செவ்வாய், 24 நவம்பர், 2009

மரணம்...!

மரணம், என்ற வார்த்தையே ஒரு வித அமானுஷ்யத்தை சுமக்கும். மரணத்தை பற்றி நாமனைவரின் பார்வையும் ஒன்றே. முற்றும் துறந்தவர்களும் அதற்கு விதி விலக்கல்ல. பிறப்பும் இறப்பும் சமமாக இருப்பினும், பிறப்பை கொண்டாடுவது போல் ஒரு இறப்பை கொண்டாட முடியாது நம்மால். மரணத்தை வெல்ல முடியாது என்றுணர்ந்த மனிதன் சற்று சமரசத்திற்கு உட்பட்டு இறப்பும் பிறப்பை போல் வலியுணராமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்திற்கு ஆட்பட்டிருக்கிறான்.

சிரித்து கொண்டே விடை பெற்று உலகை விட்டு போகும் மனிதனை கதைகளில் மட்டுமே கேள்விபட்டிருப்போம். யதார்த்த வாழ்வில் அப்படி ஒரு நிகழ்வு நடப்பது சாத்தியமா?? பிறந்த குழந்தை தன சுவாசத்தை ஆரம்பிக்கும் முதல் தொடங்குகிறது வாழ்வின் மேல் உள்ள பற்றுதல்...அப்படியே அது இறுகி வலுப் பெற்று வேர்விட்டு
உலகை விட்டு செல்ல கூடாது என்ற ஒரு வித வெறியாக மாறுகிறது...! ஒரு வித பரிதவிப்பு இருந்து கொண்டே இருக்கிறது எப்பொழுதும்....

மரண பயம் வாழ்வின் மேல் உள்ள பற்றுதலை அதிகரிக்கிறது...நாம் பிறக்கும் போதே நமக்கும் மரணத்திற்குமான விளையாட்டு ஆரம்பிக்கிறது....அது எப்பொழுதும் நம்மை சுற்றி கொண்டேயிருக்கும் கண்ணுக்கு தெரியாத காற்றலைகளாக...என்றே எனக்கு தோன்றும்...சமயங்களில் அதன் விளையாட்டு சற்று குறும்பாக மாறி என்னை சிறிது நட்போடு உரசி விட்டு செல்வதாக உணர்ந்த சமயங்கள் எனக்குண்டு....

சமயங்களில் எனக்கு சற்று வித்தியாசமான கோணங்களில் யோசிக்க தோன்றும்.....சாலையோரம் உள்ள தேநீர் விடுதியில் தேநீர் அருந்தும் போது ,சாலையில் எதிரே வேகமாக வந்து கொண்டிருக்கும் பேரூந்து.....கட்டுபாட்டை இழந்து இங்கே பாய்ந்தால் எப்படி இருக்கும் என்றஎண்ணம் மனதில் தோன்றி செல்வதை என்னால் கட்டுபடுத்த முடியாது.....அதைப்போலவே பெரிய மேம்பாலத்தின் அடியில் செல்லும்போது அப்படியே இது சரிந்து விழுந்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் மேலோங்கும்...

சற்று முன் பார்த்த அழகான அந்த இளம்பெண், எனக்கு முன்னிருக்கையில் அமர்ந்திருக்கும் இளம்ஜோடி, முதல் இருக்கையில் நான் போயமர்ந்த போது என்னை எழுப்பிய வயதான பெண்....எல்லாம் கன பொழுதில் சதைகள் பிய்க்கப் பட்டு சதையும் எலும்புமாக கிடக்க....நானும் நண்பனும் சிறு காயம் கூட இன்றி இருக்கையில் அமர்ந்திருக்கிறோம்......பேரூந்து முக்கால் வாசி உருக்குலைந்து விட்டது....மீட்பு குழுவினருடன் அனைவரையும் மீட்டு மருத்துவ மனை கொண்டு சென்ற போது என் தோளில் கை போட்டு ஒரு வித நட்போடு மரணம் புன்னகைத்ததை இந்நொடி மறக்க முயற்சிக்கிறேன்.....

