வியாழன், 3 டிசம்பர், 2009

திட்டமிட்ட தேசியமும்....வெகுளித்தனமான பிராந்திய நலனும்.

இன்ற காலை பத்திரிக்கைகளில் அந்த செய்தியை பார்த்திருப்பீர்கள். கூடங்குளத்தில் ரசிய நாட்டின் உதவியுடன் மேலும் புதிய அணு உலைகள் அமைக்க இந்திய கூட்டமைப்பு முடிவு செய்துள்ளதே அதன் சாராம்சம். இந்திய மிகப் பெரிய கடல் எல்லைகளைக் கொண்ட கூட்டமைப்பு. கடல் நீரை வெப்பப் படுத்தி மிசாரம் தயாரிக்கும் தொழினுட்பத்தை கொண்ட அணுமின் நிலையங்கள் மகாராஷ்டிரம்,கர்நாடகம், தமிழ்நாட்டில், இந்தியாவின் மொத்த அணுமின் நிலையங்கள் அமைக்கப் பெற்றிருக்கின்றன.

கேரளமும் மேற்கு வங்கத்திலும் கடல் பகுதி இருந்தாலும் அங்கு இன்று வரை எந்த மின் திட்டங்களும் முன்னெடுக்கப் படவில்லை. கல்ப்பாக்கத்தில் அணுமின் நிலையம் அமைக்கவே அப்பொழுது கடும் எதிர்ப்பு மக்களிடம் இருந்தாலும்..மின் தேவைகளை கருத்தில் கொண்டு அங்கு அமைக்கப்பட்டது...மேலும் இப்போது கூடங்குளத்தில்....இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் தமிழகத்தில் உள்ள இந்த இரு மின் நிலையங்களும் அதிக சக்தி கொண்டவை மற்றும் ராணுவ ஆராய்ச்சி சார்புடைய விஷயங்களும் இங்கு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

சுருக்கமாக இந்தியாவின் பொருளாதார அடிநாதமாக, அந்நிய செலாவணியை அள்ளித் தருகிற மாநிலங்கள் என்று பார்த்தால் தமிழகம்,மகாராஷ்டிரம்,மற்றும் கருநாடகம். இங்கு பெறுகிற வளர்ச்சியும்....இந்த மாநிலங்கள் அள்ளி தருகிற அந்நிய வருவாயை வைத்தே மிச்சமுள்ள இந்திய மாநிலங்கள் தங்கள் வளர்ச்சியை பெறுகின்றன....தொழில் துறை வருவாயை விட சுற்றுலாவில் வரும் வருமானம் மிக குறைவே இந்தியாவை பொறுத்த மட்டில்...

இனிதான் விஷயமே....மேற்கு வங்கத்தை பொறுத்த வரை தவறான மைய்ய அரசின் கொள்கைகளினால் அந்த மாநிலம் இன்றும் வளர்ச்சியிலும் கல்வியிலும் மிகவும் பின் தங்கியே இருக்கிறது...ஆனால் கேரளம் அதற்க்கு நேர்மார். அங்கு வளர்ச்சிப் பணிகளும் கல்வியும் மக்கள் வாழ்க்கை தரமும் வளர்ந்த மாநிலங்களுக்கு ஈடானதாகும்....தன் உணவிற்கு கூட வெளி மாநிலங்களை எதிர்ப் பார்த்து காத்திருக்கிற ஒரு மாநிலம் எப்படி தன் மக்கள் நலத்தில் முன்னிற்கிறது என்றால்....அவர்களின் திட்டமிட்ட மாநிலம் மற்றும் தன் பிராந்திய சார்புடைய கணக்குகளுடன் கடை பிடித்த தேசிய கொள்கைதான் காரணம்.

