வெள்ளி, 18 அக்டோபர், 2024

 இரண்டாயிரத்து ஒன்பதில் ஈழ போர் முடிந்த வேளையில்  எழுதியது .....ஏனோ வலையேற்றம் செய்ய தோன்றாமல் வைத்து விட்டேன்... 



காத்திருக்கும் அகதிகள்

நவயுக கடவுள்களாக புத்தரும் இயேசுவும் ஆயுதமேந்தி...

கொன்றழிக்க பெற்றன உலகின் தொன்மையான

இனமும் அதன் கடவுளும்..

இரத்த குளியலில் கடவுள்கள். ஆயினும் கோபம்

அடங்கவில்லை அவர்களுக்கு...

தொன்மையான இனத்தின் பெயரை சொல்லித் திரியும்,

கருங்காலிகள் வசிக்கும் இந்த பகுதிக்கும் ஆசைப் பட்டன

கடவுள்கள்..

கடவுள்களின் படை சூழ்ந்தது...கூடங்குளமும் கல்பாக்கமும்

தீண்டப் பெற்றன...

பஸ்பமானது கருங்காலிகளின் கூடாரம்,லெமூரியக் கண்டம்

இப்போது புத்தருக்கும் இயேசுவுக்கும் சொந்தமானது...

உடற்பாகங்கள் இழந்து குற்றுயிரும் குலையுருமாய்

அகதிகளாக ஆரிய தேசத்தை நோக்கி ஓடுகின்றன

கருங்க்காலிகளில் மீதி.....

காத்திருக்கின்றன கல்லறைகளும் அருங்காட்சியகமும்

இவர்களின் வாழ்வியலையும் கலாச்சாரத்தையும்

பற்றி பேச..!

வெள்ளி, 26 மே, 2023

கோடையின் குளிர்


கோடை தணிக்க குளிர் பிரதேசம் போகிறேன் என்றாள்

 வெப்பம் தாளாமல்  வாடும் செடியாய்   

சரி போய் வா என்றேன்


 அவளற்ற பொழுதுகள் பொதி சுமையாய் மாறி

 என்மீதமர்ந்து எனை அழுத்தி கொல்ல பார்க்கிறது


 பொழுதுகளிடம் புலம்புகிறேன் அவள் தள்ளி போனதை

 பொழுது என்னிடம் கதைக்கிறது பெண்களுக்கா பஞ்சம் 

உன்னிடத்தில் என்று... 


 கொளுத்தி போட்டுருவேன்  உன்னை என பொழுதை மிரட்டிய பின்பு 

பொறணி பேசுகிறது..  

அவ என்ன அவ்ளோ பெரிய அழகியா என்று...

 உனக்கான பெண்களின் பட்டியல் வைத்து கொண்டு 

கால சக்கரம் காத்திருக்கு என்று காதினுள் கிசுகிசுக்கிறது.. 


 கால சக்கரத்தை கெஞ்சி கேட்டு கொண்டேன் 

இவள் மட்டும் போதும் வேறாரும் வேண்டாம் என்று.. 


கால சக்கரம் சிரித்த படியே சொன்னது உன் காதல் 

உண்மையென்றால் வேரு யாரும் உன்னவளை 

உன்னிடத்தில் கரைக்க இயலாது என்று 


பொழுது முகம் சுளித்து கால சக்கரத்தை பழிக்கிறது

 நான் பிறிவு துயர் போக்கவும் பொழுதை விரட்டவும்

 கிங்பிஷர் குடுவையின் உதடோடு உதடு பதிக்கிறேன்

செவ்வாய், 27 டிசம்பர், 2022

காதலை தொழுது கடவுளாகிறேன்

நான் உன்னுடன் இல்லா நிமிடங்களில் 
 என்ன செய்வாய் என்கிறாள்.. 

 அவளற்ற நேரங்களில் சிந்திக்கும் திறன் 
 பிடுங்கப்பட்ட மனிதனாகிறேன்.. 

 பத்து வயது மருமகனிடம் மன்னிப்பு 
 கேட்க துடிக்கிறேன் பல நேரங்களில் 
காயப்படுத்தியதற்காக.. 

 கடந்த கால தவறுகளெல்லம் கண்முன் 
 வந்து எனக்கே என் மேல் வெறுப்பை உமிழ்கிறது.. 

 தடுமாறி போகிறேன் அவளின்றி 
 அமையும் நொடிகளை நிமிடங்களை கடக்க.. 

 பூனைக்குட்டி போல துள்ளி 
ஓடி வந்து தாலி கட்ட சொன்னான், 
 கட்டினேன். 

 நண்பர் நண்பிகளோடு 
பாண்டிச்சேரி போகிறேன் என்றாள் 
சரி என்றேன் ஒற்றை பதிலில். 

 கோபமா என்றாள், நள்ளிரவு குறுஞ்செய்தியில்.. 
 இல்லை,
 நான் காதல் கடவுள் என்றேன். 
 என் காதலை வேறெந்த கூதி மகனாலையும் தர முடியாதென்றேன். 

 சிலாகித்து சிரிக்கிறாள், ஆமோதிக்கிறாள் 
 ஆமாம் நீ காதல் கடவுளென்ற.ு 
 கூட்டத்தில் கொண்டாட்டங்களில் லயிக்க 
முடியவில்லை என்கிறாள் 
 நீ தான் காரணமென சபிக்கிறாள். 

 கடவுளை சபிக்காதே கர்ம வினைகளுக்கு 
ஆட்படுவாய் என்கிறேன் 
 பெரியாரின் பேரனுக்கென்ன கடவுளின் மேல் காதலென்கிறாள். 

 வாய் இல்லைனா உன்ன நாய் 
தூக்கிட்டு போயிரும் என்கிறேன் 
 கலகலவென முத்துக்கள் சிதறியதை போல சிரிக்கிறாள், 


 சிந்திய சிரிப்பில் சிறகொடிந்த ஏஞ்சல் ஆகிறேன். 
 சிறகொடிந்த நிலையிலேயே நித்திரையை 
தழுவுகிறேன் 
 அரை தூக்கத்தில் அலைபேசி குறுஞ்செய்தி 
 ஒளியில் விழிக்கிறேன்.. 

 டேய் மாமா எப்போடா என்ன திங்க போறே 
என கதைக்கிறாள்  சொந்தத்தில் 
வரும் அந்த முறைப் பெண்.

ஞாயிறு, 29 மே, 2022

கடவுளின் காதலிகள்

கண் மூடி ஆற்றின் கரையோரம் ஆரம்பமாகும் காட்டின் தொடக்க புள்ளியில் அமர்ந்திருக்கிறேன். அலைபாயும் மனதை ஒருநிலை படுத்தி நெற்றியின் மையப்புள்ளியில் கொண்டு வந்து நிறுத்தி அந்த நொடியின் அமைதியை மொத்த உலகின் மையப்புள்ளியாக நான் ஆனதை போல அனுபவித்து கொண்டிருக்கிறேன். மெல்லிய அதிர்வலைகளை மண்ணில் இருந்து என் புட்டங்கள் வழியாக முதுகு தண்டுவடத்தின் மூலமாக மூளைக்கு சென்றுணரும் முன் கண்விழிக்கிறேன். வயோதிகம் தட்ட தொடங்கிய நிலையில் ஒரு பெண் யானை தலைமையில் பத்து யானைகள் கூட்டமாக நீர் அருந்த ஆற்றின் கரையோரம் என்னை கடந்து செல்ல முற்படும் வேளையில் என்னை கண்டு எச்சரிக்கையுற்று தலைமை யானை பிளிறியது. மனதை குவியமாக்கி அன்பை உருவேற்றிக் கொண்டிருப்பவனின் எண்ண அலைகளை அந்த மிருகங்கள் உணர முற்பட்டதால் நான் அன்பை விதைப்பவன் அன்பை அறுவடை செய்பவன் என்றுணர்ந்து மெல்ல என்னை கடந்து செல்ல ஆரம்பிக்கிறது அந்த யானை கூட்டம். கூட்டத்தின் முடிவில் செல்லும் இரண்டு இளம் பெண் யானைகள் அதீதமான காம உணர்வுடன் என்னை நோக்கி பார்வை வீசி செல்கின்றன. அந்த இடத்தில ஆண்மை பொருந்திய ஆதீத காதல் வேட்கை கொண்ட உயிரினம் நான் மட்டுமே என்று சொல்லாமல் பார்வையால் என்னை நோக்கி புரிதல் வீசி சென்றன. என் தோளில் காகம் ஒன்று வந்தமர்ந்து கரையவும் கனவு கலைந்து கண் விழிக்கிறேன். பால்கனியில் காகம் ஒன்று கரைந்திற்று. அதிகாலை கனவு பலிக்குமா என்ற கனவு தாக்கத்தின் மிச்சத்தோடு எழுந்தேன். யானைகள் பற்றி கூகுளை தேடினேன் அன்று முழுவதும் ஆச்சிரியமூட்டும் அளவிற்கு தகவலை தந்து போதித்தது கூகிள். மிக மிக நுண்ணுணர்வுகளை கொண்ட உயிரினம் யானை என அறிந்து கொண்டேன். அதீத நியாபக சக்தி கொண்டவை யானைகள்.யானைக்கும் மனிதனுக்குமான காதல் சாத்தியங்கள் பற்றி யோசித்து கொண்டே ஒரிஜினல் ப்ளாக் சிகரெட்டை(மறுபடியும் புகைக்க ஆரம்பித்திருக்கிறேன்) பற்ற வைத்து விட்டு தேநீர் கடையில் தேநீர் சொன்னேன். அலைபேசி மிளிர எடுத்து பார்த்தால் பள்ளி நண்பர்கள் குழுவில் ஒரு நண்பர் தனது மனைவியின் நண்பிக்கு வேலை வேண்டி தகவல் பரிமாறியிருந்தார் அந்த பெண்ணின் வேலை அனுபவத்தை போல உள்ள வேலையாள் தேவை என என் அலுவலகத்தில் வேலை செய்யும் நண்பர் அவரின் நண்பரின் கம்பெனியில் தேவையை என்னிடம் முன்பு பகிர்ந்தமையால் பள்ளி நண்பனுக்கு அலைபேசியில் அழைத்து அவருடைய பயோடேட்டா மற்றும் மேல் விவரங்கள் பகிரும்படி கேட்டுக் கொண்டேன். பின்பு அதை பற்றிய சிந்தனை மறந்து என்னுடைய தின வேலைகளில் மூழ்கிப்போனேன் இரண்டு நாட்களுக்கு பிறகு கம்பெனி க்ளையண்ட்டுடன் அலைபேசி உரையாடல் முடித்த பொழுது ஓர் அழைப்பு என் அலைபேசியில். வணக்கம் சார் என் பெயர் அஸ்வதி. கீதா ஹஸ்பண்ட் உங்க நம்பர் குடுத்தாங்க என்று. மிக இளமையான குரல் அவர்களுடையது. வேலையினூடே வந்த அழைப்பாகையால் ரொம்பலாம் அறிமுக படலம் நடத்தாமல் நேரிடையாக விஷயத்துக்கு வந்து விட்டோம். அவருடைய பழைய வேலை அனுபவங்கள் மற்றும் இந்த வேலைக்கான அனுபவ எதிர்பார்ப்பு என பகிர்ந்த பின்பு அழைப்பு அணைக்கப்பட்டது பயோ டேட்டா அனுப்பிகிறேன் என்பதோடு. வருடத்தின் கடைசி கால் பகுதி என்பதால் வேலைப்பளு சற்று அதிகமாக இருந்ததால் மற்ற எந்த விஷயமும் மண்டைக்குள் நிற்கவில்லை.இரண்டு நாட்கள் கழித்து அஸ்வதியிடம் இருந்து அழைப்பு. திருத்தியமைக்க பட்ட பயோடேட்டா அனுப்பியிருந்தாள். நண்பனுக்கு அனுப்பி வைக்கிறேன் பின்பு அவர்கள் உங்களை அழைப்பார்கள் மேற்கொண்டு என சொல்லி அழைப்பை அணைத்து விட்டு வேலையில் மூழ்கினேன். இரண்டு நாட்கள் கடந்த பின் வாட்ஸப்பில் ஒரு காலை வணக்கம் வந்திருந்தது அஸ்வதியிடம் இருந்து. பதில் வணக்கம் வைத்து விட்டு. நண்பரிடம் தகவல் சொல்லி விட்டேன். நீங்க ரிலாக்ஸ் ஆக இருங்க என்றேன். நன்றி என்று பதிலோடு சாட் முடிந்தது. வாட்ஸுப் ஸ்டேட்டஸ் பார்க்கும் பழக்கம் எனக்கு உண்டென்பதால் ஸ்டேட்டஸ் பார்க்க முற்படும் போது அஸ்வதியுடைய ஸ்டேட்டஸ் சில நேரங்களில் பார்க்க நேரிடும், ஒரு சுமைலி அல்லது நன்று என்று ஸ்டேட்டஸ் பதிலிடுவேன். ஒரு சிரிக்கும் எமோஜி பதிலாக வரும். மூன்று வாரங்களுக்கு பின்பு அலுவலக நண்பர் அழைத்து நீங்கள் Refer பண்ண கண்டிடேட் செலக்ட் பண்ணிட்டாங்க என் நண்பரின் கம்பெனியில் என்றார். நன்றி தெரிவித்து கொண்டேன். அஸ்வதியிடம் இருந்து சில நிமிடங்களில் அழைப்பு வந்தது. மிக சந்தோஷப்பட்டாள் நிறையநன்றிகள் சொன்னாள். சிறிது பரஸ்பர உரையாடலுக்கு பிறகு நன்றி கூறி அழைப்பை முடித்து கொண்டேன். இப்போது தினமும் காலை வணக்க குறுந்செய்திகள் அஸ்வதியிடம் இருந்து வர ஆரம்பித்தது. பதில் வணக்கங்கள் மற்றும் வேலை பற்றிய சில பகிர்தலுடன் முற்றுபெற்றுவிடும் அந்த உரையாடல்கள்.வேலையில் நன்கு பெயெர்தெடுப்பதாக அலுவலக நண்பர் அஸ்வதி பற்றி பகிர்ந்து கொண்டார். அதை தெரிவித்து மேலும் சிறக்க வாட்ஸுப் வாழ்த்து பரிமாறினேன். சந்தோச எமோஜிக்களுடன் நன்றி தெரிவித்தாள். நாட்கள் செல்ல சிற்சில உரையாடல்கள் பகிர ஆரம்பித்தோம், என் குடும்பம் மற்றும் குழந்தைகள் அவர் குடும்பம் மற்றும் குழந்தைகள் பற்றியெல்லாம் பேசி கொண்டோம்.பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் பெண்ணிற்கு தாய் என்பதை கேள்விப்பட்டு ஆச்சிரியமுற்று எப்படி இப்படி கல்லூரி பெண் போன்ற குரல் வளத்தோடு இருக்கிறீர்கள் என்றேன். கலகலவென்று சிறிது விட்டு சொன்னாள் எனக்கு இருபத்தொரு வயதிலேயே திருமணம் ஆகிவிட்டதென்று. முதல் மாத சம்பளம் வாங்கினால் உங்களுக்கு கண்டிப்பாக ட்ரீட் குடுப்பேன் என்றாள். நன்றி. என்றேன். இப்பொழுது வாட்ஸுப் போய் நேரிடையாகவே அலைபேசி அழைப்புகளில் உரையாடினோம். உங்கள் குரலில் அதீதமான ஆண்மை கலந்திருக்கிறது என்றாள்(your voice is so manly). உங்கள் குரலுக்கு நான் அடிமை என்றாள். நீங்கள் பேசும் போது உங்களுக்கு தெரியாமல் சில வார்த்தைகளை மட்டும் ரெகார்ட் செய்து அதை எடிட் செய்து என்னுடைய அலைபேசி அலாரமாக வைத்திருக்கிறேன் காலை எழும்போதே உங்கள் குரலுடன் விழித்தால் நாள் முழுவதும் எனர்ஜி இருக்கிறது என்றாள். சில நேரங்களில், பத்தாயிரத்தில் ஒரு ஆணைதான் உன்னை போல காண முடியும் என்றாள். ரொம்ப புகழாதே என்றேன். :-) மென்மையாக நாங்களிருவரும் நண்பர்கள் என்ற வட்டத்தை அடைந்திருந்தோம் வா போ என அழைத்து கொள்வது Odd uhகா இல்லை இப்பொழுது. முதல் சம்பளம் வாங்கினாலும் அவளால் என்னை சந்திக்க முடியாத படிக்கு எனக்கு Busy Schedule இருந்தது கோவா,ஹைதராபாத்,பெங்களூரு என மாறி மாறி பறந்து கொண்டும் இடையில் நெல்லை கன்னியாகுமரி திருவனந்தபுரம் என சாலை மார்க்கமுமாக வாழ்க்கை சக்கரம் அதிவேகமாக சுழன்று கொண்டிருந்த்தது.ஒரு வழியாக புது வருடம் பிறப்பதற்கு பத்து நாட்களுக்கு முன்பு ஒரு மாலை நாங்கள் சந்திக்க நேரம் அமைந்தது. பெரம்பூரில் உள்ள ஒரு Coffee Day சென்று காரை நிறுத்தி விட்டு காத்திருந்தேன். ஒரு மாருதி ஸ்விப்ட் காரில் வந்திறங்கினாள் அஸ்வதி. நாங்கள் ஜாதி மதம் பற்றி பேசிக் கொள்ளாவிட்டாலும் அவள் பேசுவது ஐயர் பாஷை என அப்பட்டமாக தெரியும். ஒரு மத்திம வயது ஐயர் பெண் போல கொழகொழ என்றில்லாமல் மிக அழகாக இருந்தாள் கூலர்ஸ் கழற்றியபடியே ஹய் என்றாள். ஹலோ என்று கை குலுக்கினேன் காபி ஆர்டர் செய்து விட்டு அமர்ந்தோம். முகம் பார்க்காவிட்டாலும் குரல் பரிட்சயம் என்பதால் பெரிதாக ஒரு அசௌகரியம் நான் உணரவில்லை என்றேன் நான்தான் உன்னோட டிபி தினமும் பாக்கறேனே என்றாள் சிரித்து கொண்டே. ஆர்டர் செய்த காபி வந்தது.காபி பருகிக் கொண்டே அவளை பற்றி பேசினாள் பெரிய ரோடு கன்டராக்ட்ர் அவளுடைய அப்பா. இரண்டே பெண்கள். அக்காள் திருமணம் ஆகி அமெரிக்க போகும்போது இவள் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து விட்டு மேற்படிப்புக்கு தயார் ஆகிக்கொண்டிருக்கும் நேரம். அப்பொழுது ப்ரொவ்சிங் பண்ண இன்டர்நெட் சென்டர் போவேன் அப்டி போகும்போது தான் அவரை பார்த்தேன் லயோலா வில் பி.பி.ஏ முடித்து விட்டு சொந்தமாக ப்ரொவ்சிங் சென்டர் வைத்திருந்தார். தினமும் அங்கு செல்ல ஆரம்பித்தேன் தோழிகளுடன். பத்ம சேஷாத்திரி ,அம்மன் கோயில் ,செக்டர் ஏ என இருந்த என் வாழ்வில் திடீரென ஒரு மாற்றத்தை உணர ஆரம்பித்தேன்...அப்பா இன்ஜினியரிங் படிக்க சொன்னார் நான் முடியாதென ஸ்டெல்லாவில் பி.பி.ஏ சேர்ந்தேன். இரண்டு வருட காதல் வாழ்க்கை அவனுக்காக உயிரை கொடுக்கும் அளவிற்கு என்ன மாற்றியது. அவரும் தன்னுடைய பிசினஸ் விரிவாக்கம் செய்திருந்தார் இந்நிலையில் தான் அரசல் புரசலாக அப்பாவிற்கு என்னுடைய காதல் பற்றி தெரிய வந்தது. சாதி பார்க்காத மனிதர் தான் அப்பா ஆனால் தனக்கு மாப்பிள்ளையாக வர போறவன் கண்டிப்பாக அய்யங்காராக இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார். அதனால் அக்கா மற்றும் மாமாவுடன் அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார் அப்பா. எனக்கு இந்த விவரம் தெரியாததால் செமஸ்டர் விடுமுறைக்கு ஸ்டேட்ஸ் போகிறோம் என்ற குதூகுலத்தில் அவரிடத்தில் சொல்லி பெர்மிசன்(என்ன நடந்தாலும் அவரிடத்தில் சொல்லாமல் முடிவெடுக்க மாட்டேன்) வாங்கி கொண்டு கிளம்பி பறந்து போனேன்.போன பத்து நாட்கள் மிக சந்தோஷமாக கழிந்தது கிடைக்கின்ற இடைவெளியில் இவரிடத்தில் யாஹூ சாட்டில் பேசி கொள்வேன். மேலும் ஒரு வாரம் கழிந்த பொழுது அக்கா மற்றும் மாமாவுடன் ஒரு தமிழ் குடும்பங்கள் இணையும் கெட் டுகெதர் நிகழ்விற்கு சென்றேன் அங்கே அக்காவின் கணவர் ஒரு இளைஞனை அறிமுகம் செய்தார் ஸ்ரீ ரங்கத்து அய்யங்கார் சாப்ட்வேர் என்ஜினீயர் என்று அறிமுக படலம் முடிந்தது அமெரிக்கா வாழ்க்கை பற்றி எதிர்காலம் பற்றியெல்லாம் நெறைய பேசினான் உன் எதிர்கால திட்டங்கள் என்ன என்று கேட்டான் என்னிடம் சிரித்துக் கொண்டே அப்பா பாக்கிற பையன கட்டிக்கிட்டு குடும்பம் நடந்த போறது தான் என்றேன் சிரித்துக் கொண்டே. என்னை கட்டிகிரிய என்றான். பொளேர் என்று அவன் கன்னத்தில் அறைய வேண்டும் என்பது போல கோபம் வந்தது கூடவே அழுகையும் வந்தது ஒரு வாறாக கட்டு படுத்திக் கொண்டேன். காரில் வீடு திரும்பும் பொழுது அக்காவின் கணவர் உயர்வாக பேசி கொண்டே வந்தார் அவனை பற்றி. எனக்கு வெறுப்பும் அழுகையும் முட்டி கொண்டு வந்தது வீட்டிற்கு வந்ததும் என்னவனிடம் உடனடியாக சாட்டில் நடந்த விஷயங்களை சொல்லி அழும்பொழுது சற்று சப்தமாக அழ ஆரம்பித்தேன். அக்காவும் அக்காவின் கணவரும் என்னறையினுள் வந்தனர் விஷயம் வெளியே வந்தது .கன்னத்தில் அக்கா மாறி மாறி அறைந்தாள் வேசியாடி நீ என்ற அக்காவின் கணவரின் வார்த்தை என்னை கொன்றே போட்டு விட்டது. என் அப்பா கூட இப்படியெல்லாம் என்னை பேசியதில்லை அப்பாவிற்கு பேச வேண்டும் என்று அழுதேன் அப்பா பேசினார் பொறுமையாக கேட்டு கொண்டு அக்கா சொன்ன பையனை தனக்கு ரொம்ப பிடித்திருப்பதாகவும் அவன் வீட்டிற்கு சென்று பேச போவதாகவும் அப்பா சொன்னார்.கூண்டில் அடைபட்ட பறவையானேன். எனக்காக இன்டர்நெட் வசதியும் தடுக்க பட்டது. அக்கா மாமா தூங்கும் வரை நடித்து பின்பு அவர்கள் உறங்கிய பின்பு என்னவனுக்கு தோலை பேசியில் பேசினேன்.நிலைமையை சொன்னேன்.அவன் இரண்டு நாள் டைம் குடு என்றான் சரியாக இரண்டாவது நாள் வீட்டின் அலைபேசி அலறியது.எடுத்து பேசிய அக்காவின் முகம் குழப்பம் ஆனது. அலைபேசியை என்னிடம் கொண்டு வந்தாள்,வரும்போதே காயத்திரி அக்கா இங்கேயே இருக்கா என்றாள் ஆமா என்றேன் அவங்க தான் லைன்ல என்றாள். ஹலோ என்றேன். எதிரில் பேசிய பெண் அமைதியா நான் சொல்றத கேளு என் தம்பியும் உன்னவனும் கல்லூரி தோழர்களாம் உன் நிலைமையை என் தம்பி எனக்கு சொன்னான் உன்னவன் உனக்கு ரிட்டர்ன் டிக்கெட் எடுத்து அனுப்ப சொல்லியிருக்கிறான். இந்த வார இறுதியில் நான் உன்னை பார்க்க அங்கு வருவேன் வந்து உன்னை வெளியில் கூட்டி செல்வது போல ஏர் போர்ட் கொண்டு விடுவேன் அங்கிருந்து நீ பார்த்து கொள்

