ஞாயிறு, 13 டிசம்பர், 2009

வரையறைக்குள் வாராத கவிதைகள்????

காலி மது கோப்பைகளும், சுவைத்தது போக மீதங்களுடன் கங்காக கனன்று கொண்டிருக்கும் கஞ்சாவும்......என் அறையில் தனியாக நான்....இதை தனிமை என்று நான் நினைக்கவில்லை.......மதுவும், சிவ பானமும்(கஞ்சா) என்னை அந்த சூழ்நிலையை ரம்மியமாக அனுபவிக்க கற்று கொடுத்திருக்கின்றது.......இதன் காரணமாகவே அலுவலகங்களில் வார இறுதியில் நடக்கும் கேளிக்கை விருந்தில் பங்கேற்க மாட்டேன் ஹைதராபாத் போன புதிதில்..

கொச்சியில் இருந்து அறுபது கிலோமீட்டர் தொலைவில் சொராய் கடற்க்கரை விடுதியில் ஆடைகளற்று நாங்கள் -நான், அவள். என் மார்பில் முகம் புதைத்த வாறு அவள்...
நெஞ்சில முடி இருந்த எனக்கு ரொம்ப பிடிக்கும்டா....உனக்கு ஏன் இல்லை???
கேரளா பெண்கள் தமிழ் பேசுவது தேவதைகள் நேரிலே வந்து பேசுவது போலிருக்கும்.இவள் பார்க்கவே தேவதை போலிருப்பாள்.பேசுவதும் அப்படியே... ஒரு நண்பியின் மூலம் அறிமுகம் இவள்...ஜிஷா என்றால் தேவதையின் குழந்தை என்று அர்தம் சொல்வாள்....உண்மையாகவே இருக்க வேண்டும்...ஆனால் தான் பேரழகி என்பதில் மிக அதிக கர்வம் கொள்வாள்....
பால்ய வயதில் தேவதைகளை துரத்தியலைந்ததால் அந்த கர்வம் எனக்கு இயல்பாகவே பட்டது......
விடை பெரும் தருவாயில் நேரிலோ அல்லது தொலை பேசியிலோ நான் கொடுக்கும் முத்தத்தை சிலாகித்து கொண்டாடுவாள்......
நீ ஒரு மந்திரவாதி என்பாள்.........
நான் - ஏன் ??
ஆயிரம் மைல்கப்பால் இருந்து கொடுக்கும் முத்தம் இவ்வளவு வேதியல் மாற்றங்களை உடலில் செய்ய முடியுமா என்பாள்.......
பெரிமிதமாய் உணர்ந்த பொழுதுகள் அவை.......
முத்தங்களுக்கும் அகராதி வைத்திருந்தாள் அவள்.....நெற்றியில் இட்டால் முயல் முத்தம்..கன்னத்தில் இட்டால் மான் முத்தம்.......காமத்தின் ஆரம்பமாக சூடேறிய மூச்சு காற்றுடன் முன் கழுத்தில் இடும் முத்தத்திற்கு புலி முத்தம்....
எதிர்பாரா தருணத்தில் அவள் உதடு பிரித்து கடித்து சுவைக்கும் முத்தத்திற்கு கொக்காயி முத்தம் என்பாள் ............(கொக்காயி- பேய் என்று அர்த்தமாம் மலையாளத்தில்)

இதுதான் காதல் என்று உணர்ந்து அந்த உணர்வைக் கண்டு ஆச்சரியமுற்ற தருணங்கள், பொழுதுகள் அவை......உனது காலை சுற்றி வரும் பூனைக்குட்டி நான் என்று அவள் சொல்லும்போதெல்லாம் ..காதல் மீறி என்னுள் அகங்காரம் பெரும் ஆண்மையை ரசித்தேன்.......

மற்ற சராசரி காதலனை போல கட்டளைகள் இடும் காதலனாக நான் இருக்கவில்லை...அப்படி இருக்க விரும்பவும் இல்லை....அவள் அவளாகவே தான் இருந்தாள்..நான் நானாக.........
காதலர் தினத்தில் அவள் அலுவலக காபினில் குவியும் வாழ்த்து அட்டைகளையும் காதல் தூது தாங்கி வரும் பூங்கொத்துக்களையும் கணக்கெடுத்து கர்வத்துடன் தெரிவிப்பாள் என்னிடம்.......
தேவதைகளை அடைய சாத்தான்கள் சண்டை போடும் எப்போதும் என்பேன்..........நீ கொடுத்து வைத்தவன் என்பாள்......

