திங்கள், 5 ஜூலை, 2010

பிரிந்து விடலாம் அம்மு ...!

எனக்கு மழை ரொம்ப பிடிக்கும்..! நான் மழை காதலன்...! பள்ளி பருவத்திலும் கல்லூரி காலத்திலும்...மழை வந்து விட்டால் சுத்தியிருப்பதேல்லாம் மறந்து நனைந்து ஆட்டம் போட்டு மகிழ்வேன்...! ஆனால் பின்பு பணிக்குச் செல்ல ஆரம்பித்த உடன் மழை காலங்களில் மழை ஏன் வருகிறது என்று யோசிக்க வைத்தது சென்னை நகரின் வடிகால் வசதி தன்மையும் போக்குவரத்து நெரிசலும்..! ஆனால் இன்று பெய்த மழையை மிகவும் ரசித்தேன்....உந்துருளியில் முழுவதும் நனைந்து கொண்டே வந்தேன்...! நினைவலையில் அம்முவுடன் கடற்கரையில் ஆடித் திரிந்த நினைவுகள் சிறிது போதயுட்டியது..!

அம்மு என்னை விட பத்து வயது இளையவள்..! அவள் சிறு பிள்ளையாக குட்டை பாவாடை அணிந்து ஒன்றாம் வகுப்புக்கு போகும்போது நான் பத்தாம் வகுப்பில் இருந்தேன்...அதன் பிறகு கால ஓட்டத்தில் அம்மு காணாமல் போனது....மறுபடியும் சென்னையில் சந்திக்கும்போது மிகவும் ஆச்சிரியமாக இருந்தது...பெண்கள்தான் எவ்வளவு வேகமாக வளர்ந்து விடுகிறார்கள்..! பொறியியல் பட்டம் பெற்று அதற்க்கு மேல் ஏதோ பட்டய படிப்பிற்காக சென்னை வந்திருந்தாள்...! அப்பொழுது அம்மு சில பிரச்சினைகளில் சிக்கியிருந்தது... தனித்திருந்த அம்முவிற்கு நான்தான் துணை..! சிறு குழந்தை என பழகினால் அம்மு என்னிடம் மிகுந்த முதிர்ச்சியான ஒரு உறவை கேட்டது...சில விஷயங்கள் நம்மால் உடனடியாக முடிவெடுக்க முடியாது...அப்படி முடிவெடுக்க முடியாமல் ஆரம்பித்தது தான் அம்முஉடன் நெருக்கமாக பழக நேரிட்டது..
பெண்களுடனான எனது மற்றைய உறவு போல் இதை நான் கருதவில்லை...ஏதோ ஒரு பிடிப்பு இந்த உறவில் இருப்பது போல் தோன்றினாலும் இந்த உறவு நெடிய உறவாக மாறுவதற்கு சாத்திய கூறுகள் அறவே அற்று போயிருந்தது...அம்மு மிகவும் உயர் சாதி என்னும் ஒரு பிரிவைச் சேர்ந்தது.....இதன் காரணமாகவே தான் காதலித்தவனை கரம் பிடிக்க முடியாமல் கடும் அழுத்தங்களுக்கிடையே சென்னையிலுள்ள சொந்தங்களின் வீடிற்கு அனுப்பப்பட்டதாக என்னிடம் சொல்லியிருக்கிறது...அந்த காதலன் கப்பலில் பணிபுரிபவன்...அவன் கப்பலேரிவிட்டான்...

நாங்கள் மிக நெருக்கம் ஆகியிருந்த கட்டம் அது...! அம்மு தன் வீட்டில் பேசி எப்படியாவது சம்மதிக்க வைக்கிறேன் என்றாள் என்னுடன் வாழ்வதற்காக...! நான் ஏதும் சொல்லவில்லை...! திடீரென ஹைதராபாத் வருமாறு வேலைக்கான அழைப்பு..! அம்மு நிறைய அழுதது..! பின்பு தன்னையும் சீக்கிரம் அங்கு அழைத்து செல்லுமாறும் கேட்டது..! படித்து முடி உனக்கும் அங்கேயே ஒரு வேலை வாங்கி விடலாம் என்று சொல்லி சென்றேன்...! தினந்தோறும் என்றிருந்த அலைபேசி அழைப்பு சில மாதங்களுக்கு பிறகு ஒரு வாரம் அணைக்கப்பட்டு விட்டது....ஏதோ பிரச்சினை என துடித்து போயிருந்தேன்... ஒரு வாரம் கழித்து அழைத்த போது அம்மு வெகுநேரம் அழுதது....

