
என்று என் மேல்தான் அதிகம் கோபம் கொள்கிறேன்...

உன்னை நேசிக்கிறேன்...
என் உயிரினும் மேலாக...! :) :)

.............................................................................................



இரக்கமற்ற ஜீவன் என்றால் அது கண்டிப்பாக பெண்களாகத்தான் இருக்க வேண்டும்..........
நிமிடங்களில் மனதை கொள்ளை கொள்பவர்களும் அவர்கள்தாம்.........
நிமிடங்களில் மனதை கொல்பவர்களும் அவர்கதாம்.........!
செத்து செத்து பிழைத்துக் கொண்டிருக்கும் ஒரு சாமானியனின் சாபம் இது..........
..............................................................................................

suffering frm severe neck pain..! :(
சுளுக்குக்கு பாட்டி வைத்தியம் செய்ய ஆள் இல்லாததால..
பேத்தி வைத்தியம் செய்து கொண்டேன்
Yes.., The Lady Doctor was too young. :)
.............................................................................................

வார்த்தைகளுக்குண்டான சக்தியை..
சிறு முத்தங்களுடனான ஸ்பரிசம் வென்று விடுகிறது
சில சமயங்களில்..!
:) :)(காதலர்களுக்கிடையே மட்டும் )
.............................................................................................

பேரூந்தில்தான் அலுவலகம் செல்கிறேன்...!
நொடிப் பொழுது பார்வை பரிமாற்றங்களும், சிறு குறு நகையும்..
காற்றில் பறக்கும் கவிதைகளாக..
:) :)

BIKE இப்போ வீட்ல REST எடுக்குது :) :)

BIKERS uh பாத்தா இப்போ பாவமா தெரியுது..!
..........................................................................................

Life Is Simple.
But May Changes According To PPl's Vision..
The Mre U see As Complicated, The Mre It 'll Luks Filled With Complications..
Hav A Simple Vision...
..........................................................................................
துணை தேடி அலைகையில், தனிமை
மட்டுமே துணையாய்..

தனிமை விரும்பிய தருணங்களில் உடனிருக்கும்,
துணையே வினையாய்...!

:) :)

LIFE IS A CIRCLE BOSS..!
..........................................................................................
ஆட்டோவின் பின்னால் எழுதியிருந்த வாசகம்..!
நான் ரசித்த அந்த வரிகள்....

100 இல் போனால்,பின்னால் 108 துணைக்கு வரும்
:) :)
...........................................................................................

காதலிப்பது தான் என்னை சந்தோஷப்படுத்துகிறதென்றால்...
காலம் முழுவதும் காதலித்து கிடக்கவே விரும்புகிறேன்.....

நான் காதலன்....
:) :)
................................................................................................
ஐ.டி நெடுஞ்சாலையில் விரைந்து கொண்டிருந்த பொழுது,
வண்ணத்துபூச்சி ஒன்று நெஞ்சினில் மோதி படபடத்தது...!
வண்டியின் வேகம் குறைத்து, சாலையோரம் நிறுத்தினேன்..

படபடப்புடன் பறந்து போனது பட்டாம்பூச்சி, என் நெஞ்சில் உள்ள காதலனைத்தும்
அதனிடம் கொட்டி விடுவேனோ என்று பயந்து...
:) :)
பட்டாம்பூச்சி விட்டு சென்ற கந்தக நிற கலவை என் நெஞ்சினில்
இன்னும் மிச்சமாக.......
.............................................................................................................

Selecting A Relationship is a Hard Thing To Deal With....! :) But Most Of The People Are Doing The Right Thing By Selecting A Wrong One...!

.............................................................................................................

I wanna Pause Ma Life In This Dream, But I know Its Not Possible, But Lemme Close Ma Eyes At least..Don't Wake Me Up..! :)
...........................................................................................................

Though its been losing a year of lifetime, ppl are always happy to celebrate their Birthday..! :) Today Am Entering Into My 32. I Feel Gud That Am Surrounded By A Lots Of Good ppl's.
............................................................................................................