வெள்ளி, 1 அக்டோபர், 2021

பள்ளி பழைய மாணவர் சந்திப்பு

பள்ளிப்பருவத்தில் சொல்லாமல் விட்டுப்போன பட்டியலில் இது இரண்டாம் காதல். இருபத்தைந்து வருடங்களுக்கு பிறகு பள்ளி பழைய மாணவர்கள் ஒன்றுகூடும் நிகழ்வில் அவளை சந்திக்க நேர்ந்தது அதன் விளைவு இந்த பதிவு. (இரு வருடங்களுக்கு முன்பு எழுதியது )

சனி, 23 மே, 2020

சருகுகள்



இலைகளாய் மரத்தில் துளிர்த்து வெயிலை மிருதுவாக்கும் இளம்பச்சையில் மின்னி பின்பு அடர்பச்சைக்கு மாறி அதன்பிறகு உதிர்ந்து காற்றில் அலைந்து காய்ந்து குப்பையாக மாறும்.
அதை போல பசுமையாய் இருந்து பின்பு ரணமாக மாறி சிறிது காலங்கள் கழித்து வடுவாய் ஆகி போன நினைவலைகளின் மீட்சி இப்பதிவு

ஜிமெயில் உட்பெட்டி நிரம்பியதால்..சரி வேண்டாத குப்பை மின்னஞ்சல்களை அழிக்கலாமே என ஆரம்பித்த போது சில பழைய நினைவுக் கிளர்ச்சியில் ஆழ்த்தும் நினைவடக்ககங்களை காண நேர்ந்தது..
அப்படி 10 வருடங்களுக்கு முன்பு வந்த இந்த முதல் முயற்சி கன்னி கவிதை...என் வாழ்வில் அதிகம் நேசித்த பெண்ணிடமிருந்து.!

I m taking a single brick,
sending it into lots of planning,developing,testin,implementing modules and
constructing my life step by step,
but f ur missing n my construction..
my success is totally f!@#$^*d up:)

தமிழாக்கம் கீழே

நான் ஒரு செங்கல்லை எடுத்து,
அதை நிறைய திட்டமிடல், உருவாக்குதல், பரீட்சித்தல், செயல்படுத்துதல் மற்றும்
உருவேற்றுதல் என படிப்படியாக என் வாழ்க்கையை கட்டமைக்கிறேன்,
ஆனால் என் கட்டுமானத்தில் நீ விடுபட்டுப்போயிருப்பின் ..
எனது வெற்றி முற்றிலும் fucked up

செவ்வாய், 13 நவம்பர், 2018

அசுரன்


\\ஆழ் நித்திரையில் கனவில் தோன்றி ஒரே ஒரு வரம் மட்டும் கேட்க
சொன்னது தேவதை..
பேராசையின் உச்சத்தில் தேவதையையே வரமாக கேட்டேன்
சினம் கொண்டு சீறி மறைந்து போனது தேவதை

தேவதைகளை துரத்தியலைந்து தோல்வியுற்ற அசுரர்
கூட்டத்தில் ஒருவனானேன் கலைந்து போன கனவின் முடிவில் //


\\அசுரரின் காதல் மிருகத்தையொத்தது
தேவரின் காதல் மனிதத்தையொத்தது

மிருகத்தின் காதல் வஞ்சகம் சூழ்ச்சிகளற்றது
மனிதத்தின் காதல் வஞ்சகம் சூழ்ச்சிகள் கொண்டது...

வஞ்சக சூழ்ச்சிகளில் மயங்கி கிறங்கி தேவரிடம் இரையாகி போகவே
இசைந்து உருகுகிறது தேவதைகள்...

மிருக காதல்களை உதைத்து உதாசீனப்படுத்துவதை
சிலாகித்து செய்கின்றது தேவதை //

\\ தேவதைகளுக்கும் அகவை விதிவிலக்கல்ல
குட்டி போட்டு வயிறு பெருத்து பருத்து விரிந்து தொங்கும்
மார்பகங்களை பெற்று மூட்டு வலியின் ஆரம்ப நிலையை நெருங்கும்
போது....

தேவர்களின் காதல் வஞ்சகமானது சூழ்ச்சிகளை கொண்டது என்றுணரும்
தேவதைகள்.//

\\ஏக்கத்துடனும் ஆற்றாமையுடனும் உன்னை மிஸ் பண்ணிட்டேன்டா
என அசுரர்களை நோக்கி அழுது புலம்பியபடியே தேவதைகள் //

புதன், 3 செப்டம்பர், 2014

லிங்கம்


இது சற்று ஆண் தன்மை கொண்ட பதிவு. இதை புரிந்து கொள்ளக் கூடிய பக்குவம் உள்ள பெண்கள் படித்து விட்டு கருத்தேற்றவும். சினம் கொள்ளும் பெண்ணியவாதிகள் கண்டிப்பாக இந்த பதிவை படிக்க வேண்டாம் என்று கேட்டு கொள்கிறேன்.

என்னுடைய உணர்வுகளை மட்டுமே இங்கு நான் பதிகிறேன். அதனாலேயே நான் திரட்டிகளில் என் பதிவுகளை பகிர்வதில்லை. என் எண்ணங்களை விற்கவோ சந்தைப் படுத்தவோ நான் முனைவதில்லை. கருத்துக்களை எதிர்கொள்ள திறனியற்றவன் என கொள்ளல் வேண்டாம்.என்னுடைய எண்ணங்களை பதிவுகளாக பதிந்த பின்பு நான் லேசாகி எடையற்று போகிறேன் என்பது மட்டுமே உண்மை.

பின்னுட்டங்கள் வர வேண்டும் என எதிர்பார்ப்பதில்லை. ஆனால் சொல்ல வந்த விஷயத்தை சொல்லி சென்றிடுவேன்.


லிங்கம். இரண்டு குறியீடுகளை சுட்டும் பெயர் இது. ஒன்று சிலையாகி போன சவமெறித்து சாமியனவன்.இன்னொன்று கடவுளென உயிர் உருவாக்கி உடல் உண்டாக்கும் ஆண் உடலில் ஒட்டிக்கொண்டிருக்கும் அந்த உறுப்பு. எதற்காக இந்த பெயர் அந்த கடவுளுக்கு என்று யோசிப்பேன். அழிக்கும் கடவுள் என பெயர் கொண்டவனுக்கு அதே பெயர். உயிரை உருவாக்குவதில் ஒரு பங்கு வகிக்கும் அந்த உறுப்புக்கும் அதே பெயர் (தமிழில் ).

ஆதி காலத்திலேயே இந்த ஆதி மொழியில் அந்த உறுப்பைக் குறிக்க இந்த பெயர் பயன்படுத்தபட்டிருக்கிறது. ஆதி தமிழினத்தில் இனம் காத்த அனைவரும் கடவுளானார்கள். மலை மேல் நிற்கும் முத்து குமர வேல் பாண்டியனும்(முருகன்) சிவன் என்றும் லிங்கம் என்றும் இரு பெயர்களில் அழைக்க படும் சவமெரித்தவனும் இனம் காத்து மாண்டிருப்பார்கள் என நினைக்கிறேன். அதனாலேயே இனம் தழைத்தோங்க பங்கு வகித்த இந்த உறுப்புக்கும் அதே பெயர் வழங்கல் வந்ததோ என்னவோ.

பெண்ணிற்குள் உள்ள கரு முட்டைகளை பற்றி அதிகம் பேசாமல் ஆணுறுப்பையும் அதில் உருவாகும் உயிர் நீரையுமே அதிகமாக சங்க இலக்கியங்கள் பேசுகின்றன. கோடிக் கணக்கான ஆண் உயிரணுக்கள் பெண்ணின் கருமுட்டையை பாதுகாக்கும் அணுக்களோடு கடும் சண்டையிட்டு ஏதோ ஒரே ஒரு உயிரணுவை மட்டும் பத்திரமாக வெற்றியோடு கரு முட்டைக்குள் செலுத்துகின்றது.

பெண்ணின் கரு அவளிடத்தே இருக்கின்றது. ஆணின் உயிரணுக்கள் லிங்கத்தின் வழியாக உடல் விட்டு உடல் கடத்தபடுகிறது .உடல் விட்டு உடல் செல்வதால் இங்கு அதிக சேதம் பாதுகாப்பு என அத்தனை அம்சங்களிலும் அடிபட்டு பின்பு உள்செல்வதால் அதை கடவுளென கொண்டிருக்கலாம்.

படைத்த கடவுளை எதிர்த்துக் கொண்டு ,தன்னை பெற்றது ஒரு பெண் என்பதை மறந்து கடவுளை அடைய பெண்ணை நிராகரிக்க வேண்டும் என்று எப்படி மனித இனத்திற்கு இடையில் தோன்றியதென்பதை நினைக்கும்போது வியப்பு மேலிடுகிறது.

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த நேரம் அது. தினமும் கல்லூரி பேருந்தில் செல்லாமல் சற்று தாமதமாக வகுப்பிற்கு செல்வது ரொம்ப பிடிக்கும். சமயங்களில் தாமதமாக வந்ததற்காக வகுப்பாசிரியர் வெளியே நிற்க சொல்லிவிடுவார் .அப்படியான சமயங்களில் அப்டியே கல்லூரி உணவு விடுதிக்கு சென்று விடுவோம் நண்பர்களைவரும்.


அப்படி ஒரு நாள் கல்லூரிக்கு பேருந்தில் போகும்போது நேர்ந்த அந்த நிகழ்வுதான் இந்த பதிவிற்கு மையம். பொதுவாக நான் கூட்டமான பேரூந்துகளை ரசிப்பதில்லை. அதனால் முடியாத பட்சத்தில் மட்டுமே கூட்டமான பேரூந்துகளில் பயணிப்பேன் (நெல்லையில்)...அப்படியான ஒரு அவசரமாக கல்லூரிக்கு போகவேண்டிய நாளில் கூட்டமான பேரூந்தில் ஏறிக்கொண்டேன். பள்ளிக் கல்லூரி மற்றும் வேலைக்கு போவோர் கூட்டம் பேரூந்து முழுவதும். நான் முன்பக்க படிக்கட்டு வழியாக ஏறினேன்..(பின்பக்க படிக்கட்டு வழிந்து கொண்டிருந்தது கூட்டத்தால்) முன்னேறி பேரூந்தின் மையபகுதிக்கு சென்றுவிட்டேன். ஆண்களும் பெண்களும் என நெருக்கியடித்துக் கொண்டு நின்றிருந்தோம்..சுவாசிக்கவே சிரமப்படுகிற அளவுக்கு புழுக்கமும் வேயர்வையும் பேருந்தினுள்...சற்று நிம்மதியாக மூச்சு விட நான் என் முகத்தை லேசாக திருப்பி ஆண்களின் ஜன்னல் பக்கம் பார்க்க துவங்கியிருந்தேன்...


திடீரென்று ஒரு புது ஸ்பரிசம் என்மேல் ....அதுவரையில் உரசிய ஆண் உடல்களில் இருந்து இந்த உடல் சற்று வித்தியாசமாக இருந்தது ...அதுவும் சரியாய் எனது இடுப்புக்கு கீழ் பகுதியில் அழுந்தி உறைய ஆரம்பித்தது அந்த உடல்

இத்தனைக்கும் நான் என் பார்வையை இன்னும் எடுக்கவில்லை ஜன்னலை விட்டு..ஆனால் உடல் ஏதோ ஒரு விதமான உணர்விற்கு ஆட்பட்டிருந்தது ... எனதுறுப்பு பெருத்திருந்தது...மனதுக்கு தெரியவில்லை என்றாலும் உடலுக்கு உடல் மொழி புரிகிறது

அழுத்தம் அதிகமான பொழுது யாரிது என்று திரும்பி நான் பார்க்கும் போதே அவர்களும் என்னை திரும்பி பார்க்கிறார்கள்...நிற்க்கக் கூட இடம் இல்லாமல் ஒரு கையில் சாப்பாட்டு பையும் தோள்களில் ஒரு பையும் என ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியையாக இருக்கும் அவருக்கு அப்பொழுது எனது தாய் வயதிருக்கும். நேருக்கு நேர் அவர் கண்கள் பார்த்த அடுத்த நொடியே அங்கிருந்து கூட்டத்தை முண்டியடித்து விலக்கி படிகளில் வந்து தொங்கிக்கொண்டேன்...கீழே விழுந்தாலும் பரவாயில்லை என தோன்றிற்று

மனதிற்குள் ரொம்ப அசிங்கமாக உணர்ந்தேன் ஆணாய் பிறந்ததற்காக கேவலமாக உணர்ந்தேன் எனது ஆணுறுப்பை வெட்டியெறிய வேண்டும் போல இருந்தது ...

கல்லூரியில் இறங்கிய உடன் வகுப்பிற்கு செல்லாமல் நேராக கழிப்பறைக்கு சென்று ஓ வென கத்தினேன் ...எனதுருப்பை வெளியெடுத்து கைகளால் முறுக்கினேன்...வலி உயிர் போயி வந்தது...அதனால் இன்னும் கொஞ்சம் கத்தினேன்..ஆனாலும் எனது கோபம் அடங்கவில்லை..அதெப்படி நமது மனதை மீறி ஒரு உறுப்பு செயல்படமுடியும் என்று ....(பின்னாளில் படித்து தெரிந்து கொண்டேன் சிறு மூளை சொல்பேச்சி கேளததுவென்று ) ஆனாலும் அன்றைக்கு அந்த அம்மா பார்த்த பார்வை இன்றும் ஊசி போல் குத்தும் .