அழுது முடிக்கும் மட்டும் விட்டு பின்பு கேட்டேன்..என்ன பிரச்சினை என்று??? என்னை மன்னிப்பாயா ?? என்று திரும்ப திரும்ப கேட்டது??? ஏதோ பெரிய விஷயம் நடந்தேறியிருக்க வேண்டும் என்று மனது சொல்லியது. சரி என்றேன். என்னுடம் பேச்சை நிறுத்த கூடாது என்று சத்தியம் கேட்டது, செய்தேன். கப்பலேறிய அந்த காதலனின் கப்பல் சென்னை துறைமுகம் வந்திருந்ததேனவும் எல்லாம் மறந்து ஒரே ஒரு முறை எனது பழைய காதலி வேண்டும் என்று அவன் கேட்டதாக சொன்னது...
ஒரு நாள் முழுவதும் அவனுடன் தங்கியிருந்ததாக சொன்னது..! எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை....உண்மையான காதலுக்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்று எப்பொழுதோ நான் சொன்ன எடுத்துகாட்டை மேற்கோள் காட்டியது.

அடுத்த சில நாட்களில் நிகழ்வுகள் வேகமாக நடந்தேறியது...அம்முவுடைய காதலன் அவள் வீட்டில் போய் மறுபடியும் பெண் கேட்க ....இம்முறை ஒத்து கொண்டார்கள்..!
அம்முவிற்கு அந்த பையனுடன் இன்னும் ஆறு மாதங்களில் மணம் நடக்க போகிறது. அம்மு நாளையுடன் சென்னை நகரை விட்டு சொந்த ஊர் செல்கிறது...!சென்னைக்கு மாற்றல் வாங்கி வந்து பத்து நாட்களே ஆகின்றன....வேலை பளு காரணமாக அம்முவை பார்க்க இயலவில்லை இந்த பத்து நாட்களில்......கடைசியாக ஒரு முறை பார்க்க வேண்டும் என்றது...அதுதான் இன்னைக்கு மழையில் நனைய ரொம்ப பிடித்து போனது...ஏனோ எவ்வித மனநிலையையும் மழை அடித்து சென்றுவிடும்...!

சந்தித்தேன் அம்முவை, சிறிது நேரம் பேசி கொண்டிருந்தோம்...ஏனோ பேசிய விஷயங்கள் அனைத்தும் மனதிற் ஒட்டாமல் சம்ப்ரதாயதிர்க்கு பேசியது போலிருந்தது கிளம்பும் நேரம், வாழ்த்துக்கள் என்று கை கொடுத்தேன்....தொட மறுத்து விட்டது அம்மு....வேண்டாம் என்றது. வாழ்த்துக்கள் என்று சொல்லி பிரியும் போது அம்முவின் கண்கள் பார்த்தேன்...கொஞ்சம் கலங்கி போயிருந்தது...! அந்த பிரபலமான காபிக் கடையில் கொஞ்சம் இனிப்புகள் வாங்கிகொடுத்து இனிய பிரிவாக மாற்றினேன்...!

இவ்வளவு இலகுவான ஒரு பிரிவை சந்திப்பது முதல் முறை எனக்கு... சிறிய குறுநகை... மற்றும் வார்த்தைகளற்ற உணர்வு பரிமாற்றம்(கண்களால்)..


ஆட்டோவில் ஏறியதும் என்னை பார்த்து தலையசைத்தது அம்மு... அம்மு சென்ற பிறகு, எனது உந்துருளியை எடுப்பதற்கு செல்லும்வழியில் அலைபேசியை எத்தோச்சையாக எடுத்து பார்த்த பொழுது பதினாறு எடுக்கப்படாத அழைப்புகள் இருப்பதை கண்டு எடுத்து யாரென்று பார்த்தால்...ஷைலு புஜ்ஜி என அழைப்புக்கு பெயர் சொன்னது எனது அலைபேசி...! ஷைலு ஹைதராபாத்தில் உள்ள ஒரு சர்வதேச பள்ளியில் பதினோராம் வகுப்பு மாணவி...! என்னுடனான இந்த உறவிற்கு அவள் வைத்திருக்கும் பெயர் - காதல்....!