சந்திப்பு முடிந்து கிளம்பும் போது முத்தம் வேண்டுமென்றேன்..!
நாம் ஏன் காமம் கடந்த காதலாக நம்முடைய காதலை மாற்றக்கூடாது
என்றாள்? :(
சுரத்தே இல்லாமல் மாற்றலாம் என்றேன்..!
காதலுடன் சிரித்த படி எனது கன்னம் கிள்ளி நான்கு முத்தங்கள்
வைத்து இப்போ OK வா என்றாள்.
முத்தம் கிடைப்பதை விட அதை வாங்கும் முயற்சியில்தான்
கொப்பளித்து கொந்தளிக்கிறது காதல்..!
......................................................................................................

உனது சந்தோஷமே எனதும்...!
என்னை பார்க்காமல் இருப்பதுதான் உன் சந்தோஷத்தை
அதிகரிக்கிறதென்றால் அதற்கும் நான் உடன்படுவேன்...
சுயநலமற்றது உன்னுடனான எனது காதல்..
.....................................................................................................
நீ நீயாகவே இருக்க வேண்டும் என நினைப்பதால்...
நீ இப்படி இருக்கலாம் என்ற என் எண்ணங்களை எனக்குள்ளே கொன்று புதைக்கிறேன்..

சில கொலைகளும் கூட சந்தோஷத்தை தருமோ???
:) :)
..................................................................................................

நாளை உலகம் அழியுமென்றால் மிக மிக சந்தோசம் கொள்வது நானாக மட்டுமே இருப்பேன்..!
உன்னுடனான நினைவுகளை கடைசியாக கொண்டு மரித்துப் போவதென்பது
எனக்கு வரமென்பேன்..!
காதலிக்கிறேன் என்று ஒற்றை வரியில் அடக்கக்கூடியதல்ல
என் காதல்..!
..................................................................................................
பேசா நிமிடங்களின் நகர்வு அழகு..!
பேரூந்தில் பக்கத்தில் அமர்ந்திருந்த 16 வயது பெண் குறுகுறுப்புடன்
எனைப் பார்த்து கொண்டே....

பேரூந்தை விட்டு இறங்கும் பொழுது எனைப் பார்த்து சிந்திய ஒரு புன்னகை
கவிதை.! :)
...............................................................................................

முந்தய நாள் பௌர்ணமியாக....
நிலவை காணவில்லை நேற்று...

கோபத்துடன் அலைபேசியில் கத்திக்கொண்டிருந்த அவளிடம்
நிலவை காணாமல் செய்துவிட்டாய் என்றேன்..

குழப்பத்துடன் மௌனமானாள்..
நிலவை விட மெல்லியதான நீ கோபமானதால் சிவந்த
உன் முகம் கண்டு, சூரியன் உதித்து விட்டது என்ற
தப்பான எண்ணத்தில் சென்று விட்டது நிலவேன்றேன்.

கோபத்தில் சிவந்த முகம் இப்பொழுது வெட்கத்தில் சிவந்தது...

:) :) :)
...........................................................................................

சமயங்களில் சைத்தான் குடியேறுகிறது மனதில்...
உன்னை சந்தேகிக்க வற்புறுத்துகிறது...

சந்தேகம் கொள்கிறேன்...
என் மீதும்...உன் மீது நான் வைத்திருக்கும் காதலின் மீதும்....

உண்மையான அன்பில் சந்தேகம் எதற்கு....
உண்மைகள் கொண்டு உருவேற்றுகிறேன் நம் காதலை...
..........................................................................................

காணும் இடங்களனைத்தும் எனக்கான உன் நினைவுகளை..
நாம் பகிர்ந்து கொண்ட சந்தோஷ தருணங்களை..
பரிசளிக்கிறது...

நீ இல்லாத இந்த தவிப்பான பொழுதுகளை..
பகிர்ந்து கொண்டு
என்னை மென்சோகத்தில் இருந்து மீட்க்க போராடுகிறது..
இந்த மாநகரத்து சாலைகளும் மரங்களும் பாலங்களும்.....

சீக்கிரம் விடுமுறை முடித்து வந்து சேரடி என் கண்மணி..
.......................................................................................

நீ இல்லாமல் இருப்பதால் நான் படும் வேதனையை
நேற்று நிலவோடும் மேகக் கூட்டத்தோடும் பகிர்ந்துகொண்டேன்...

