வியாழன், 12 நவம்பர், 2009

மறைக்கப்பட்ட சுவாரசிய உண்மைகள்...!

சமீபத்தில் சாலையில் வந்துகொண்டிருக்கும் போது ஒரு வாழ்த்து சுவரொட்டியை காண நேர்ந்தது....அதில் அண்ணாவின் மனசாட்சியாகக் பெரியவர்,முதல்வர் திரு முத்துவேல் கருணாநிதியின் படம் அச்ச்சடிக்கப்பெற்றிருந்தது....பல காலமாக கழக தொண்டர்கள் ஓட்டுகிற வாழ்த்துப் படம் தான் அது.....எனினும் அதனைக் காணும்போது மனதிற்குள் சிரித்துக் கொள்வேன்....சில காலத்திற்கு முன்பு வரை நானும் அந்தப் படத்தை கண்டு சிலாகித்திருக்கிறேன்....ஆனால் அதன் பின்னால் உள்ள கதைகள் தெரிந்தப் பிறகு மிகச் சிரமப் பட்டே சிரிப்பை அடக்கிக் கொள்வேன்.

சில காலத்திற்கு முன்பு தமிழகத்தின் பிரபலமான இரு சக்கர வாகன உற்ப்பத்தி நிறுவனமான டி.வி.எஸ் குழுமத்தில் பணி செய்துக் கொண்டிருந்தேன்....அப்போது அங்கு உயரதிகாரியாக பணி புரிந்த ஒருவர் எனக்கு நட்ப்பானார்...டி.வி.எஸ் குழுமத்தில் உயரதிகாரி என்றாலே உங்களுக்குத் தெரிந்திருக்கும் அவர் என்ன பிரிவைச் சேர்ந்தவரென்று...ஆனால் இவர் ரொம்ப மாறுபட்ட குணாதிசயம் கொண்டவர்....மூடபழக்க வழக்கங்களை கிண்டலடிப்பவர்....இறை வழிபாட்டிலும் அதிகம் ஆர்வம் காட்டாதவர்...

விஷயத்திற்கு வருகிறேன்...ஒரு மாலைப் பொழுதில் வேலை முடித்து அவருடன் காரில் வர வேண்டிய சந்தர்ப்பம் அமைந்தது.....காரில் வரும்போது இதே வாழ்த்து படம் கொண்ட சுவரொட்டியை காண நேர்ந்த போது அவர் பலமாக சிரித்தார். காரணம் கேட்ட போது தான் எனக்கு தெரியும் அவரின் பாட்டனாரும் அண்ணாவும் மிக நெருக்கமான தோழர்கள் என்று.....அப்போது அண்ணாவுடன் நிறைய ஐயங்கார் நண்பர்களும் அதிகாரிகளும் கொண்ட வட்டம் இருந்ததெனவும்....கழக வட்டத்தையும் தாண்டி இந்த வட்டம் இருந்ததெனவும்....அவர்களிடம் உரையாடும்போது அவன்கிட்ட (மு.கா) கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருக்கணும் என்று கூறுவது அண்ணாவின் வழக்கமாம்.

நாற்காலி வேட்டையில் உடனிருக்கும் நண்பனையே புறமுதுகில் குத்தும் அரசியல் சதுரங்க காய் நகர்த்தலுக்கு ராஜ தந்திரம் என்று தமிழக அரசியல் வரலாற்றில் புதிய அகராதி உருவாகிய காலக் கட்டம் அது. உண்மையில், தனது பேச்சாற்றல் மூலம் கழகக் கண்மணிகளின் இதயத்தில் ஒரு இடம் பிடித்த மாதிரி, உள்ளடி அரசியல் காய் நகர்த்தலிலும் பாய்ச்சலாக சென்றுகொண்டிருந்த கருணாநிதியைக் கண்டு மிகவும் கலக்கத்துடனே தான் இருந்தாராம் அண்ணா.

அண்ணாவின் மறைவிற்குப் பிறகு நடந்த காய் நகர்த்தல்கள் மிக பிரசித்தி பெற்ற கதை.நிற்க.
புறமுதுகில் குத்துபடுவதும் குத்துவதும் தங்கள் வீரத்திர்ற்கு நேர்ந்த இழுக்க்காகவே பாவித்தது வீரத் தமிழினம். (குறிப்பு: பெரியவர்(மு.கருணாநிதி) சார்ந்த இனம் தமிழினம் அல்ல. அவரின் மூதாதையர்கள் ஆந்திராவின் பூர்வாங்க குடிகள் என்பதை நினைவு கொள்க.)