14 கருத்துகள்:

காமராஜ் சொன்னது…

அழுத்தமான விஷயம் இன்னும் கூட அதிகம் சொல்லியிருக்கலாமோ என்று தேடுகிறது. மழைக்காதாலா. வாழ்த்துக்கள்.

லெமூரியன்... சொன்னது…

வணக்கம் காமராஜ் அண்ணா...!
நேற்று இருந்த மனநிலையில் இன்னும் அழுத்தமாகவே வந்திருந்தது...
படிக்கும் மனநிலையை பொருத்து ஒருசிலருக்கு அது கொச்சையாக தெரியுமோ என்று நிறைய வரிகளை நீக்கிவிட்டேன்..!

ஹேமா சொன்னது…

மனசை அழுத்தும் நிகழ்வை மழையில் கரையவிட்டு மனப்பாரத்தையும் குறைத்திருக்கிறீர்கள் லெமூரியன்.
உங்களுக்குச் சொல்ல வார்த்தைகள் என்னிடம் இல்லை !சோகத்தையும் சுகமாக்கும் மனிதர் நீங்கள் !

லெமூரியன்... சொன்னது…

வாங்க ஹேமா...இது வேறு மாதிரி முடியும் என்று ஏற்க்கனெவே தெரிந்திருந்தது...ஆனால் இப்படி ஒரு வகையில் முடியும் என்று நினைக்கவில்லை.....கொஞ்சம் கஷ்டமா இருந்தது...ஆனா அப்புறம் ஒன்னும் தெரியல....!

பெயரில்லா சொன்னது…

u really hurt me

SIVA சொன்னது…

நடை நன்னாயிருக்கு..நல்ல flow..

keep it up....

லெமூரியன்... சொன்னது…

நன்றி பெயர் சொல்லா தோழனே...!
எனக்கும் நிறைய வலி இருந்தது...ஆனால் கடந்து போவது மட்டுமே என்னால் முடிந்தது...

லெமூரியன்... சொன்னது…

நன்றி சிவா...!
வருகைக்கும் உங்கள் கருத்தை பதிவு செய்ததற்கும்...!

செ.சரவணக்குமார் சொன்னது…

நண்பரே முதல் முறையாக உங்கள் தளம் வருகிறேன்.

பதிவை வாசித்ததும் மனம் கனத்துப்போனது. ஒரு மழை நாளில் ஏற்பட்ட பிரிவை எத்தனை அருமையாக சொல்லியிருக்கிறீர்கள்.

கவலைப்படாதீர்கள், இதுவும் கடந்துபோகும்.

நிறைய எழுதுங்கள் நண்பா.

லெமூரியன்... சொன்னது…

முதல் வருகைக்கு மிக்க நன்றி தோழர் சரவணா குமார்...!
கண்டிப்பாக.....! கடந்து போவது ஒன்றே வழி..
கடந்து கொண்டிருக்கிறேன்....!
கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி தோழர்.

ஆடுமாடு சொன்னது…

இதுவும் கடந்துபோகும்.

இதைமட்டும்தான் சொல்ல முடிகிறது என்னாலும்.

ஜோதிஜி சொன்னது…

உங்கள் தளம் இப்போது பார்க்கும் வடிவமைப்பு அத்தனையும் ஆச்சரியமாய் இருக்கிறது. நல்ல முன்னேற்றம்.

லெமூரியன்... சொன்னது…

வணக்கம் தோழர்(ஆடுமாடு)
முதல் வருகைக்கும் கருத்திட்டமைக்கும் மிக்க நன்றி...!

லெமூரியன்... சொன்னது…

வாங்க ஜோதிஜி....!
ரொம்ப நாளைக்கப்றம் வந்திருக்கிறீர்கள்..! :-)
நன்றி தோழரே...!