சனி, 23 அக்டோபர், 2010

திரவம்.............

அதிகப் படியான மஞ்சள் நிறத்திலும், சில நேரங்களில் சிகப்புமாக....
மூத்திரம் என்றென்ன வேண்டாம்......
இதுவே சூத்திரம் லௌகிக வாழ்வின் உச்சத்தை தொட.....
அடி மனதின் ஆத்திரமும் அபிலாஷைகளும் ஊற்றெடுக்க....
பிரித்து பார்க்க தெரிவதில்லை தங்கைக்கும் தாரத்திர்க்கும் உள்ள
வித்தியாசத்தை,சமயங்களில் .......
திரவமேற்ற..திரவமேற்ற...புதிதாய் முளைக்கின்றன சிறகுகள்....
முதுகின் பின்னால்........
சுற்றியிருப்பதெல்லாம் பதர்களாக....நான் என்ற ஒன்று மட்டும்
யோகியாக .....
வெளிப்படும் வார்த்தைகளும் உச்சரிப்பும்..என்னையே எனக்கு
அறிமுகப்படுத்துகிறது...கவியாக......கடவுளாக......
தளும்பி எழும் உணர்வுகளை தடவிக் கொடுத்து கோர்க்கிறேன்.
வார்த்தைகளாக......
தடையற்று நீண்டு கொண்டே போகிறது(வார்த்தைகள்)......
கவிதையாக..அல்லது கசடாக.......
(கண்டிப்பா கவிதையல்ல.........யாருமற்ற மொட்டை மாடி டாஸ்மாக்கில் தடுமாறிக் கொண்டே
வலையில் ஏற்றியது....அலைபேசியின் ஊடாக)

செவ்வாய், 19 அக்டோபர், 2010

ரகசிய சிநேகிதன்...! :(

நிறைய இடங்களில் தாழ்ந்தசாதி என்ற காரணத்தால் நடந்த மறக்க நினைக்கும் சில நிகழ்வுகளுக்கு முடிவாக நினைத்தது, ஒரு ஆதிக்க சாதி பெண்ணை காதலித்து மணக்க வேண்டும் என்பதே... குறிப்பாக தென்னகத்தில் ஆதிக்கம் செய்த தேவரினத்தில், அல்லது நாயக்கர் இனத்தில், அல்லது சுத்தமான ஆரிய இனப் பெண்ணை(ஐயர்)
காதலிக்க வேண்டும் என்று ஒரு முடிவெடுத்திருந்தேன் பள்ளிக் காலத்தில்...


என்னை பொறுத்த வரை ஒரு இனத்தை வெல்வதாக நினைத்தால் அந்த இனத்து பெண்ணின் இதயத்தை வெல்ல வேண்டும். பெண் மாபெரும் சக்தி , தன் இனத்தின் சந்ததியை மற்றும் ஜீன்களை பத்திரமாக கடத்தி செல்பவள் என்ற காரணத்தினாலேயே கற்பு நெறி சாதி பாகுபாடு தோன்றியிருக்க வேண்டும்....முக்கியமாக பெண் அடிமை தொடங்கியிருக்க வேண்டும்.

ஆனால் பள்ளிக் காலத்தில் செய்த அடாவடித்தனத்தினால் எந்தப் பெண்ணுமே ஏறெடுத்து பார்க்கவில்லை.....அதன் பிறகு கடந்து போனதெல்லாம் ஆதிக்க சாதிப் பெண்கள்தான்...ஆனால் தேவரின பெண்ணும் ஆரியப் இனப் பெண்களும் மட்டும் மாட்டவே இல்லை..கடந்த இரண்டு வாரத்திற்கு முன்பு வரை.. :)
சரி, இந்த நிராசையை ஒரு அழகான புனைவாக்கதான் வேண்டும் என்றெண்ணிக் கொண்டிருக்கும் பொழுது மிக எதிர்பாரா தருணத்தில்தான் சந்தித்தேன் நிம்முவை.....

அடுத்த நொடி நமக்கு ஆயிரம் ஆச்சிரியங்களை ஒளித்து வைத்திருக்கும் என்பதெல்லாம் அக்கணம் அழுந்த உணர்ந்தேன்.....

போன வாரத்திற்கு முந்தய சனிக் கிழமை தோழி ஒருத்தி வெளி மாநிலத்திற்கு மாறுதல் வந்ததால் சென்னையில் தங்கியிருந்த விடுதியில் இருந்து காலி செய்து, அவளை ரயில் ஏற்றி விட வேண்டிய வேலை எனக்கு ....



தோழி தங்கியிருந்த விடுதிக்கு செல்ல கிளம்பினேன்...மாலை நேரம் என்பதால் போக்குவரத்து நெரிசல் சற்று இருந்தது. கோடம்பாக்கம் சிக்னலில் சிகப்பு விளக்கு விழுந்த பொழுது நான் சிக்னல் அருகில் வந்திருந்தேன், என் முன்னே ஒரு சிற்றூந்து நிற்கும் அளவிற்கு இடம் இருந்தது..பின்னால் இருந்து யாரோ ஹாரன் அடிக்க , லேசாக திரும்பி பார்க்க, ஒரு நீல நிற மாருதி ஆல்டோ நின்றிருந்தது. பச்சை விளக்கு விழுந்தால் எல்லாம் கிளம்ப போகிறோம்.. இதிலென்ன அவசரம் என்று நினைத்ததால் நான் கவனத்தில் கொள்ளவில்லை அந்த ஒலிப்பானை....

ஓரிரு நிமிடங்களில் அவர்களுக்கு முன் சென்று நிற்க இடம் கிடைக்க அந்த கார் எனை தாண்டி சென்று நின்றது. அப்பொழுதுதான் கவனித்தேன்..பின் சீட்டில் இரு குழந்தைகள். முன் சீட்டில் ஓட்டுனர் இருக்கையில் ஒரு பெண். பக்கத்து இருக்கையில் அவளது கணவர். குழந்தைகள் தாவி குதித்து விளையாடிக் கொண்டிருக்க, அந்த ஆண் அலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். இவ்வளவு நேரம் அந்த பெண்ணை சரியாய் கவனிக்கவில்லை. இப்பொழுதான் பார்க்க ஆரம்பித்தேன். சுண்டியிழுக்கும் அழகு. (SKIN TONE)என சொல்லப் படுகிற தோலின் வழமை அவர்களின் இனத்தை பறை சாற்றியது. அப்பெண் அணிந்திருந்த டாப்ஸ் கண்டிப்பாக ஜீன்ஸ் போட்டால் மட்டுமே அணியக் கூடியது. கூலிங் க்ளாஸ் மாட்டியிருந்தாள். முப்பதுகளின் தொடக்கத்தில் அவள் இருக்க கூடும். நாற்ப்பதின் மத்தியில் அவளின் கணவர்.

ஓரிரு முறை பார்த்து விட்டு திரும்பினாலும் மறுபடியும் பார்க்க தோன்றவே, அவளின் கார் ரியர் வியு கண்ணாடி வழியே அவளை பார்த்தேன்....இப்பொழுது அவள் என்னை பார்த்தால் எப்படி இருக்கும் என்று யோசித்தேன்...கண்டிப்பாக அதிகம் சந்தோஷ படுவேன் என்றேன்னிக்கொண்ட போது ஒரு மென்புன்னகையில் நான். கூலிங் க்ளாஸ் அணிதிருப்பதால் அவள் எங்கே பார்க்கிறாள் என்ற கணிப்பு எனக்கில்லை. அதனால்தான் பார்த்து கொண்டிருந்தேன் அவளை. திடிரென்று குளிர் கண்ணாடியை லேசாக இறக்கி விட்டு தமிழ் சினிமா ஹீரோயின் போல ரியர் வியு கண்ணாடி வழியே எனை பார்த்தாள்..அப்பொழுதுதான் தெரியும் அவளும் எனைத்தான் அவ்வளவு நேரம் பார்த்திருக்கிறாள் என்று....... எதிர்பார்ப்பது நடந்தால் ஒரு சந்தோசம் தோன்றுமே...அப்பொழுது நமையரியா ஒரு புன்னகை முகத்தில் படர்வதை உங்களால் தடுக்க முடியாது...அந்த நிலையில் நான். குறும்பாக, எச்சில் தொட்டு புருவத்தை சரி செய்து கொண்டு சட்டை காலரை சரி செய்து விளம்பர பட ஆண்கள் போல கை கட்டி நின்று அவளை பார்க்க, எனது செய்கை அவளுக்கு மேலும் சிரிப்பை வரவழைக்க... சற்று சிரித்தே விட்டாள்...அவள் கணவர் அலைபேசியில் இருந்து கவனம் திருப்பி என்ன என்று கேட்க ஏதோ சொன்னாள்..அவர் மறுபடியும் பேச்சை தொடர்ந்தார்.

இப்பொழுது சிக்னலில் நாற்பது வினாடிகள் மீதமிருக்க...இப்படியே அந்த அழகியை விட்டு செல்ல மனமில்லை....எனது கைகளை காதிற்கு கொண்டு சென்று அலை பேசியில் பேசுவது போல் பாவனை காட்டி..அலை பேசி என்னை கேட்டேன்..! ஒரு பெண்ணுக்கு நாம் பிடித்தவராக இரண்டு விஷயம் கண்டிப்பாக தேவை. நல்ல புன்னகையும் உடல் மொழியும். என்ன தோன்றியதோ டாஸ் பானேல் மீதிருந்த அவள் அலை பேசியை எடுத்துக் கொண்டு எனை பார்த்தாள். என் நெஞ்சுக்கு நேராக இரு கைகளை கொண்டு சென்று விரல்கள் மடக்கி நான் எண்களை தெரிவித்து முடித்த பொழுது சிக்னலில் பச்சை. சீறி சென்று விட்டது ஆல்டோ. நான் வலப் பக்கம் திரும்பி விட்டேன். மனதென்னவோ ஆல்டோவோடு சென்று விட்ட மாதிரி திடிரென்று ஒரு வெறுமை வந்து சேர்ந்தது மனதில். :(

திங்கள், 4 அக்டோபர், 2010

தேவதை காதலிகள்...........!

