வெள்ளி, 18 அக்டோபர், 2024

 இரண்டாயிரத்து ஒன்பதில் ஈழ போர் முடிந்த வேளையில்  எழுதியது .....ஏனோ வலையேற்றம் செய்ய தோன்றாமல் வைத்து விட்டேன்... 



காத்திருக்கும் அகதிகள்

நவயுக கடவுள்களாக புத்தரும் இயேசுவும் ஆயுதமேந்தி...

கொன்றழிக்க பெற்றன உலகின் தொன்மையான

இனமும் அதன் கடவுளும்..

இரத்த குளியலில் கடவுள்கள். ஆயினும் கோபம்

அடங்கவில்லை அவர்களுக்கு...

தொன்மையான இனத்தின் பெயரை சொல்லித் திரியும்,

கருங்காலிகள் வசிக்கும் இந்த பகுதிக்கும் ஆசைப் பட்டன

கடவுள்கள்..

கடவுள்களின் படை சூழ்ந்தது...கூடங்குளமும் கல்பாக்கமும்

தீண்டப் பெற்றன...

பஸ்பமானது கருங்காலிகளின் கூடாரம்,லெமூரியக் கண்டம்

இப்போது புத்தருக்கும் இயேசுவுக்கும் சொந்தமானது...

உடற்பாகங்கள் இழந்து குற்றுயிரும் குலையுருமாய்

அகதிகளாக ஆரிய தேசத்தை நோக்கி ஓடுகின்றன

கருங்க்காலிகளில் மீதி.....

காத்திருக்கின்றன கல்லறைகளும் அருங்காட்சியகமும்

இவர்களின் வாழ்வியலையும் கலாச்சாரத்தையும்

பற்றி பேச..!

வெள்ளி, 26 மே, 2023

கோடையின் குளிர்


கோடை தணிக்க குளிர் பிரதேசம் போகிறேன் என்றாள்

 வெப்பம் தாளாமல்  வாடும் செடியாய்   

சரி போய் வா என்றேன்


 அவளற்ற பொழுதுகள் பொதி சுமையாய் மாறி

 என்மீதமர்ந்து எனை அழுத்தி கொல்ல பார்க்கிறது


 பொழுதுகளிடம் புலம்புகிறேன் அவள் தள்ளி போனதை

 பொழுது என்னிடம் கதைக்கிறது பெண்களுக்கா பஞ்சம் 

உன்னிடத்தில் என்று... 


 கொளுத்தி போட்டுருவேன்  உன்னை என பொழுதை மிரட்டிய பின்பு 

பொறணி பேசுகிறது..  

அவ என்ன அவ்ளோ பெரிய அழகியா என்று...

 உனக்கான பெண்களின் பட்டியல் வைத்து கொண்டு 

கால சக்கரம் காத்திருக்கு என்று காதினுள் கிசுகிசுக்கிறது.. 


 கால சக்கரத்தை கெஞ்சி கேட்டு கொண்டேன் 

இவள் மட்டும் போதும் வேறாரும் வேண்டாம் என்று.. 


கால சக்கரம் சிரித்த படியே சொன்னது உன் காதல் 

உண்மையென்றால் வேரு யாரும் உன்னவளை 

உன்னிடத்தில் கரைக்க இயலாது என்று 


பொழுது முகம் சுளித்து கால சக்கரத்தை பழிக்கிறது

 நான் பிறிவு துயர் போக்கவும் பொழுதை விரட்டவும்

 கிங்பிஷர் குடுவையின் உதடோடு உதடு பதிக்கிறேன்

செவ்வாய், 27 டிசம்பர், 2022

காதலை தொழுது கடவுளாகிறேன்

நான் உன்னுடன் இல்லா நிமிடங்களில் 
 என்ன செய்வாய் என்கிறாள்.. 

 அவளற்ற நேரங்களில் சிந்திக்கும் திறன் 
 பிடுங்கப்பட்ட மனிதனாகிறேன்.. 