அது திராவிடக் கழகம் தமிழகத்தில் அனல் பரப்பிக் கொண்டிருந்த காலம். தந்தைப் பெரியார் தமிழக இளைஞர்களுக்கு எழுச்சித் தலைவனாக வழி நடத்திக் கொண்டிருந்த காலக் கட்டம்....தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டியில் ஒரு பிள்ளை மார் சமூகத்து அன்பர் உணவகம் ஒன்று நடத்தி வந்திருக்கிறார். ஜாதி வெறி பிடித்த ஆதிக்க வர்க்கத்தின் ஒரு சோறுதான் அவரும். அப்போது பம்பாயிலிருந்து வந்த ஒரு ஆதி திராவிட இன இளைஞன் தெரியாமல் அந்த உணவகத்தில் நுழைந்து விட,அங்கே சிறிய அடி தடி நடந்து அந்த இளைஞன் வெளியேற்றப்பட்டான்.

இதைக் கேள்விப் பட்ட அந்தப் பகுதி தி.காவினர் பிள்ளை வாளுக்கு பாடம் புகட்ட நினைத்திருந்தனர்...அப்போது ஒரு கூட்டத்திற்கு கோவில்பட்டிக்கு பெரியார் வர ஏற்ப்பாடு செய்யப் பட்டிருந்தது....இதுதான் சமயம் என்று தி.காவிலுள்ள இளைஞர்கள் இரு தலித் இளைஞர்களுடன் பிள்ளை உணவகத்திற்கு சென்று அமர்ந்தனர். தலித் இளைஞர்கள் உள்ளே நுழைந்ததை பார்த்து கொதித்து போனார் பிள்ளை. கூட்டமாக தி காவினர் இருப்பதால் ஒன்றும் செய்ய முடியாமல் கையைப் பிசைந்த பிள்ளை ,ஒரு முடிவுக்கு வந்தவராக அந்த உணவகத்திற்கு பின்புறம் இருந்த எச்சில் இலைகளை வளிக்கும் வேலை செய்து வந்த சக்கிலிய இன இளைஞனை கைகள் அலம்பி விட்டு அமர்ந்திருப்பவர்களுக்கு பரிமாறும்படி பணித்தார்.

சில நொடிகளுக்கு பிறகு அங்கே அந்த இரு தலித் இளைஞர்களைத் தவிர ஒருத்தரும் இல்லை.

15 கருத்துகள்:

காமராஜ் சொன்னது…

மிக அரிதான தகவல்கள் லெமூரியன்.
வாழ்வனுபவமும் கூட. பெரியாரை ஆந்திராக்காரர் என்கிற வகையில் எழுதவேண்டாம். அது உங்கள் மிதமிஞ்சிய தமிழ் உணர்வைக்காட்டுகிறது. வடக்கே அம்பேத்கர் செய்த பணிகளை பொதுத்தமிழகத்துக்கு தனது பத்திரிகை மூலம் அறிய இடம் தந்தவர் பெரியார். தவிரவும் காலக்கணக்கோடு ஒப்பிட்டால் இன்று ஒலிக்கும் தலித் குரலுக்கு சற்றும் குறைவில்லாத மீறல் இருந்தது அவரது அந்தக்கலகக்குரலில். ஒத்த கருத்தில் இருக்கும் குறைந்தபட்ச விமர்சனங்களைப்போற்றாமல் நமக்கு முன்னிருக்கும் சவாலை எதிர்கொள்வது மட்டுமே புரட்சியின் மூலக்கூறு. நிறையப்படியுங்கள் தொய்வில்லாமல் தொடருங்கள்.

லெமூரியன்... சொன்னது…

மன்னிக்க வேண்டும் காமராஜ் சார்.....நான் பெரியாரைக் குறிப்பிடவில்லை....பெரியவர் (மு.கருணாநிதி) குறிப்பிட்டேன்.

