செவ்வாய், 8 டிசம்பர், 2009

பணக்கார ஜனநாயகம்...!

நக்சலைட்டுகள் இந்திய பொருளாதார முன்னேற்றத்திற்கு மிக பெரிய முட்டுகட்டைகள்...ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை அற்றவர்கள்....அவர்கள் பயங்கரவாதிகளுக்கு நிகரானவர்கள்......இப்படி எல்லாம் சொல்வது பாரத பிரதமர் மன்மோகன் சிங்கும், உள்துறை அமைச்சர் பா.சிதம்பரமும். இந்த கருத்துக்களுக்கு பெரும்பான்மையான வட இந்திய ஊடகங்கள் எண்ணெய் ஊற்றுகின்றன.

நக்சலைட்டுகள் யார். எப்படி அவர்கள் உருவானார்கள். என்ன காரணத்திற்க்காக ஆயுதம் ஏந்தினார்கள். பிரச்னை இதுதான்.முன் சொன்ன கேள்விகளுக்கு ஒரு தெளிவான பதில் அரசிடமும் இல்லை...இறையாண்மை காக்கும் அறிவு ஜீவி அதிகார வர்க்கத்திடமும் இல்லை. சுதந்திரத்திற்கு பிறகான காலத்தில் சமூக ஏற்ற தாழ்வுகளும் வர்க்க பிரிவினையும் தீர்க்க படாமல் எண்ணெய் இட்டு ஊற்றி வளர்க்க முற்ப்பட்ட நிலச் சுவாந்தார்களினாலும் அவர்களுக்கு ஆதரவு கொடுத்த அரசாங்கத்தினாலும் உருவானவர்களே நக்சலைட்டுகள்..

அன்றிலிருந்து இன்று வரை தொடர்ந்து போராடி வருகிறார்கள் இந்த பாட்டாளி வர்க்கத்தின் போராளிகள்....இடையில் நிறைய கருத்து பேதங்கள் மற்றும் கொள்கை சார் மாற்று கருத்துக்கள் கொண்டதாலும் சில குழுக்கள் ஜனநாயக பாதையை தேர்ந்தெடுத்தன....அப்படி தேர்ந்தெடுக்க பட்ட பிரதிநிதிகளாலும் பெரிய சாதனை எதுவும் செய்ய இயலாமலே போனது...காரணம் ஆதிக்க சக்திகள் அரசாங்கங்களின் இண்டு இடுக்கு வரை செலுத்திய அதிகாரமே.

நக்சலைட்டுகளின் கால்கள் வலுவாக ஊன்ற பட்ட மாநிலங்களை எல்லாம் கணக்கில் கொண்டாலே உங்களுக்கு ஒரு விஷயம் புலப்படும் தெளிவாக...அது வேறொன்றும் இல்லை...அடித் தட்டு மக்களான தலித்துகள் மற்றும் பழங்குடியினர், விவசாயிகள் நிரம்பிய ஆனால் வளர்ச்சி குன்றிய மாநிலங்களாகவே இருக்கும்.
ஆந்திராவில் தொடங்கும் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் தொடர்ந்து மராட்டியம், ஜார்கண்டு, அஸ்ஸாம், பீகார்,ஒரிசா மற்றும் உத்திரப்ரதேசத்தின் சில பகுதிகள் வரை நீள்கிறது..

ஏறத்தாள நார்ப்பதிர்க்கும் அதிகமான மாவட்டங்கள் முழுமையாக நக்சலைட்டுகளின் பிடியில் இருக்கிறது..சுருக்கமாக இப்படி சொல்லலாம்...இந்திய அரசாங்கதிர்க்குள் ஒரு குட்டி அரசாங்கம். நக்சலைட்டுகள் எதற்க்காக இப்படி அரசாங்கத்தை மூர்க்க தனமாக எதிர்க்கிறார்கள் என்று பார்த்தால்.....பழங்குடியினர் மற்றும் தலித்துகளின் வாழ்வாதாரமான நிலங்களை வரைமுறையன்றி ஆக்கிரமிக்கிறது அரசு...அவர்களின் வாழ்க்கை தர முன்னேற்றத்திற்க்காக இது வரை அரசு செய்ததென்ன என்று பார்க்கும் போது நமக்கே வேதனை தான் மிஞ்சும். ஆக்கிரமித்த நிலங்களுக்கு உரிய தொகை கூட தராமல் ஏமாற்றுகிறது அரசாங்கம்...மேலும் காடுகளை நம்பியே வாழ்க்கை நடத்திய பலன்குடியினரை காட்டை விட்டு விரட்டி விட்டு, பன்னாட்டு கம்பனிகளுக்கு அந்த நிலங்களை தாரை வார்த்து கால் நக்கி விட தயாராகிறது அரசு...

பல்வேறு நெருக்குதல்களுக்கு ஆளான மக்கள் தங்களின் காவலர்களாக பார்ப்பது நக்சலைட்டுகளை மட்டுமே...யோசித்து பார்க்கும் போது ஒன்று புரியும்..மக்களின் ஆதரவின்றி மத்திய இந்தியாவை தங்களின் கைக்குள் வைத்திருப்பது இயலாத காரணம்...அந்த பிடி இன்னும் இன்னும் இறுகிக் கொண்டிருப்பதற்கு காரணமே அரசாங்கம் தான்....அவர்களின் பிரச்சினையை புரிந்து கொள்ளாமல் வளர்ச்சிக்கு வித்திடாமல் நிலத்தை மட்டும் அபகரித்து கொள்ள முயல்கிறது அரசாங்கம்....சுருக்கமாக சொன்னால் ஜனநாயக போர்வைக்குள் ஒரு ரத்த வெறி மற்றும் பண வெறி பிடித்த சர்வாதிகாரம் கொண்ட இந்திய அரசின் கோரை பற்கள் தெரியும்...மக்களின் ஆதரவை கண்ட அரசாங்கம் இப்போது புதிதாக குண்டர் படை ஒன்றை அமைத்து நக்சளைட்டுகளுக்கேதிராக போரிட வைக்கிறது....இதில் உறுப்பினர்கள் அனைவரும் கொலை கொள்ளை கற்பழிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகள்...

