திங்கள், 4 அக்டோபர், 2010

தேவதை காதலிகள்...........!

கடந்து போனது பல பெண்களை...நிறைய பெண்களை காத்திருக்க வைத்து, சில பெண்களுக்கு மட்டும் காத்திருந்து என்று காதலித்து கதகளி ஆடினாலும் அடங்கவில்லை காதலுணர்வு.........இன்னும் இருபதில் இருப்பதைப் போலவே இருக்கிறது மனது...அதனாலேயே பதின்ம வயது பள்ளிப் பெண்களைப் பார்த்தாலும் பல்லிளித்துக் கொண்டு வெளியேற முற்படுகிறது காதல்...மனதை விட்டு வெளியில்.....

கே கே நகரில் உள்ள பத்மா சேஷாத்ரி பள்ளியின் முன்புறம் உள்ள தேநீர் விடுதிக்கு செல்லும் பொழுதெல்லாம் மனது இறகு கட்டிக் கொண்டு பள்ளி நாட்களுக்கு கூட்டிச் சென்று விடும்............ஐந்தாம் வகுப்பு படிக்கும் வாண்டு ஒன்று வந்து WAY PLEASE அங்கிள் என்று சொல்லும்பொழுதே எதார்த்தத்திற்கு வருவேன்....ஆனாலும் மனதில் அந்த சந்தோசம் வெகு நேரம் தங்கி நிற்கும்...

ஆனாலும் இப்பொழுதெல்லாம் சில தேவதைகளை துரத்த ஆரம்பித்திருக்கிறேன்......தேவதைகளை புரிந்து கொள்ள, அவர்களின் காதலை பெற பெரும் முயற்சி எடுக்கிறேன்.....ஆனாலும் சிறு குறுநகையுடன் என்னை நிராகரித்து விடுகிறார்கள் தேவதைகள்.....நிராகரித்துவிட்டால் கூட பரவா இல்லை......தங்களுக்கு பிடித்தவருடன் கண் முன்னே வலம் வந்து கொன்று எறிகிறார்கள்........

இது எனக்கு மிகவும் கஷ்டமான விஷயமாக படுகிறது....பிடித்து விட்டால் மயக்கி வீழ்த்தும் வரை அடங்குவதில்லை....வீழ்த்தி பழகிய பின்பு அது ஒரு தனி கலை போலவே ஆகி விட்டது.......இருபத்து ஐந்து வயதில் திருமணம் செய்து குழந்தைகளுடன் உள்ள நண்பர்களனைவரும் எரிச்சலாகவும் பொறாமையாகவும் பார்க்கிறார்கள்...

ஆனால் இப்பொழுது துரத்தும் தேவைதகளை புரிந்து கொள்வது மிக கடினமாக இருக்கிறது....மிருத்திக்காவும் இசெபெல்லாவும்...எனக் கண்டதும் ஒரு மந்தகாச புன்னகையை வீசுவார்கள்... சமயங்களில் மிருத்திகா கைகள் விரித்து அனைத்துக் கொள்வாள் எனைக் கண்டதும்...இசெபெல் எனைப் பார்த்ததும் புன்னகை சிந்தி பின்பு சிறு வெட்கம் சிந்துவாள்...

ஆனால் இவர்களை கவர ஒரே சிறந்த வழி அவர்களுக்கு பிடித்த சாக்லேட்டுகள் மற்றும் விஜய் பட பாடல்கள்...இரண்டுமே எனக்கு பிடிக்காதென்றாலும் வேறு வழி இல்லையாதலால்... காதலுக்கு மரியாதை செய்வதற்காக அவர்கள் விருப்பதிர்க்கேர்ப்ப வளைந்து போகிறேன்... பாடல்களுக்கு அவர்கள் போடும் ஆட்டத்திற்கு நான் அடிமை. ஆனால் இசபெல்லுக்கு நான் மிருத்திக்காவை காதலிப்பதும், மிருத்திக்காவிர்க்கு நான் இசபெல்லை காதலிப்பதும் இன்று வரை தெரியாது....

தெரிந்தால் என்ன நடக்கும் என்று கற்பனை செய்யவே பயமாக இருக்கிறது..! :( :(
இருவருக்கும் என்னை பிடிக்க வைத்திருக்கிறேன்...

மிருத்திகா என் நண்பரின் இரு வயது குழந்தை. இசபெல் இன்னொரு நண்பனின் ஒன்றரை வயது குழந்தை. :) :)
குழந்தைகள் வரம். அதில் பெண் குழந்தைகள், கிடைப்பதர்க்கரிய வரம்......
எனக்கு திருமணம் ஆனால் பெண் குழந்தைகளுக்கு தகப்பனாகவே விரும்புகிறேன்.

ஏனென்றால் நான் பெண்களை நேசிக்கிறேன்...மிக மிக அதிகமாக..! :) :)

3 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

gautam u impressed me a lot.nice post again.

ஹேமா சொன்னது…

லெமூரியன்...சுகம்தானே !என் வீடு திருத்தப்படுவதால் இணையம் தற்காலிகமாக தொடர்புகள் கழற்றப்பட்டுக் கிடக்கிறது.தற்சமயம் மின்னஞ்சல்கள் பார்க்க வந்தேன்.

உங்கள் தேடுதலுக்குச் சந்தோஷம்.
பதிவும் பார்த்தேன்.அதைவிடச் சந்தோஷம்.உங்களை எந்த வரிசையில் வைத்துக் கற்பனை பண்ணுவது என்பது மட்டுமே இப்போதைக்கு என் சிந்தனை.

லேபிளில் அனுபவமா,
கற்பனையா,கதையா இப்பிடி
ஏதாவது போட்டீங்கன்னா சிந்திக்கச் சௌகரியமா இருக்கும் !

பதிவு அற்புதம்ன்னு மட்டும் சொல்லணும் !

பெயரில்லா சொன்னது…

understanding women is an art.you are an artist gautam