சுதந்திரம் பெற்ற போது,பிராந்திய நலனுக்காக தொண்டை கிழிய தமிழக தலைவர்கள் கத்திக் கொண்டிருக்கும் போது சத்தமில்லாமல் கேரளா மேனன்கள் மற்றும் நாயர்கள் மைய்ய அரசின் முக்கிய பதவிகளில் வந்திருந்தனர்...நேஹ்ருவிர்க்கு அழகான மலையாள சேச்சிகளை அனுப்பி தங்கள் மாநிலம் சார்ந்த வளர்ச்சிக்கு அடிகோல்;இட்டனர்.....நேரு சீனாவை நம்பி கெட்டதுக்கு அப்போதிருந்த ஒரு மேனனே முக்கிய காரணம். அவனின் தவறான கணிப்பால்தான் வலுவான சீனாவிடம் மோதி பல் பிடுங்கப் பட்டது இந்தியா.


அதோடு நிற்கவில்லை இந்த மேனன்கள்...சத்தமில்லாமல் ஒரு காரியத்தை செய்தனர். அதுதான் இன்று தமிழர்கள் உலகரங்கில் நாதியற்று போவதற்கு ஒரு காரணம் ஆகிப் போனது....! 1990 வரை தமிழக மாணவர்கள் பத்து விழுக்காடே தங்களின் பங்களிப்பை மத்திய அதிகார சேர்க்கையில் காண்பித்தனர்....மாறாக மேனன்களின் தொலை நோக்கு திட்டத்தோடு கேரளா மாணவர்கள் அதிகளவில் வெளியுறவுத் துறையில் சேர்ந்தனர்...விளைவு....இன்று இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைகளை வகுப்பதும் ....இறையாண்மையை காப்பதும் மேனன்களும் நாயர்களும்....அதோடு அல்லாமல் அணுமின் நிலைய திட்டங்களையும் வேற்று மாநிலங்களுக்கு தொலைநோக்கு திட்டத்தோடு மாற்றி விட்டனர்.....அவர்களுக்கென்ன?? அவர்களுக்கு தண்ணீர் தரவும் மின்சாரம் தரவும் அவர்களுக்கு அரிசி தரவும் அண்டை மாநிலங்கள் மையா அரசு மேனன்களால் பணிக்கப் படுகின்றன....


தங்களுடைய கேனை தனமான வெளியுறவுக் கொள்கையால்(இப்பொழுதும் மேனன்களும், நாயர்களுமே..) தற்போது இந்திய கூட்டமைப்பின் அத்தனை எல்லைகளிலும் எதிரிகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.....எதிரிகளின் முக்கியக் கொள்கையே இந்தக் கூட்டமைப்பின் பொருளாதார கட்டமைப்பை சேதப் படுத்துவதுதான்.....மேலும் அணுமின் நிலையங்கள் முக்கியமான தாக்குதல் கேந்திரமாக பார்க்கப் படுகிறது.....அதற்கேற்றார் போல் இங்கே(தமிழகத்தில்) ரெண்டு அணுமின் நிலையங்கள்....இரண்டும் சக்தி வாய்ந்தவை...ஒன்று வட தமிழகத்தை அழிக்கும்........மற்றொன்று தென் தமிழகத்தை அழிக்கும்.........ஆனால் கேரளம் மட்டும் அணு சேதம் இன்றி அமைதி பூங்காவாக இருக்கும்.காரணம் அங்கு தாக்குதலுக்கான கேந்திரங்கள் என்று ஏதும் கிடையாது.......திட்டமிடப் பட்டு செயல் படுத்தப் பட்ட ஒன்று இது.....