அந்த நிகழ்விற்கு பிறகு கூட்டமான பேரூந்தில் ஆண்கள் பக்கமாக நின்று கொள்வேன்.இது கொஞ்சம் வசதியாக நிற்க உதவியது. இப்படியாக அந்த நிகழ்வுகளை மறந்து போனேன். சென்னை பேரூந்துகளுக்கு பழகிய பிறகு, கூட்டத்திற்கும் பெண்கள் மீது படுவதற்கும் பழகியிருந்தேன்(கூட்ட நெரிசலால் தான் எனக்கு திருட்டு காமம் பிடிக்கவில்லை).

ஒரு மாலைப் பொழுதினில் வேலை முடித்து மத்யகைலாசில் 5E இல் ஏறினேன். நல்ல கூட்டம்.ஆண்கள் ஒரு வரிசை பெண்கள் ஒரு வரிசை என் ஏற்கனவே இருக்க இருந்த இடைவெளியில் பெண்கள் ஒரு வரிசை ஆண்கள் ஒரு வரிசை என நிற்க..நிலைமை என்னவென்று உங்களுக்கே புரியும்.எனக்கு திரும்ப கூட வழி இல்லை. சரி கம்பியை இருக்க பற்றி Balance செய்து உராய்வதிலிருந்து கொஞ்சம் தவிர்க்கலாம் என எண்ணிக்கொண்டேன்.ஏனென்றால் சென்னை வந்த புதிதில் ஒரு நாள் தங்கை ரொம்ப வருத்த பட்டாள் பேரூந்து கூட்ட அவஸ்தையை பற்றி.அடுத்த 2 வாரத்தில் அவளுக்கு ஸ்கூட்டி வாங்கினோம்.ஆதலால் முடிந்த வரை பெண்கள் மீது படாமல் பயணிக்கவே முயல்வேன்.

ஆனால் அன்றைக்கு வேறு வழியே இல்லை என்பதுபோல நெரிசல். என் முன் முப்பதுகளில் இரு பெண்கள். ஒருவர் எனக்கு நேராக நின்றார். என் பக்கத்தில் நின்றவன் என்னை நெருக்கிக்கொண்டு வந்தான் அவன் என்ன நோக்கத்திற்காக வருகிறான் என தெரிந்ததால் அவனை மேலும் நகர விடாமல் நிப்பாட்டினேன்.அப்பாட என் முன்னிருக்கும் பெண்ணை safe gaurd பண்ணிவிட்டேன் என நினைத்துக் கொள்ள முயன்ற பொழுதே அந்த பெண் சிறிது பினகர்ந்தார் ...நான் பின்நகர என் பின்னால் இருந்த ஆண் என்னை முன்னே செல்லுபடி கேட்க்க சிறிது முன்செல்ல வேண்டிய கட்டாயம் ..இப்பொழுது அந்த பெண் அப்படியே என் மேல் படர்ந்துவிட்டார்.இருக்கின்ற நெரிசலில் இதை கவனிக்க கூட யாராலும் முடியாது

இதற்கு மேல் என்னாலும் எதுவும் செய்ய முடியாது என முடிவுக்கு வந்துவிட்டேன்.நானும் அப்பெண்ணும் வடபழனி வரை விலகவேயில்லை வடபழனியில் இறங்கும்போது என்னை பார்த்துவிட்டு கூட்டத்தில் கரைந்து மறைந்து போனார். ஆனால் எனக்கு இந்த அனுபவம் ரொம்ப புதிதாக இருந்தது..இருதய துடிப்பு எகிறிவிட்டது சில நொடிகளுக்கு பார்வை மங்கிவிட்டது கண்டிப்பா புணர்ச்சியில் கூட இப்படி ஒரு பரவசம் அனுபவித்ததில்லை..

உணர்வுகளுகுட்பட்டதுதான் மனித உடலும் மனமும். ஆதலால சமயங்களில் இப்படி நடக்கலாம்...ஆனால் இதையே ஒரு வேலையாக வைத்திருப்போரை காணும்போதுதான் நாயின் நியாபகம் வருகிறது....

இப்போது உணர்வுகளை அடக்க பழகியிருக்கிறேன் ஒருவாறு ...பெண்கள் மேலே பட்டாலும் லிங்கத்தை ஒரு வித அமைதியுடன் வைத்திருக்க கற்றிருக்கிறேன். இப்போது கொஞ்சம் மனதிற்கு இதமாக இருக்கிறது என்னுடைய உறுப்புகள் என்னுடைய கட்டளைக்கு அடிபணிகின்றனவே ..!
.




காத்தாடி...! :-)





காற்றாடி....காற்று வீசும் வரை ஆடிவிட்டு பின்பு அடங்கிபோகும்..!
இந்த காற்றாடியை கூட வாழ்க்கை பாடமாக எடுத்துக்கொள்ளலாம்..!
நிற்க...

இங்கு நான் இந்த காற்றாடியை ஒப்பிடுவது வேறொரு விஷயத்திற்காக...
கண்ணிமைக்கும் நேரத்தில் வந்து கன நேரத்தில் பறந்து போகும் சின்ன சின்ன காதல் கூட காற்றாடி மாதிரித்தான்...

ஆங்கிலத்தில் கிரஸ் என்று சொல்கிறார்கள்..! தமிழில் அது போல ஒரு வார்த்தையை தேடுகிறேன்..என் அறிவுக்கு எட்டிய வரை அப்படி ஒரு வார்த்தை சிக்கவில்லை...

எனக்கு இந்த கிரஸ்(CRUSH) ரொம்ப பிடிக்கும்..
சொல்லவும் முடியாமல் மெள்ளவும் முடியாமல் தாண்டி போக வேண்டும் இந்த உணர்வில்..ஆனால் நிஜத்தில் நிலைமை காலை பிடித்து காதல் பிச்சை கேட்க்க சொல்லும்...இடம் பொருள் ஏவல் இப்படி எதுவுமே நமக்கு சாதமாகத ஒரு நிலையில்தான் இந்த உணர்வு உள்ளுக்குள் குதித்து ஆட்டம் போடும்..

உங்களுக்கு தெரியுமா? பெண்களுக்கு இந்த வகை கிரஸ் ரொம்ப பிடிக்கும்..தீண்டி தீ மூட்டி விட்டு சாதரணமாக கடந்து போக முடியும் அவர்களால்.. இந்த சிறு விளையாட்டு அவர்களுக்கு நிறைய பிடிக்கும்...மிக ரசித்து விளையாடுவார்கள் பெண்கள்...
ஏனென்றால் இந்த விளையாட்டில் எந்த சிக்கலும் இல்லை..காயங்கள் சேதங்கள் வராது என்பது கூடுதலான காரணம்...

எனக்கு இந்த கிரஸ் என் சகோதரியின் தோழிகளிடத்தில்..நண்பனின் காதலியிடம்..சில நண்பர்களின் சகோதரிகளின் மீதும் சில நண்பர்களின் மனைவிகளின் மீதும் வந்து சென்றிருக்கிறது...

இது ஒரு மாதிரியான சற்று குறும்பான உணர்வு...குறும்புத்தனமான நட்புணர்வு என்று கூட சொல்லலாம்...இந்த உணர்வில் வரும் பெண்களெல்லாம் எனக்கு மிக மிக பிடித்தவர்கள்..ஆனால் கன நேரம் கூட தவறாக என்ன முடியாதளவிற்கு நல்ல தோழிகளாக இருப்பார்கள்...அதுவே அவர்களின் மீது தீரா அன்பினை உரமிட்டு வளர செய்யும்

ஆனால் எப்பொழுதும் ஒரு உள்ளுணர்வு உள்ளத்தில் அழுத்திக் கொண்டே இருக்கும்...ஒரு கோடு கீறி அதை லக்ஸ்மன கோடாக எண்ணிக் கொள்வேன்..அதை எப்பொழுதும் தாண்டியதில்லை...
நண்பர்களைவரும் அவர்களில் ஒருவனாக எண்ணுவதாலேயே என்னை அவர்களில் அவர்கள் குடும்பங்களில் ஒருவனாக நடத்துகிறார்கள்...அந்த எண்ணமே என்னை சீராக கோடு தாண்டாமல் நடத்தி செல்லும்...

பொதுவாக நெருங்கிய வட்டங்களில் அறிமுகமாகும்(நண்பர்கள்) பெண்கள் மத்தியில்தான் இது வரும் என்றில்லை...மிக நெருக்கமான நல்ல தோழிகள் மீதும் எனக்கு இந்த கிரஸ் உண்டு...

அவள் ஒரு ஐ.எ.எஸ் அதிகாரியின் மகள்...செம்ம குறும்புக்காரி..ஒரு பொது நண்பர் வட்டத்தில் அறிமுகம்..2009இல் வேலை இழந்து முழு நேர வலை உலாவியாக நேரம் போக்கிக் கொண்டிருந்த நேரம்...ஆர்குட் மூலம் பள்ளிப் பிள்ளைகளையும் கல்லூரி மான்களையும் வலை போட்டு பிடித்துக் கொண்டிருந்த நேரம்..

சரியாக மாலை 6 மணியானால் தன்னுடைய காரில் என் வீடருகே நிற்ப்பாள்...என்னுடைய பைக்கை உதைக்கும் போது அவள் காரை பூட்டி விட்டு என் பின்னே தொற்றிக் கொள்வாள்...அவளுக்கு பைக் சவாரி மீது கொள்ளை பிரியம்..
தோள்களில் நாடியை தாங்கிய படி கேட்ப்பாள்..டேய் யாரவது உன்னை இப்போ பார்த்த என்ன ஆகும் என்பாள் பயங்கலந்த குரலில்...

நான்- என்னாகும்பா?

அவள்- அடப் பாவி...உங்கப்பாட்ட போயி உங்க பையன் யாரோ ஒரு பொண்ணோட ஊர் சுத்துறானு சொல்ல மாட்டாங்களா?

நான்- அப்போ உங்கப்பாட்ட யாரவது சொன்னா?

அவள்- ஒன்னும் நீ உள்ள போகணும்(சிறை)
இல்ல எனக்கு மாப்ளையா வரணும்..

நான் சிரித்து கொண்டே அப்போ உனக்கு தெரிஞ்சவங்க யாரவது பாத்த நல்ல இருக்குமே என்பேன்..

ஏய் என்று முதுகில் குத்திவிட்டு ரொம்ப பேசுரேடா என்பாள்...

ஒரு நாள் சடாரென டேய் எண்ணிய பாக்றதுக்கு வீட்டுக்கு ஒருத்தன் வந்திருக்காண்டா..... INTRESTING uh பேசறாண்டா என்றாள்....
அய்யோ அப்போ என் கதை முடிஞ்சி போச்சா? ந உன்ன பொண்ணு கேக்கலாம்னு நேனைசெனே என்றேன்....விழுந்து விழுந்து சிரித்த படி போடா லூசு என்றாள்...இப்போது ஐரோப்பாவில் கணவனுடன் வசிக்கிறாள்...வலயரட்டையில் கேட்க்கிறாள் என் மேல உனக்கு லவ்வே வரலயாட என்று..! :-( :-( :-(


சில தோழிகளுடன் அவர்களுக்கும் என் மேல் ஈர்ப்பு இருப்பதை அறிந்தே இருந்தேன்... ஆனால் அது கண்டிப்பா ஒரு ஈர்ப்பு மட்டுமே...

ரசித்து கடந்து வந்த, நான் கிரஸ் கொண்ட பல பெண்கள் இன்றும் இன்னும் தொடர்பில் இருக்கிறார்கள்..இன்னும் அதே குரும்போடும் அதே குருகுருப்போடும்...! :-)



இருவாரங்களுக்கு முன்பு ஒரு தொலைபேசி அழைப்பு வழியே உதித்த கிரஸ் இது...

அமெரிக்காவில் இருந்து திரும்பும் போது அங்குள்ள கம்பெனிக்கு சொந்தமான மடிக்கணினியை அங்கு ஒப்படைத்து விட்டு வரவேண்டும். அதன் படியே அங்கு ஒப்படைத்து விட்டு வந்தேன்.

நான் வேலை பார்ப்பது ஒரு பன்னாட்டு கம்பனி. பன்னாட்டு கம்பெனி என்றால் அமெரிக்காவிலும் இந்தியாவிலும் இருக்கும் பிசாத்து கம்பெனி இல்லை...உலகில் 42 நாடுகளில் தொழிற்சாலை அமைத்து பல ஆயிரம் கோடிகளை கொட்டும் பார்ச்சுன் 500இல் 30தாவது இடம் பிடிக்கும் கம்பெனி.

உலகின் எந்த நாட்டிற்க்கு பயணமானாலும் அங்கு போன பிறகு பிரத்யோகமாக நமக்கு ஒரு மடிக்கணினி தருவார்கள் நான் வேலை செய்யும் இந்த பாகசுர கம்பனியில்...

இந்தியா வந்த பிறகு இங்கு மடிக்கணினி பெற்றுக் கொண்டேன்.
அதில் ஏற்ற வேண்டிய அப்ப்ளிகேசன்ஸ்காக கம்பெனிகென்று இருக்கும் சேவை பிரிவை தொடர்பு கொள்ள வேண்டும். என்னுடைய வேலை நேரம் அமெரிக்க வேலை நேரத்தோடு பொருந்தி போவது. அதாவது இந்தியாவில் முழு இரவு பணி. பொதுவாக ஆசியாவிற்கான சேவை பிரிவு இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு முடிவடையும். அதன் பின்பு அத்தனை உதவி கேட்டு வரும் அழைப்புகள் அனைத்தும் அமெரிக்காவிற்கு செல்லும். அந்த நினைப்பில் தொலை பேசியில் எண்களை அழுத்தினேன்...


எடுத்ததோ ஒரு காந்த குரலுக்கு சொந்தாகாரி. அழைப்புகளை எடுப்பவர்கள் அவர்களின் பெயரை சொன்ன பிறகே நம்மிடம் என்ன மாதிரியான உதவி வேண்டும் என்பார்கள். இவள் பெயரை சொன்ன பொழுது மனதிற்குள் மணி அடித்தது..! :-) அச்சு அசலாக தமிழ் பெயர். ஆனால் அமெரிக்காவில் சேவை பிரிவில் நம்மாட்கள் வேலை செய்ய மாட்டார்கள். எனக்கு தெரிந்து ஆசியாவிற்கான சேவை பிரிவில் பெரிய பிரிவு பெங்களுருவிலும் பெய்ஜிஙிலும் மட்டுமே உண்டு. ஆனால் அவை அனைத்து சர்வதேச நேரத்தில் செயல் படமாட்டா.

என்னுடைய மடிக்கணினிக்கு தேவையான அப்ப்ளிசெசன்ஸ் பற்றிய பட்டியல் கொடுத்து விட்டு கிடைத்த நொடிகளில்(பொதுவாக இந்த சேவை பிரிவு பெண்கள் தேவை இல்லாமல் பேச்சு வளர்க்க மாட்டார்கள்) நீங்கள் இந்தியாவில் இருந்து அழைப்பை எடுக்கிறீர்களா என்றேன்? ஆமாம் என்ற ஒற்றை சொல்லோடு உங்கள் கோரிக்கை படி அத்தனை அப்ப்ளிகாசன்ஸ் ஏற்றப்பட்டுவிடும் என்று சொல்லி அழைப்பை துண்டித்தாள் பாவிமகள்.

எங்கள் கம்பெனிக்கென்று ஒரு வலையரட்டை அப்ப்ளிகேசன் உண்டு. அதன் மூலம் தேவையான பொழுது வேலை சமந்தமாக இந்தியாவில் இருந்து அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள சக ஊழியர்களிடம் பேசிக் கொள்வோம். என்னுடைய வலையரட்டை சர்ச் பாரில் அவள் பெயரை இட்ட உடன் பளிச்சென்று பச்சை நிறத்தில் ஒளிந்ர்ந்தால். உடனே ஒரு ஹலோ சொன்னேன். அடுத்த நொடியே ஒரு ஹாய் சொல்லி நீ தமிழனா என்றாள்.மனதிற்குள் மத்தாப்பு பூத்தது..! :-)

பின்பு ஒரு வாரகாலம் சில பல மரியாதைகளுடன் சென்று கொண்டிருந்த அரட்டை பின்பு லேசாக சற்று குறும்புத்தனமாக செல்ல ஆரம்பித்தது...
அப்படி சென்றுகொண்டிருந்த ஒரு குறும்பு அறைட்டைதான் கீழே நீங்கள் பார்க்க போவது..







குறிப்பு: ஆரஞ்சு வண்ணத்தில் கோடு வரைந்திருப்பது அவளை சுட்டும்.
சிவப்பு மற்றும் வண்ணமற்ற பகுதி என் பெயரை சுட்டும்.


இந்த மாதிரி சமயதிர்க்கேற்றவாறு ஒரு நகைசுவையோ அல்லது குட்டி கதைகளோ சொன்னால் பெண்களின் மனதை சிறிது சிறிதாக வெல்லலாம்..! :-)

இந்த குட்டி கதைக்கு பிறகு...அதை படித்து அவள் ஆச்சிரியப்பட்டு என்னிடம் பேச ஆரம்பித்த பிறகு புகைப்படங்கள் பரிமாறிக்கொண்டோம்...

எனக்கு சாபமா அல்லது கேடா என்று தெரியவில்லை...எனக்கு அமையும் பெண்கலேல்லாமே 25க்கு குறைந்தே வந்து தொலைக்கிறார்கள்....இவளுக்கு 23என்றாள்...! கேம்பஸில் வந்தேன் என்றாள். வாங்க போங்கலாம் வேண்டாம் என்றவள் இப்போது வாட போடா என்கிறாள்..! அலைபேசி என்னை கேட்டிருக்கிறேன் நாம் இன்னும் சிறிது பழகிய பிறகு பார்க்கலாம் என்றாள். அலைபேசி என்னை வாங்காமல் இருப்பதே நல்லது என நினைக்கிறேன். என் இசை நாயகிக்கு சங்கதி தெரிந்தால் கொன்று போட்டுவிடுவாள். :-(


பெரிய பெரிய சந்தோஷங்களை தேடி என் சந்தோஷத்தை தொலைக்காமல் இது போன்ற குட்டி குட்டி கதைகளிலும் நகைசுவையிலும் அமையும் இந்த சின்ன சின்ன சந்தோஷங்களே என்னை மேலும் மேலும் இன்புற்றவனாக ஆக்குகின்றது..!

:-) :-) :-)
சந்தோஷமாக இருக்கிறேன் எப்பொழுதும் போல...
காற்று அடங்கி சரியும் காற்றாடி போல...
காற்று இறங்கி என் உடல் மண் மீது சாயும்வரை..!

திங்கள், 25 பிப்ரவரி, 2013

கனவுகள் விற்ப்பனைக்கு (பாகம் 2)


இன்னைக்கி கண்டிப்பா இந்த ரெகார்டிங் முடிச்சே ஆகணும்னு வேகமா ரெகார்டிங் தியேட்டர் பக்கம் போனா அங்க செல்வா செம்ம பிஸியா வேற ஒரு ரெகார்டிங் வேலைல இருக்கான்...இவங்களோட இதே பொழப்பா போச்சுன்னு கம்போசிங் ரூம்க்கு போற வழில ஒரு பெரிய வீணை ஒன்னு..இன்னைக்கி வேலை முடியலேன்னா கையில காசு கிடைக்கதுன்க்ரா டென்ஷன் வேற..அதுல வீணை எப்டி பெருசா தெரியும் எனக்கு? தாண்டி போயி கம்போசிங் ரூம் கதவை திறக்க போறப்போ அறிவிருக்கா உனக்குன்னு ஒரு குரல்....