வெறுமை தாங்க முடியாமல் நிலவு மறைந்து போனது...
கட்டுபடுத்திக் கொண்டு ஆறுதல் சொன்ன மேகமாலும் கூட தாங்க முடியாமல்
கரைந்துருகி பொழிந்து விட்டது மழையாய்......

பிரிவு துயர் நீக்க முடிவெடு என்னவளே....
அயல் மாநிலத்து பயணம் முடித்து சீக்கிரம் வந்து சேரடி என் கண்மணி...

(நேற்றைய மழையில் இட்ட STATUS message இது...என்னவள் இப்பொழுது கன்னட தேசத்திற்கு சென்றிருக்கிறாள் :( )

திங்கள், 11 ஏப்ரல், 2011

காலணி..!

பிறந்த நாளுக்கு தங்கை அளித்த பரிசை பிரித்து பார்த்ததும் சற்று அயர்ச்சி சிறு வருத்தம்..! அது ஒரு நைக் வகையை சேர்ந்த விலையுயர்ந்த காலணி.!அதன் விலை ஐந்தாயிரம்.

எனக்கென்று சில கொள்கைகள் வைத்திருந்தேன்..! அதில் ஒன்று இந்த ஆசிய ரத்தத்தை உறிஞ்சிக் கொண்டு அமெரிக்காவில் தயாரனாதாக கம்பனியின் பெயர் பொறித்த பொருட்களை வாங்க கூடாதென்பது..! ஆனால் எதை கூடாதென நினைத்தேனோ அதே பொருளே எனக்கு பரிசாக..! மறுக்க முடியவில்லை, எனது உயிரினும் மேலாக நான் நேசிக்கும் என் தங்கையிடம் வந்த பரிசாதலால்..!

லேசாக பின்னோக்கி பயணிக்கையில் ...மனது ரணம் கொள்கிறது....இந்த காலணிக்காக எத்தனை எத்தனை உயிர்ப்பலிகள்....சக உயிரிடத்தில் வித்தியாசம் காணும் ஒரே கூருர மனம் படைத்த மிருக இனம் நம் மனித இனம் என நினைக்க தோனுகையில் கேவலமான ஒரு பிறவி இந்த மனித பிறவி என எண்ணத தோன்றுகிறது ...!

இன்றும் கூட இந்த இந்திய துணைக் கண்டத்தில் இதே கூருர மனம் படைத்த மிருக இனங்கள் நிறைய உலவுகின்றன சிறிதும் குற்றவுணர்வின்றி...பெரிதாக பெருமை பேசியபடிய தங்கள இனங்களை..!

கால்கள் கூசினாலும் பெருமையாகவே உணர்கின்றேன் எல்லோர்க்கும் ஈடாக நானும் காலனி அணிதிருக்கிறேன் இந்த தகவல்தொடர்பு மென்பொருள் பூங்காவில்..!
என்னைப்போல் எத்தனை எத்தனை தலித் இளைஞன் அன்னைவருக்கும் ஈடாக காலனி அணிந்து நடக்கிறான் எனும்போது..!

மாற்றங்களை நோக்கி ...மனித மனங்களின் மாற்றத்தை மனதில் கொண்டு இன்னும் இரு கைகளை விரித்து நேசத்துடன் சமமான வாழ்க்கை வேண்டி எதிர்நோக்குகிறோம்...ஆனால் எங்கள் கைகள் தட்டி விட பட்டு உதாசீனபடுத்தபட்டு அவமாங்களுடனான வேதனைகளையே பரிசளிக்கின்றன உயர் குடிகள் என சொல்லிக் கொள்ளும் இனங்கள்...

இவ்வளவு பொறுமையுடனும் சகிப்பு தன்மையுடனும் உலவும் இனங்களை உலகில் வேறெங்கும் காண இயலாது...காரணம் இப்படி அடிமை படுத்தப்பட்ட பல இனங்கள் தங்களுக்கென ஒரு நாட்டை உண்டாக்கி காட்டி கொண்டிருக்கின்றன சம காலத்தில்..!

ஆறாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக சந்தோஷத்துடன் அடிமையா இருக்க பழகிய இனம் இந்த திராவிட இனம்..! இவ்வளவு காலம் ஆன பிறகும் மனதி சிறிதும் குற்ற உணர்வின்றி நான் உயர்குடி என சொல்லிக் கொள்வதில் பெருமையடையும் இனங்களை நான் அணிந்திருக்கும் உயர்ரக காலனி கொண்டு அடித்தாலும் தகாது என்றே எனக்கு தோன்றுகிறது.

ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

வீரத் தாய்..!

மரணம் என்பது முற்றுப் புள்ளியல்ல ...!
ஒவ்வொரு மரணத்திற்கு பின்பும் ஒரு
விதை விதைக்கப் படுகிறது....
அது தளிர்த்து செழித்தோங்க
முடிந்த அளவு நமது பங்கினை ஆற்றிட
வேண்டுகிறேன்..!

மாவீரன் வேலுப் பிள்ளை பிரபாகரன் தாயார்
பார்வதி அம்மா இப்பூவுலக வாழ்வில் இருந்து விடை பெற்றார்..!
அவருக்கான எனது அஞ்சலிகள்...!

ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

திராவிட காதலர் தினமடா...கொண்டாடலாம் வாங்கடா உயர் சாதிக் கார கோமான்களா...!

காதலர் தினத்துக்கு ஏதாவது சிறப்பு பதிவு போட வேண்டும் என்று தோன்றியது...! இது வரை நான் பதிவிட்ட அனைத்து பதிவுகளும் ஓட்டிற்காக விடப் பட்டதில்லை....இந்த வலைப் பதிவு என்பது எனது டைரியை போல....ஆதலால் நான் இதை வியாபாரம் ஆக்க விரும்பவில்லை....! மேலும் எனது நெருங்கிய உறவினர்கள் ஊடகக் துறையில் இருப்பதால் எனது படைப்புகள் ஏதாவது ஒரு ஊடகத்தில் வர வேண்டும் என்று நான் அடம் பிடிப்பதில்லை...

எனக்கு தெரியும் அது ஒரு வியாபாரம்...மேலும் அது ஒரு போதை....நான் இந்த அன்னையர் தினம் தந்தையர் தினம் மற்றும் இது போல உள்ள பல தினங்களை வெறுக்கிறேன்....அந்த ஒரு நாளில் வேறு என்ன அன்பை இவர்கள் வெளிப் படுத்தி விட முடியும்..????? இன்றைய வாழ்வில் காதல் என்பதே பல வியாபார நோக்கோடுதான் வெளிப்படுகிறது...நீ என்ன ஜாதி, மதம் மற்றும் மொழி, இதெல்லாம் ஒத்து போனால் மட்டுமே அது உண்மையான காதல்....இல்லையென்றால் அது கலாச்சார் துரோகம் என்று கொதிக்க இங்கு ஏராளமான சாதி வெறியர்கள் கலாசார போர்வை போர்த்திக் கொண்டு பதிவுலகில் காத்திருக்கிறார்கள்....

அவர்கள் பார்வையில் அவர்கள் எப்படி என்று தெரியவில்லை...ஆனால் இப்போதெல்லாம் தாழ்த்த பட்டவர்களெல்லாம் ஏதோ சொர்கத்தில் இருப்பது போல அரசாங்கம் அவர்களுக்கு சலுகையை வாரி வாரி வழங்குவது போல சில முன்னேறிய சாதிக் காரர்கள் உதிர்க்கும் வாசங்ககள் மனதை புண் பட செய்கிறது.....

மெத்த படித்த ஒரு தாழ்ந்த சாதிக் கார துணை வேந்தர் ஆனாவுக்கும் ஆவன்னாவுக்கும் அச்சாரம் தெரியாத ஒரு திருட்டு சாதியை சேர்ந்த ஒரு மணல் திருடனிடம் அடி வாங்குகிறான்...! மெத்த படித்த ஒரு மாவட்ட ஆட்சியர் ஒரு மேடை நாடகக் காரியிடம் அடி பணிந்து போகிறான்....இதெல்லாம் அந்த உயர் சாதி கார சான்றோர்க்கு சாதரணமாக தெரியலாம், அல்லது மெத்த சலுகைகளை அனுபவித்து கொண்டு கள்ளம் காட்டுகிறார்கள் என மற்றைய மக்களை நம்ப வைக்க முயற்சிக்கலாம்.....!

