செவ்வாய், 13 ஜூலை, 2010

சிதறல்கள்....!

இன்று ஒரு விபத்தை சந்திக்க நேர்ந்தது....! இரண்டு நாட்களுக்கு முன்புதான் பதிவர் ஜாக்கி சேகர் இரு சக்கர வாகன விபத்துகள் குறித்து ஒரு இடுகை இட்டிருந்தார்.

இரண்டாம் ஷிப்ட் என்பதால் சுமார் இரண்டு மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பினேன்...அதிகாலை தவிர மற்றைய நேரங்களில் எனது வேகம் மிதமாகவே இருக்கும்...அறுபது கிலோமீடர்க்கு வேகத்திற்கு மேல் செல்வதில்லை....இன்றும் அதே போல் அதே வேகத்தில் சென்றுகொண்டிருந்தேன்....திருவான்மியூர் ஐ.டி நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த பொழுது...ரோட்டின் இந்த பக்கத்தை பார்க்காமலே சாலையை கடந்து கொண்டிருந்தான் ஒரு மாணவன்...பாதி சாலையை கூட அவன் கடக்கவில்லை என்பதால் சரி நாம் போய்விடலாம் என்றெண்ணி நான் என் வேகத்தை குறைக்கவில்லை....திடீரென என்ன நினைத்தானோ மீதி தூரத்தை ஓடி கடக்க முயற்சித்தான்...அவன் ஓட ஆரம்பிக்கும்பொழுதே எனக்கு தெரிந்து விட்டது ஏதோ நடக்க போகிறது என்று...ஆனால் யோசித்து பிரேக் போடும்போது வண்டி கட்டுபாட்டை இழந்து அவன் மேல் மோதிவிட்டது...நான் வண்டியில் இருந்து தூக்கி வீசப் பட்டேன்...விழுந்த மறு நொடியே ஹெல்மெட்டை கழட்டி கையில் வைத்துக் கொண்டு அவனை நோக்கி ஓடினேன்...அவன் எழவே இல்லை...மயங்கிவிட்டானோ என்று நினைத்து...நடு சாலையில் இருந்து அவனை இழுத்து கொண்டு சாலையின் ஓரத்திற்கு வந்தேன்.....பின்பு அவனை பார்த்த பொழுது சுயநினைவுடனே தான் இருந்தான்...

அதற்குள் அங்குவந்த இன்னொரு மாணவன் கொஞ்சம் தண்ணீர் கொடுக்க அடிபட்டவன் சற்று அசுவாசமாகினான்...ஆனாலும் 108 க்கு அழைத்தேன்...உள் காயம் ஏதும் பட்டிருக்குமோ என்று ....அடுத்த பத்தாவது நிமிடத்தில் ஆம்புலன்சே வந்துவிட்டது...ஆனால் அந்த மாணவன் அடி இல்லை என்று சொல்லி கிளம்பிவிட்டான்...அம்புலன்சில் உள்ளவர்களுக்கு நன்றி சொல்லிவிட்டு...108 க்கு மறுபடியும் அழைத்து எனது நன்றியை தெரிவித்து கொண்டேன்..! இங்கே 108 ஐ பற்றி கொஞ்சம் சொல்ல வேண்டும்...ஹைதராபாத்தில் இந்த சேவை வெகு முன்னரே வந்துவிட்டது...எந்தபகுதியிலும் சாலைவிபத்து நடந்தாலும் உடனே அழைத்து தெளிவாக சம்பவம் நடந்த பகுதி எது என சாலையின் எண்ணுடன் குறிப்பிட்டுவிட்டால் அடுத்த இருபது நிமிடத்திற்குள்(அதிகபட்சமாக) ஆம்புலன்ஸ் அங்குவந்து விடும்...விபத்து நடந்து சில நிமிடங்களுக்குள் பாதிக்கப்பட்டவருக்கு முதலுதவி கிடைக்கபெருவதால் நிறைய உயிர்கள் காக்க பெரும்.


நேற்று தங்கைக்கு உடல்நிலை சரி இல்லை என்று சொன்னதால் அலுவலகத்தில் அனுமதி எடுத்து சீக்கிரமாக வீட்டிற்கு வந்துவிட்டேன்...இது மழை நேரமென்பதால் மருத்துவமனைகள் முழுவதும் நோயாளிகள்...கோடம்பாக்கத்தில் உள்ள இருபத்திநாலு மணிநேர சேவை மருத்துவமனைக்கு சென்ற பொழுது இன்றைக்கு பார்க்க வேண்டிய நோயாளிகளுக்கான டோக்கன் கொடுத்தாகிவிட்டது என்றார்கள்....இனி நாளைதான் பார்க்க முடியும் என்று வேறு தகவல்....இந்நகரத்தின் மக்கள் தொகை அதிகமாகிக் கொண்டே இருப்பதால் இங்கே அனைத்தும் வியாபாரமாகிவிட்டது...

