செவ்வாய், 8 டிசம்பர், 2009

நிழற்பெண்..

இணையத்தில் இனிதான தொடக்கம் நமது
நட்பு
முகம் கானா உறவில் தோன்றும் அதே குறுகுறுப்பு இங்கும்

உன்னுடைய சக தோழர்களில் ஒருவனாகவே என்னை பார்க்கிறாய்
எனக்கோ
கிடைப்பதற் அறிய நட்பு கிடைத்தது போல்

உனக்கான உன் நேரங்களை உணதனுமதியின்றி
எடுக்கிறேன்
உனது சுதந்திரம் பறிபோகும் என்பதனையரியாமல்

எனக்கென ஒரு தனியிடம் உன் மனதில் உண்டென
எண்ணத்துடன் நான்
இனைய நட்பு இணையத்தோடு மட்டுமே இது நீ

தவிப்புடன் மின் மடல் இடுகிறேன்..பதிலனுப்பாமல்
நிராகரிக்கிறாய்
சிறிய இடைவெளி கலந்த உறவுகளே மெருகேறும் என்று எனக்குனர்த்தவா???


குறிப்பு: இது கவிதைன்னு நானே நினைக்கல....அதனால படிச்சிட்டு பிடிச்சா தட்டி குடுங்க....பிடிக்கலேன்னா ரெண்டு குத்து விடுங்க....! :-) :-) :-)

13 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

லெமூரியன்,இது கவிதையின் சாயல்.
இதையே இன்னும் அழகாக்கலாம்.
ஆனாலும் உங்கள் உள்ளுணர்வு.
இதுதான் கவிதையின் ஆரம்பம்.
இனி அசத்தலாம்.வாழ்த்துக்கள்.

லெமூரியன்... சொன்னது…

ஐ...! ஆறுதலான முதல் மறுமொழி..! :-) :-)

நன்றி ஹேமா..! :-) :-)

அப்போ நானும் கவிஞன் ஆகலாம்னு சொல்றீங்க?? :-)
ஆர்வத்தோட முயற்சிக்கிறேன் இனிமே...!

angel சொன்னது…

nan eluthura (kirukra) thaye kavithainu soldren

neenga nala thane eluthirukinga ithu kavithai than

Chitra சொன்னது…

feelingsu ட டோய்! இப்படிதான், கவிதைகள் உருவாகுது. தொடர்ந்து எழுதுங்க, நம்ம ஊர்க்காரரே.

லெமூரியன்... சொன்னது…

அய்யோ....என்ஜெலின்.......எனக்கு ஆனந்த கண்ணீரா வருதுப்பா.! :-) :-) :-)

இந்த கிறுக்கல்களை படிச்சிட்டு அதுக்கு மறுமொழி இட்டதுக்கு ரொம்ப நன்றி எஞ்சேலி.! :-) :-)

அதவிட இது கவிதைன்னு ஆணித்தரமா அடிச்சி (நான் எங்க அப்டிலாம் சொன்னேன்னு நீங்க கேக்றது என் காதுக்கு மட்டுமே கேக்குது..! :-( ) சொன்னதுக்காக இன்னொரு முறை நன்றி....!

லெமூரியன்... சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
லெமூரியன்... சொன்னது…

ஐ...! எங்க ஊரு பொண்ணு...! ஐ எங்க ஊரு பொண்ணு.! :-) :-) :-)

ஆமா சித்ரா..ஒரே பீலிங்க்ஸ்பா......! :-) :-)

நீங்கல்லாம் இருக்குறீங்கக்ரா ஒரே தைரியத்துலதான் நான் களத்துக்கு வர்றேன்.! :-) :-)

வெற்றி திலகமிட்டு வாழ்த்து கூறுங்க...! :-)

க. தங்கமணி பிரபு சொன்னது…

வணக்கம், இப்பதான் உங்க வலைப்பூவை ஒரு வட்டமடித்தேன்! நல்லாயிருக்கு!

