சனி, 5 டிசம்பர், 2009

மாவீரன் (கடவுள்) அம்பேத்கர்...!

ஒட்டுமொத்த இந்தியாவின் ஜன தொகையில், நாற்பது சதவிகித மக்களின் எழுச்சி நாயகன்...ரட்சகன்...மற்றும் விடுதலை வீரன் பாபா சாகேப் அம்பேத்கர் நினைவு நாள் நாளை.

ஆதிக்க சாதி இந்துக்களின் பரம எதிரியாக மேலேறி நெஞ்சை நிமிர்த்தி போராடிய புரட்சிக் காரன்........மிருகங்களை நடத்தும் விதத்தை விடவும் மிக கேவலமான முறையில் ஒரு சாரர் மக்களை மற்றோர் இனம் ...ஆயிரம் ஆண்டிற்கு மேலாகவும் அடக்கி வைத்து வதைத்த போது, தோன்றிய பல புரட்சி காரர்கள் முளையிலேயே கிள்ளி எறியப் பட்டு...அவர்களின் சுவடு கூட மற்ற சந்ததியினருக்கு தெரியா வண்ணம் பார்த்து கொண்டனர் ஆதிக்க இந்துக்கள்...நாளா வட்டத்தில் நமது பிறப்பும் வாழ்வும் இப்படி மட்டுமே இருக்கும் என்னும்படியாக முதுகேலும்பற்று அந்த இனம் கூனி போனது....

தாழ்த்த பட்டவர்கள்...தீண்டத்தகாதவர்கள் என்ற அடைமொழியைச் சுமந்த அவ்வின மக்களை கண்களால் காண்பதை கூட வெறுத்தனர் ஆதிக்க இந்துக்கள்...ஊருக்கு வெளியில் ஒதுக்கு புறமான பகுதிகளே இம்மக்களின் வசிப்பிடமாக மாறி போனது...குடிக்க நீரின்றி புசிக்க சத்தான உணவின்றி தவிக்க விட்ட ஆதிக்க சக்திகள்...நீ ஒரு அடிமை...அடிமைத்தனம் மட்டுமே உனக்கு சொந்தம் என்ற உணர்வை அடிமனதின் அடியாளம் வரை ஊன்றியதால் ஆளுமைத் திறன் அற்று சராசரி மனிதனாக கூட வாழ தகுதியற்றவர்களாக ஆக்கப் பட்டனர் அம்மக்கள்....


வரலாறும் கூட ஆதிக்க சக்திகளால் எழுதப் பெற்றதால்...அங்கும் இந்த அடிமையினத்தில் தோன்றி போராடிய பல போராளிகள் வரலாறு புலபடாமலே முடிந்து போனது....தப்பி பிழைத்ததில் நந்தனும், ராமானுஜனும் மட்டுமே....அதுவும் ஏனென்றால் ஆதிக்க சக்திகளின் கடவுளை அவர்கள் வாயார புகழ்ந்ததால்....இன்றும் வாசுதேவனல்லுரில் வாய் வழி பாடல்கள் மற்றும் கதைகள் மூலம் புலித் தேவனின் முக்கியமான தளபதிகளில் ஒருவன் அடிமையினத்தில் இருந்தவன் என்பது வரலாற்றில் எங்கும் பதிந்து வைக்க படவில்லை...ஆதிக்க சாதி இந்துக்கள் எதிரில் வந்தால் உடனே தரையில் படுத்து கொண்டு கும்பிட்டபடியே ஒரு அடிமைனத்தான் இருக்க வேண்டும், அந்த ஆதிக்க சாதி இந்து கடக்கும் வரை....இவர்களுக்கு மேலாடை என்பது கூடாது...இதில் அடிமைனத்தின் பெண்களும் அடங்குவர்...மழை பெய்து தேங்கும் நீரும் வயலுக்கு பாய்ச்சிய நீரும் தான் இவர்களுக்கு குடிக்க கிடைத்தன....தண்ணீர் என்பது அபூரவமாக கிடைக்கும் விஷயமானதால்....குடிக்க மட்டுமே பயன்படுத்த முடிந்தது அம்மக்களால்.....குளிக்க முடியாமல் நாள் கணக்கில் இருப்பதால் அழுக்கான உடையும் துர்நாற்ற உடலுடன் அலையை விடப் பட்டனர் அம்மக்கள்...இந்த வழக்கமே நூற்றாண்டுகளுக்கும் தொடர்ந்தது...மொத்தத்தில் மிக சாதுர்யமாக திட்டமிடப் பட்டு பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக ஒரு குறிப்பிட்ட மனித இனம் மிக கேவலமாக நடத்தப்பட்டது....நடத்திய ஆதிக்க இந்துக் கூட்டம் கொக்கரித்து மகிழ்ந்தது....இனி இந்த இனம் மிருகங்களோடு மிருங்களாக வாழும் என்றெண்ணிக் கொண்டிருந்த போது புயல் போல கிளம்பினான் ஒரு போராளி....அடிமையினத்தில் இருந்து....ஆணவத்தின் உச்சியில் ஆடிக் கொண்டிருந்த ஆதிக்க சக்திகள் ஆடிப் போனார்கள் அந்த போராளியின் சீற்றம் கண்டு.......

பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர்(1891 ஏப்ரல் 14 - 1956 டிசம்பர் 6 ) மகாராஷ்டிரத்தில் பிறந்த இந்த புரட்சிக்காரன் அடிமையினத்திர்க்கே உள்ள பல அடக்குமுறைகளை எதிர்கொண்டே முன்னேறினான்.....பரோடா மன்னரின் உதவியுடன் உயர்கல்வி கற்ற அம்பேத்கர் ஒட்டுமொத்த தலித் மக்களுக்காக போராடினார்....தலித் மக்கள் ,சாதி இந்துக்கள் புழங்கும் கிணற்றிலும் குளத்திலும் நீரெடுக்கும் போராட்டத்தினை முன்னெடுத்து...உங்களுக்கும் முதுகெலும்பு உண்டடா என்றுனர்த்தினார் தலித் மக்களுக்கு....தாழ்த்தப்பட்டோருக்குத் தனி வாக்குரிமையும், விகிதாசாரப் பிரதிநிதித்துவமும் வழங்கப்பட வேண்டுமென டாக்டர் அம்பேத்கர் மிக தீவிரமாக வலியுறுத்தினார்......அதன் விளைவே தாழ்த்தப்பட்ட மக்களுக்கென தனித் தொகுதிகள் ஒதுக்கும் முறைக்கு வித்திட்டது.....தேசபிதா என்று காந்தியை வரலாறு புகழ்ந்தாலும்...இந்து வெறியன் காந்தி என்ற கருத்தையே கொண்டிருந்தார் பாபா சாகேப்......“எனக்குத் தாயகம் உண்டு என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், நான் மீண்டும் கூற விரும்புகிறேன், எனக்கு அது இல்லை… நாய்கள், பூனைகளைவிட நாங்கள் மோசமாக நடத்தப்பட்டால், குடிதண்ணீர் பெறவும் உரிமை இல்லை என்றால் சுயமரியாதையுள்ள எந்த தீண்டப்படாதவன் இந்த நாட்டைத் தன் நாடாகக் கருதுவான்? இந்த நாடு எங்களுக்கு அளித்த உதவி, இன்னல்களையும் அநீதிகளையும் மலைபோல் எங்கள் மீது சுமத்தியதே ஆகும். யுகயுகமாகக் காலால் மிதித்து நசுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட என் மக்களுக்கு மனித உரிமைகளுக்காக நான் செய்யும் முயற்சிகளின் காரணமாக இந்த நாட்டுக்கு எவ்விதத் தீங்கும் நேர்ந்துவிடாது.’
1931-ம் ஆண்டு மகாத்மா காந்தியைச் சந்தித்தபொழுது டாக்டர் அம்பேத்கர் முன் வைத்த கருத்துகள் இவை.தன்னால் இயன்ற வரை மிக தீவிரமாக தீண்டாமையை எதிர்த்து போரிட்ட பாபா சாகேப்...தான் சாவதற்குள் இம்மக்களை ஒரு படி முன்னேற்றி விட்டு செல்ல வேண்டும் என்றேன்னிக்கொண்டே இருந்தார்....ஒரு மனிதனுக்கெதிராக சக்தி நிரம்பிய கூட்டம்.....இவர் பின்னலோ கூனை நிமிர்த்தி தற்பொழுதுதான் உலகை நோக்கும் கூட்டம்.....பெருவாரியான அவரது கனவு மெய்யாகாமலே உள்ளது இன்றளவும்.....ஒரு கட்டத்தில் மிகவும் மனம் வெறுத்து போய் பௌத்த மதத்தை தழுவினார் பாபா சாகேப்.... 1956 டிசம்பர் 6 அன்று நீங்கா துயிலில் ஆழ்ந்த பாபா சாகேப் பௌத்த சமய முறைப் படியே அடக்கம் செய்யப் பட்டார்....ஆண்டாண்டு காலமாய் ஆதிக்கம் செலுத்திய வல்லாதிக்க இனங்களை வீறு கொண்டேதிர்த்த மாவீரன் ,புரட்சிக் காரன் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் நினைவு தினம் நாளை கடைபிடிக்கப் படுகிறது...தன் இனத்தின் வரலாறுகளையும்...தற்போது உள்ள நிலையும், இவ்வின மேன்மைக்கு ஆற்ற வேண்டிய கடமைகளையும் உணர்ந்து ஒவ்வொரு தலித் இளைஞனும் ,யுவதியும் இனமுன்னேற்ற பாதைக்கு பொறுப்புணர்ந்து முன்னெடுக்கும் முயற்சிகளும் போராட்டமும் வெற்றிகளுமே...பாபா சாகேப்பின் கனவை நனவாக்கும்...அவரின் ஆன்மா சாந்தியடையும்.ஜெய் பீம்.