ஆம்பள குரல இருந்த பொளேர்னு விட்டுட்டுதான் பேசியிருப்பேன்..ஆனா கேட்டது ஒரு பொண்ணு. திகைச்சி போயிட்டேன்...என்ன எதுன்னு புரியிறதுக்கு முன்னமே எகிறிட்டா அவ...வீணை தாண்டினது குத்தமாம். வீணை அவளோடது அப்டீங்க்றதும், சர்வதேச கச்சேரிகள் பண்ணியிருக்கானும் இங்க ஒரு ரெகார்டிங்காக வந்திருக்கானுலாம் எனக்கெப்படி தெரியும்..நானும் 2 , 3 வாட்டி சாரி சொல்லி பாத்துட்டேன்...புது ரேடியோ மாதிரி அதே வால்யும். இப்போ என்னங்க பண்ணனும்? தாண்டிட்டேன். தப்புதான். மன்னிப்பும் கேட்டுட்டேன். இதுக்கு மேல என்ன பண்ணனும்னு இப்போ சத்தம் போடறீங்கன்னு கேட்ட பிறகுதான் கொஞ்சம் சத்தம் குறைஞ்சது அவகிட்ட....



இதுக்குள்ள செல்வா நம்ம ரகு(அவன்தான் வயசு கம்மியானவன் அந்த தியேட்டர்ல. டி வாங்க சாப்பாடு வாங்கனு அவனுக்கு வேலை அங்க) எல்லாம் கூடிட்டாங்க...கூடி மேடம் விட்ருங்க மேடம் அவர் தெரியாம பண்ணிடார்னு எனக்காக அவங்க வேற சாரி கேக்க அப்டியே முறைச்சி பாத்துட்டே அவளோட ரெகார்டிங் டைம் கேட்டுட்டு கிளம்பிட்ட.....அவ கிளம்பின உடனே செல்வாவும் ரகுவும் மத்த பசங்களும் ஏன்னே இப்டி காலையிலேயே கடையை சூடேத்தி விட்டேன்னு கலாய்க்க ஒழுங்கா என்னோட வேலையை எனக்கு முடிச்சி குடு செல்வா அப்டின்னு செல்வாட்ட சொல்லி வேலையை ஆரம்பிக்க சொல்லி, ரகுட்ட டி சொன்னேன்...



அன்னைக்கி 2 மணிநேரம் ரெகார்டிங் செஞ்சிட்டு செல்வா வேற வேலைக்கி தாவிட்டான்..நா என்னோட வேலையை பாக்க கிளம்பிட்டேன்.....

அடுத்த நாள் பாக்கி வேலையை முடிக்க கிளம்பிட்டேன்...நம்ம ரேடியோ ஜாக்கி சுசித்ராதான் டப்பிங் குடுக்க பேசியிருந்தேன்...அந்த இந்தான்னு வேலை முடிஞ்சா பிறகு பேசின அமௌண்ட் 4500 செட்டில் பண்ணா அந்தம்மா குதிக்க ஆரம்பிச்சிட்டா...எனக்கு பேசினது 5000 இப்போ 4500 தந்தா என்ன அர்த்தம்னு....அய்யோ ஐயப்பானு நெனைச்சிக்கிட்டேன்...சபரி காரன் கிடையாது...இது என்கூட தான் என் கம்பெனில வொர்கிங் பார்ட்னர் வேலை பாக்குது...அவன் பண்ண வேலை. அன்னைக்கி பாத்து கைல காசு வேற இல்ல...ரெகார்டிங் தியேட்டர்ல எவன்ட்டையும் ஐநூறு இல்ல...கரெக்டா நேத்து சண்ட போட்ட பொண்ணு வர்றா....



ரகுகிட்ட சொன்னேனே டேய் தம்பி எனக்கு இப்போ காசு வேணும்..அந்த பொண்ணுகிட்ட இருந்தா வாங்கி குடுடா...ஆனா எனக்குன்னு கேக்காத தரமாட்டானு ஐடியா வேற குடுதனுப்பினேன்..ரகு சின்ன பையன்.. யார்னாலும் அவன பாத்தா ஒரு சிரிப்போட பேச ஆரம்பிக்கிற முகம்...கடை நிலை ஊழியர்கள் எல்லாமே அப்டித்தான கஷ்டத்த மனசுல வைச்சாலும் சிரிப்பா உதட்டுல வைச்சிருப்பாங்க...


ரகு போயி அவகிட்ட கேட்ட உடனே காசு குடுத்தா...மடையன் நேரா வந்து அவ பாக்கும்போதே என் கைல காச திணிச்சி இந்தான்னான்னு சொல்லிட்டு அப்பீட் ஆகிட்டான்...எனக்கு மிர்ச்சி சுசிய இங்கிருந்து கிளப்பணும்...அதனால காச கைல குடுத்து கிளப்பி விட்டேன். இனி உன் விளம்பர படங்களுக்கு டப்பிங் பேச மாட்டேனு சவுண்ட் விட்டுடே போச்சு நம்ம சுச்சி...எல்லாம் முடிச்சிட்டு நிமிர்ந்து பாத்தா இவ வைச்ச கண்ணு வாங்காம என்னையே பாத்துகிட்டு நிக்கிறா(முறைச்சிதான்)....இந்த சண்டாள பய ரகு கரெக்டா டியோட வந்து நிக்கிறான்...நா ஒன்னு எடுத்துக்கிட்டேன் இப்போ ஸ்டூடியோ வெளில நானும் அவளும் நிக்கிறதால ரகு அவட்ட டி கிளாஸ் நீட்ட அவ வேண்டாம்னா...மாமி மெஸ்ல வாங்கினதுதான் பரவால குடிங்க அப்டினேன்...ரகு இவன என்னடா பண்றதுங்கற தோரணைல என்னை ஒரு பார்வை பாக்க அவ டீயை எடுத்துகிட்டா...


கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கலைனாலும் கொஞ்சம் அசிங்கமா இருந்தது, தெரியாதவங்கிட்ட அதுவும் முதல் சந்திப்பே சண்டை போட்டவங்கட்ட, கடன் வாங்கினது..சமாளிக்கனுமே அதனால பேசலாம்னு முடிவு பண்ணேன்...வேலை டென்சன்ல அவள சரியா பாக்கல...யாத்தி என்ன அழகா இருக்கா அப்டின்னு தோணிச்சி முதல் முறையா அவகிட்ட பேசணும்னு யோசிச்சப்போ...பொண்ணு சான்சே இல்ல...சக்க பிகர்....அதாவது குடும்ப குத்துவிளக்குனு சொல்வோமே அந்த மாதிரி...பெயர் என்னனு கேட்டேன்...காய்திரினா....அப்டியே பேச ஆரம்பிச்சோம்...ஸ்டெல்லாமெரில படிச்சதும் திருவாரூர் பூர்விகம்னும் பலகோடி ரூவா சொத்தும் வீடும் நம்ம கபாலி பேட்டைல (மயிலாப்பூர்) இருக்கும்னு தெரிய வந்தது....இது வரைக்கும் எந்த புள்ளைட்ட பேசும்போதும் ஒரு குறுகுறுப்பு வந்ததில்ல...என்ன ஊர் பக்கம் சண்டியன் தோரணைல அலைஞ்சதால ஒருத்தியும் பாக்க மாடளுக..என்ன எங்க தேவமாரு புள்ளைங்க மட்டும் எரியகுள்ள சண்டைல நம்ம பேரு மாட்டும் போது சிரிச்சு கிண்டல் பண்ணிட்டு போவாள்க...சுத்தி முத்தி தேடினா ஒரே கிளைல வந்து நிப்பாள்க....கொண்டயன்கொட்டார் கிளைல அம்மா கிளைலையே பொண்ணு கட்டலாம்னு கேள்வி பட்டதுல இருந்தே அவங்கள தேவமாருனே நாங்க சொல்ல மாட்டோம்...கூறுகெட்ட கூதியுள்ளைக....அம்மா கிளைல கெட்டுனா தங்கச்சி முறைல...அப்புறம் மொட்டைகுண்டி பயகளுக்கும் நமக்குமென்ன வித்தியாசம்னு ஒரு வெறுப்புதான்....ஆனா காயத்ரிட்ட பேசும்போது ஒரு நல்ல பீல் மனசுக்குள்ள...சாதரணமா நம்ம பக்கத்துக வீடுகாறன்கட்ட பேசற மாதிரி பேச ஆரம்பிச்சிட்டோம் அரைமணி நேரத்துக்குள்ள....எனக்குனா ஆச்சிர்யம் ....ரகுவும் செல்வாவும் ஏதோ பேசி சிரிசிக்கிடானுங்க....அப்புறம் அவளோட டீடைல் தெரிஞ்சது..பெரிய பெரிய கர்நாடக இசை ஜாம்பவன்களோட இசை கச்சேரி செஞ்சிருக்கானும், இசைதான் மூச்சுனும்,வீணை மட்டுமே தன்னோட காதலன்னும் சொன்னா....காமக் கண் கொண்டு பாக்காம முதல் முதலா ஒரு பெண் சிநேகம்...பெருசா மனசுக்குள்ள பட்டாம்பூச்சி பறக்கலத்தான்...ஆனாலும் பேசிட்டே இருக்கணும்னு தோன வைச்ச பொண்ணு.....





ஞாயிறு, 8 ஜூலை, 2012

புகை..!


எனக்கு நினைவு தெரிய வரும்பொழுது நான் ரசித்து உள்வாங்கிய புகை நிலக்கரி ரயில் எஞ்சினில் இருந்து வரும் கரும்புகை. ஏனோ அந்த மனமும் அந்த புகையும் சுவாசித்தாலே ஒரு சந்தோசம் பிரதிபலிக்கும்.பின்பு சிறிது வளர்ந்த பிறகு அம்மாவுடன் பேசிக் கொண்டிருக்கையில் அவர்களுக்கும் என்னைப் போலவே கரி எஞ்சினில் வரும் புகை பிடிக்கும் என தெரியவந்தது.

அப்பாவிற்கு புகைக்கும் பழக்கம் இருந்தது. சிறு வயதில் அப்பா வீட்டிலேயே புகைப்பார். அப்பா காலைகடன் முடித்து வந்த பிறகு அடுத்ததாக யாரவது அந்த கழிப்பறையை பயன்படுத்தும் போது அங்கு முழுக்க முழுக்க சிகரெட் புகை படர்ந்திருக்கும். ஆனாலும் புகை பிடிப்பது தவறு என்றும் அது பெரியவர்கள் செய்ய வேண்டிய காரியம் என்றும் பார்த்து கற்றுக் கொண்டோம் நானும் அக்காளும்.

இயல்பிலேயே சிறுவர்களுக்கு பெரியவர்கள் போல வாழ வேண்டும் ,அவர்கள் செய்யும் செய்கைகளை நானும் செய்ய வேண்டும் என்ற ஒரு எண்ணம் வரும். அது எங்களையும் தொற்றிக் கொண்டது. அக்காளும் நானும் அப்பா போல புகைத்து பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்த போது எனக்கு நான்கு வயது. அக்காளுக்கு ஆறு வயது. அப்பொழுது சிசர்ஸ்..ப்ரீக்லே வகை சிகரெட்டுகள் சற்று அதிகம் விற்ற பிராண்டுகள். அப்பா அப்போது சிசர்ஸ் தான் பிடிப்பார்.

அப்பொழுது பொழுது போக்க பெரிய விஷயங்களெல்லாம் கிடையாத எண்பதுகளின் ஆரம்பம். ஆல் இந்திய ரேடியோ கூட சில மணித்துளிகள் செய்தியும் சில திரைப் பாடல்களுடன் நிகழ்ச்சியை முடித்துக் கொள்வார்கள். வீட்டு பெண்கள் பெரும்பாலும் புரணி பேசியே காலம் களிப்பர். அம்மாவிற்கு அடுத்தவர் பற்றி பேச பிடிக்காத காரணத்தால் பக்கத்துக்கு வீட்டுகாரர்களுடன் பழகவே மாட்டார். வானொலி கேட்ட பிறகு புத்தகம் படிக்கவோ அல்லது படுத்துரன்கவோ செய்வார் பெரும்பாலும். குழந்தைகள் நாங்கள் எப்பொழுதும் தெருவினில் திரிவோம்.ஆதலால் அம்மாவிடம் இருந்து பெரிய கண்காணிப்பு எங்களுக்கு இல்லாத காரணத்தால் புகை திட்டம் சற்று தைரியத்தோடு ஆரம்பித்த்தது.

அது ஒரு செவ்வாய் அல்லது புதன்கிழைமை என நினைக்கிறேன். அப்பா பயன்படுத்தி மீதி வைத்திருந்த பெட்டியிலுள்ள சிகரெட்டுகளில் ஒரு முழு சிகரெட் எடுத்துக் கொண்டு நானும் அக்காளும் வீடிற்கு பின்புறம் உள்ள தோட்டத்திற்கு சென்றோம். அப்பா வரக்கூடாதே என்ற பயமும் சக தோழர்கள் பார்த்தால் போட்டு குடுத்து விடுவார்களே என்ற பயம் வேறு புரட்டி எடுத்தது.சிகரெட்டை அக்காள் வாயில் ஸ்டைலாக பிடித்துக்கொள்ள நான் பற்ற வைத்தேன். அப்போது பில்டர் சிகரெட் புழக்கத்திற்கு வராத நேரம். புகை நேராக நுரையீரலுக்கு இறங்கும். பற்ற வைத்த உடன் அக்க ஒரே இழு இழுத்து விட்டாள். கதறி இருமிக் கொண்டே அழுகிறாள் தொண்டை எரிச்சலால். ஆனாலும் எனக்கு ஆர்வம் விட்டு போகவில்லை. வாங்கி நானும் ஒரு இழுப்பு புகையை இழுத்தேன்....நெஞ்சாங்கூடு எரிந்தது போல இருந்தது...இருமிய இருமலில் பார்வை வரவில்லை சில நொடிகளுக்கு...கண்களில் இருந்து நீர் கொட்டுகிறது...இருந்தாலும் சில நொடிகள் கழித்து சிரித்துக் கொண்டே அழுகிறோம் நானும் அக்காளும்.

சரியாக அப்பா தெருவில் வந்து வீட்டிற்க்கு முன்னே உள்ள கதவை திறந்து சைக்கிளை உள்ளே ஏற்றிக் கொண்டிருக்கிறார். என் கையில் பற்ற வைத்த சிகரெட். என்ன செய்வதென்று தெரியவில்லை. கண்ணுக்கு புலப் படுகிற பகுதியில் எறிந்தால் கண்டிப்பா அப்பா கண்டுபிடித்து விடுவார். சமயோசிதமாக சட சடவென்று அக்கா மண்ணில் சிறிய குழி பறித்து சிகரெட்டை குழியுனில் போட்டு மூடிவிட்டாள்.வாயில் அந்த சிகரெட் மனம் வருமே என்பதெல்லாம் அப்பொழுது தெரியாது...ஆனாலும் அப்பா வீடிற்கு வந்துடன் ஒரு சிகரெட் பற்றவைத்ததால் நாங்கள் தப்பித்தோம். இன்றும் அக்காவை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும்போது இந்நிகழ்வை அசைபோட்டு சிரித்துக் கொள்வோம்.

அப்பா பெரும்பாலும் என்னை கடைக்கனுப்புவார் சிகரெட் வாங்கிவரசொல்லி. அப்படி செல்லும் பொழுதெல்லாம் சிகரெட் போக மீதம் உள்ள காசினில் ஒரு ஐம்பது பைசா பர்பி (அப்பொழுது அதற்க்கு பெயர் பால்கோவ) வாங்கிக் கொள்வேன். அப்பா ஒன்றும் சொல்ல மாட்டார். இதற்காகவே கடைக்கு எப்பொழுதும் நானே செல்வேன்.பல விஷயங்களில் அப்பா போல பெரியவனான பிறகு வர வேண்டும் என்று எண்ணிய எண்ணங்களில் ஏனோ சிகரெட் பிடிக்க வேண்டும் என்று தோணவே இல்லை.

பின்பு அதுபற்றியெல்லாம் மறந்து போக கூடிய பருவ வயதிற்கு வந்த பிறகு பார்வைகள் மாறிப்போனது பார்க்கின்ற விசயங்களில்.நண்பர்களெல்லாம் புகைக்க கற்றுக் கொள்ள பழகியிருந்தனர். ஆனால் நான் அதில் பெரிதாக ஈடுபாடு காணவில்லை. ஆனால் குடிக்க பழகியிருந்தேன் என்னுடைய எட்டாம் வகுப்பில். பத்தாம் வகுப்பில் நண்பர்கள் கேலி செய்தனர்..புகைக்காமல் இருப்பதற்காக....சரி குடிப்பது எப்படி என கற்றுக்கொடுத்த எனக்க இந்த சில்வண்டுகள் சவால் இடுகின்றன என்ற நெனைப்பில் ஒரு வில்ஸ் வாங்கி பற்ற வைத்தேன் முதன்முதலாக...இதற்க்கு முன் புகைத்ததில்லை என்றாலும் குமார் மாமாவின் நண்பர்கள் எப்படி புகைக்க வேண்டும் theoritical class எடுத்திருந்தனர். ஆதலால் மற்றவர்கள் போல புகையை உள்ளிழுத்து இருமி கற்றுக்குட்டி என காமிக்காமல்...புகையை உள்ளிழுத்து வாய்க்குள் வைத்துகொண்டு ஆனால் கன்னம் உப்பாமல் புகை உள்ளிழுத்து விடுவதை போலவே வெளியிட்டேன்...நண்பர் கூட்டம் வாய் பிளந்தது...மீண்டும் கூட்டத்தில் பெரிய பையன் அந்தஸ்தை பிடித்தேன்..அவர்களுக்கெல்லாம் ஆச்சரியம் என்னவென்றால் எப்படி அவர்களுக்கு தெரியாமல் அவர்களுக்கு முன்னமே நான் புகைக்க கற்றுக் கொண்டேன் என்பதுதான்.(நீங்கலாம் தின்னைய பிடிச்சு நடக்குபோதே நான் சு.....யை பிடிச்சு நடந்தவண்டா என்ற வசனத்தில் அப்படி ஒரு இமேஜ் உருவாகி விட்டது )


உண்மையில் புகையை ஆழ உள்ளிழுத்து அந்த புகையை அப்படியே நுரையிரல் முழுவதும் நிரப்பி வைத்து சில நொடிகள் கழித்து வெளியிடும் போது சில நொடிகள் கண்கள் சொருகி தலை லேசாக கிர்ரடித்து மீண்டு சமநிலைக்கு வரும் இந்த புகை இன்பத்தை நான் கல்லூரி முடித்த பின்பே உணர பழகியிருந்தேன். மேலும் கல்லூரி இறுதி வரையிலும் தவறாமல் உடற்பயிற்சிக் கூடத்திற்கு போனதால் உடல் மீது அலாதி கவனம் வைத்திருந்தேன். அதற்கேற்ற வாறு அகலமான புஜங்களும் சற்றே பெரிய சதுர மார்பும் கொண்டிருந்த நேரம். பசும்பொன் உடற்பயிற்சி கூடத்தில் உடன் பயிற்சி செய்யும் நண்பர் கூட்டம் தட்டு கெட்டவன் என செல்லமாக அழைப்பர்.

