புதன், 30 டிசம்பர், 2009

பறத்தலை பற்றிய ஆர்வத்துடனும் கனவுகளோடும்
நாங்கள்....

மற்றவைகள் பறக்கும் முயற்சிகளில்....கனவுகள் துணை
கொண்டு உயரே பறக்கிறேன்..

ஆசைகளனைத்தும் மேகக்கூட்டமாய் மேலே...அள்ளி
பருகும் ஆவலுடன் நான்...

எதோ ஒரு உறுத்தலில் கடந்து வந்த உயரத்தை காண
நேர்ந்த போது

கனவுகளின் துணை கொண்டு ஏக்கங்களின் வெளிப்பாடாக
எட்டப் பட்ட உயரம்..

கனவுகளின் மேல் கோபம் கொள்கிறது தன்னம்பிக்கை.....
சிறகொடிந்து தரையில் நான்...

காமம் பருகி கை விட்டு செல்லும் காதலிகள்...நேற்று வரை
வேலையற்று

இன்று வேலையிலிருக்கும் நண்பனின் பாசமிகு
அறிவுரைகள்...

பார்வைகள் கேள்விகள் கேலிகள்..துளைத்து தூவம்சித்து கள்(கல்)
எறியும் சமுதாயம்...

இம்முறை நம்பிக்கை துணை கொண்டு பறக்க எத்தனிக்கிறேன்
பலமடைந்த சிறகோடு...

பறத்தலின் அவசியமும் கனவுகளின் நிதர்சனமும் புரிந்து....அடுத்த
நொடி நோக்கி பறக்கிறேன்.......

நம்பிக்கையோடு.

14 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

நம்பிக்கை இழந்து மீண்டும் நம்பிக்கை உயிர் பெறும் வரிகள்.நிச்சயம் முயற்சிக்குத் தோல்வியேயில்லை லெமூரியன்.

மனம் நிறைந்த புத்தாண்டு வாழ்த்துகள்.

லெமூரியன்... சொன்னது…

வாங்க ஹேமா...!
:-) :-)
புத்தாண்டு வாழ்த்துக்கள் ஹேமா...!

காமராஜ் சொன்னது…

அன்புத்தம்பி ரமேஷ் வணக்கம். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

லெமூரியன்... சொன்னது…

வணக்கம் காமராஜ் அண்ணா...!
புத்தாண்டு வாழ்த்துக்கள் அண்ணா...!

புலவன் புலிகேசி சொன்னது…

நம்பிக்கையாலும் உழைப்பாலும் வெற்றி கிட்டும்

லெமூரியன்... சொன்னது…

வாங்க புலவரே....!
வருகைக்கும் மறுமொழிக்கும் மிக்க நன்றி புலவரே...!
\\நம்பிக்கையாலும் உழைப்பாலும் வெற்றி கிட்டும்...//

கண்டிப்பாக புலவரே..!

நினைவுகளுடன் -நிகே- சொன்னது…

முயற்சி இருந்தால் தோல்வி இல்லை
புத்தாண்டு வாழ்த்துக்கள்

Chitra சொன்னது…

HAPPY NEW YEAR - With more hope and happiness!

லெமூரியன்... சொன்னது…

Thank You ni-ke..!

Thank you for your comments.

லெமூரியன்... சொன்னது…

thank you chit"s...!

காமராஜ் சொன்னது…

என்னாச்சி, என்னப்பூ ஆளையே காணோம். ரொம்ப பிஸியா. பதிவு போடு.

லெமூரியன்... சொன்னது…

வணக்கம் அண்ணா...!
:-)
இதோ தொடங்குகிறேன் அண்ணா

ஜோதிஜி சொன்னது…

நேற்று வரை
வேலையற்று
இன்று வேலையிலிருக்கும்
நண்பனின் பாசமிகு
அறிவுரைகள்...

இதயத்தை கிழித்த வரிகள். அனுபவித்து வந்த வாழ்க்கை நினைவுக்கு வருகிறது.
இப்போது நிணைத்தாலும் சிரிப்பாக வருகிறது.

இளந்(இழந்த)தமிழன் சொன்னது…

இனிய பொங்கல் வாழ்த்துக்கள் லெமூரியன்