இதெல்லாம் உணர்த்துவது யாதெனில் என்னதான் நீ முன்னேற நினைத்தாலும் நாங்கள் வைத்த சட்டத்தை மதித்து அதற்க்கு கீழ்படிந்து நடந்து உங்கள் சாதியின் மரியாதையை உணர்த்த வேண்டும் என்பதே....அதற்க்கு மாறாக நடக்க முயற்சித்தால் பின் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என்ற மிரட்டல் உடாக விளிக்கும் எச்சரிக்கை.....!

இதற்க்கூடக உங்கள் யோகியதை என்னவென்று சொல்ல முற்ப்பட்டால் அது திராவிட நாகரிகம் பாஸ் என்று பகடி செய்கிறான் ஒரு ஆரிய இனத்து கயவன்.....உண்மைதான்டா....உங்களைப் போல வெளியில் உத்தமர் வேடம் போட்டுக் கொண்டு அடுத்த வீட்டு கதவு எப்பொழுது திறக்கும் என்று காத்திருந்தவர்கள் அல்ல திராவிடர்கள்....!

காதலர் தினம் தேவையா என பதிவு போட்டு விட்டு அன்று மாலை காதலியுடன் கடற்க்கரை சல்லாபம் புரியும் கள்ளம் கற்றவறல்ல திராவிடர்....தெளிவான நோக்குடன் எதையும் மறைத்து வாழத தெரியாமல் வாழ்ந்து தொலைத்த ஒரு பாவப் பட்ட இனத்தின் சார்பாக இந்த பதிவிடுகிறேன்....

தாழ்த்த பட்டவர் வீட்டில் நான் உணவு உண்டிருக்கிறேன் என்று பெருமை பேசும் உங்களைப் போல போலி கலாச்சார வேலிகளை உடைக்கும் கோமாளிகள் உள்ள வரை எவனும் எதற்கும் கருத்து சொல்ல தகுதியற்றவன் என்பதை சொல்லி இந்த பதிவை முதல் முறையாக ஓட்டிற்கு விடுகிறேன்......!

சனி, 5 பிப்ரவரி, 2011

பேரிச்சை(DATES) = பேர்+இச்சைDATE (2)

பின்பு நெடு நாட்கள் கழித்து அவளிடத்தில் இருந்து உன்னுடன் பேச வேண்டும்என்று ஒரே ஒரு வரியில் மின்னஞ்சல். எப்படி பேசுவது?? என்னிடத்தில் அவளை தொடர்பு கொள்ள எந்த எண்ணும் கிடையாது. பின்பு மறுபடியும் ஹைதராபாத் வர சொல்லி ஓலை வந்ததால் மறுபடியும் தெலுகு தேசத்தில் வாசம். மறுபடியும் சென்னை வருவதற்குள் அவளிடம் இருந்து இரு மின்னஞ்சல்கள் வந்திருந்தது. இரண்டுமே பயங்கரமான குழப்பம் + பயம் + அழுத்தம் கலந்து வாழ்ந்து கொண்டிருக்கிறாள் என்பது புரிந்தது. பார்த்ததும் மிகவும் கஷ்டமாக இருந்தது...பட்டாம்பூச்சி போல பட பட வென பேசுவாள் பறந்து கொண்டே இருப்பாள்....வீட்டில் இருப்பதை விட சாலையில் தான் களித்திருப்பாள் அவளின் நாட்களின் பொழுதுகளை... பெரும்பாலும் எங்கு செல்கிறாள் எப்பொழுது வருவாள் என எல்லா விபரங்களை என்னிடத்தில் மட்டும் பகிர்ந்து கொள்வாள்...காரணம் கேட்டதற்கு நீ எனக்கு சற்று SPECIAL தோழன் என்பாள்.