இவ்வளவு ஆபத்தான வகையில் இங்கு மின்சாரம் தயாரிக்கப் பட்டு சத்தமில்லாமல் கேரளத்திற்கு அனுப்பப் படுகிறது......நமக்கோ தண்ணீர் என்று கதறினாலும் அணையை உடைப்போம் என்று கூறுகிறார்களே தவிர தண்ணீர் என்ற பேச்சுக்கே இடமில்லை.....அவ்வளவு மின் தேவை இருக்கும்பட்சத்தில் கேரளத்தில் அணுமின் நிலையம் அமைக்கலாமே என்று ஒரு கேள்விக்காக கூட யாரும் கேட்க முடியாது....கேட்டால் உலக வங்கிக் கடனில் உங்கள் பகுதிக்கு வர வேண்டிய பணம் தடுத்து நிறுத்தப் படும், ஐ.நாவில் பணியாற்றும் நம்பியார்களினாலும் மேனன்களினாலும்.தொழில் துறையிலும் மொழிக் கொள்கையிலும் நாம் தனித்து காண்பிக்க பட்டாலும்...வீரமா அல்லது வெகுளித்தனமா?? அல்லது நரித் தனமா??? என்று தெரியாத ஏதோ ஒன்றினால் நமது தலைவர்களின் தொலை நோக்கு பார்வை சற்று மங்கியே போய்விட்டது என்றே சொல்ல வேண்டும், சர்வதேச அரங்கிலும் இந்தியாவிலும் தற்போதைய தமிழனுக்கு உள்ள நிலை கொண்டு....

காலத்தின் மாற்றங்களை யாராலும் கணிக்கமுடியாது.....இரும்புக் கோட்டை ரசியாவே தூள் தூளாகிப் போனது....நூல் கண்டுகளைக் கொண்டு இணைக்கப் பட்ட இந்தியா எம்மாத்திரம்???? அப்படி ஒரு நிலை வரும்போது சோமாலியாவை விட மோசமான நிலைக்கு கேரளா போகலாம்.

4 கருத்துகள்:

காமராஜ் சொன்னது…

நல்லது ரமேஷ்.
அங்கே பனையேறும் தொழிலாளிகூட காலை நாளிதழ் பார்க்காமல் வேலைக்குப்போக மாட்ட்டார்.
அதே போல நாலுபேர் கூட்டமாக இருக்கிற இடமெல்லாம் சாயாக்கடை நடத்துவதும் சேட்டன்கள்.
இங்கே கோடீஸ்வர வட்டிக்கடை முதலாளிகூட எழுத்தை வட்டி கணக்கிட மட்டுமே பயன்படுத்துகிறார்கள்.
அதுபோக இங்கு கூடுகிற கூட்டம் எல்லாம் ஜாதிமயமாக மட்டுமே அனுகப்படுகிறது. அங்கு கட்சி ரீதியாக.
பண்படுத்தப்படாத விவசாயம் பண்ணாத நிலங்கள் இங்கு தான் அதிகம். அதே போல மனிதர்களூம்.
நல்ல இடுகை.

லெமூரியன்... சொன்னது…

\\பண்படுத்தப்படாத விவசாயம் பண்ணாத நிலங்கள் இங்கு தான் அதிகம். அதே போல மனிதர்களூம்......//


வணக்கம் காமராஜ் அண்ணா..!
அருமைய சொன்னீங்க அண்ணா.....இங்கே எல்லாம் ஜாதி ரீதியாவே அணுகப் படுகிறது.....இனம் மொழின்னு நெருக்கம் காமிக்கும்போது கூட ஏதோ ஒரு சின்ன இடைவெளி இருப்பது போலவே தோணுது....

ஜோதிஜி சொன்னது…

இது குறித்து நிறைய விசயங்கள் வைத்துள்ளேன். தெளிவாக விளக்குவேன்.

சிறப்பு. குறைந்த பட்சம் உங்கள் அழுத்தமான சிந்தனைகளை தனி இதழ் போன்ற வெகுஜன ஊடகத்தின் வாயிலாக விரைவில் எல்லோரும் தெரிந்து கொள்ளும் அளவிற்கு படையுங்கள்.

மொத்த தகுதியும் உங்களிடம் இருக்கிறது.

லெமூரியன்... சொன்னது…

நன்றி ஜோதிஜி....!
உங்களின் வார்த்தைகள் மிகவும் உற்சாகம் அளிக்கிறது..!