அன்பின் ஊடாக வீசும் மாய அடிமை வலையோ இது வென்று யோசிக்க வைத்த நிகழ்வுகள் அது...

மாற்றங்கள் தென்பட்டன அவளிடம்...நாட்கள் மாதங்களாகி வருடமான பொழுது....பார்க்காமல் பேசாமல் இருந்தால் மரணம் தொடுவேன் என்று மிரட்டியவள் , மறந்து போனாளோ அவள் மிரட்டலையே???
எனக்கும் அவளுக்கும் இடையில் ஒரே ஒருவன் மட்டுமே.அது அவளுடைய நண்பன் விஜய்.....எங்களுக்குள்ளான சில ஊடல் பொழுதுகளில் சமரச படுத்தியவன் அவன்...
தொலை பேசியிலும் மின் மடல்களிலும் பதிலற்ற நிராகரிப்பு மட்டுமே பதிலாக கிடைக்க...நேரில் கொச்சி சென்றேன்....
தானே தனது காரை ஒட்டிக் கொண்டு மரைன் டிரைவ் வந்தாள்...
கண்கள் பார்க்காமல் பேசினாள்.....சிறிது நேரங்கழித்து இன்னொரு காரில் வந்த ஒருவன் ஹாய் சொல்லியபடி எங்களை நோக்கி......
தன்னுடைய ப்ராஜெக்ட் மேனேஜர் புருஷோத்தமன் என்று அறிமுகம் செய்தாள்.... என் கண்கள் பார்த்து அவனிடம் காதல் வயபட்டிருப்பதாக சொன்னாள்
நீ வேசி மகள் என்றேன் சப்தமாக.....கிளம்பி சென்று விட்டாள்...கொலை செய்ய வேண்டும் போலிருந்தது அவளை..கொடூரமாக ஏமாற்ற பட்டதை போல் உணர்ந்தேன்....
வலி தாங்கி, மாற்றம் வந்து நான் ஹைதராபாத் சென்று விட்டேன்...(முதற் பத்தியை மறுபடியும் ஒரு முறை படித்து பாருங்கள் ) ஆறிய தழும்பாக இந்நினைவுகள்....யோசிக்க வைக்கும் சில சமயம்....
பிடிக்கவில்லை என்று கணவனும் மனைவியும் பிரிந்து செல்லும்போது.......வேறு காதல் தோன்றியிருக்கிறது என்று நேரிடையாக கேட்ட அவளை இந்தளவிற்கு வெறுக்க எது என்னை தூண்டியது என்று ......
எனக்கு மட்டுமே என்று சொந்தம் கொண்டாட அவள் உயிரற்ற பொருள் இல்லை.....ரத்தமும் சதையும் பூட்டிய உயிர் அவள்....காதல் என்பதற்கு வெளிப்படையான மற்றும் மாற்று கருத்துக்களை விதைத்து சென்றவள் அவள்.....





இப்பொழுதும் கடற்கரை.....சென்னையில்....தோள்களில் சாய்ந்தபடிக்கு இருக்கும் பிரபா....
அடுத்த வாரம் காரைக்குடி போறேன் -அவள்
இப்போதானே அப்பாவ அம்மாவையும் பாத்துட்டு வந்தே.....அதுக்குள்ள என்ன??? - நான்

என்னை பெண் பார்க்க வருகிறார்கள் என்றாள்....
என்னை கல்யாணம் செஞ்சிக்கொயேன் என்றதற்கு .பலமாக சிரித்தாள்.......
உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்டா..ஆனா எங்க வீட்ல உள்ளவங்களுக்கு எங்க ஜாதி மட்டும் தாண்டா பிடிக்கும் என்றாள்....

இறுக்கி அனைத்து அவள் உதடுகளை கவ்விக் கொள்கிறேன்....

17 கருத்துகள்:

Chitra சொன்னது…

யப்பாடி............. லெமூரியன்............ என்ன சாரே? எப்படி இருக்குறீங்க?

லெமூரியன்... சொன்னது…

:-) :-) வாங்க சித்ரா....
நல்லா இருக்கேன்.! :-)
வருகைக்கும் நல விசாரிப்புக்கும் மிக்க நன்றி...!

:-) :-) :-) :-)

புலவன் புலிகேசி சொன்னது…

//உன்னை எனக்கு ரொம்ப பிடிக்கும்டா..ஆனா எங்க வீட்ல உள்ளவங்களுக்கு எங்க ஜாதி மட்டும் தாண்டா பிடிக்கும் என்றாள்....//

ஜாதி வெறி இருக்கத்தான் செய்கிறது..ஆமாம் இந்த கவிதையில் வரும் வரிகளில் உள்ள உறவுக்கு என்ன பெயர்????