புகையின் இன்பம் உணர ஆரம்பித்த பொழுது சென்னை வந்துவிட்டேன் வேலைக்காக. ஒரு முன்னணி வாகன உற்பத்தி நிறுவனத்தில் வேலை. வேலை இடைவேளையில் ஒரு தம் அடித்துவிட்டு வேலை செய்வது சற்று கெத்தாகவும் சற்று பெரிய ஆள் என்பதைபோலவும் உணரவைத்தது. மேலும் புகை பழக்கத்தால் ஒரு பெரிய நண்பர் கூடம் உருவானது அங்கு.

பின்பு மெதுவாக புகையினில் ருசி தேட ஆரம்பித்தது. வித விதமான சிகரெட் பிரண்டுகளை சுவைக்க பழகி இருந்தேன். மால்பரோ லைட்ஸ் திருப்பில் பைவ்..கிங் எட்வார்டு, கிளாச்சிக் மெந்தால், கிளாசிக் மைல்டு, இன்னும் பல சுவைகளில் புகை பிடித்தேன். இதில் சிகார் வேறு பின்பு சேர்ந்து கொண்டது..அதிலும் ஒரு சிகார் 90 ரூபாய்க்கு வாங்கி புகைப்பேன்.அதில் ஸ்ட்ராபெரி ப்லேவர்களும் ஒயின் பிலேவரும் எனக்கு பிடித்தவை. சிவந்திருந்த உதடு சிறிது சிறிதாக கருக்க ஆரம்பித்திருந்தது. ஊருக்கு போகும்போளுதேல்லாம் அம்மா கேட்க்கும் முக்கிய கேள்விகளில் உதடு ஏன்டா இப்டி கருத்து கிடக்கு என்பதும் ஒன்றானது.

இந்த நேரத்தில்தான் ஜிஷா என்னை விட்டு பிரிந்து சென்றாள்...அப்பொழுதுதான் கஞ்சாவை சுவைக்க கற்றுக் கொள்ள நேர்ந்தது...பின்பு அதிலேயே மிதக்க ஆரம்பித்தேன் சிறிதுகாலம். பின்பு தகவல் தொழில்துறையில் வந்ததால் ஆறாம் விரலாய் மாறிப் போனது சிகரெட்.

பின்பு வாழ்வில் வந்த அத்தனை பெண்களும் தங்களுக்கு என்னிடம் பிடிக்காத விஷயமாக சொன்னது இந்த புகைப் பழக்கத்தை.

வீட்டில் யாருமற்ற சமயம் வர சொல்லும் லாவண்யா கூட சிகரெட் பிடிச்சிட்டு வராதடா வீடு முழுக்க சிகரெட் ஸ்மெல் தெரியுமா என படுக்கையில் அவளுடன் இருக்குபோழுது தலைகோதி சொன்னாள்.

சற்று விதிவிலக்கு என் இசைநாயகி. குறைசிக்கோடா என மட்டும் சொல்வாலோயிய நிறுத்து, பிடிக்கல போன்ற வார்த்தைகள் அவளிடம் வராது. ஆனால் அவளை பார்க்க போகிறேன் என்றால் அதற்க்கு மூன்று மணிநேரதிகும் மேலாக புகைப்பதை நிறுத்திவிட்டுதான் அவளை சந்திப்பேன்.
புகைப்பதில் உள்ள ஒரு மந்திர விஷயம் என்னவென்றால் ...கன நேரத்தில் சிறு புன்னகையோடு ஒரு நட்பு உருவாக காரணமாகிவிடும்.கடும்பனிப் பொளிவிர்க்கிடையில் அமெரிக்கா சென்று இறங்கிய பொழுது ஒரு டெர்மினலில் இருந்து இன்னொரு டெர்மினலுக்கு ரயிலில் செல்ல வேண்டும். அப்படி செல்ல காத்திருக்கும்பொழுது கடும் குளிர். (குளிருடை போர்த்தியும் கூட)
ரயில் நிலையத்தை சுத்தபடுத்தும் ஒரு கறுப்பின தோழனும் ரயிலுக்காக காத்திருந்த சில வெள்ளையரையும் தவிர அங்கு யாரும் இல்லை. எனக்கு வெள்ளையரிடத்தில் பேச பிடிக்கவில்லை(தாழ்வுமனபான்மையாகவும் கூட இருக்கலாம்) கறுப்பின தோழனிடம் ஒரு சிகரெட் வேண்டும் என்றேன்.சிரித்தபடியே கொடுத்து விட்டு பற்ற வைத்தபடியே நீ தென்னமெரிக்க நாட்டை சேர்ந்தவனா என்றான். இல்லை இந்தியன் என்றேன். அவனும் பற்ற வைத்துக் கொண்டான். சிறிது பேசிய பிறகு நான் போவதற்கான ரயில் வந்தது. எனக்கு விளக்கமாக எங்கு இறங்க வேண்டும் என்று சொல்லி அனுப்பினான். பின்பு அமெரிக்காவும் அமெரிக்கர்களும் பரிச்சயமான பொழுது புகைபழக்கதால் கம்பனியின் மிகபெரிய பொருப்பிலுள்ளவர்களிடம் கூட மிக எளிமையாக ஒரு அறிமுகம் கிடைக்க உதவியது.

இவ்வளவு தூரம் புகையும் நானும் பின்னிப்னைதிருந்தாலும் நான் புகைக்கு அடிமையல்ல என்பதை என் உள்மனம் சொல்லிபடியே இருந்தது. அதற்கேட்ட்ரவாறு சத்தியசோதனை செய்ய சில நிர்பந்தங்கள் நேர்ந்த பொழுது சிலகாலம் புகைக்காமல் இருந்தேன்..ஆனால் அவையெல்லாம் ஆறு மாதங்களில் முடிவுக்கு வந்தது. உன்னால் புகைக்காமல் ஒரு மணி நேரம் இருக்க முடிந்தாலே நீ புகைக்கு அடிமையில்லை என ஒரு மருத்துவ அறிக்கை மேற்க்கொள்காட்டியது நினைவுக்கு வந்து தெம்புதந்தது. ஆயினும் சிலசமயம் நம்மால் நிறுத்த முடியாதோ என ஒரு அச்ச உணர்விற்கு கொண்டுசெல்லும் நண்பர்கள் புகையை நிறுத்த முயன்று தோற்ற கதையை கேட்க்கும்பொழுது.


இப்படியான ஒரு நாளின் மாலைப் பொழுதில் ஏதோ ஒரு காரணத்தினால் மனம் சோர்வுற்றிருந்த பொளுநிதில் அடுத்தடுத்ததாக மூன்று சிகரெட்டுகள் பிடித்து விட்டிருந்தேன்...நான்காவது சிகரெட்டை பிடிக்க ஆரம்பித்த பொழுது மனதிற்குள் எழுந்த கேள்வி எதற்க்காக இதை புகைக்கிறேன்?என்ன கிடைத்தது இந்த புகையினால்? எந்த கிக்குகாக பிடிக்க ஆரம்பித்தேனோ..அதெல்லாம் ஒரு மாத புகைப்புக்கு பின் காணாமல் போனது...அதையும் மீறி எதற்காக இதை பிடிக்கிறேன் என எண்ணம் ஓடிக்கொண்டே இருக்க...பிடித்துக் கொண்டிருந்த சிகரெட்டை தூக்கி தூர வீசினேன். அதன்பின்பு ஒரே ஒரு சிகரெட் மட்டும் என் காரினில் வைத்திருந்தேன். ஒரு வாரத்திற்கு மட்டும் சிறிது அந்த புகை எண்ணம் வரும்போது காருக்கு சென்று வைத்திருக்கும் சிகரெட்டை ஒருமுறை முகர்ந்து பார்ப்பேன். அப்டியே திரும்ப என் இருக்கைக்கு வந்துவிடுவேன். பதினைந்துனாட்க்களுக்கு பிறகு அந்த மிச்ச ஒரு சிகரெட்டையும் வீசிவிட்டேன். இன்றோடு ஒன்றரை வருடம் ஆகிவிட்டது நான் புகைப்பதை நிறுத்தி. 21 வயதில் ஆரம்பித்து 32 வயது வரை பிடித்திருக்கிறேன். இதுவே சற்று அதிகம் என தோனுகிறது. இன்னொரு முறை எனக்கு சிகரெட் ஆசை வருகிறதென்றால் அது கண்டிப்பாக என்னுடைய 52ஆவது வயதில்தான் என முடிவெடுத்திருக்கிறேன். :-) ஆனால் அப்பொழுது அப்படி ஒரு ஆசை வருமா என்பது சந்தேகமே. இப்பொழுதே புகைபிடிப்பவர்களை கடந்து செல்கையில் அந்த புகையை சுவாசித்தாலே எனக்கு இருமல் வருகிறது. :-)

என் கூட இருந்து என்னை கவனிக்கும் அலுவலக நண்பர்கள் மற்றும் சக அலுவலர்கள் கூட வியப்போடு எப்படி முடிந்தது உங்களால் என கேட்க்கிறார்கள். வியப்படைய ஒன்றுமில்லை....ஏனென்றால் புகை எனக்கு அடிமையாய் இருந்ததே தவிர நான் அதற்க்கு அடிமை இல்லை.
இதை மனதில் நிறுத்திக்கி கொள்ளுங்கள் என்றேன்..வரிகளை சிலாகித்து கூறி விட்டு மற்றுமொரு தம் போட கிளம்பி விட்டார்கள் சக தோழர்கள். :-)

வியாழன், 24 மே, 2012

கனவுகள் விற்பனைக்கு ..! :) :) (பாகம்-1 )

சித்தனாவது போல ஒரு கனவு. வரக்கூடாத கனவல்ல அது..! அதிகாலைக் கனவு பலிக்காது என்ற கனவுபலன் நினைவோடு எழுந்து பார்த்தால் மணி எட்டரை..! என் பெயர் சக்தி. கற்பனையில் நினைப்பதை திரையில் கொண்டு வரும் ஒரு விளம்பர பட இயக்குனர் நான். பள்ளி நாட்களில் கற்பனைகளை பற்றிய ஒரு சிந்தனை கூட அற்று போயிருந்தேன் என்பதை இப்பொழுது நினைத்து பார்த்தால் சற்று விந்தயாகத்தான் இருக்கிறது..! இப்பொழுது கற்பனை பட்டறையில் வேலை. எனக்கென்று வேலை நேரம் கிடையாது. மனதும் உடலும் ஒரு நிலையில் இருக்கும் பொழுதெலாம் எனக்கு அது வேலை நேரம் தான். தென்னகத்தை சேர்ந்தவன் என்பதால், அதிலும் வீரம் பழகிய இனத்தைச் சேர்ந்தவன் என்பதால் இனப்பற்று ஊட்டப்பட்டு இருந்தேன் பள்ளி நாட்களில்.! அதலால் கனவு கற்பனை என்பதெல்லாம் வெள்ளித்திரையில் காண்பதோடு மட்டுமே முடிந்து போக கூடிய சங்கதி. நிஜத்தில் எனக்கு தெரிந்ததெல்லாம் ஹாக்கி விளையாட்டு மற்றும் முத்து ராமலிங்கத் தேவர். அந்த பள்ளி நாட்களில். கல்லூரி படிப்பு முடியும் தருவாயில் யதார்த்த வாழ்வின் பிடியில் வந்து விழுந்து சற்று தத்தளித்து பின்பு கரை சேருவதுதான் பெரும்பான்மையான தென்னகத்து இழைங்கர்களின் வாழ்வுப் பாதை. காரணம் ஒன்றும் பெரிதாக கிடையாது. மொழி அறிவு சற்று கம்மியாகவே இருக்கும் தென்னக மாணவர்களுக்கு. தமிழ் தோன்றிய முதல் மண் என்பதால் இயற்கையாகவே தென்னகத்து மக்கள் மற்றைய மொழிகளை ரசிப்பதில்லை. அதன் காரணமாகத்தான் இன்னும் பிரெஞ்சு ஹிந்தி ஸ்பானிசு போன்ற மொழிகளின் ஆதிக்கம் பழகவில்லை இந்த திராவிட பூமி. அதன் காரணமாகவே மற்றைய தமிழக பகுதி மாணவர்களுடன் போட்டி போட்டு வேலையை வெற்றி கொள்வதில்லை தென்னகத்து புலிக்குட்டிகள். இந்த புலிக்குட்டியும் அதில் ஒன்றென்பதால் நிறைய தத்தளித்தது அதன் வழியை தேடி கண்டு பிடிக்க..! பின்பு சிறுது காலம் உற்பத்தி துறையில் வேலை. ஆனால் மனதென்னவோ வேறொரு தேடுதல் தளத்தில் இயங்கிக் கொண்டிருந்தது.! என்ன தேடுகிறது என்பதை கண்டு முடிக்கும் பொழுது வாழ்வின் முக்கியமான நான்கு வருடங்களை இழந்திருந்தேன்.! யதார்த்த வாழ்வின் கடமைகள் என்னை பயமுறுத்திக் கொண்டிருக்கும் பொழுது எனது தந்தையை இழந்தேன். இந்த உலகில் யாரையும் நம்ப வேண்டாம் என்ற கடைசி வார்த்தையுடன் இவ்வுலகம் பிரிந்தார் என் தந்தை, தோல்வியை தழுவி விட்டோம் இவ்வாழ்வில் என்ற நீங்கா ரணத்துடன். பிடித்தம் அற்றுப் போனேன் வாழ்வின் மீது. ஆனாலும் வாழ வேண்டிய கட்டாயம். வேலையை காதலிக்க ஆரம்பித்தேன். காதல்??? மறந்தே போய்விட்டேன் இந்த தலைப்பை. எல்லார் வாழ்விலும் வந்து செல்லும் இந்த காதல் என் வாழ்விலும் ஒருதலை காதலாக வந்து சென்றது. என் கனவுகளுக்கும் கற்பனைகளுக்கும் சிறிய வித்தாக இந்த ஒரு தலை காதல்கல்தாம் காரணம் என எண்ணுகிறேன் இப்பொழுது. :) இன்றைக்கு ஒரு முக்கியமான ரீ ரெகார்டிங் இருக்கிறது. வேலையை முடித்து விட்டு அடுத்த பாகத்தில் சந்திக்கிறேன்..! :)

திங்கள், 12 செப்டம்பர், 2011

சைக்கிள் காலங்கள்..!



சைக்கிள்..!
70 களின் மத்தியில் இருந்து 80பதின் இறுதி வரைக்கும் பிறந்தவர்களின் பருவ வயது காதல் இந்த சைக்கிள்.!
ஆனால் என்னுடைய காதல் அதுவல்ல..அடுத்த பதிவில் சொல்கிறேன் என்னுடைய காதல் எதுவென்று..

ஆனால் என்னுள் மறையாத பசுமையான சைக்கிள் காலங்கள் இன்னும் இருக்கின்றது..பொதுவாக இரண்டு மூன்று வயதில் மூன்று சக்கர சைக்கிள் கொஞ்சம் வசதியான குழந்தைகளுக்கு கிடைத்துவிடும்(அந்த காலத்தில்) அரசாங்க உத்யோகத்தில் என் தந்தைக்கு அவ்வளவு பணம் நிற்கவில்லை கைகளில். ஆக எனக்கு சைக்கிள் 7 வயதில்தான் அறிமுகம். ஆனால் சைக்கிள் பற்றிய கனவு உள்ளுக்குள் ஊற ஆரம்பித்தது மூன்று வயதில். அப்பா அலுவலகம் முடித்து இரவு வீடு வந்த உடன் என்னுடைய முதல் வேலை..அப்பாவுடைய சைக்கிளில் டைனமோ உயிர்பிக்கும் பொத்தானை அழுத்தி டைனமோவை சைக்கிள் டயரில் உராயவிட்டு பின் பெடல்களை வேகமாக சுற்றுவேன்...பளீரென எறியும் முன் விளக்குகளை பார்க்கும்போது பரவசம் பரவும் அவ்வயதில்.

மண்ணெண்ணெய் ஊற்றி திரியிட்டு தீ கொளுத்தி கொள்ளும் வகை முன் விளக்குகளும் அப்பொழுது பார்த்திருக்கிறேன். சுவாரசியமான தகவல் சொல்லவா? அப்பொழுது முன்விளக்குகள் பொருத்தாத சைக்கிள்களை போக்குவரத்து காவலர்கள் பிடித்து அபராதம் போட்டு விடுவார்கள். மேலும் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதி கொள்ளும் சம்பவங்கள் சாதரணமாக நடக்கும். இப்பொழுது சீரிசெல்லும் பைக்குகளை காணும்போது நம்மக்களின் சாலை அறிவு முன்னேறியிருப்பதை அறிய முடிகிறது.

ஒரு மணி நேரத்திற்கு 50 பைசா என எடுத்தேன் என் முதல் சைக்கிளை. பெரிதாக யாருடைய துணையுமின்றி இரண்டே நாட்களில் கற்றுக் கொண்டேன். இறக்கை முளைத்ததை போல உணர்த்த தருணம் அது. குறைந்தது இரண்டு மணிநேரம் சைக்கிள் ஒட்டவில்லை என்றால் கை கால் ஓடாது என்னும் நிலைக்கு போய்விட்டேன். இப்பொழுது போல அந்த காலத்தில் வாகன நெரிசல் கிடையாது என்பதால்..சாயந்திர நேரத்தில் சக நண்பர்களுடன் பந்தயம் வைத்து கொண்டு வேகமாக வண்டியோட்டியாக வந்தது இன்னும் பசுமையாக மனதினில். ஒரு பெரிய கல்லை போட்டு வேகமாக வந்து அதன்மீதேறி பரந்த படி சைக்கிளில் தாவுவது ஒரு சாகசம். தவறி விழுந்து இடுப்பில் அடிபட்டு ரத்தகளறியாக வீடு சென்றதும் நினைவிற்குள் வருகிறது..!

பின்பு சடாரென ராணுவ பள்ளிக்கு சென்றதால் சைக்கிள் சாகசங்கள் முடிவுக்கு வந்தது. ஆனால் அவை நெடு நாட்கள் நீடிக்கவில்லை. நான்காண்டுகளில் அப்பள்ளியை விட்டு வெளியேறி மீண்டும் நெல்லைக்கு வந்த பொழுது சைக்கிள் மீது ஒரு அன்பு மிஞ்சி இருந்தது. ஆனால் காதல் இல்லை. நெல்லையில் ஒரு பள்ளியில் சேர்ந்த இரண்டாவது நாள் அப்பா என்னைக் கூட்டிச் சென்ற இடம் ஒரு சைக்கிள் விற்பனை நிலையம். என்ன சைக்கிள் வேண்டும் என்ற பொழுது நான் சொன்னது BSA.SLR. கருப்பு வண்டி என்னுடையது.வண்டி வாங்கிக் கொண்டு வீடிற்கு வந்த உடனே பக்கத்துக்கு வீட்டு ரிட்டயர்டு போலிஸ் தாத்தா வந்தார். தினமும் சைக்கிளை எப்படி என்னை ஊற்றி துடைத்து வைக்க வேண்டும் என்று வகுப்பெடுத்தார். அந்தகாலத்து மனிதர்கள் சைக்கிளை துடைத்து வைப்பதை ஒரு கலையாகவே கொண்டிருந்தனர். முதல் இரண்டு நாட்கள் மட்டுமே துடைத்து வைத்தேன். பின்பு இது என்னுடைய சைக்கிள் என்ற மனநிலை மட்டும்தான் இருந்தது. அதை துடைத்து பராமரிக்க வேண்டும் என்பது மனதில் நிற்கவில்லை.