வேறொரு மருத்துவமனைக்கு போனோம்....தங்கைக்கு காய்ச்சல் அதிகமாக இருந்ததால் மருத்துவமனையில் காத்திருக்கும் போது என் தோள்களில் சாய்ந்துகொண்டாள்....எங்களை கடந்து போன ஒரு நர்ஸ் எங்களை பார்த்து புன்னகைத்து டாக்டர் ரௌண்ட்ஸ் போயிருக்கார் இதோ வந்துவிடுவார் என்றார்...சொன்ன படியே டாக்டர் வந்தார்...மருந்து சீட்டு எழுதி கொடுத்து ஒரு ஊசி போட வேண்டும் என்றார்....எங்களை பார்த்து புன்னகைத்து போன அதே நர்ஸ் தான் ஊசி குத்தினார் தங்கைக்கு.... மருந்து சீட்டில் நோயாளியின் பெயரில் பெயர் எழுத மறந்து விட்டார் டாக்டர்....அந்த நர்ஸ் என் தங்கையிடம் பெயர் கேட்டு எழுதிக் கொடுத்தாள்.....முன்பகுதியில் இருக்கும் ரிசெப்சனில் பணம் கட்டும்படி கேட்டுகொண்டாள்.......ரிசெப்சனில் பணம்கட்டும்போது மருந்துசீட்டில் பெயர் பார்த்தால் திருமதி என்று விளித்து தங்கையின் பெயர் எழுதியிருந்தது....

வயதுக்கு வந்த ஆணும் பெண்ணும் இருந்தால், அவர்கள் காதலர்கள் அல்லது கணவன் மனைவி மட்டுமே என்ற கேடுகெட்ட கண்ணோட்டம் இந்த ஊரில் மட்டுமே பார்க்கமுடியும்......பெண் தோழிகளில் புது வரவு இது.....நெடு நாட்களாக அலைபேசியில் மட்டுமே பேசிகொண்டிருந்தோம்....நிழற்படங்கள் பரிமாறிக்கொண்டாலும் நேரில் பார்க்க வேண்டும் என்று நெடு நாளாக நினைத்துக் கொண்டிருந்தேன்....அந்த நாளும் வாய்த்தது. நேற்று முன்தினம் நுங்கம்பாக்கத்திலுள்ள அந்த பன்னாட்டு கம்பனியில் அவளை சந்தித்தேன்...தொலைபேசியில் பேசியிருந்ததால் நேரில் பார்க்கும் போது எவ்வித தடுமாற்றம் இல்லை....குறும்புத்தனமான பேச்சினால் அவளுடன் இருந்த அரைமணி நேரமும் அரை நொடி ஆகிவிட்டாள்....

நேற்று இரவு ஏனோ தூக்கம் வரவில்லை...அவளுக்கு அலைபேசினேன்....திடீரென்று அவளை பார்க்க வேண்டும் போல இருந்தது...சொன்னேன்...தைரியம் இருந்தால் வீடிற்கு வா என்றாள்...போர்டிகோவில் இரண்டு பெரிய வெளிநாட்டு நாய்கள் இருக்கின்றன என்ற எச்சரிக்கை மீறி புறப்பட்டேன்...புறநகரில் பணக்காரர்கள் வசிக்கும் பகுதி அது....

தெருக் கோடியில் வண்டியை நிறுத்திவிட்டு செருப்பை கழட்டி வண்டியின் டேன்க் பையில் வைத்துவிட்டு அவள் வீடு நோக்கி சென்றேன்....(மனதில் இருபது வயதில் ஒரு காதலிக்கு புத்தாண்டு வாழ்த்து சொல்லி முத்தமிட சுவறேரிய நியாபகம் வந்து போனது..) அவளின் வீட்டு சுவறேரிய பொழுது உயிர் என் கைகளில் இல்லை...அடுத்து நடக்க போகும் அத்தனை நிகழ்வுகளுக்கும், நிகழ்வாக ஆகாமல் (சமுதாயத்தின்)மனதில் ஆழத்தில் உள்ள ஆபாசமான கற்பனை எண்ணங்களும் ஹாய்சங்களாகி போனாலும் அதற்கும் சேர்த்து பொறுப்பேற்க வேண்டிய கட்டாயத்தில் நான்... இருபதுகளில் இருந்த தைரியம் முப்பதில் கொஞ்சம் குறைந்திருக்கிறது...ஆனாலும் மனதில் ஒரு குறுகுறுப்பு எனக்குள்...நாய்களுக்கு மட்டும் பயந்து கொண்டே உள்ளே குதித்தேன்....இரண்டு கார்கள் நான் இருந்த இடத்தில் நின்றதால்...நாய்கள் கார்களுக்கு அப்பால் படுத்திருந்தது....