லெமூரியன்... சொன்னது…

\\ஆமாம் இந்த கவிதையில் வரும் வரிகளில் உள்ள உறவுக்கு என்ன பெயர்????........//

நிச்சயமாக வரையறைக்குள் வராத ஒரு உறவினை சுட்டும் பெயர்தான் புலவரே...!

லெமூரியன்... சொன்னது…

வாங்க புலவரே.......!
வருகைக்கும் மறுமொழிக்கும் மிக்க நன்றி...!
:-)

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

ஆழ்மனம் வரை காதல் வசனங்கள் பதிகிறது முத்த விளக்கங்கள் அசத்தல்

ஆம் அது ஏன் புலி முத்தம் கொக்காயி முத்தம்?

லெமூரியன்... சொன்னது…

ஆஹா......வாங்க வசந்த்...!
வருகைக்கும் மறுமொழிக்கும் மிக்க நன்றி....!

\\ஆம் அது ஏன் புலி முத்தம் கொக்காயி முத்தம்?...//
புலி முத்தம்- சற்று மிருகத்தனம்(Wildness) கொண்ட முத்தம் அது :-)
கொக்காயி முத்தம்- ஆக்ரோஷம் நிறைந்த முத்தம் அது..! :-)

ஹேமா சொன்னது…

பாரங்களை விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொள்வதுதான் மனிதமனம்.அதேபாரத்தைக் காட்டிக்கொள்ளாமல் எவ்வளவு இயல்பாய் சொல்லமுடிகிறது உங்களால் !

அன்புடன் மலிக்கா சொன்னது…

சிறு பிழைகளிருக்கு அதை சரி செய்துவிடுங்க லெமூரியன்..

நல்லாயிருக்கு..

லெமூரியன்... சொன்னது…

வாங்க ஹேமா........நல்வரவு....!

\\அதேபாரத்தைக் காட்டிக்கொள்ளாமல் எவ்வளவு இயல்பாய் சொல்லமுடிகிறது உங்களால் !.......//
யதார்த்தம் புரியும்போது ஓரளவிற்கு கொஞ்சம் பக்குவம் கிடைக்கும்னு நினைக்கிறேன் ஹேமா.....

வருகைக்கும் மறுமொழிக்கும் மிக்க நன்றி ஹேமா..!

லெமூரியன்... சொன்னது…

\\சிறு பிழைகளிருக்கு அதை சரி செய்துவிடுங்க..........//

அப்படியா..?? நீங்க சொன்ன சரியாய் இருக்கும் மலிக்கா, கண்டிப்பா பிழைகள் திருத்தப்படும்...!

வருகைக்கு மறுமொழிக்கும் ரொம்ப நன்றி மலிக்கா...!

நினைவுகளுடன் -நிகே- சொன்னது…

நன்றாக இருக்கிறது
வாழ்த்துக்கள்

பூங்குன்றன்.வே சொன்னது…

நன்றாக உள்ளது பாஸ் இடுகை.

லெமூரியன்... சொன்னது…

வாங்க நிகே..!
வரவுக்கும் மறுமொழிக்கும் மிக்க நன்றி...!

லெமூரியன்... சொன்னது…

வாங்க பூங்குன்றன்..........பெயர் அருமையா இருக்குங்க...!

உங்கள் வரவுக்கும் மறுமொழிக்கும் மிக்க நன்றி பூங்குன்றன்..!

ஜோதிஜி சொன்னது…

உரைநடை கவிதை, உள்ளார்ந்த கவிதை, உசுப்பும் கவிதை, உணர்த்திய கவிதை என்று எத்தனையோ தாண்டி வந்தாலும் இந்த மொத்தமும் உண்டான வரிகள் இன்னும் எத்தனை நாளைக்கு என்னுள் இருந்த இம்சிக்குமோ என்று தெரியவில்லை.

இருபது வருடங்களுக்கு முன்னால் பாலகுமாரன் வாசித்த போது உண்ர்ந்த கிளர்ச்சி.

பட் உங்க நேர்மை எனக்கு புடுச்சுருக்கு,

லெமூரியன்... சொன்னது…

வணக்கம் ஜோதிஜி..!
மறுமொழிக்கு மிக்க நன்றி...!

\\இருபது வருடங்களுக்கு முன்னால் பாலகுமாரன் வாசித்த போது உண்ர்ந்த கிளர்ச்சி....//

அப்போ அவரும் ரொம்ப அடி(தோல்வி) வாங்கி வந்திருப்பாரோ??? :-) :-)