பதின்ம வயது என்பதால் மற்ற எந்த விஷயத்தையும் விட பெண்களே அதிமுக்கியமாக தெரிந்தனர். பள்ளி விட்டதும் ரோஹிணியை பின்தொடர்வதுதான் என் தலையாய பணி. பருவடையும் வரை சகஜமாக பேசிதிரிந்தவள்தான் இவள்.ராணுவப் பள்ளியில் இருந்து ஒவ்வொரு விடுமுறைக்கு வரும்பொழுதும் அவளுடன் கொஞ்சம் அதிகமாகவே நேரம் செலவழிப்பேன். ஆனால் நான் ஒரேடியாக இங்கு திரும்பி வரும்பொழுது அவளிடம் நிறைய மாற்றம். என்னை பார்த்த உடன் வரும் குறும்பான சிரிப்பை காணவில்லை. தலைகுனித்து செல்கிறாள். பெயர் சொல்லியளைத்தால் நிற்காமல் சென்று விட்டாள். பின்பு தொடங்கியதுதான் இந்த சைக்கிள் பின்தொடர்தல். பேசிக்கொள்ளவே மாட்டோம். சமயங்களில் சாலையில் ஆள் அரவமற்று இருந்தால் அவள் அருகே சென்று பேசுவேன். சமயங்களில் காதல் மொழி கூட சொல்வேன். தலைகுநிதவாறே அவள் சைக்கிளில் வந்து கொண்டிருப்பாள். முதலில் சற்று வேகமாக போக எண்ணினாள். நானும் அவள் வேகத்திற்கு ஈடுகொடுக்க...பின்பு வேகம் பற்றிய என்னத்தை கை விட்டாள்.

ஆனாலும் நான் அவளை தொடர்வதை சமயங்களில் சிறிதே புன்னகை செய்து ரசிப்பதாக தெரிவித்தாள். கனவினில் எல்லாம் அவள் மட்டுமே. முதன்முதலாக அவள் தாவணி கட்டிக் கொண்டு சிறப்பு பயிற்சி வகுப்பிற்கு ஒரு சனிக்கிழமை மாலை போகும் போது ஆள் அரவமற்ற சாலையில் வைத்து அவளில் இடுப்பை கிள்ளி விட்டேன். கண்கள் கலங்கிய படி சொன்னாள் இனி என் பின்னால் வராதே என்று. அதோடு அவள் என்னை பார்ப்பதை கூட தவிர்க்க ஆரம்பித்தாள். வலிகளோடு முடிந்து போன ஒரு முதல் காதலை உயிர் கொடுக்க முயன்று தோற்றது எனது BSA.SLR.

பின்பு பல பெண்களை காதல் தொல்லை கொடுக்க எனக்கு உற்ற தோழனாக என் SLR இருந்தாலும் ஓராண்டிற்குள்ளாகவே எனக்கு அப்பா TVS.CHAMP வாங்கிக் கொடுத்து விட்டார். அதே காலத்தில் தான் நம் பெண்கள் எல்லாம் SUNNY ஓட்ட ஆரம்பித்தனர். பிரச்சினை என்ன வென்றால்..CHAMPஐ விட SUNNY வேகமாக செல்லும். இந்த பெண்கள் வேறு வண்டியில் பையன்கள் துரத்தினால் இன்னும்வேகமாக செல்வார்கள். ஆனாலும் விடக் கூடாது என மனம் சொல்லி துரத்திய தேவதைகள் இரண்டு.

அதிலும் மென்மையான சித்ரா மேல் எனக்கு பைத்தியமே பிடித்து விட்டது. காமராஜ் மெட்ரிக் பள்ளியில் இருந்து அவள் கிளம்பிய உடன் நானும் அவளை பின்தொடர்வேன். எங்காவது ஜன நடமாட்டம் கம்மியான பகுதியில் அவள் வண்டியின் முன்சென்று நிறுத்தி அவளை சற்று நிலைகுலைய செய்து அவள் வண்டியின் சாவியை உருவி விடுவேன். பின்பு அவள் தலை குனித்து அழுத படியே நா TUTION போகணும் LATEஆ போன அம்மா திட்டுவாங்க சாவிய குடுங்க என்று கெஞ்சுவாள். என்னிடம் பேசு. உன் VOICE எவ்ளோ நல்ல இருக்கு தெரியுமா என்பேன்.(சற்று சைக்கோ தனமாக இருந்திருக்கிறேன் அப்பொழுது என நினைக்கிறேன்).

சில நாட்கள் இந்த கெஞ்சலும் அழுகையுமாக அவளுக்கு பொழுது போய்க்கொண்டிருந்தது. பின்பு சிலநாட்கள் சித்துவை(செல்லமா சித்ராவை அப்டிதான் கூப்பிடுவேன்) காணவில்லை. பின்பு ஒரு நாள் பள்ளிக்கு வந்திருக்கிறாள் என அவள் வகுப்பு நண்பர்கள் கொடுத்த தகவலின் படி அவள் வருகைக்காக காத்திருந்து பொழுது வந்தது அவளும் அவளுடன் ஒரு நடுத்தர வயதுடைய அழகிய பெண்ணும். சித்ராவின் அம்மா என அறிமுகபடுத்திக் கொண்டார்கள். எனக்கு கை காலெல்லாம் சற்று நடுங்க ஆரம்பித்து விட்டது. சித்ரா படிக்கனும்பா..பப்ளிக் பரீட்சை வேற நல்ல மார்க் எடுத்தாதான் நல்ல குரூப் கிடைக்கும். அவள இனி தொந்தரவு பண்ணாதப்பா. என்றார்கள். சாரி ஆண்டி என்றேன். அதோடு அவள் படிக்கட்டும் என்று விட்டு விட்டேன். பெட்ரோலுக்கு அதிகமாக காசு செலவழிக்கிறேன் என்றும் அதிவேகமாக வண்டி ஒட்டுகிறேன் என்றும் என் மீது பிராது கொடுக்க பட்டதால் மீண்டும் சைக்கிள் காலத்திற்கே வந்தேன். ஆனால் இப்பொழுது பெட்ரோலுக்கு ஈடாக கிடைத்த பாகெட் மணியை சேமிக்க ஆரம்பித்தேன். பின்பு தான் கரடி பானம்(BEER) என்னுடன் நட்பு பாராட்ட ஆரம்பித்தது.

எல்லாவற்றையும் வேடிக்கை பார்த்தவாறு சற்று நிறம் மங்கிப் போயிருந்தது என்னுடைய SLR. பெண்களை துரத்தும் பொழுது சங்கிலி கழண்டு போவதும், மழை நேரத்தில் அவசரமாக பெடல் போடும்போது காற்று இறங்குவதும் என என் SLR என்னை இம்சித்து கோபமேர்ப்படுதியிருக்கிறது. இருந்தாலும் என் உலகத்தில் எனக்கான மனிதர்களை வரிசை படுத்த முயன்றால் முதலில் வந்து நிற்கிறது என் SLR.

90களிலும் அதற்க்கு பின் வந்த சந்ததிகளும் எங்களைப்போல (70 களின் கடைசியிலிருந்து 90களின் பாதி வரையில்) சைக்கிள் காலங்கள் கொண்டவர்கள் குறைவே என்று நினைக்க தோன்றுகிறது இன்றைக்கு உள்ள வாகன நெருக்கடிகளும் குறுகிய சாலைகளும்.

வெள்ளி, 24 ஜூன், 2011

முக புத்தத்தில்(FACE BOOK) பதிந்த சில STATUS MESSAGES

காளைகளை அடக்குவது சவாலான விஷயம் தான்..(ஜல்லிக்கட்டில்)
மான்களை அடக்க முற்ப்பட்டு நான் கற்றுக் கொண்டது..! :) :)
.........................................................................................................

நள்ளிரவு நேரத்தில் அலைபேசியில் அழைத்து எங்கிருக்கிறாய் என்கிறாள்....

உனது இதயத்தில் என்றேன் சட்டென்று.....!
பதிலற்று அவள்...வெட்கத்தில் சிவந்த இரவு விடியலானது..! :) :)
..........................................................................................................

இப்போவே TICKET BOOK பண்ணுடா..அப்போதான் போனோமா ஜம்முனு கால் மேல கால் போட்டு படம் பாத்துட்டு
வந்துட்டே இருந்தோமான்னு இருக்கும் என்றாள்....

மெதுவாக அவள் பக்கம் திரும்பி, யார் கால் மேல யார் கால போட்டு என்றேன்? :( :(
முறைத்து பார்க்கிறாள்...
(26 ம் தேதி தனியா தான் படம் பாப்பேன்னு நினைக்கிறேன்)
.........................................................................................................

What's the best way to send frnds request to gals in FB???????(hardly thinking..!)
.........................................................................................................

நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருக்கும் போது அவளது அழைப்பு(அலைபேசியில்)..

நான் உன்னுடன் இப்பொழுது பேச விரும்பவில்லை என்றேன்...!

சற்று அதிர்ச்சியுடன் எதற்கு என்றாள்? :(

உன்னுடன் பேசுவதும் ஒரு K.F STRONG BEER அருந்துவதும் ஒன்றுதான் என்றேன்.
BEER அருந்திக் கொண்டே உன்னுடன் பேசினால் போதையின் உச்சத்திற்கு சென்று மயங்கிவிடுவேன்
என்றேன்.

வாய் இல்லேன்னா உன்ன நாய் தூக்கிட்டு போயிடும் என்றாள் சிரித்துக் கொண்டே. :) :)
........................................................................................................

பூஜை புனஸ்காரங்கள் மற்றும் விரதம் இருந்துதான் தேவதைகளின் அருள் பெற
முடியுமா என்ன???

உற்சாகமான,கள்ளம் இல்லா மனதிருந்தாலே போதுமே.! :)
தேவதைகளின் அருள் கிடைக்குமே?
கிடைத்தது எனக்கு..இன்று.
570 AC பேரூந்தில் அலுவலகம் சென்ற பொழுது..!
:) :)
....................................................................................................

சீரான விசையில் சென்று கொண்டிருக்கும் பொழுது..
இடறி விழுந்து சிதறிப் போகிறது மனது.
கடந்து போகும் தேவதைகள் விட்டுச் செல்லும் அதிர்வுகளால். காயம்பட்டு வெற்றிடங்கள் உருவாகி வெறுமை கொண்டது மனது.
சுவாசம் தடைபட்டு தவிக்கிறேன்..
இதயம் முழுவதும் வெற்றிடமாய் ..

இட்டு நிரப்ப காத்திருக்கிறாளோ எவளோ ஒருத்தி?? :)
வரம் கொடுப்பதும்.. வதம் செய்வதும்..
தேவதைகளுக்கு விளையாட்டாகிப் போவதேன்?
................................................................................................
..............................................................................................

எனது உயிரினும் மேலாக உன்னைக் காதலிக்கிறேன் எனும்போதும்
சரி என்று ஒற்றை வார்த்தையில் நி கடந்து போகையில்...
கோபம் உன் மேலல்ல...

உன் மீதான என் காதலை சரியான வார்த்தைகள் கொண்டு கோர்க்க கூட முடியவில்லையே
என்று என் மேல்தான் அதிகம் கோபம் கொள்கிறேன்...

உன்னை நேசிக்கிறேன்...
என் உயிரினும் மேலாக...! :) :)

.............................................................................................



இரக்கமற்ற ஜீவன் என்றால் அது கண்டிப்பாக பெண்களாகத்தான் இருக்க வேண்டும்..........
நிமிடங்களில் மனதை கொள்ளை கொள்பவர்களும் அவர்கள்தாம்.........
நிமிடங்களில் மனதை கொல்பவர்களும் அவர்கதாம்.........!
செத்து செத்து பிழைத்துக் கொண்டிருக்கும் ஒரு சாமானியனின் சாபம் இது..........
..............................................................................................

suffering frm severe neck pain..! :(
சுளுக்குக்கு பாட்டி வைத்தியம் செய்ய ஆள் இல்லாததால..
பேத்தி வைத்தியம் செய்து கொண்டேன்
Yes.., The Lady Doctor was too young. :)
.............................................................................................

வார்த்தைகளுக்குண்டான சக்தியை..
சிறு முத்தங்களுடனான ஸ்பரிசம் வென்று விடுகிறது
சில சமயங்களில்..!
:) :)(காதலர்களுக்கிடையே மட்டும் )
.............................................................................................

பேரூந்தில்தான் அலுவலகம் செல்கிறேன்...!
நொடிப் பொழுது பார்வை பரிமாற்றங்களும், சிறு குறு நகையும்..
காற்றில் பறக்கும் கவிதைகளாக..
:) :)

BIKE இப்போ வீட்ல REST எடுக்குது :) :)

BIKERS uh பாத்தா இப்போ பாவமா தெரியுது..!
..........................................................................................

Life Is Simple.
But May Changes According To PPl's Vision..
The Mre U see As Complicated, The Mre It 'll Luks Filled With Complications..
Hav A Simple Vision...
..........................................................................................
துணை தேடி அலைகையில், தனிமை
மட்டுமே துணையாய்..

தனிமை விரும்பிய தருணங்களில் உடனிருக்கும்,
துணையே வினையாய்...!

:) :)

LIFE IS A CIRCLE BOSS..!
..........................................................................................
ஆட்டோவின் பின்னால் எழுதியிருந்த வாசகம்..!
நான் ரசித்த அந்த வரிகள்....

100 இல் போனால்,பின்னால் 108 துணைக்கு வரும்
:) :)
...........................................................................................

காதலிப்பது தான் என்னை சந்தோஷப்படுத்துகிறதென்றால்...
காலம் முழுவதும் காதலித்து கிடக்கவே விரும்புகிறேன்.....

நான் காதலன்....
:) :)
................................................................................................
ஐ.டி நெடுஞ்சாலையில் விரைந்து கொண்டிருந்த பொழுது,
வண்ணத்துபூச்சி ஒன்று நெஞ்சினில் மோதி படபடத்தது...!
வண்டியின் வேகம் குறைத்து, சாலையோரம் நிறுத்தினேன்..

படபடப்புடன் பறந்து போனது பட்டாம்பூச்சி, என் நெஞ்சில் உள்ள காதலனைத்தும்
அதனிடம் கொட்டி விடுவேனோ என்று பயந்து...
:) :)
பட்டாம்பூச்சி விட்டு சென்ற கந்தக நிற கலவை என் நெஞ்சினில்
இன்னும் மிச்சமாக.......
.............................................................................................................

Selecting A Relationship is a Hard Thing To Deal With....! :) But Most Of The People Are Doing The Right Thing By Selecting A Wrong One...!

.............................................................................................................

I wanna Pause Ma Life In This Dream, But I know Its Not Possible, But Lemme Close Ma Eyes At least..Don't Wake Me Up..! :)
...........................................................................................................

Though its been losing a year of lifetime, ppl are always happy to celebrate their Birthday..! :) Today Am Entering Into My 32. I Feel Gud That Am Surrounded By A Lots Of Good ppl's.
............................................................................................................

சந்திப்பு முடிந்து கிளம்பும் போது முத்தம் வேண்டுமென்றேன்..!
நாம் ஏன் காமம் கடந்த காதலாக நம்முடைய காதலை மாற்றக்கூடாது
என்றாள்? :(
சுரத்தே இல்லாமல் மாற்றலாம் என்றேன்..!
காதலுடன் சிரித்த படி எனது கன்னம் கிள்ளி நான்கு முத்தங்கள்
வைத்து இப்போ OK வா என்றாள்.
முத்தம் கிடைப்பதை விட அதை வாங்கும் முயற்சியில்தான்
கொப்பளித்து கொந்தளிக்கிறது காதல்..!
......................................................................................................

உனது சந்தோஷமே எனதும்...!
என்னை பார்க்காமல் இருப்பதுதான் உன் சந்தோஷத்தை
அதிகரிக்கிறதென்றால் அதற்கும் நான் உடன்படுவேன்...
சுயநலமற்றது உன்னுடனான எனது காதல்..
.....................................................................................................
நீ நீயாகவே இருக்க வேண்டும் என நினைப்பதால்...
நீ இப்படி இருக்கலாம் என்ற என் எண்ணங்களை எனக்குள்ளே கொன்று புதைக்கிறேன்..

சில கொலைகளும் கூட சந்தோஷத்தை தருமோ???
:) :)
..................................................................................................

நாளை உலகம் அழியுமென்றால் மிக மிக சந்தோசம் கொள்வது நானாக மட்டுமே இருப்பேன்..!
உன்னுடனான நினைவுகளை கடைசியாக கொண்டு மரித்துப் போவதென்பது
எனக்கு வரமென்பேன்..!
காதலிக்கிறேன் என்று ஒற்றை வரியில் அடக்கக்கூடியதல்ல
என் காதல்..!
..................................................................................................
பேசா நிமிடங்களின் நகர்வு அழகு..!
பேரூந்தில் பக்கத்தில் அமர்ந்திருந்த 16 வயது பெண் குறுகுறுப்புடன்
எனைப் பார்த்து கொண்டே....

பேரூந்தை விட்டு இறங்கும் பொழுது எனைப் பார்த்து சிந்திய ஒரு புன்னகை
கவிதை.! :)
...............................................................................................

முந்தய நாள் பௌர்ணமியாக....
நிலவை காணவில்லை நேற்று...

கோபத்துடன் அலைபேசியில் கத்திக்கொண்டிருந்த அவளிடம்
நிலவை காணாமல் செய்துவிட்டாய் என்றேன்..

குழப்பத்துடன் மௌனமானாள்..
நிலவை விட மெல்லியதான நீ கோபமானதால் சிவந்த
உன் முகம் கண்டு, சூரியன் உதித்து விட்டது என்ற
தப்பான எண்ணத்தில் சென்று விட்டது நிலவேன்றேன்.

கோபத்தில் சிவந்த முகம் இப்பொழுது வெட்கத்தில் சிவந்தது...

:) :) :)
...........................................................................................

சமயங்களில் சைத்தான் குடியேறுகிறது மனதில்...
உன்னை சந்தேகிக்க வற்புறுத்துகிறது...

சந்தேகம் கொள்கிறேன்...
என் மீதும்...உன் மீது நான் வைத்திருக்கும் காதலின் மீதும்....

உண்மையான அன்பில் சந்தேகம் எதற்கு....
உண்மைகள் கொண்டு உருவேற்றுகிறேன் நம் காதலை...
..........................................................................................

