ஞாயிறு, 8 ஆகஸ்ட், 2010

ஒரு கொலை முயற்சியும் அதன் நீட்சியும்......

உடல்கள் மற்றும் உணர்வுகள் பரிமாறிக் கொண்டதால்...காதலின் நீட்சிமை குறித்து கவலை கொண்டதில்லை அப்பொழுது...!
அந்த இருப்பதி நான்கு வயதில் எதையும் சாதித்து விடும் மனநிலையில் மட்டும் நான்....சமூக கட்டுபாடுகள் அனைத்தும் ஒரு கனவாக மட்டுமே என் முன்னே..
பொருட் தேவைகளின் எதார்த்தம் அறியாமல்..பணத் தேவைகளின் பிரதானம் புரியாமல்..
ஆனால் தமிழ் திரை கதை நாயகன் போலவே...காதலுக்கு மரியாதை செய்வதற்காக எதையும் செய்து பார்க்க துடிக்கும் ஒரே மன நிலை மட்டும் அப்பொழுது மனதில்...

இருபத்தி நான்கு வயதில் தமிழகத்தில் ஒரு சாதாரண பொறியியர்க் கல்லூரியில் பயின்ற மாணவனால் எட்டக் கூடிய சம்பளமே என்னால் எட்ட முடிந்தது...
ஆனால் பணக்கார காதலி மற்றும் பணத்தால் மிதக்க கூடிய சம்பளமுடன் ஒரு பதவியில் இருப்பவள்...எனக்கு வாய்த்ததனால் முளைத்தது பிரச்சினை...
தமிழ் திரைப் படம் போலவே...மொழி ஜாதி மற்றும் அந்தஸ்த்து மற்றும் பிராந்திய வேறுபாடு காரணங்களாக...........

அவளுடைய தந்தை மிகவும் விவரமானவர் போல....பையன் ஒரு ஐந்து லகரம் வருட வருமானமாக வாங்கட்டும்...பிறகு பார்க்கலாம் என்று தூண்டிலையும் கொடுத்து மீன்கள் இல்லா நீர்ப் பரப்பையும் கை காட்டி விட்டார்...அவளின் வருட வருமானம் ஐந்து லகரத்தை தொட்டு விட்டது அப்பொழுதே....
காதல் என்பது எந்த வித கட்டுபாடுகளும், வாழ்வியலின் தேவைகளும் பிடிபடாமலும் புரியாமலும் போய்க் கொண்டிருந்த வேளையில்...வீசப் பட்ட அணு குண்டு இது....

கணினி பொறியியல் படிக்காமல் இயந்திரவியல் பொறியியல் படித்து வயிறெரிந்து கொண்டிருந்த வேளையது.....
திடீரென ஐந்து லகர சம்பளத்திற்கு எங்கு போவது...பல பெண்களை கடந்து வந்தாலும் முதன்முறையாக வாழ்க்கை முழுவதும் உடன்வர ஓருயிர் இவள்தான் என்று முடிவு செய்திருந்ததால்...எக்காரணத்தையும் கொண்டு இழக்க விரும்பவில்லை அவளுடன் கொண்ட காதலை...

எனக்கும் அவளுக்கும் நடுவில் தொள்ளாயிரம் மைல்கள்..!(வசிப்பிடங்களின் தூர வித்தியாசம்) .....
எக்காரணத்தையும் கொண்டும் அவனை நீ சந்திக்க கூடாது....அவனிடம் கேள் அவனுக்கு எவ்வளவு நாட்கள் அல்லது மாதங்கள் தேவைப்படும் என்று....ஆனால் உன்னை விட ஒரு ரூபாயாவது அவன் அதிகம் சம்பாதிக்க வேண்டும் என்று கேட்டு சத்தியம் வாங்கிக் கொண்டார் அவளின் தந்தை...

பார்க்க வருகிறேன் ஒரு முறை மனம் விட்டு பேசிவிடலாம்...சாத்தியக் கூறுகளின் அளவீடுகலயாவது அளக்க இந்த பேச்சு உதவும் என்று மன்றாடிய பொழுது ...கதறி அழுகிறாள்...தந்தையின் வாக்கை மீற முடியாதென்று....
சினம் கொண்டவளாக சீறுகிறாள் என் மீது...உனக்காக என் ஒட்டு மொத்த குடும்பத்தை எதிர்த்து நிற்கிறேன்....உன்னால் ஒரு நல்ல வேலை கிடைக்க எடுக்கும் முயற்சியை காட்டிலும் என்னை சந்திக்க மட்டுமே குறியாய் நிற்கிறாய்.....சதை வெறி பிடித்தவன் நீ என்றாள்....

எங்கு போவது யாரை பார்ப்பது...எவ்வாறு அத்தகைய சம்பளத்தை எட்ட முடியும் என்று எதுவுமே புரியவில்லை...யாரை பார்த்தாலும் பயம் தோன்ற ஆரம்பித்தது....எதை பார்த்தாலும் பயம்...வாழ்வில் எதற்கும் லாயக்கற்றவன் என்று எனக்கு நானே முடிவு செய்து கொள்ளலானேன்.....

நியூ யோர்க்கில் வசிக்கும் இதய சிறப்பு மருத்துவரான அவளின் முறைப்பையன் அவளை சந்திக்க வைக்க அவளின் தந்தை முயற்சித்து கொண்டிருந்தார்...ஒருபக்கம் இவளுக்கும் நிறைய அறிவுரை வழங்கப்பட்டு கொண்டிருந்தது அவளின் ஒட்டு மொத்த குடும்பத்தாரிடமிருந்து...

நாட்கள் ஓடிக் கொண்டே இருந்தது....மனதளவில் தோற்று போயிருந்ததால் நிறைய நேர்முக தேர்வுகளில் இறுதிக் கட்டத்தில் தோல்வியுற்று வெளியேறினேன்....
என் தேவதையும் யதார்த்தம் புரிந்து கொள்ள பழகியிருந்தாள்....

பின்புதான் ஒரு நாள் அவளை சந்தித்தேன் நேரில்( பழைய பதிவொன்றில் அதை பகிர்ந்திருக்கிறேன்)
அவள் என்னவள் இல்லை என்று தெரிந்த நொடி நொறுங்கித்தான் போனேன்...அன்று இரவு முழுவதும் குடித்து கொண்டே அழுது கொண்டிருந்தேன் தனியாக ............

கருத்துகள் இல்லை: