அதிகப் படியான மஞ்சள் நிறத்திலும், சில நேரங்களில் சிகப்புமாக....
மூத்திரம் என்றென்ன வேண்டாம்......
இதுவே சூத்திரம் லௌகிக வாழ்வின் உச்சத்தை தொட.....
அடி மனதின் ஆத்திரமும் அபிலாஷைகளும் ஊற்றெடுக்க....
பிரித்து பார்க்க தெரிவதில்லை தங்கைக்கும் தாரத்திர்க்கும் உள்ள
வித்தியாசத்தை,சமயங்களில் .......
திரவமேற்ற..திரவமேற்ற...புதிதாய் முளைக்கின்றன சிறகுகள்....
முதுகின் பின்னால்........
சுற்றியிருப்பதெல்லாம் பதர்களாக....நான் என்ற ஒன்று மட்டும்
யோகியாக .....
வெளிப்படும் வார்த்தைகளும் உச்சரிப்பும்..என்னையே எனக்கு
அறிமுகப்படுத்துகிறது...கவியாக......கடவுளாக......
தளும்பி எழும் உணர்வுகளை தடவிக் கொடுத்து கோர்க்கிறேன்.
வார்த்தைகளாக......
தடையற்று நீண்டு கொண்டே போகிறது(வார்த்தைகள்)......
கவிதையாக..அல்லது கசடாக.......
(கண்டிப்பா கவிதையல்ல.........யாருமற்ற மொட்டை மாடி டாஸ்மாக்கில் தடுமாறிக் கொண்டே
வலையில் ஏற்றியது....அலைபேசியின் ஊடாக)
4 கருத்துகள்:
அது ஒரு பரவசம்.
அது ஒரு விடுதலை
அது ஒரு பயணம்.
வாந்தி எடுக்காத வரை
அடுத்தவனோடு
வம்புக்குபோகாதவரை.
gautam its an ok kind of post
உங்கள் வெளிப்படை எனக்கு பாலகுமாரனை நினைவு படுத்துகிறது. காமராஜ் சொன்னது உண்மை.
லெமூரியன்....சுகம்தானே.பதிவுகள் 2-3 வந்திருக்கு.தீபாவளியை நினைவுக்குக் கொண்டு வந்தீர்கள்.மனம்நிறைவான வாழ்த்துகள் உங்களுக்குத்தான்.
கவிதை இல்லை என்று சொல்லிவிட்டீர்கள்.
வாவ்...என்று சொல்லுமளவிற்க்கு இயல்பான அற்புதம் !
கருத்துரையிடுக