சனி, 3 ஏப்ரல், 2010

மறுபடியும்.......

ஏறத்தாழ ஒரு வருடம் கழித்து மறுபடியும் தொடுகிறேன் ஹைதராபாத் மண்ணை...சந்தோஷமாக பறந்து திரிந்து,கழித்து கொண்டிருந்த வாழ்க்கையில் recession என்ற புயல் அடித்ததில் கலைந்தது வாழ்க்கை கனவு...அடுத்தது என்ன என்ற இலக்கில்லாமல் அந்த மண்ணை,அதில் அனுபவித்த சந்தோசத்தை என்று எதையும் விட மனமில்லாமல் விட்டு விலகி முழுதாக ஓராண்டு கழிந்து விட்டது....மறுபடியும் இங்கு வருவதற்கு வாய்ப்பே இல்லை என்ற முடிவோடு தான் ரயிலேறினேன் அங்கிருந்து..

இதுதான் வேலை இதுதான் வாழ்க்கை என்று ஏதுமற்று ஆனால் எப்படியோ சற்று சந்தோஷமாக என்று கூட சொல்லலாம், அப்படி சென்றது சென்னையில் கழித்த போன வருடம் முழுவதும்.....எக்கச்சக்க பெண்கள் என்னை சுற்றி...பணம் ஒரு பொருட்டே அல்ல என்று களமிறங்கிய நண்பர் கூட்டம்...போதாததற்கு வலைக் கூடத்தில் வேறு பதிவராக இறங்கி என்று போன பொழுதுகள் மகிழ்ச்சியாகவே போனது....

ஒரு நள்ளிரவில் தொலைபேசியில் வேலைக்கான அழைப்பு வந்தது மறுபடியும் ஹைதராபாத் வரச்சொல்லி...
இம்முறை சென்னையை விட்டு செல்ல மனமில்லாமல் கிளம்பிசென்றேன்.....காரிலும் பைக்கிலும் சீறிப் பாய்ந்த சாலைகளில் இம்முறை பேரூந்து பயணம்...சொந்த வாகனம் இருந்ததால் சேருமிடம் பற்றிய கவலை கொண்டதில்லை முன்பு ,இம்முறை நடத்துரிடம் இடம் சொல்லவே மொழிப் பிரச்சினை...
முன்பின் அறிமுகம் இல்லாத ஒரு கல்லூரி மாணவன் எனக்கு உதவி செய்தான் நான் சேர வேண்டிய அலுவலகம் வரை வந்து வழிகாட்டி......

முன்போ சத்யம் ஹைதராபாத் முழுவதும் தமிழ் மக்களின் ராஜ்யமே மேலோங்கியிருக்கும்...இந்த புது அலுவலகத்தில் நான் மட்டுமே தமிழன்...தெலுங்கு புரிந்து கொள்ள முடிந்தாலும் ...பேச வராததால் தனித்தே இருக்கிறேன்...இப்பொழுது ஹைதராபாத் எனக்கு முழுதும் புதிதாக தோன்றுகிறது....ஆறுதலான சில விஷயங்களில் ஒன்று சில பழைய நண்பர்களை சந்தித்தேன்...தொடர்கிறது சந்திப்பு...

ஆனாலும் நள்ளிரவில் அலுவலகம் விட்டு வந்து பால்கனியில் தனியாக புகைபிடிக்கும் பொழுது ஏனோ இனம் காண முடியாத உணர்வுகள் என்னை சோர்வடையச் செய்யும்...சில நாட்களுக்கு பிறகு ஹைதராபாத் அலைபேசிச் சேவை பெற்ற உடன் அஸ்மாவிடம் பேச வேண்டும் போல தோன்றியது.....அஸ்மா ஒரு நட்சத்திர பாரில் அறிமுகம்...பதிம வயதில் இருப்பவள்...பேரழகி.! அவள் தொழில் அவள் உடலை விற்ப்பது...
அறிமுகமே எங்களிருவருக்கும் கடும் சண்டையில் முடிந்தது (பணம் தொடர்பாக அல்ல..) பின்பு இரண்டாம் முறையும் அவளையே அழைத்தேன்....நிறைய அவளிடம் பேசினேன்....ஆங்கிலம் ஹிந்தி என இரண்டையும் கலந்து பேசுவாள்....

