ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

திராவிட காதலர் தினமடா...கொண்டாடலாம் வாங்கடா உயர் சாதிக் கார கோமான்களா...!

காதலர் தினத்துக்கு ஏதாவது சிறப்பு பதிவு போட வேண்டும் என்று தோன்றியது...! இது வரை நான் பதிவிட்ட அனைத்து பதிவுகளும் ஓட்டிற்காக விடப் பட்டதில்லை....இந்த வலைப் பதிவு என்பது எனது டைரியை போல....ஆதலால் நான் இதை வியாபாரம் ஆக்க விரும்பவில்லை....! மேலும் எனது நெருங்கிய உறவினர்கள் ஊடகக் துறையில் இருப்பதால் எனது படைப்புகள் ஏதாவது ஒரு ஊடகத்தில் வர வேண்டும் என்று நான் அடம் பிடிப்பதில்லை...

எனக்கு தெரியும் அது ஒரு வியாபாரம்...மேலும் அது ஒரு போதை....நான் இந்த அன்னையர் தினம் தந்தையர் தினம் மற்றும் இது போல உள்ள பல தினங்களை வெறுக்கிறேன்....அந்த ஒரு நாளில் வேறு என்ன அன்பை இவர்கள் வெளிப் படுத்தி விட முடியும்..????? இன்றைய வாழ்வில் காதல் என்பதே பல வியாபார நோக்கோடுதான் வெளிப்படுகிறது...நீ என்ன ஜாதி, மதம் மற்றும் மொழி, இதெல்லாம் ஒத்து போனால் மட்டுமே அது உண்மையான காதல்....இல்லையென்றால் அது கலாச்சார் துரோகம் என்று கொதிக்க இங்கு ஏராளமான சாதி வெறியர்கள் கலாசார போர்வை போர்த்திக் கொண்டு பதிவுலகில் காத்திருக்கிறார்கள்....

அவர்கள் பார்வையில் அவர்கள் எப்படி என்று தெரியவில்லை...ஆனால் இப்போதெல்லாம் தாழ்த்த பட்டவர்களெல்லாம் ஏதோ சொர்கத்தில் இருப்பது போல அரசாங்கம் அவர்களுக்கு சலுகையை வாரி வாரி வழங்குவது போல சில முன்னேறிய சாதிக் காரர்கள் உதிர்க்கும் வாசங்ககள் மனதை புண் பட செய்கிறது.....

மெத்த படித்த ஒரு தாழ்ந்த சாதிக் கார துணை வேந்தர் ஆனாவுக்கும் ஆவன்னாவுக்கும் அச்சாரம் தெரியாத ஒரு திருட்டு சாதியை சேர்ந்த ஒரு மணல் திருடனிடம் அடி வாங்குகிறான்...! மெத்த படித்த ஒரு மாவட்ட ஆட்சியர் ஒரு மேடை நாடகக் காரியிடம் அடி பணிந்து போகிறான்....இதெல்லாம் அந்த உயர் சாதி கார சான்றோர்க்கு சாதரணமாக தெரியலாம், அல்லது மெத்த சலுகைகளை அனுபவித்து கொண்டு கள்ளம் காட்டுகிறார்கள் என மற்றைய மக்களை நம்ப வைக்க முயற்சிக்கலாம்.....!

இதெல்லாம் உணர்த்துவது யாதெனில் என்னதான் நீ முன்னேற நினைத்தாலும் நாங்கள் வைத்த சட்டத்தை மதித்து அதற்க்கு கீழ்படிந்து நடந்து உங்கள் சாதியின் மரியாதையை உணர்த்த வேண்டும் என்பதே....அதற்க்கு மாறாக நடக்க முயற்சித்தால் பின் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என்ற மிரட்டல் உடாக விளிக்கும் எச்சரிக்கை.....!