காணும் இடங்களனைத்தும் எனக்கான உன் நினைவுகளை..
நாம் பகிர்ந்து கொண்ட சந்தோஷ தருணங்களை..
பரிசளிக்கிறது...

நீ இல்லாத இந்த தவிப்பான பொழுதுகளை..
பகிர்ந்து கொண்டு
என்னை மென்சோகத்தில் இருந்து மீட்க்க போராடுகிறது..
இந்த மாநகரத்து சாலைகளும் மரங்களும் பாலங்களும்.....

சீக்கிரம் விடுமுறை முடித்து வந்து சேரடி என் கண்மணி..
.......................................................................................

நீ இல்லாமல் இருப்பதால் நான் படும் வேதனையை
நேற்று நிலவோடும் மேகக் கூட்டத்தோடும் பகிர்ந்துகொண்டேன்...

வெறுமை தாங்க முடியாமல் நிலவு மறைந்து போனது...
கட்டுபடுத்திக் கொண்டு ஆறுதல் சொன்ன மேகமாலும் கூட தாங்க முடியாமல்
கரைந்துருகி பொழிந்து விட்டது மழையாய்......

பிரிவு துயர் நீக்க முடிவெடு என்னவளே....
அயல் மாநிலத்து பயணம் முடித்து சீக்கிரம் வந்து சேரடி என் கண்மணி...

(நேற்றைய மழையில் இட்ட STATUS message இது...என்னவள் இப்பொழுது கன்னட தேசத்திற்கு சென்றிருக்கிறாள் :( )

திங்கள், 11 ஏப்ரல், 2011

காலணி..!

பிறந்த நாளுக்கு தங்கை அளித்த பரிசை பிரித்து பார்த்ததும் சற்று அயர்ச்சி சிறு வருத்தம்..! அது ஒரு நைக் வகையை சேர்ந்த விலையுயர்ந்த காலணி.!அதன் விலை ஐந்தாயிரம்.

எனக்கென்று சில கொள்கைகள் வைத்திருந்தேன்..! அதில் ஒன்று இந்த ஆசிய ரத்தத்தை உறிஞ்சிக் கொண்டு அமெரிக்காவில் தயாரனாதாக கம்பனியின் பெயர் பொறித்த பொருட்களை வாங்க கூடாதென்பது..! ஆனால் எதை கூடாதென நினைத்தேனோ அதே பொருளே எனக்கு பரிசாக..! மறுக்க முடியவில்லை, எனது உயிரினும் மேலாக நான் நேசிக்கும் என் தங்கையிடம் வந்த பரிசாதலால்..!

லேசாக பின்னோக்கி பயணிக்கையில் ...மனது ரணம் கொள்கிறது....இந்த காலணிக்காக எத்தனை எத்தனை உயிர்ப்பலிகள்....சக உயிரிடத்தில் வித்தியாசம் காணும் ஒரே கூருர மனம் படைத்த மிருக இனம் நம் மனித இனம் என நினைக்க தோனுகையில் கேவலமான ஒரு பிறவி இந்த மனித பிறவி என எண்ணத தோன்றுகிறது ...!

இன்றும் கூட இந்த இந்திய துணைக் கண்டத்தில் இதே கூருர மனம் படைத்த மிருக இனங்கள் நிறைய உலவுகின்றன சிறிதும் குற்றவுணர்வின்றி...பெரிதாக பெருமை பேசியபடிய தங்கள இனங்களை..!

கால்கள் கூசினாலும் பெருமையாகவே உணர்கின்றேன் எல்லோர்க்கும் ஈடாக நானும் காலனி அணிதிருக்கிறேன் இந்த தகவல்தொடர்பு மென்பொருள் பூங்காவில்..!
என்னைப்போல் எத்தனை எத்தனை தலித் இளைஞன் அன்னைவருக்கும் ஈடாக காலனி அணிந்து நடக்கிறான் எனும்போது..!

மாற்றங்களை நோக்கி ...மனித மனங்களின் மாற்றத்தை மனதில் கொண்டு இன்னும் இரு கைகளை விரித்து நேசத்துடன் சமமான வாழ்க்கை வேண்டி எதிர்நோக்குகிறோம்...ஆனால் எங்கள் கைகள் தட்டி விட பட்டு உதாசீனபடுத்தபட்டு அவமாங்களுடனான வேதனைகளையே பரிசளிக்கின்றன உயர் குடிகள் என சொல்லிக் கொள்ளும் இனங்கள்...

இவ்வளவு பொறுமையுடனும் சகிப்பு தன்மையுடனும் உலவும் இனங்களை உலகில் வேறெங்கும் காண இயலாது...காரணம் இப்படி அடிமை படுத்தப்பட்ட பல இனங்கள் தங்களுக்கென ஒரு நாட்டை உண்டாக்கி காட்டி கொண்டிருக்கின்றன சம காலத்தில்..!

ஆறாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக சந்தோஷத்துடன் அடிமையா இருக்க பழகிய இனம் இந்த திராவிட இனம்..! இவ்வளவு காலம் ஆன பிறகும் மனதி சிறிதும் குற்ற உணர்வின்றி நான் உயர்குடி என சொல்லிக் கொள்வதில் பெருமையடையும் இனங்களை நான் அணிந்திருக்கும் உயர்ரக காலனி கொண்டு அடித்தாலும் தகாது என்றே எனக்கு தோன்றுகிறது.

ஞாயிறு, 20 பிப்ரவரி, 2011

வீரத் தாய்..!

மரணம் என்பது முற்றுப் புள்ளியல்ல ...!
ஒவ்வொரு மரணத்திற்கு பின்பும் ஒரு
விதை விதைக்கப் படுகிறது....
அது தளிர்த்து செழித்தோங்க
முடிந்த அளவு நமது பங்கினை ஆற்றிட
வேண்டுகிறேன்..!

மாவீரன் வேலுப் பிள்ளை பிரபாகரன் தாயார்
பார்வதி அம்மா இப்பூவுலக வாழ்வில் இருந்து விடை பெற்றார்..!
அவருக்கான எனது அஞ்சலிகள்...!

ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011

திராவிட காதலர் தினமடா...கொண்டாடலாம் வாங்கடா உயர் சாதிக் கார கோமான்களா...!

காதலர் தினத்துக்கு ஏதாவது சிறப்பு பதிவு போட வேண்டும் என்று தோன்றியது...! இது வரை நான் பதிவிட்ட அனைத்து பதிவுகளும் ஓட்டிற்காக விடப் பட்டதில்லை....இந்த வலைப் பதிவு என்பது எனது டைரியை போல....ஆதலால் நான் இதை வியாபாரம் ஆக்க விரும்பவில்லை....! மேலும் எனது நெருங்கிய உறவினர்கள் ஊடகக் துறையில் இருப்பதால் எனது படைப்புகள் ஏதாவது ஒரு ஊடகத்தில் வர வேண்டும் என்று நான் அடம் பிடிப்பதில்லை...

எனக்கு தெரியும் அது ஒரு வியாபாரம்...மேலும் அது ஒரு போதை....நான் இந்த அன்னையர் தினம் தந்தையர் தினம் மற்றும் இது போல உள்ள பல தினங்களை வெறுக்கிறேன்....அந்த ஒரு நாளில் வேறு என்ன அன்பை இவர்கள் வெளிப் படுத்தி விட முடியும்..????? இன்றைய வாழ்வில் காதல் என்பதே பல வியாபார நோக்கோடுதான் வெளிப்படுகிறது...நீ என்ன ஜாதி, மதம் மற்றும் மொழி, இதெல்லாம் ஒத்து போனால் மட்டுமே அது உண்மையான காதல்....இல்லையென்றால் அது கலாச்சார் துரோகம் என்று கொதிக்க இங்கு ஏராளமான சாதி வெறியர்கள் கலாசார போர்வை போர்த்திக் கொண்டு பதிவுலகில் காத்திருக்கிறார்கள்....

அவர்கள் பார்வையில் அவர்கள் எப்படி என்று தெரியவில்லை...ஆனால் இப்போதெல்லாம் தாழ்த்த பட்டவர்களெல்லாம் ஏதோ சொர்கத்தில் இருப்பது போல அரசாங்கம் அவர்களுக்கு சலுகையை வாரி வாரி வழங்குவது போல சில முன்னேறிய சாதிக் காரர்கள் உதிர்க்கும் வாசங்ககள் மனதை புண் பட செய்கிறது.....

மெத்த படித்த ஒரு தாழ்ந்த சாதிக் கார துணை வேந்தர் ஆனாவுக்கும் ஆவன்னாவுக்கும் அச்சாரம் தெரியாத ஒரு திருட்டு சாதியை சேர்ந்த ஒரு மணல் திருடனிடம் அடி வாங்குகிறான்...! மெத்த படித்த ஒரு மாவட்ட ஆட்சியர் ஒரு மேடை நாடகக் காரியிடம் அடி பணிந்து போகிறான்....இதெல்லாம் அந்த உயர் சாதி கார சான்றோர்க்கு சாதரணமாக தெரியலாம், அல்லது மெத்த சலுகைகளை அனுபவித்து கொண்டு கள்ளம் காட்டுகிறார்கள் என மற்றைய மக்களை நம்ப வைக்க முயற்சிக்கலாம்.....!

இதெல்லாம் உணர்த்துவது யாதெனில் என்னதான் நீ முன்னேற நினைத்தாலும் நாங்கள் வைத்த சட்டத்தை மதித்து அதற்க்கு கீழ்படிந்து நடந்து உங்கள் சாதியின் மரியாதையை உணர்த்த வேண்டும் என்பதே....அதற்க்கு மாறாக நடக்க முயற்சித்தால் பின் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என்ற மிரட்டல் உடாக விளிக்கும் எச்சரிக்கை.....!

இதற்க்கூடக உங்கள் யோகியதை என்னவென்று சொல்ல முற்ப்பட்டால் அது திராவிட நாகரிகம் பாஸ் என்று பகடி செய்கிறான் ஒரு ஆரிய இனத்து கயவன்.....உண்மைதான்டா....உங்களைப் போல வெளியில் உத்தமர் வேடம் போட்டுக் கொண்டு அடுத்த வீட்டு கதவு எப்பொழுது திறக்கும் என்று காத்திருந்தவர்கள் அல்ல திராவிடர்கள்....!

காதலர் தினம் தேவையா என பதிவு போட்டு விட்டு அன்று மாலை காதலியுடன் கடற்க்கரை சல்லாபம் புரியும் கள்ளம் கற்றவறல்ல திராவிடர்....தெளிவான நோக்குடன் எதையும் மறைத்து வாழத தெரியாமல் வாழ்ந்து தொலைத்த ஒரு பாவப் பட்ட இனத்தின் சார்பாக இந்த பதிவிடுகிறேன்....

தாழ்த்த பட்டவர் வீட்டில் நான் உணவு உண்டிருக்கிறேன் என்று பெருமை பேசும் உங்களைப் போல போலி கலாச்சார வேலிகளை உடைக்கும் கோமாளிகள் உள்ள வரை எவனும் எதற்கும் கருத்து சொல்ல தகுதியற்றவன் என்பதை சொல்லி இந்த பதிவை முதல் முறையாக ஓட்டிற்கு விடுகிறேன்......!

சனி, 5 பிப்ரவரி, 2011

பேரிச்சை(DATES) = பேர்+இச்சைDATE (2)

பின்பு நெடு நாட்கள் கழித்து அவளிடத்தில் இருந்து உன்னுடன் பேச வேண்டும்என்று ஒரே ஒரு வரியில் மின்னஞ்சல். எப்படி பேசுவது?? என்னிடத்தில் அவளை தொடர்பு கொள்ள எந்த எண்ணும் கிடையாது. பின்பு மறுபடியும் ஹைதராபாத் வர சொல்லி ஓலை வந்ததால் மறுபடியும் தெலுகு தேசத்தில் வாசம். மறுபடியும் சென்னை வருவதற்குள் அவளிடம் இருந்து இரு மின்னஞ்சல்கள் வந்திருந்தது. இரண்டுமே பயங்கரமான குழப்பம் + பயம் + அழுத்தம் கலந்து வாழ்ந்து கொண்டிருக்கிறாள் என்பது புரிந்தது. பார்த்ததும் மிகவும் கஷ்டமாக இருந்தது...பட்டாம்பூச்சி போல பட பட வென பேசுவாள் பறந்து கொண்டே இருப்பாள்....வீட்டில் இருப்பதை விட சாலையில் தான் களித்திருப்பாள் அவளின் நாட்களின் பொழுதுகளை... பெரும்பாலும் எங்கு செல்கிறாள் எப்பொழுது வருவாள் என எல்லா விபரங்களை என்னிடத்தில் மட்டும் பகிர்ந்து கொள்வாள்...காரணம் கேட்டதற்கு நீ எனக்கு சற்று SPECIAL தோழன் என்பாள்.

ஐந்து மாதங்களுக்கு முன்பு தான் மறுபடியும் வலையில் சந்தித்தேன் அவளை....உடனே என்னுடைய அலைபேசி எண்ணைக் கேட்டு வாங்கினாள்....அடுத்த நொடி அவளிடத்தில் இருந்து அழைப்பு ....வெடித்து அழுதாள்..மிகவும் சந்தேகிக்கிறான் என்றாள்......மிகவும் உண்மையாக இருக்கிறேன் ஏனென்றால் நான் சந்தித்த ஆண்களில் இவனிடத்தில் மட்டுமே காதலை உண்கிறேன் என்றாள்.....அவள் கல்லூரியில் நிறைய பையன்களிடம் பேசுகிறாள் என குற்றம் சாட்டி அவளின் ஆர்குட் கணக்கை முடக்கியிருக்கிறான்....மேலும் அவளின் மின்னஞ்சல் முகவரிக்கான கடவுச் சொல்லையும் வாங்கி வைத்துக் கொண்டான்...என்றாள் கதறி அழுது கொண்டே...
மனது மிகவும் கஷ்ட பட்டது அவள் அழுத பொழுது..நல்ல பெண்ணாக நடக்க முயற்சித்தால் சந்தேகம் கொள்வது ஆண் வர்க்கத்துக்கே உண்டான குணம்...சில நாய்கள் அடக்கி வாசிக்கும்...சிலது உச்ச்சதிர்க்கு சென்று ஆடும்...நான் அடக்கி வாசிக்கும் நாய் வகை....

அவன் மீது எனக்கு அதிக கோபம் வந்து விட்டது...இத்தனைக்கும் அவனும் அவளும் ஒரே கல்லூரியில் படிக்கிறார்கள்...இதற்க்கு மேல் அவனுக்கு இங்கு வேலை இல்லை என்பதயும் எனக்கான வேலை இனிதான் என்பதும் புரிந்து போனது எனக்கு. விளைவு. அந்த ஜோடியை பிரித்து விடுவது என்று முடிவெடுத்து விட்டேன். அதுதான் அவளுக்கு நல்லது. இவனைப் போன்ற சந்தேக குணம் கொண்ட நாய்களுக்கு துணிக் கடையில் உள்ள அலங்கார பொம்மைகள் மட்டுமே திருப்தி படுத்தும். ஆனால் இந்த முட்டாள் பெண் தினமும் கதறி அழுகிறாள் என்னிடத்தில்...அவனை விட்டு வர முடியாது என்றவளை..மெதுவாக அவளின் சுய மரியாதை என்ற ஒன்றை பற்றி எடுத்துரைத்தேன்....இப்படி ஒருவனோடு உன்னால் ஓராண்டு கூட வாழ முடியாத போது எப்படி ஆயுள் முழுவதும் இவனுடன் உன்னால் வாழ்க்கையை நினைத்து பார்க்க முடியும் என்றேன்...சிறிது தெளிவு பெற்றவளாக அவள் மாறும் போது அந்த கயவன் நீ இல்லை என்றால் செத்து விடுவேன் என்று அழுது அவளை வசம் செய்து விடுவான். இனி அது தொடரக் கூடாது என்பதை முடிவு செய்து படிப் படியாக அவளை மன மாற்றம் செய்து எது செய்தாலும் எண்ணைக் கேட்டு செய்கிற வரைக்கும் மாற்றி இருக்கிறேன்... இனி அவன் அழைத்தால் கூட பேசக் கூடாது குறுஞ்செய்தி அனுப்பக் கூடாது என்ருரைதிருக்கிறேன். நிறைய மாற்றங்களை உணர்கிறாள். எனக்கான நேரங்கள அனைத்தும் இப்பொழுது அவளுடனே செலவழிக்கிறேன்....

மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் முப்பத்தியிரண்டு வயதில் பத்தொன்பது வயதுப் பெண்ணுடன் கடற்க்கரை மணலில் ஓடிப் பிடித்து விளையாடும் போது புரிகிறது
இன்னும் பதின்ம வயதில் உள்ள புரிதல்களோடு இருக்கிறது மனது என்று...அவள் இப்பொழுது முழுமையாக தன்னுடைய முதல் காதலில் இருந்து வெளியே வந்திருக்கிறாள்.
மிகவும் சந்தோஷமாக உணர்கிறேன் என்றாள். அவனுடன் இருந்து ஒவ்வொரு நொடிப் பொழுதும் இப்பொழுது நினைத்து பார்த்தால் சிறைக்குள் இருந்த உணர்வையே தருகிறது என்றாள்... அது காதல் அல்ல அவனை பொறுத்த வரை என்றேன் நான். ஆமோதித்தாள். நிறைய குட்டி கதைகள் சொல்கிறேன், நிறைய சிரிக்கிறோம் , இரவு முழுவதும் நட்சத்திரங்கள் எண்ணுகிறோம் அவரவர் வீடு மொட்டை மாடியில்....நள்ளிரவு நேரத்தில் அவள் வீட்டுச் சுவரேறி குதித்து அவளுக்கு Good Night சொல்லி திரும்புகிறேன் ...கல்லூரிக் காலத்தில் எழுதாத ASSIGNMENTS மற்றும் PRACTICALS இப்பொழுது அவளுக்காக எழுதுகிறேன் ....அவளுக்காக காலை சீக்கிரம் விழித்து அவளை எழுப்பி கல்லூரி பேரூந்தை சரியான நேரத்தில் பிடிக்க வைக்கிறேன்...

நீ பிறந்த அடுத்த ஐந்து வருடத்திற்குள் நான் பிறந்திருக்க வேண்டும் என்றாள் :) :) ....கிழக்குக் கடற்க் கரை சாலையில் அதிவேகமாக விரைகிறோம்..அதீத சந்தோஷத்துடன்....அவளையும் மீறி சில நேரங்களில் இந்த வார்த்தைகள் வந்து விழுகின்றன....எங்கடா இருந்தே இவ்ளோ நாளா??

வெள்ளி, 7 ஜனவரி, 2011

பேரிச்சை(DATES) = பேர்+இச்சை DATE

நிறைவான காதல் இது என்று நினைத்து, பின்பு முறிந்து போன போது , சில நாட்கள் வெளிக் கிரகத்தில் சென்று இருந்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த காலம் அது... அந்த சந்தர்ப்பத்தில் தான் ஹைதராபாத் சத்யம் நிறுவனத்தில் வேலைக்கான ஓலை வந்திருந்தது.. புது வசிப்பிடம், புதிய மனிதர்கள், புதிய கலாசாரம் மற்றும் மொழி, உணவு.....வெளிக் கிரகத்திற்கு வந்தது போன்ற உணர்வு....லேசாக மனதிற்குள் ஒரு சந்தோசம் எட்டி பார்க்க ஆரம்பித்தது....வேலைப் பளுவுடன், கூட ஒரு தமிழ் கூட்டமும் சேர்ந்திருந்தது(சத்யம் தமிழர்களாலேயே நிரப்பப்பட்டிருந்தது)...