வல்லரசு என்று சொன்னால் தான் மக்கள் மட்டுமின்றி தான் பிராந்திய மக்கள் நலனையும் முன்னெடுக்கும் நாடே வல்லரசாகும்.... தன் பிராந்தியத்தையே காக்க முடியாமல்....இன்னொரு குட்டி அரசாங்கத்திடம் போரிட்டு கொண்டிருக்கும் இந்தியாவை வல்லரசு என்று வடக்கு ஊடகங்கள் கொண்டாடுகின்றன.......இறையாண்மைக்கு குந்தகம் என்றால் சிலிர்த்தெழும் மேனன்களும் நாயர்களும் நம்பியார்களும்.....பன்னாட்டு நிறுவனகள் என்றால் கோமணத்தையும் பறக்க விட்டு விட்டு....பொத்த வேண்டியதை பொத்தி கொள்வார்கள்......வடக்கில் அரசிடம் பிடிபடும் நக்சலைட்டுகள் விசாரிக்க இந்திய ராணுவம் கொண்டுள்ள விசாரணை கூடம் இலங்கையில் உள்ள சித்ரவதை கூடங்களை விட கொடியது , மோசமானது.....உலகின் மிகவும் மோசமான மனித உரிமை மீறல்கள் அங்கு நடத்த படுகிறது...ஆனால் இது வடக்கின் ஊடகங்களுக்கு தெரியாது........தெரிந்தாலும் காட்டிக் கொள்ள மாட்டார்கள்......ஏனென்றால் ஊடகங்கள் அனைத்தும் இந்திய அரசின் வீட்டு நாய்கள்.....அவர்களின் கொள்கை பிரசார பீரங்கிகள்....


இறுதியாக....இலங்கையில் அழித்ததை போலவே இங்கும் கூட்டம் கூட்டமாக மக்களை அழித்து நிலங்களை கை பற்றி பன்னாட்டு நிறுவனங்களை குளிரூட்ட அரசாங்கம் முடிவெடுக்கும் என்றே தோன்றுகிறது.......இந்த மாத காலசுவட்டின் மைய கட்டுரையே இந்திய அரசானது நக்சல்கள் மீது தொடுக்க போகும் போரை பற்றியே பேசுகிறது...வர்க்க போராட்டங்கள் ஆயுத பலம் கொண்டு அழிக்கப் பட்டதாக சரித்திரம் எங்கும் இல்லை....அப்படி சரித்திரம் படைக்க இந்திய அரசு எண்ணினால் அதற்க்கு இந்திய அரசு மிக பெரும் விலையை கொடுக்க வேண்டி வரும்......அதன் தாக்கத்தை தாங்க இந்திய அரசால் கண்டிப்பாக இயலாது.

6 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

லெமூரியன்,நிறைவான சிந்தனைக் கட்டுரை.உண்மையில் நான் அரசியலில் அரைகுறை.என்றாலும் வாசித்தேன்.புரிந்தவர்கள் வாசித்தால் வாதிடவோ விமர்சிக்கவோ முடியும்.

லெமூரியன்... சொன்னது…

வாங்க ஹேமா...! யதார்த்த நிலைமை இதுதான்....சமாதான புறா.....ஜனநாயக சுறா......... என்பதெல்லாம் உலக அரங்கில் இங்கு வியாபாரம் செய்ய ஏற்ற இடம் என்று காண்பிக்க மட்டுமே ஜனநாயகம்....மற்ற படி பணக்காரர்களுக்கும் பன்னாட்டு நிருவனகளுக்கும் மட்டுமே அரசின் கண்களுக்கு தெரிகிறார்கள்.

நினைவுகளுடன் -நிகே- சொன்னது…

நானும் புதுசா வந்திருக்கிறேன். என்னையும் உங்களின் வலைக் குழாமில் இணைத்துக் கொள்ளுங்கள்.

லெமூரியன்... சொன்னது…

வாங்க நி கே ...! வாழ்த்துக்கள்...! உங்கள் சிந்தனைகளையும் எழுத்துக்கள் மூலமா பகிர்ந்துக்கோங்க...! கலக்குங்க...! :-)

ஜோதிஜி சொன்னது…

.சமாதான புறா.....ஜனநாயக சுறா..

ரசித்தேன்.

மேற்கு வங்க நிகழ்வுகளுக்கு ஒரு 4000 ஏக்கர் தானம் வழங்கப்பட்டதே காரணம்.

இன்னோரு கொடுமை பசி மனைவி வெளிநாட்டு நிறுவனங்களுக்கு முதன்மை ஆலேசகர்.

ஒரே கல்லில் பல நூறு மாங்காய்.

அப்ப கொட்டை

அதான் நக்கல் சைட் என்கிறார்களோ?

லெமூரியன்... சொன்னது…

வாங்க ஷங்கர்..(ஜோதிஜி)
நீங்க சொல்ற படிக்குதான் நிலைமை! :-(