லெமூரியன்... சொன்னது…

இரண்டு வார்த்தைகளுக்கும் எழுத்து விதியாசம் கொஞ்சம் ஆகவே இந்த குளறுபடி.....அடைப்புக் குறியில் பெயர் பதிந்துள்ளேன்.

லெமூரியன்... சொன்னது…

கருத்துரை இட்டமைக்கு மிக்க நன்றி காமராஜ் சார்..! உங்கள அண்ணானு கூப்டலமா? சார்'னு கூப்டா சற்று அந்நியமா தோனுது??

லெமூரியன்... சொன்னது…

பெரியாரை எந்த தமிழ் நெஞ்சமும் பிரித்துப் பார்க்காது....குறிப்பாக திராவிட இனம் நெஞ்சுறுதி கொண்டு நிமிர்ந்து நடக்க வைத்தவர் தந்தைப் பெரியார். அவரைப் பற்றி பேசக் கூட தகுதியற்றவன் நான். உலகம் அழியும் வரை அனைத்து தமிழ் நெஞ்சங்களிலும் வீற்றிருப்பார் தந்தை பெரியார்.

இவன் சிவன் சொன்னது…

அண்ணாச்சி வணக்கம் பதிவு மிக அருமை. மிக நேர்த்தியான விளக்கங்கள். நிறைய எழுதுங்கள் மிக்க ஆர்வமாய் உள்ளேன்!!!!!!!!

லெமூரியன்... சொன்னது…

மிக்க நன்றி தோழர் சிவன்.
நட்பும் ஆதரவும் வேண்டி...
லெமூரியன்.

ஜோதிஜி சொன்னது…

நண்பர்கள் என்ற பகுதியை இணைத்தால் இணைத்துக்கொள்ள வசதியாய் இருக்குமே.

இவன் சிவன் சொன்னது…

தங்கள் வலைப்பூவில் இணைய 'Option' ஒன்றை கொடுத்து விடுங்களேன் வசதியை இருக்கும்

லெமூரியன்... சொன்னது…

நான் வலைத்தளத்துக்கு புதிது என்பதால் அந்த வசதியைப் பற்றி எதுவும் தெரியவில்லை தோழரே.....அத எப்படி செயற்ப படுத்துவது என்று சொன்னால் உடனே சேர்த்து விடுவேன்

ஜோதிஜி. தேவியர் இல்லம்
இவன் சிவன்
இருவரும் எனக்கு இந்த விஷயத்தில் உதவி புரிய வேண்டுகிறேன்......

லெமூரியன்... சொன்னது…

ஜோதிஜி. தேவியர் இல்லம்
இவன் சிவன்

கருத்துரை இட்டமைக்கு மிக்க நன்றி தோழர்களே..!

காமராஜ் சொன்னது…

லெமூரியன் வணக்கம். உங்கள் கூகுள் கணக்கில் myaccount ஐ தெரிவு செய்து, blogger ல் உள்ள lay out ஐ தெரிவு செய்தீர்களானால். உங்கள் வலைப்பக்கத்தின் வரைபடம் blue print வரும் அதில் உள்ள add gadget ஐ தெரிவு செய்து உங்களுக்கான foollower, comments, உங்கள் விருப்ப வலைத்தளப்பதிவுகளின் updates எல்லாவற்றையும் இனைத்துக்கொள்ளலாம். முடியவில்லையெனில் சொல்லுங்கள் சாத்தூரில் ஒரு கேந்திரம் இருக்கிறது.
சரி பேர் தான் என்ன ?.
அப்புறம் எப்படி அழைத்தாலும் உள்ளிருக்கிற அன்பு தெரிந்துவிடும்.

அன்புடன் மலிக்கா சொன்னது…

நல்ல இடுகை தொடர்ந்து எழுதுங்கள்..

லெமூரியன்... சொன்னது…

நன்றி தோழர் மலிக்கா...!
கண்டிப்பா முயற்சி செய்கிறேங்க...

ஜோதிஜி சொன்னது…

வருத்தமாக இருக்கிறது. நான் ரசித்த விரும்பி பின் ஊட்டம் இட்ட பிறகு அதற்கு என்ன பதில் என்று பார்ப்பது இல்லை. இன்று உள்ளே வந்த போது சற்று வெட்கப்பட்டேன். மன்னிக்கவும்.

முக நிறைய விசயங்கள் இது போல் உண்மைகள் உள்ளது என்னிடம்.