ஐந்து மாதங்களுக்கு முன்பு தான் மறுபடியும் வலையில் சந்தித்தேன் அவளை....உடனே என்னுடைய அலைபேசி எண்ணைக் கேட்டு வாங்கினாள்....அடுத்த நொடி அவளிடத்தில் இருந்து அழைப்பு ....வெடித்து அழுதாள்..மிகவும் சந்தேகிக்கிறான் என்றாள்......மிகவும் உண்மையாக இருக்கிறேன் ஏனென்றால் நான் சந்தித்த ஆண்களில் இவனிடத்தில் மட்டுமே காதலை உண்கிறேன் என்றாள்.....அவள் கல்லூரியில் நிறைய பையன்களிடம் பேசுகிறாள் என குற்றம் சாட்டி அவளின் ஆர்குட் கணக்கை முடக்கியிருக்கிறான்....மேலும் அவளின் மின்னஞ்சல் முகவரிக்கான கடவுச் சொல்லையும் வாங்கி வைத்துக் கொண்டான்...என்றாள் கதறி அழுது கொண்டே...
மனது மிகவும் கஷ்ட பட்டது அவள் அழுத பொழுது..நல்ல பெண்ணாக நடக்க முயற்சித்தால் சந்தேகம் கொள்வது ஆண் வர்க்கத்துக்கே உண்டான குணம்...சில நாய்கள் அடக்கி வாசிக்கும்...சிலது உச்ச்சதிர்க்கு சென்று ஆடும்...நான் அடக்கி வாசிக்கும் நாய் வகை....

அவன் மீது எனக்கு அதிக கோபம் வந்து விட்டது...இத்தனைக்கும் அவனும் அவளும் ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள்...இதற்க்கு மேல் அவனுக்கு இங்கு வேலை இல்லை என்பதயும் எனக்கான வேலை இனிதான் என்பதும் புரிந்து போனது எனக்கு. விளைவு. அந்த ஜோடியை பிரித்து விடுவது என்று முடிவெடுத்து விட்டேன். அதுதான் அவளுக்கு நல்லது. இவனைப் போன்ற சந்தேக குணம் கொண்ட நாய்களுக்கு துணிக் கடையில் உள்ள அலங்கார பொம்மைகள் மட்டுமே திருப்தி படுத்தும். ஆனால் இந்த முட்டாள் பெண் தினமும் கதறி அழுகிறாள் என்னிடத்தில்...அவனை விட்டு வர முடியாது என்றவளை..மெதுவாக அவளின் சுய மரியாதை என்ற ஒன்றை பற்றி எடுத்துரைத்தேன்....இப்படி ஒருவனோடு உன்னால் ஓராண்டு கூட வாழ முடியாத போது எப்படி ஆயுள் முழுவதும் இவனுடன் உன்னால் வாழ்க்கையை நினைத்து பார்க்க முடியும் என்றேன்...சிறிது தெளிவு பெற்றவளாக அவள் மாறும் போது அந்த கயவன் நீ இல்லை என்றால் செத்து விடுவேன் என்று அழுது அவளை வசம் செய்து விடுவான். இனி அது தொடரக் கூடாது என்பதை முடிவு செய்து படிப் படியாக அவளை மன மாற்றம் செய்து எது செய்தாலும் எண்ணைக் கேட்டு செய்கிற வரைக்கும் மாற்றி இருக்கிறேன்... இனி அவன் அழைத்தால் கூட பேசக் கூடாது குறுஞ்செய்தி அனுப்பக் கூடாது என்ருரைதிருக்கிறேன். நிறைய மாற்றங்களை உணர்கிறாள். எனக்கான நேரங்கள அனைத்தும் இப்பொழுது அவளுடனே செலவழிக்கிறேன்....

மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் முப்பத்தியிரண்டு வயதில் பத்தொன்பது வயதுப் பெண்ணுடன் கடற்க்கரை மணலில் ஓடிப் பிடித்து விளையாடும் போது புரிகிறது
இன்னும் பதின்ம வயதில் உள்ள புரிதல்களோடு இருக்கிறது மனது என்று...அவள் இப்பொழுது முழுமையாக தன்னுடைய முதல் காதலில் இருந்து வெளியே வந்திருக்கிறாள்.
மிகவும் சந்தோஷமாக உணர்கிறேன் என்றாள். அவனுடன் இருந்து ஒவ்வொரு நொடிப் பொழுதும் இப்பொழுது நினைத்து பார்த்தால் சிறைக்குள் இருந்த உணர்வையே தருகிறது என்றாள்... அது காதல் அல்ல அவனை பொறுத்த வரை என்றேன் நான். ஆமோதித்தாள். நிறைய குட்டி கதைகள் சொல்கிறேன், நிறைய சிரிக்கிறோம் , இரவு முழுவதும் நட்சத்திரங்கள் எண்ணுகிறோம் அவரவர் வீடு மொட்டை மாடியில்....நள்ளிரவு நேரத்தில் அவள் வீட்டுச் சுவரேறி குதித்து அவளுக்கு Good Night சொல்லி திரும்புகிறேன் ...கல்லூரிக் காலத்தில் எழுதாத ASSIGNMENTS மற்றும் PRACTICALS இப்பொழுது அவளுக்காக எழுதுகிறேன் ....அவளுக்காக காலை சீக்கிரம் விழித்து அவளை எழுப்பி கல்லூரி பேரூந்தை சரியான நேரத்தில் பிடிக்க வைக்கிறேன்...

நீ பிறந்த அடுத்த ஐந்து வருடத்திற்குள் நான் பிறந்திருக்க வேண்டும் என்றாள் :) :) ....கிழக்குக் கடற்க் கரை சாலையில் அதிவேகமாக விரைகிறோம்..அதீத சந்தோஷத்துடன்....அவளையும் மீறி சில நேரங்களில் இந்த வார்த்தைகள் வந்து விழுகின்றன....எங்கடா இருந்தே இவ்ளோ நாளா??

வெள்ளி, 7 ஜனவரி, 2011

பேரிச்சை(DATES) = பேர்+இச்சை DATE

நிறைவான காதல் இது என்று நினைத்து, பின்பு முறிந்து போன போது , சில நாட்கள் வெளிக் கிரகத்தில் சென்று இருந்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த காலம் அது... அந்த சந்தர்ப்பத்தில் தான் ஹைதராபாத் சத்யம் நிறுவனத்தில் வேலைக்கான ஓலை வந்திருந்தது.. புது வசிப்பிடம், புதிய மனிதர்கள், புதிய கலாசாரம் மற்றும் மொழி, உணவு.....வெளிக் கிரகத்திற்கு வந்தது போன்ற உணர்வு....லேசாக மனதிற்குள் ஒரு சந்தோசம் எட்டி பார்க்க ஆரம்பித்தது....வேலைப் பளுவுடன், கூட ஒரு தமிழ் கூட்டமும் சேர்ந்திருந்தது(சத்யம் தமிழர்களாலேயே நிரப்பப்பட்டிருந்தது)...

வட இந்திய முகங்கள் நிறைந்த அந்த டெக் பார்க் எனக்கு ஒரு பணக்கார கல்லூரியை நினைவுபடுத்தியது...இப்படியான ஒரு இரவு நேரப் பணியில் இருக்கும் போது வேலைப் பளு காரணமாக ஏற்ப்படும் மன உளைச்சலை போக்க அவ்வப்பொழுது வலை அரட்டைக்கு போவது வழக்கம்...அப்படி யாகூ அரட்டை தளத்திற்கு சென்றேன்...


அப்பிடித்தான் சந்தித்தேன் இசையின் பெயர் கொண்ட அவளை..! முதல் அரட்டையே மிகவும் குறும்புத் தனமாக இருக்க....எனக்கு அவளை மிகவும் பிடிக்க ஆரம்பிக்க இருந்தது... முதல் சந்திப்பில் நேரம்போகவில்லை என்ற அவளிடம் கதை சொல்லவா என்று கேட்டு பாட்டி வடை சுட்ட கதையை சற்று மாற்றி சொல்லியது தான்...! :) :) அப்பொழுது அவள் பதினொன்றாம் வகுப்பு..!
அந்த வயதிற்கே உண்டான குறும்புடன் அவள் இருக்க....அந்த குறும்பு தனத்தை உடைய ஒரு தோழியை நான் அப்பொழுது எதிர்ப் பார்த்திருக்க....மானசீகமாக அவளுடன் நெருக்கமாக விரும்பினேன்...!