அது பின்னிரவு பொழுது...அப்பொழுதும் விளக்கேரிகிரதென்றால் அது கண்டிப்பாக முதியவர்கள் வசிக்கும் அறையாய் இருக்காது என்ற என் கணிப்பு சரியாய் இருந்தது....அங்கே அவள்தான்...எனை பார்த்ததும் அதிர்வின் விளிம்பிற்கே சென்றுவிட்டாள்....விளயாட்டிர்க்குதான் சொன்னேன் என்றாள்....அறைக்குள் இருந்ததால் அவளை முத்தமிட முடியவில்லை....பறக்கும் முத்தங்கள் கொடுத்து விட்டு பறந்து வந்து விட்டேன் வீட்டிற்க்கு....ஆனாலும் சிறிய சறுக்கல் ஏற்பட்டிருந்தால், வாழ்வின் அடுத்த பகுதியில் கற்பழிப்பு முயற்சியிலோ....அல்லது திருட்டு குற்றத்திலோ உள்ளே சென்றிருப்பேன்...என்பது மூளைக்குள் இன்னும் பலமாக உரைத்துக்கொண்டே இருக்கிறது.

இனி இந்த மாதிரி காதல் விளையாட்டுக்கள் கூடாது என்று முடிவெடுத்து கொண்டேன்...!

12 கருத்துகள்:

காமராஜ் சொன்னது…

முதல் இரண்டும் எல்லோருக்குமான எதாத்தம்.கடைசி இளங்கன்றுகளின் சாகசங்கலுக்கான துணிச்சல்.

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ சொன்னது…

சிந்திக்க வைக்கிறது பதிவு . முதல் இரண்டும் நண்பர் காமராஜ் சொன்னது போல் எல்லோருக்குமான எதார்தங்கல்தான் . பகிர்வுக்கு நன்றி

லெமூரியன்... சொன்னது…

வாங்க காமராஜ் அண்ணா....!
ஒரு விபத்து நடக்கும்பொழுது எவ்வளவு வேகமாக சூழ்நிலையை கையாளுகிறோம்
என்பதை நேற்றுதான் தெரிந்துகொண்டேன்...!

:-) :-) :-) இளங்கன்றுக்கான துணிச்சலா???
ரொம்ப பயந்துவிட்டேன் உள்ளுக்குள்..!

லெமூரியன்... சொன்னது…

வாங்க பனித்துளி சங்கர்...!
முதல் வருகைக்கும் கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி தோழர்.

அஹமது இர்ஷாத் சொன்னது…

சிந்தனையை தூண்டும் பதிவு..நல்லாயிருக்கு..

ஹேமா சொன்னது…

எப்போதும் வாழ்வை ரசித்து விளையாடிபடிதான் நீங்கள்.வரும் விபத்துக்களையும் அபாயங்களையும் நேர்மையுடன் எதிர்த்து வரும் உங்களைப் பார்க்க ஒரு பிரமிப்புத்தான்.அது சரி....தங்கை சுகமாயிட்டாங்களா லெமூரியன் !

லெமூரியன்... சொன்னது…

வாங்க அஹமது...!
முதல் வருகைக்கும் கருத்திட்டமைக்கும் மிக்க நன்றிகள்..!

லெமூரியன்... சொன்னது…

வாங்க ஹேமா...!
தங்கை இப்போ நலமாகிவிட்டாள்.
ரசித்து விளையாட முற்பட்டால் தான் அதன் (வாழ்வின்) சுவை புரிகிறது ஹேமா...!
அதற்காக இந்த மாதிரி சிறுபிள்ளை தனமான விளையாட்டுக்கள் ஆடமாட்டேன்...!
இனிமேல்.

ஜோதிஜி சொன்னது…

ஒருவகையில் பார்த்தா பொறாமையா இருக்குய்யா.

மன்மத குஞ்சுன்னு பேரு வச்சுக்கலாமேன்னு தொடக்கம் முதல் இன்று வரைக்கும் பல பதிவுகள் உணர்த்துகிறது.

எத்தனை பேர் இத்தனை சுயமாய் தன்னை வெளிக்காட்டிக் கொள்ள தைரியம் வரும்?

ஜோதிஜி சொன்னது…

தொடக்கம் முதல் இன்று வரைக்கும் உங்கள் ஆழ்ந்த விமர்சனப் பார்வை என்னை தடுமாற வைத்துள்ளது.

ஆனால் வாழ்க்கையை எத்தனை எளிதாக எடுத்துக் கொண்டு வாழ் முடிகின்றது.

லெமூரியன்... சொன்னது…

வணக்கம் நண்பா(ஜோதிஜி)
:-) :-) :-)

அந்தளவிற்கு நான் பெரிய ஆள் இல்ல நண்பா(மன்மதகுஞ்சு ????? )
கொஞ்சம் ரசனையா வாழ ஆசை படறேன்...
வாழ்க்கை சக்கரமும் அதற்க்கேற்றார்போல சுழலுது...
அவ்ளோதான்..!
மறுமொழிக்கு மிக்க நன்றி தோழா....
வெகுவிரைவில் ஒரு இனிய பொழுதினில் நாம் சந்திக்கலாம் நண்பனே...

Po rasa சொன்னது…

pinnukku erukku pirattasi