என் கருத்து: தொடர்ந்து எழுதிகிட்டேயிருந்ந்தா உங்க எழுத்து பிரமாதமாயிடும் ஏன்னா நீங்க தொடற விஷயமெல்லாம் அப்படியானது!

பல சமாச்சாரங்கள் ஒட்டியபடிக்கு வந்து விழும் கன்றுகுட்டி, சிலநாட்கள்ல அந்த சமாச்சாரமெல்லாம் உதிர்ந்து, ஒரு மாதிரி மினுமினுப்பு வந்து அப்புறம் சிலநாட்கள்ல அருமையான காளையாகவோ, அழகான பசுவாகவோ மாறும் பாருங்க, அந்த மாதிரி! சில வார்தைகள். விஷயங்கள் முன்ன பின்ன மாறுனா இன்னும் நல்லாயிருக்குன்னு தோனுது, அது சொல்லி வர்றதில்ல, தானா நடக்கும் பாருங்களேன்! ஆனா எழுதிகிட்டேயிருக்கனும், உங்க எழுத்து அழக பார்த்து நீங்களே சந்தோஷப்படுவீங்க!

இப்போதைக்கு விமர்சனத்தை பத்தியெல்லாம் கவலைப்படாதீங்க, அதை எதிர்பார்த்து எழுதாதீங்க(மொய் வச்சு மொய் வாங்கற வலைப்பூ குலவழக்கத்தை கொஞ்சநாள் பின்பற்றுங்க! அப்பாலிக்கா பட்டம்பூச்சியா படபடத்து பருந்து மாதிரி சிறகடிச்சு கலக்கிடுவீங்க!! சோசியம் கிடையாது - மெய்!!) சும்மா மிரட்டுங்க!!

லெமூரியன்... சொன்னது…

வணக்கம் தங்கமணி சார்....!
நன்றி சார் என் வலைப்பூவை வட்டமிட்டு மறுமொழி இட்டதுக்கு........
கண்டிப்பா சார்.........நீங்க சொல்றத நான் கடைபிடிக்கிறேன்........

\\இப்போதைக்கு விமர்சனத்தை பத்தியெல்லாம் கவலைப்படாதீங்க, அதை எதிர்பார்த்து எழுதாதீங்க.......//

கண்டிப்பா இல்ல சார்......மனசுல உள்ளத இறக்கி வெய்க்க ஒரு இடம் வேணுமே....அதுதான் இந்த வலைபூ என்ன பொருத்தவரைக்கும்...

என்றும் உங்கள் அன்பும் ஆதரவும் வேண்டும்..
லெமூரியன்..!

நினைவுகளுடன் -நிகே- சொன்னது…

வாழ்த்துக்கள்
அழகிய தமிழில் அழகான வரிகள்
ஒரு வசன கவிதை படித்த உணர்வு ...
தொடர்ந்து வளர வாழ்த்துக்கள் .

லெமூரியன்... சொன்னது…

வாங்க நிகே...
ரொம்ப நன்றி நிகே மறு மொழி இட்டதுக்கு...
சந்தோசமா இருக்கு சும்மா ஒரு முயற்சிக்கு நீங்க எல்லாரும் தர்ற ஆதரவு :-) :-)

சிங்கக்குட்டி சொன்னது…

இது கவிதையா, இல்லை கவிதை மாதிரி இடுகையா ?

மிக அருமையாக இருக்கிறது.

லெமூரியன்... சொன்னது…

தெரியலையே சிங்க குட்டி.........தெரியலையே.......
(நாயகன் கமல் மாதிரி பீல் பண்ண வெச்சிட்டீங்களே. :-) :-) )

நல்லா இருக்குனு வேற சொல்லிடீங்க.
நன்றி சிங்கக்குட்டி...

அன்புடன்,
புலிக்குட்டி :-) :-)