வட இந்திய முகங்கள் நிறைந்த அந்த டெக் பார்க் எனக்கு ஒரு பணக்கார கல்லூரியை நினைவுபடுத்தியது...இப்படியான ஒரு இரவு நேரப் பணியில் இருக்கும் போது வேலைப் பளு காரணமாக ஏற்ப்படும் மன உளைச்சலை போக்க அவ்வப்பொழுது வலை அரட்டைக்கு போவது வழக்கம்...அப்படி யாகூ அரட்டை தளத்திற்கு சென்றேன்...


அப்பிடித்தான் சந்தித்தேன் இசையின் பெயர் கொண்ட அவளை..! முதல் அரட்டையே மிகவும் குறும்புத் தனமாக இருக்க....எனக்கு அவளை மிகவும் பிடிக்க ஆரம்பிக்க இருந்தது... முதல் சந்திப்பில் நேரம்போகவில்லை என்ற அவளிடம் கதை சொல்லவா என்று கேட்டு பாட்டி வடை சுட்ட கதையை சற்று மாற்றி சொல்லியது தான்...! :) :) அப்பொழுது அவள் பதினொன்றாம் வகுப்பு..!
அந்த வயதிற்கே உண்டான குறும்புடன் அவள் இருக்க....அந்த குறும்பு தனத்தை உடைய ஒரு தோழியை நான் அப்பொழுது எதிர்ப் பார்த்திருக்க....மானசீகமாக அவளுடன் நெருக்கமாக விரும்பினேன்...!

பின்பு ஹைதராபாத் வாழ்க்கை என் நினைவுகளை புரட்டிப் போட்டு விட்டது...ஆனாலும் என்னுடன் தொடர்பில் இருந்தாள் என் இசை நாயகி....ஏனோ சில பெண்களுடன் நான் உடனடியாக காதல் வயப் பட்டு விடுகிறேன்....பின்பு அவர்களிடம் இருந்து வெளியேற மிகவும் சிரமப் படுகிறேன்...அதே போலத் தான் இந்த இசை நாயகியிடம் காதல் வயப் பட்டு இருக்கிறேன் என்பதைக் கண்டு கொண்டேன்....ஆனால் சாத்தியம் இல்லாத விஷயங்களைப் பற்றி நான் அதிகம் அலட்டிக் கொள்வது கிடையாது....ஹைதராபாத்தில் இருந்து சென்னையில் உள்ள ஒரு பெண்ணிடம் வெறும் மின்னஞ்சல் முகவரி மட்டும் தெரிந்து கொண்டு காதல் வளர்ப்பதின் சாத்தியங்கள் அறிந்து கொண்டதால்..சற்று வருத்தத்துடன் தான் அவளை நான் பட்டியலில் வைத்து இருந்தேன்...


பின்பு வாழ்க்கை தன வழியில் பயணிக்கத் தொடங்கியிருந்தது...ஆனாலும் என்னுடன் தொடர்பில் இருந்த அத்துனை பெண் தோழிகளுடனும் நான் தொடர்பில் இருந்தேன்...குறிப்பாக இசை நாயகியுடன் மிகுந்த நெருக்கமான தொடர்பில் இருந்தேன்....ஆனால் அது வலையிநூடக மட்டுமே என்றளவில் இருந்தது......இப்படியான ஒரு காலத்தில் தான் ஹைதராபாத் வேலை காலியாகி தாய்நாட்டிற்கு திரும்ப வர வேண்டிய சூழ்நிலை...

இடையில் சில மாதங்கள் இசை நாயகியுடன் தொடர்பு அறுத்து விட்டது....அவளும் கல்லூரியின் வாயிலில் அடி எடுத்து வைத்திருந்தாள்...தமிழகத்திற்கு திரும்பிய பிறகு ஒரு நாள் வலை அரட்டையில் அவளைத் தொடர்பு கொண்ட பொழுதுதான் தெரிந்தது...அவளை சில மாதங்களாக துரத்தி தன காதலை வெளிப் படுத்திய ஒரு
கலாபக் காதலன் அவளின் மனத்தைக் கொள்ளை கொண்டிருந்தான் என்று...

எல்லாமே எனக்கு வேண்டும் என்று அழும் குழந்தை அல்ல நான்...ஆனாலும் சின்ன வருத்தம் மனதில் நாம் எங்கோ சறுக்கி இருக்கிறோம் என்று. பின்பு வேலை வெட்டி
இல்லாமல் வலையிலேயே உலவிக் கொண்டு தினமும் அவளிடம் மின்னரட்டை அடித்துக் கொண்டு ஆர்குட்டில் புதிய நண்பர்களை பிடிப்பது நண்பர் வட்டத்தை சந்திப்பது , வலைப் பதிவு ஆரம்பித்தது என்று நாட்கள் மிக இனிமையாக போய்க் கொண்டிருந்த காலம் அது..

எனது இசை நாயகியுடன் சேர்ந்து அவளின் காதலனும் வலை அரட்டையில் எங்களுடன் கலந்து கொண்டான்... எல்லாம் சில மாதங்களுக்கு பின்பு காணவில்லை...என்னை தன்னுடைய ஆர்குட் நண்பர் பட்டியலில் இருந்தும் நீக்கியிருந்தாள் என் நாயகி. ஏழு வெவ்வேறு பெண்களுடன் அப்பொழுது சுற்றிக் கொண்டிருந்ததால் வலையில் மட்டும் இவளை சந்திக்கும் இவளை சற்று மறந்து தான் போனது...ஆனாலும் எப்பொழுதெல்லாம் வலையில் இருக்கிறேனோ அப்பொழுதெல்லாம் மின்னஞ்சல் செய்து கொண்டே இருப்பேன்... பதில்தான் இல்லை அவளிடத்தில்.

வியாழன், 4 நவம்பர், 2010

ரகசிய சிநேகிதன்... (2 )

தோழியின் விடுதிக்கு சென்று காத்திருக்கையில் ஒரு குறுஞ்செய்தி..அலைபேசியில்..HI என்று வந்திருந்தது...கண்டிப்பாக இது ஆல்டோ தேவதையாகத்தான் இருக்க வேண்டும் என கணித்து விட்டேன்... HELLO ALTO ANGELஎன பதிலனுப்பினேன்.. இரண்டு SMILEYக்களுடன் எப்டி கண்டு பிடிச்சே நாந்தான்னு என்று ஒரு ஆச்சிரிய குறி வேறு?? :) :) இந்த நிமிடம் எனது அலைபேசி உனக்காக மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கிறதென நினைக்கிறேன் என பதிலிட்டேன்...

பொய் சொல்கிறாய் நீ...உனக்கு நிறைய தோழிகள் இருக்க வேண்டும்...இல்லையென்றால் எப்படி ஒரு பெண்ணிடத்தில் அதுவும் முன்பின் அறிமுகம் இல்லா பெண்ணிடம் இரண்டு நிமிடங்களில் அலைபேசி என்னை பரிமாற்ற முடியும் என்றாள்?? :) :) இந்த கேள்வியில் LOGIC இல்லை என்று சொல்லிவிட்டு எனது பெயரை அனுப்பினேன்...

இரண்டு நிமிடங்கள் கழித்து அவளிடத்திலிருந்து அழைப்பு...நிர்மலா என்றாள். நிம்மி என்று அழைப்பேன் என்றேன்.. :) :) சிரித்து கொண்டே பொதுவாக அவளது குடும்ப வட்டத்தில் அப்படித்தான் எல்லோரும் அழைப்பதா தெரிவித்தாள்....சரி அப்போ நிம்மு ஓகே வா ?? என்றேன்?? இப்படி யாரும் அழைத்ததில்லை என்றாள்... ஏனோ அவளிடத்தில் பேசிக் கொண்டிருக்கும் போது அதிக படபடப்பு மனதிலும் உடலிலும்.....முதல் காதல் தோன்றும் பருவ வயதில் ஏற்ப்படும் நிலையில் நானிருப்பதாக
அவளிடம் கூற....பொய்...... பொய் என்று அவள் சிரிக்க...அலைபேசி வழியே கன்னத்தில் அறைந்தது அவளின் வெட்கம்.....

எனக்கு சிறிது ஆச்சிரியம்தான்...அறிமுகமே ஒரு பெண்ணிடம் இவ்வளவு சகஜமாக பேச முடியுமா என்று.....எங்க இருக்கீங்க என்றேன்?? கார்ல இருக்கேன் என்றாள்.
நான் சிறிது மௌனம் காக்க...அவர் குழந்தைங்கள அழைசிண்டு SWEETS N ICE CREAM வாங்க போயிருக்கார் என்றாள்..பின்பு சிறிது நேரம் பரஸ்பர அறிமுகப் படலம் ஓடியது....பின்பு அழைப்பு அணைக்கப்பட்டது...அவர் வருகிறார் என்ற ஒற்றை சொல்லோடு... சிறிது நேரம் கழித்து ஒரு குறுஞ்செய்தி...எக்காரணம் கொண்டும் தன்னை அழைக்கவோ அல்லது குறுஞ்செய்தி அனுப்பவோ கூடாது...நான் சொல்லும் வரை என்றிருந்தது.

தோழியும் தன்னுடைய LUGGAGE உடன் வரவேர்ப்பரைக்கு வந்திருந்தாள்...சென்ட்ரல் சென்றோம் ஆட்டோவில்..என்னடா வழக்கத்துக்கு மாற ஒரு பிரகாசம் தெரியுதே மூஞ்சில என்றாள்...நீதான் சென்னைல இருந்து கேளம்ப்ரேல...அதான் என்றேன்...சில கிள்ளல்களும் சில அடிகளும் வாங்கிக் கொண்டேன்... இரண்டாம் வகுப்பு ஏ.சீ யில் அவளை ஏற்றி விட்டு அவளின் LUGGAGEகளை ஒழுங்கு படித்து வைத்து விட்டு சுற்றிலும் பார்த்தால் எல்லாம் வட இந்திய முகங்கள்....பின்பு அமர்ந்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம்....சரி நா கிளம்றேன் என்றேன்...சில நொடிகள் பேசவில்லை...அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்...என்ன என்றாள்...ஒரு முத்தம் வேண்டும் என்றேன்... :( அல்ப்பம்டா நீ என்றாள் மென்புன்னகயோடு...கட்டிக் கொண்டு உதடுகள் சுவைத்தோம்...பக்கத்தில் அமர்ந்திருந்த வட இந்தியக் குடும்பம் அதீத ஆர்வத்தோடு எங்களை கவனித்தது.... ரயில் கிளம்பும் போது அடிக்கடி புனே வந்துட்டு போடா என்றாள்...சரி என்றேன்...சிறிது விழி நீர் அவள் விழிகளில்...

இரவு வீடு திரும்பியிருந்த பொழுது நிறைய எதிர்பார்ப்பு மனதினுள்...எப்போ அழைப்பு வரும் அவளிடம்(நிம்மு) இருந்து என்று?? இரவு ஒன்பதரை மணிக்கு நிம்முவிடம் இருந்து அழைப்பு... சிறிது பயத்தோடுதான் எடுத்தேன் அலைபேசியை.....நல்ல வேளை அவள்தான்....ஹாய் நிம்மு என்றேன்...சாப்டீங்கள வீடு வேலை முடிசிடீங்க்ளா போன்ற பேச்சுக்கள் தாண்டி வந்த பொழுது அவள் கேட்டாள் எதற்க்காக உனது அலைபேசி என்னை எனக்கு கொடுத்தாய் என்று...சிலரை பார்த்த உடன் அவர்களிடம் பேசத் தோன்றும்...அவ்வகை சேர்ந்த பெண் நீங்கள் ...அதனால்தான் என்றேன்...எதற்காக என்னுடைய எண்ணை குறித்து கொண்டீர்கள் என்ற பொழுது ...தெரியவில்லை என்றாள்...நாளை காலை காபி டே வில் சந்திக்கலாமா?? உங்களுக்கு விருப்பம் இருந்தால் என்றேன்.

இருபது நிமிடங்களுக்கு முன்னமே COFFEE DAY சென்று காத்திருந்தேன். நீல நிற சல்வார் கமீஸில் நிம்மு. அழகா இருக்கிறீங்க என்றேன். சிரித்துக்கொண்டே வாங்க போங்கலாம் வேண்டாம் பேர் சொல்லி கூப்டுங்கோ..நா சின்ன பொண்ணு என்றாள்.. :) ஆன்ட்டி ய பொண்ணுன்னு கூப்டா சமுதாயம் என்னை உதைக்கும் என்றேன்...சின்ன குழந்தைகளுக்கு வேணா நா ஆன்ட்டியா இருந்துட்டு போறேன்....உங்களை மாதிரி வளந்தவாளுக்கேலாம் இல்லை என்றாள்... :)

கல்லூரி முடித்த உடன் தனக்கு திருமணம் முடிந்து விட்டதெனவும்...வேலைக்கு செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டதாகவும் சொல்லியது நிம்மு...கல்லூரி முடித்த வருடத்தை கணக்கில் கொண்டு பார்த்தல் நிம்மு என்னை விட இரண்டு வயது சிறியவள்..சிரித்துக் கொண்டே அவளிடம் இதை சொன்ன பொழுது அவ்வளவு சந்தோசம் அவளுக்கு...உங்களை அங்கிள் நு கூப்டலாமா என்றாள் :) :) எல்.கே.ஜி படிக்கும் குழந்தைகளை தவிர்த்து மற்றவருக்கேலாம் நான் அங்கிள் இல்லை என்றதும்...சப்தம் இட்டு சிரித்தோம்... சரி அப்போ அண்ணான்னு கூபிட்றேனு சொன்னாள்....LOGIC ஒத்து வராதுமா என்றேன் :) :) என்னவரையே நா அப்டிதான் கூபிட்றேன் என்றாள் கண் சிமிட்டி...அய்யோ எனக்கு தெரியாம போச்சே...சரி சரி....அப்போ அப்டி கூப்ட்டா மட்டுமே சந்தோசம் என்றேன்.... நிறைய சிரித்துக் கொண்டே இருந்தோம் இருவரும்....

எட்டு வயதில் ஒரு பையனும், ஐந்து வயதில் ஒரு பெண் குழந்தையும் அவர்களுக்கு...அவளின் கணவர் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் ப்ராஜெக்ட் மேனேஜர்....வேலைக்கு செல்ல வேண்டும் ...அப்புறம் என்னவனை கண்டு பிடித்து அவனோடு பழக வேண்டும்...அவனுடன் இறுக்கி கட்டிக் கொண்டு மோட்டார் சைக்கிள்லில் பறக்க வேண்டும் என்று நிறையா ஆசைகள் வைத்திருந்தேன் கல்லூரி காலத்தில்..ஆனா ஆண்களை நிமிர்ந்து பார்க்கவே பயமா இருக்கும் அப்போ.....படித்து முடித்த உடனே திருமணம் ஆகிவிட்டது ...இவர் அப்போவே CAR வைத்திருந்தார், ஆக அந்த கனவெல்லாம் கனவாவே போச்சு எனச் சிரித்தாள் ..ஆனா ....ரொம்ப சந்தோஷமா இருக்கேன்..என்றாள். காபியும் கேக்குகளும் சாப்பிட்டு முடித்திருந்தோம். விடைபெற மனதில்லை ...யோசித்துக் கொண்டே கேட்டேன் ஒரு ரைட் போலாமா நிம்மு என்று?? வேண்டாம் என்று சொல்லி ஆட்டோவில் ஏறி கிளம்பி விட்டாள்...! ஒரு சிகரெட் பிடித்தால் நன்றாக இருக்கும் என்று தோணவே பக்கத்தில் உள்ள கடைக்கு போக எத்தனிக்கும் போது ஆட்டோ திரும்ப வந்து என்னருகில் நின்றது :) சம்பல் பள்ளத்தாக்கு விடுதலை வீரர்கள் போல தன்னுடைய துப்படாவினால் முகம் மறைத்திருந்தாள் நிம்மு...கால் மெட்டிகளை பத்திரமாக கைப்பையில் வைத்திருந்தாள். போகலாம் என்றாள்.

அவள் கண்களிலே அவ்ளோ ஒரு சந்தோசம். கிளப்பினேன் எனது பைக்கை. கோடம்பாக்கம் பாலம் வரை எங்கள் இருவருக்குமிடையே சிறிது இடைவெளி இருந்தது வண்டியில். ராதா கிருஷ்ணன் சாலையை தொட்ட பொழுது பறக்க வைத்தேன் வண்டியை...இருக்க கட்டிக் கொண்டு தோள்களில் முகம் புதைத்துக் கொண்டது நிம்மு...
அவ்வளவு வேகம்.நெடிய சென்னை சாலையில் பறந்து கொண்டிருக்கும் காதலர்களின் வாகனகளில் ஒன்றானது எனது வாகனமும்........ பயத்திலும் பரவசத்திலும் மிக மிக இறுக்கமாக எனை பற்றிக் கொண்டதால் நிம்முவின் நகங்கள் அழுந்தக் கீறி விட்டது எனக்கு...வண்டியை எங்கும் நிறுத்தவில்லை..தென் சென்னை முழுவதும் ஒரு சுற்று சுற்றி பின்பு நிம்மியின் வீடருகில் சென்ற பொழுது வண்டியை நிறுத்த சொல்லி ஒரு பக்கமாக உட்கார்ந்து கொண்டது நிம்மு...துப்பட்டாவை தோள்களில் போர்த்திக் கொண்டது...உயர்தட்டு அடுக்குமாடி குடியிருப்பு காவலாளி பவ்யமாக அவளுக்கு வணக்கம் வைக்க, வண்டியை பார்க்கிங்கில் நிறுத்தினேன்.

வீடு ரொம்ப அழகாக இருந்தது. காபி கொடுத்தது நிம்மு. குடித்து விட்டு கிளம்பும் வரை பேச தோன்றவில்லை. அமைதியாக ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டே இருந்தோம் புன்னகையோடு. சரி கிளம்பறேன் என்றேன். சரி என்ற நிம்மு என்னருகில் வந்து எனை மெலிதாக அனைத்துக் கொண்டது. கன்னங்களில் முத்தம் வைத்தது....இது என்ன உறவென்றேன். FRIENDSHIP என்றது நிம்மு. சிரித்து விடை பெற்றேன் நிம்முவிடம். கண்டிப்பாக நிம்முவின் வாழ்வில் மறக்க முடியா நாளாக இது இருக்கும் என்று எனக்கு தோன்றியது.

வண்டியை கிளப்பி வெளியே வரும்பொழுது வாயிற் காவலாளி என்னை வித்தியாசமாக பார்ப்பது போல இருந்தது....வானம் இருட்டி விட்டிருந்தது...லேசாக தூறல் விட்டுக் கொண்டிருந்தது... ஒரு சிகரெட் பிடித்தால் நன்றாக இருக்கும் என தோணுது .