தனித்தே எவ்வளவு நாள் வாழ உத்தேசம் என சென்னையில் அறிமுகம் ஆனா ஒரு வலைத்தோழி கேட்டது நியாபகத்திர்க்குள் வந்து போகிறது...பேரூந்தில் நின்று கொண்டிருக்கும் என் அம்மாவின் வயதுடைய பெண்ணிற்கு என் இருக்கையை விட்டு கொடுக்கிறேன்......ஹிந்தியில் நன்றி மகனே என்றார்கள்....தங்கைக்கு மாப்பிள்ளை தேடி அலைந்து கொண்டிருக்கும் அப்பா ஒரு வரன் வந்ததை பற்றி நம்பிக்கையோடு பேசினார் அலை பேசியில்.....

அஸ்மாவிடம் பேசினேன்...வார இறுதியில் தனக்கு பாரில் வேலை இல்லை என்றும் அப்பொழுது சந்திக்கலாம் என்றாள்....பணம் எதுவும் வேண்டாம் என்றும் அவள் சமையலை சாப்பிட்டு போகும் படியும் கேட்டாள்.....சரி என்றிருக்கிறேன்.....

இந்த தனிமையே நீடிக்க வேண்டும் என்ற நினைத்தாலும்....ஏதோ ஒரு இனம் தெரிய உணர்வு என்னை பயம் கொள்ள செய்கிறது .........மறுபடியும்.

8 கருத்துகள்:

காமராஜ் சொன்னது…

வா அன்புத்தம்பி ரமேஷ்.
நெடுநாள் காணவில்லை.தொஅடர்புகொள்ள வழியுமில்லை.அவ்வப்போது
உனது கடைசிப்பதிவை பார்த்துக்கொல்வேன். நலம்தானே ?.
திரும்ப வந்ததுக்கு சந்தோஷம்.

அஸ்மா ஒரு வெளிப்படையான பகிர்வு.

ஹேமா சொன்னது…

லெமூரியன்...சுகம்தானே !நானும்கூட.ரொம்ப நாளாக் காணோமேன்னு தேடிட்டு வந்தேன்.நான் பார்க்காத ஒரு பதிவு படிச்சேன்.மனதை அழுத்தும் விஷயங்களை எழுதுவதுகூட தனிமை போக்கும்.மனப்பாரத்தையும் குறைக்கும்.நிறைய எழுதுங்க.
நண்பர்கள் நாங்க இருக்கோம்.
தனிமை போயே போய்டும் !

லெமூரியன்... சொன்னது…

வணக்கம் காமராஜ் அண்ணா.
உங்களை அடிக்கடி நினைத்து கொள்வேன்....பேசவேண்டும் என்று நினைத்தாலும் வார இறுதியிலும் நிறைய வேலைகளை இழுத்து போட்டு கொள்கிறேன்..
விரைவில் உங்களை தொடர்பு கொள்வேன் அண்ணா...!
இந்த தனிமை எனக்கு ரொம்ப புதிது....
ஏதோ செய்கிறது உள்ளுக்குள்....

லெமூரியன்... சொன்னது…

வணக்கம் ஹேமா,
ரொம்ப சந்தோஷமா இருக்கு உங்க மறுமொழி பார்க்கும் போது...
நிச்சயமா இந்த எழுத்தின் மூலம் மன துயரை இறக்கி வைக்க முடிவு செய்துள்ளேன்....
உங்களை போல தோழர்கள் இருக்ராங்க்னு நம்பிக்கைல..!

AkashSankar சொன்னது…

தைரியமான பகிர்வு... வாழ்க்கையின் யதார்த்தத்தை தொட்ட மாதிரி ஒரு உணர்வு... தயவு செய்து எழுதுங்கள்....

பெயரில்லா சொன்னது…

you are me.i am you

லெமூரியன்... சொன்னது…

வாங்க தோழர் கற்றது கை மண் அளவு...!
கருத்துக்கும் வருகைல்லும் மிக்க நன்றி..!

லெமூரியன்... சொன்னது…

நன்றி பெயரில்லா பெயரில் வந்த தோழனே..!