கடந்து போனது பல பெண்களை...நிறைய பெண்களை காத்திருக்க வைத்து, சில பெண்களுக்கு மட்டும் காத்திருந்து என்று காதலித்து கதகளி ஆடினாலும் அடங்கவில்லை காதலுணர்வு.........இன்னும் இருபதில் இருப்பதைப் போலவே இருக்கிறது மனது...அதனாலேயே பதின்ம வயது பள்ளிப் பெண்களைப் பார்த்தாலும் பல்லிளித்துக் கொண்டு வெளியேற முற்படுகிறது காதல்...மனதை விட்டு வெளியில்.....

கே கே நகரில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளியின் முன்புறம் உள்ள தேநீர் விடுதிக்கு செல்லும் பொழுதெல்லாம் மனது இறகு கட்டிக் கொண்டு பள்ளி நாட்களுக்கு கூட்டிச் சென்று விடும்............ஐந்தாம் வகுப்பு படிக்கும் வாண்டு ஒன்று வந்து WAY PLEASE அங்கிள் என்று சொல்லும்பொழுதே எதார்த்தத்திற்கு வருவேன்....ஆனாலும் மனதில் அந்த சந்தோசம் வெகு நேரம் தங்கி நிற்கும்...

ஆனாலும் இப்பொழுதெல்லாம் சில தேவதைகளை துரத்த ஆரம்பித்திருக்கிறேன்......தேவதைகளை புரிந்து கொள்ள, அவர்களின் காதலை பெற பெரும் முயற்சி எடுக்கிறேன்.....ஆனாலும் சிறு குறுநகையுடன் என்னை நிராகரித்து விடுகிறார்கள் தேவதைகள்.....நிராகரித்துவிட்டால் கூட பரவா இல்லை......தங்களுக்கு பிடித்தவருடன் கண் முன்னே வலம் வந்து கொன்று எறிகிறார்கள்........

இது எனக்கு மிகவும் கஷ்டமான விஷயமாக படுகிறது....பிடித்து விட்டால் மயக்கி வீழ்த்தும் வரை அடங்குவதில்லை....வீழ்த்தி பழகிய பின்பு அது ஒரு தனி கலை போலவே ஆகி விட்டது.......இருபத்து ஐந்து வயதில் திருமணம் செய்து குழந்தைகளுடன் உள்ள நண்பர்களனைவரும் எரிச்சலாகவும் பொறாமையாகவும் பார்க்கிறார்கள்...

ஆனால் இப்பொழுது துரத்தும் தேவைதகளை புரிந்து கொள்வது மிக கடினமாக இருக்கிறது....மிருத்திக்காவும் இசெபெல்லாவும்...எனக் கண்டதும் ஒரு மந்தகாச புன்னகையை வீசுவார்கள்... சமயங்களில் மிருத்திகா கைகள் விரித்து அனைத்துக் கொள்வாள் எனைக் கண்டதும்...இசெபெல் எனைப் பார்த்ததும் புன்னகை சிந்தி பின்பு சிறு வெட்கம் சிந்துவாள்...

ஆனால் இவர்களை கவர ஒரே சிறந்த வழி அவர்களுக்கு பிடித்த சாக்லேட்டுகள் மற்றும் விஜய் பட பாடல்கள்...இரண்டுமே எனக்கு பிடிக்காதென்றாலும் வேறு வழி இல்லையாதலால்... காதலுக்கு மரியாதை செய்வதற்காக அவர்கள் விருப்பதிர்க்கேர்ப்ப வளைந்து போகிறேன்... பாடல்களுக்கு அவர்கள் போடும் ஆட்டத்திற்கு நான் அடிமை. ஆனால் இசபெல்லுக்கு நான் மிருத்திக்காவை காதலிப்பதும், மிருத்திக்காவிர்க்கு நான் இசபெல்லை காதலிப்பதும் இன்று வரை தெரியாது....

தெரிந்தால் என்ன நடக்கும் என்று கற்பனை செய்யவே பயமாக இருக்கிறது..! :( :(
இருவருக்கும் என்னை பிடிக்க வைத்திருக்கிறேன்...

மிருத்திகா என் நண்பரின் இரு வயது குழந்தை. இசபெல் இன்னொரு நண்பனின் ஒன்றரை வயது குழந்தை. :) :)
குழந்தைகள் வரம். அதில் பெண் குழந்தைகள், கிடைப்பதர்க்கரிய வரம்......
எனக்கு திருமணம் ஆனால் பெண் குழந்தைகளுக்கு தகப்பனாகவே விரும்புகிறேன்.

ஏனென்றால் நான் பெண்களை நேசிக்கிறேன்...மிக மிக அதிகமாக..! :) :)