பின்பு ஹைதராபாத் வாழ்க்கை என் நினைவுகளை புரட்டிப் போட்டு விட்டது...ஆனாலும் என்னுடன் தொடர்பில் இருந்தாள் என் இசை நாயகி....ஏனோ சில பெண்களுடன் நான் உடனடியாக காதல் வயப் பட்டு விடுகிறேன்....பின்பு அவர்களிடம் இருந்து வெளியேற மிகவும் சிரமப் படுகிறேன்...அதே போலத் தான் இந்த இசை நாயகியிடம் காதல் வயப் பட்டு இருக்கிறேன் என்பதைக் கண்டு கொண்டேன்....ஆனால் சாத்தியம் இல்லாத விஷயங்களைப் பற்றி நான் அதிகம் அலட்டிக் கொள்வது கிடையாது....ஹைதராபாத்தில் இருந்து சென்னையில் உள்ள ஒரு பெண்ணிடம் வெறும் மின்னஞ்சல் முகவரி மட்டும் தெரிந்து கொண்டு காதல் வளர்ப்பதின் சாத்தியங்கள் அறிந்து கொண்டதால்..சற்று வருத்தத்துடன் தான் அவளை நான் பட்டியலில் வைத்து இருந்தேன்...


பின்பு வாழ்க்கை தன வழியில் பயணிக்கத் தொடங்கியிருந்தது...ஆனாலும் என்னுடன் தொடர்பில் இருந்த அத்துனை பெண் தோழிகளுடனும் நான் தொடர்பில் இருந்தேன்...குறிப்பாக இசை நாயகியுடன் மிகுந்த நெருக்கமான தொடர்பில் இருந்தேன்....ஆனால் அது வலையிநூடக மட்டுமே என்றளவில் இருந்தது......இப்படியான ஒரு காலத்தில் தான் ஹைதராபாத் வேலை காலியாகி தாய்நாட்டிற்கு திரும்ப வர வேண்டிய சூழ்நிலை...

இடையில் சில மாதங்கள் இசை நாயகியுடன் தொடர்பு அறுத்து விட்டது....அவளும் கல்லூரியின் வாயிலில் அடி எடுத்து வைத்திருந்தாள்...தமிழகத்திற்கு திரும்பிய பிறகு ஒரு நாள் வலை அரட்டையில் அவளைத் தொடர்பு கொண்ட பொழுதுதான் தெரிந்தது...அவளை சில மாதங்களாக துரத்தி தன காதலை வெளிப் படுத்திய ஒரு
கலாபக் காதலன் அவளின் மனத்தைக் கொள்ளை கொண்டிருந்தான் என்று...

எல்லாமே எனக்கு வேண்டும் என்று அழும் குழந்தை அல்ல நான்...ஆனாலும் சின்ன வருத்தம் மனதில் நாம் எங்கோ சறுக்கி இருக்கிறோம் என்று. பின்பு வேலை வெட்டி
இல்லாமல் வலையிலேயே உலவிக் கொண்டு தினமும் அவளிடம் மின்னரட்டை அடித்துக் கொண்டு ஆர்குட்டில் புதிய நண்பர்களை பிடிப்பது நண்பர் வட்டத்தை சந்திப்பது , வலைப் பதிவு ஆரம்பித்தது என்று நாட்கள் மிக இனிமையாக போய்க் கொண்டிருந்த காலம் அது..

எனது இசை நாயகியுடன் சேர்ந்து அவளின் காதலனும் வலை அரட்டையில் எங்களுடன் கலந்து கொண்டான்... எல்லாம் சில மாதங்களுக்கு பின்பு காணவில்லை...என்னை தன்னுடைய ஆர்குட் நண்பர் பட்டியலில் இருந்தும் நீக்கியிருந்தாள் என் நாயகி. ஏழு வெவ்வேறு பெண்களுடன் அப்பொழுது சுற்றிக் கொண்டிருந்ததால் வலையில் மட்டும் இவளை சந்திக்கும் இவளை சற்று மறந்து தான் போனது...ஆனாலும் எப்பொழுதெல்லாம் வலையில் இருக்கிறேனோ அப்பொழுதெல்லாம் மின்னஞ்சல் செய்து கொண்டே இருப்பேன்... பதில்தான் இல்லை அவளிடத்தில்.