மரணத்தை ஒரு இறுதி முடிவாக ஏற்றுக் கொள்ள முடியாத மனித நாகரிகம் இறப்பிற்கு பின்பும் பல சடங்குகளை செய்து அவர்கள் நலனை உறுதி செய்து கொள்கிறது...
நமக்கான இறுதி நாளை நாமே தீர்மானிபதர்க்கு ஒருவித அசாத்திய தைரியம் வேண்டும். அவ்வகையில் பார்க்கும் போது கொள்கைக்கும் மற்றும் கோட்பாடுகளுக்காகவும் உயிர் துறக்கும் கரும்புலி தோழர்களும் மற்றும் பிற தற்கொலை போராளி படையும் ,மரணத்தை வென்றவர்களாகவே தெரிகிறாகள் என் கண்களுக்கு.

10 கருத்துகள்:

காமராஜ் சொன்னது…

மரணத்தைப்பற்றி ஆயிரம் கர்பிதங்கள் இருந்தாலும் அந்தப்பயம் மட்டும் ச்சாஸ்வதமாகவே தொடரும்.
பாலம் சரிந்து விழும் கற்பனை எல்லாரையும் ஆட்டிப்படைக்கும். //நாம் பிறக்கும்போதே மரணத்திற்கும் நமக்குமான விளையாட்டு ஆரம்பிக்கிறது //இதுவும் நல்லா இருக்கு ரமேஷ்.

லெமூரியன்... சொன்னது…

\\பாலம் சரிந்து விழும் கற்பனை எல்லாரையும் ஆட்டிப்படைக்கும்...//

ஒ...! எல்லோருக்கும் தோன்றும் விஷயம்தானா?
என் நண்பி ஒருத்தியிடம் நான் இதை சொன்ன போது மனநல மருத்துவரை போய் பார்க்கும்படி அறிவுரித்தினாள்..!
:-(
மறு மொழிக்கு நன்றி காமராஜ் அண்ணா...!

thiyaa சொன்னது…

இன்னும் நிறைய எழுதுங்கள்

இளந்தமிழன் சொன்னது…

நானும் எப்பொழுதுமே மரணத்தை பற்றியே நினைத்துக்கொண்டிருப்பேன். பெரும்பாலானவர்களின் மனதில் உள்ளதை அப்படியே சொல்லியிருக்கிறீர்கள். நல்ல பதிவு. மரணத்தை எண்ணி பயபடுவர்கள் தான் , அதைப்பற்றி நினைத்துக்கொண்டே இருப்பார்கள் என்பது என் கருத்து.

லெமூரியன்... சொன்னது…

நன்றி தியா...!

லெமூரியன்... சொன்னது…

நன்றி இழந்தமிழா .........எங்கே ரொம்ப நாளா இந்த பக்கம் பாக்க முடியலையே உங்களை...!

இளந்தமிழன் சொன்னது…

ஆமாம் லெமூரியா. கொஞ்சம் வேலைப்பளு, அவ்வளவுதான். ஆனாலும் உங்கள் பதிவுகள் அனைத்தையும் படித்துக்கொண்டுதான் இருக்கிறேன்.

லெமூரியன்... சொன்னது…

நன்றி இளந்தமிழா நேரம் கிடைக்கும் பொழுது மறக்காமற் எதாவது பதிவிடுங்கள்...! உங்களிடம் நிறைய விஷயங்களை எதிர் பார்க்கிறோம்.

ஹேமா சொன்னது…

மரணம் என்பது நாம் விரும்பாவிட்டாலும் எங்களை நோக்கி வந்துகொன்டிருக்கும் ஒரு விருந்தாளி.வரவேற்றே ஆகவேண்டும்.உங்கள் பதிவுகளில் ஏதோ ஒரு வித்தியாசம் காண்கிறேன்.

லெமூரியன்... சொன்னது…

நன்றி ஹேமா....நீங்கள் சொன்னது போல மரணத்தை வரவேற்க கற்றுக் கொள்ள வேண்டும்!