இதற்க்கூடக உங்கள் யோகியதை என்னவென்று சொல்ல முற்ப்பட்டால் அது திராவிட நாகரிகம் பாஸ் என்று பகடி செய்கிறான் ஒரு ஆரிய இனத்து கயவன்.....உண்மைதான்டா....உங்களைப் போல வெளியில் உத்தமர் வேடம் போட்டுக் கொண்டு அடுத்த வீட்டு கதவு எப்பொழுது திறக்கும் என்று காத்திருந்தவர்கள் அல்ல திராவிடர்கள்....!

காதலர் தினம் தேவையா என பதிவு போட்டு விட்டு அன்று மாலை காதலியுடன் கடற்க்கரை சல்லாபம் புரியும் கள்ளம் கற்றவறல்ல திராவிடர்....தெளிவான நோக்குடன் எதையும் மறைத்து வாழத தெரியாமல் வாழ்ந்து தொலைத்த ஒரு பாவப் பட்ட இனத்தின் சார்பாக இந்த பதிவிடுகிறேன்....

தாழ்த்த பட்டவர் வீட்டில் நான் உணவு உண்டிருக்கிறேன் என்று பெருமை பேசும் உங்களைப் போல போலி கலாச்சார வேலிகளை உடைக்கும் கோமாளிகள் உள்ள வரை எவனும் எதற்கும் கருத்து சொல்ல தகுதியற்றவன் என்பதை சொல்லி இந்த பதிவை முதல் முறையாக ஓட்டிற்கு விடுகிறேன்......!

7 கருத்துகள்:

Sandhiya சொன்னது…

innum perithaaka pottrukkalam..

லெமூரியன்... சொன்னது…

வணக்கம் சந்தியா..!
வருகைக்கு நன்றி..!
இன்னும் பெரிதாக எழுதியிருக்கலாம்..!
கோபம் அதிகமாகிவிட்டதால், வார்த்தைகள் வரைமுறை தாண்டி விடுமோ என்ற அச்சம் தான்..!

பெயரில்லா சொன்னது…

gautam i dont know much about this.

பெயரில்லா சொன்னது…

come out of caste first. If you are living with caste feeling then "Arandavan kannukku erundathellam Paei". In your world are you still seeing caste discrimination? touch your heart and come out with truth. And many comments you mentioned applies to you too in your real world

லெமூரியன்... சொன்னது…

\\And many comments you mentioned applies to you too in your real world//

sorry ma frnd. i guess it wont be applies for me. coz i never say that am cultural security..! :)

\\In your world are you still seeing caste discrimination?//

I havent wrote this only on my vision. its a vision of a communtiy which being treated as slaves still.

சோழன் சொன்னது…

முதல்ல நாகரீகம கட்டுரை எழுத பழகுட
ஆரியன் திராவிடன் தமிழன் என்று எங்கதொடங்குகிறாயோ அங்கே சாதி வந்துவிடும் என்பதை நினைவில் கொள்
இங்கு இனம் மாநிலம் நாடு என்று ஒரு வரையரையை வகுப்பதை நிறுத்து.தாழ்ந்த வகுப்பு என்று சொல்லிக்கொள்ளும் ஒருவன் லோன் தராத ஒருவங்கி அதிகாரியை உன்னை சாதியை சொல்லிதிட்டியாய் என்று வன்கொடுமை சட்டத்தில் புகார் செய்யும் கொடுமையை பார்த்தவன் நான் இன்னும் தாழ்த்தபட்டுகொண்டிருக்கிறோம் என்று கதசொல்லிக்கிட்டு அரசு சலுகைகளை அனுபவிப்பதை நிறுத்துங்கடா சாதி தன்னால ஒழியும்

ஹேமா சொன்னது…

சாதி ரீதியாக எங்கேயோ எப்போதோ பாதிக்கபட்டிருக்கிறீர்கள் லெமூரியன்.முந்தைய பதிவுகளிலும் கவனித்திருக்கிறேன்.அதைவிட்டு மறந்து வெளியேறுங்கள்.எல்லாம் சரியாயிடும் !