6 கருத்துகள்:

காமராஜ் சொன்னது…

மிக மிக அழுத்தமான பதிவு.
உரிய காலத்தில்.

காமராஜ் சொன்னது…

பின்னூட்டம் வராது கவலை கொள்ள வேண்டாம்.

காமராஜ் சொன்னது…

பைபிளில் மோயிசனின் வரலாறு ஒன்று உண்டு. அது கிட்டத்தட்ட அம்பேத்கரின் வாழ்வோடு ஒத்துப்போகும். சாகிற வரை தனது கொள்கைகளையும், ஜனங்களையும் அழைத்துக்கொண்டு ஒவ்வொரு கதவாகத் தட்டினார்கள் இரண்டு பேரும்.

லெமூரியன்... சொன்னது…

உங்கள் வருகைதான் ஆவலுடன் எதிர்பார்த்தேன் காமராஜ் அண்ணா.! வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி...!
\\பின்னூட்டம் வராது கவலை கொள்ள வேண்டாம்......//
இல்லை அண்ணா....பொதுவாக சில விஷயங்களுக்கு பெருவாரியான முரண் பட்ட கருத்தை கொண்ட சமுதாயத்தில்
இந்த பதிவிற்கு நான் கண்டிப்பாக மறுமொழி எதிர்பார்க்க முடியாது......!
கவலை கொள்ளவில்லை அண்ணா.

லெமூரியன்... சொன்னது…

\\பைபிளில் மோயிசனின் வரலாறு ஒன்று உண்டு. அது கிட்டத்தட்ட அம்பேத்கரின் வாழ்வோடு ஒத்துப்போகும். சாகிற வரை தனது கொள்கைகளையும், ஜனங்களையும் அழைத்துக்கொண்டு ஒவ்வொரு கதவாகத் தட்டினார்கள் இரண்டு பேரும்....//

கண்டிப்பாக எனக்கு இது புதிய தகவல் அண்ணா...!

ஜோதிஜி சொன்னது…

இவர் மட்டும் தான் இன்னமும் முழுமையாக உள்வாங்க முடியவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாய்.

நிச்சயம் நேரம் ஒதுக்க வேண்டும்.