ஞாயிறு, 24 ஜனவரி, 2010

சில பெயர் காரணங்கள்....

சில ஊர்களின் பெயரை கேட்க்கும்போது எப்படி இந்த பெயர்கள் தோன்றியிருக்கும் என்று யோசிப்பதுண்டு...அதுபோலவே சில சொலவடைகளும்..! எங்கோ கேட்ட படித்த வழக்கில் மட்டுமே உள்ள சில பெயர் காரணங்கள் இங்கே..


காயலான் கடை:
மன்னர்கள் காலத்தில் காயல்பட்டினம் மிகபெரிய துறைமுகம் கொண்ட நகரம். ரோம் நகரில் இருந்து பண்ட பரிமாற்றங்கள் நடைபெற்ற துறைமுகம் இது....வாணிபத்திற்காக பயன்படுத்தப் பட்டாலும்...பழைய மற்றும் அறிய பொருட்களை வியாபாரம் செய்யும் இடமாக மாற்றம் பெற்றது காயல்பட்டினம்...பல பகுதிகளில் இருந்து மக்கள் இங்கு பண்ட மாற்றிர்க்காக வந்து செல்ல துவங்கியிருந்தனர்...அப்போது மக்களிடத்தில் இப்பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் காயல்பட்டினத்தான் கடை என்று அழைக்கப் பெற்றது....பின்பு காலஓட்டத்தில் மருவி காயலான் கடை என்றானது.



கட்டாரன் காய்:
கங்கைகொண்டான் கட்டாரம் வென்றான் என்று ராஜ ராஜ சோழனுக்கு ஒரு பட்டமுண்டு...தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகத்தின் போது கங்கை உட்பட இன்று ஆசியகண்டம் என்றழைக்கபடும் பல பகுதிகளின் உள்ள நாடுகளை போரிட்டு கைப்பற்றி அங்குள்ள ஆறுகளில் இருந்து 108 குடங்களில் தண்ணீர் ஊற்றப்பட்டது என்பது வரலாறு. கட்டாரங் என்பது இன்று மலேசியாவில் உள்ள ஒரு நகரம். ராஜ ராஜன் வென்ற நாடுகளில் மலேசியாவும் ஒன்று..வெற்றியை கொண்டாட அங்கிருந்து கொண்டுவந்த விதைகளை இங்கு நட்டு வளர்க்க...அதற்க்கு கட்டாரங்க்காய் என்று பெயர் பெற்றது (கட்டாரங் காய் என்பது எலுமிச்சையை விட பெரிதாக ஆரஞ்சு பழத்தை விட கொஞ்சம் சின்னதாக இருக்கும்...தென்னகத்தில் இத ஊறுகாயாக பயன்பாட்டில் இருந்தது..)

இன்றும் இந்தோனேசியாவில் மன்னர் பொறுப்பேற்கும் வைபவத்திலும் மற்றும் அதிபர் பொறுப்பேற்கும் போதும் 11 திருமூலரின் பாடல் வரிகளின் மேல் பிரமாணம் எடுப்பதாக செய்திகள் உண்டு.




நிக்கோபார் தீவுகள்:
நாகபட்டினத்தில் இருந்து நாலு கால் வாரத் தொலைவில் உள்ளதாக குறிக்கப்பெற்றது இந்த தீவு ....அங்குள்ள மீனவர்களால்....பின்பு அதுவே சுருக்கம் பெற்று நாள்கார்வார் தீவுகள் என்றானது....பின்பு வெள்ளையர்கள் காலத்தில் அவர்கள் உச்சரிப்பின் காரணமாக நிக்கோபார் என்றானதாக நாகபட்டினத்தில் வழக்கில் உள்ள கதைகள் உண்டு .

11 கருத்துகள்:

ஹேமா சொன்னது…

லெமூரியன் புது வருடம் பொங்கல் எல்லாம் முடித்து சந்தோஷமாக வந்திருக்கிறீர்கள் போல.சுகம்தானே.

நல்லதொரு தேடல் பொக்கிஷம்.
எனக்கு இந்த ஊர்களைப் பற்றித் தெரியாதபடியால் அந்தச் சுவாரஸ்யம் தெரியவில்லை.அங்கு பிறந்து தெரிந்தவர்களுக்கு மிகவும் சந்தோஷமாயிருக்கும்.

காமராஜ் சொன்னது…

தம்பி,
அரிய தகவல்கள்.
அழகாகக் கோர்த்துச் சொல்லியிருக்கிறாய்.
இந்தத்தேடல் சுவையானதாக இருக்கும்.
தொடரட்டும் வாழ்த்துக்கள்.

லெமூரியன்... சொன்னது…

வணக்கம் ஹேமா.....!
எப்படி இருக்கீங்க....நான் இங்க சுகமே....!
பொங்கலுக்கு ஊருக்கு போயிட்டு வந்தேன் ஹேமா....அம்மா கையால சோறு ஊட்டச் சொல்லி சாப்பிட்டு மகிழ்ந்தேன்..!
வலைதளத்தில் உங்கள் மின் அஞ்சல் முகவரியை பெற தெரியவில்லை எனக்கு..!
ஒரு மின் அஞ்சல் அனுப்புங்களேன்..!
முகவரி தெரிந்து கொள்வேன்..!

லெமூரியன்... சொன்னது…

வணக்கம் காமராஜ் அண்ணா..!
பொங்கல் எப்படி போச்சு???
சற்று நீண்ட இடைவெளி விழுந்து விட்டது பதிவு போடுவதில்..!(எனக்குதான் :-( )

ஹுஸைனம்மா சொன்னது…

/கட்டாரன் காய்//

நாங்கள் கடாரங்காய் என்று சொல்வோம். கடாரம் கொண்டான் என்றுதான் படித்ததாக நினைவு.

நிக்கோபார் தீவுகள் - புதிய தகவல்.

காயலான் கடை என்பது பழைய சாமான் கடையைக் குறிப்பதாக ஆகிவிட்டது இப்போது!!

Chitra சொன்னது…

தகவல்கள் எல்லாம் புதுசு, எனக்கு. அதுவும் இந்த காயலான் கடை, நான் அடிக்கடி உபயோகிக்கும் வார்த்தை.
நன்றி.

லெமூரியன்... சொன்னது…

வாங்க ஹுசசைனம்மா....!
வருகைக்கு நன்றி..!
கட்டாரங் கொண்டான் என்று நீங்கள் படித்ததுதான் சரி என்று நினைக்கிறேன்...!
ஆனால் சொல்வழக்கில் வென்றான் என்றும் சொல்கிறார்கள்..!
கொண்டாலும் வென்றாலும் அர்த்தம் என்னவோ ஒன்று போலவே அமைகிறது..!

லெமூரியன்... சொன்னது…

வாங்க சித்ஸ்..!
பொங்கல் வெச்சீங்களா வீட்ல??

அப்போ பழைய மற்றும் அறிய பொருட்களை வாங்க பயன்படுத்தியது..இன்று பழைய பொருட்கள் வாங்கும் கடைக்கு(காயலான் கடை) பொருந்திவிட்டது..!
வருகைக்கு நன்றி சித்ஸ்..!

சந்தனமுல்லை சொன்னது…

அட..நல்ல சுவாரசியம். காயலான் கடையா அது...

லெமூரியன்... சொன்னது…

வாங்க முல்லை...!
வருகைக்கு மிக்க நன்றி..!

அன்புடன் அருணா சொன்னது…

நல்ல தகவல்கள்!