 பத்து வயது மருமகனிடம் மன்னிப்பு 
 கேட்க துடிக்கிறேன் பல நேரங்களில் 
காயப்படுத்தியதற்காக.. 

 கடந்த கால தவறுகளெல்லம் கண்முன் 
 வந்து எனக்கே என் மேல் வெறுப்பை உமிழ்கிறது.. 

 தடுமாறி போகிறேன் அவளின்றி 
 அமையும் நொடிகளை நிமிடங்களை கடக்க.. 

 பூனைக்குட்டி போல துள்ளி 
ஓடி வந்து தாலி கட்ட சொன்னான், 
 கட்டினேன். 

 நண்பர் நண்பிகளோடு 
பாண்டிச்சேரி போகிறேன் என்றாள் 
சரி என்றேன் ஒற்றை பதிலில். 

 கோபமா என்றாள், நள்ளிரவு குறுஞ்செய்தியில்.. 
 இல்லை,
 நான் காதல் கடவுள் என்றேன். 
 என் காதலை வேறெந்த கூதி மகனாலையும் தர முடியாதென்றேன். 

 சிலாகித்து சிரிக்கிறாள், ஆமோதிக்கிறாள் 
 ஆமாம் நீ காதல் கடவுளென்ற.ு 
 கூட்டத்தில் கொண்டாட்டங்களில் லயிக்க 
முடியவில்லை என்கிறாள் 
 நீ தான் காரணமென சபிக்கிறாள். 

 கடவுளை சபிக்காதே கர்ம வினைகளுக்கு 
ஆட்படுவாய் என்கிறேன் 
 பெரியாரின் பேரனுக்கென்ன கடவுளின் மேல் காதலென்கிறாள். 

 வாய் இல்லைனா உன்ன நாய் 
தூக்கிட்டு போயிரும் என்கிறேன் 
 கலகலவென முத்துக்கள் சிதறியதை போல சிரிக்கிறாள், 


 சிந்திய சிரிப்பில் சிறகொடிந்த ஏஞ்சல் ஆகிறேன். 
 சிறகொடிந்த நிலையிலேயே நித்திரையை 
தழுவுகிறேன் 
 அரை தூக்கத்தில் அலைபேசி குறுஞ்செய்தி 
 ஒளியில் விழிக்கிறேன்.. 

 டேய் மாமா எப்போடா என்ன திங்க போறே 
என கதைக்கிறாள்  சொந்தத்தில் 
வரும் அந்த முறைப் பெண்.

ஞாயிறு, 29 மே, 2022

கடவுளின் காதலிகள்

கண் மூடி ஆற்றின் கரையோரம் ஆரம்பமாகும் காட்டின் தொடக்க புள்ளியில் அமர்ந்திருக்கிறேன். அலைபாயும் மனதை ஒருநிலை படுத்தி நெற்றியின் மையப்புள்ளியில் கொண்டு வந்து நிறுத்தி அந்த நொடியின் அமைதியை மொத்த உலகின் மையப்புள்ளியாக நான் ஆனதை போல அனுபவித்து கொண்டிருக்கிறேன். மெல்லிய அதிர்வலைகளை மண்ணில் இருந்து என் புட்டங்கள் வழியாக முதுகு தண்டுவடத்தின் மூலமாக மூளைக்கு சென்றுணரும் முன் கண்விழிக்கிறேன். வயோதிகம் தட்ட தொடங்கிய நிலையில் ஒரு பெண் யானை தலைமையில் பத்து யானைகள் கூட்டமாக நீர் அருந்த ஆற்றின் கரையோரம் என்னை கடந்து செல்ல முற்படும் வேளையில் என்னை கண்டு எச்சரிக்கையுற்று தலைமை யானை பிளிறியது. மனதை குவியமாக்கி அன்பை உருவேற்றிக் கொண்டிருப்பவனின் எண்ண அலைகளை அந்த மிருகங்கள் உணர முற்பட்டதால் நான் அன்பை விதைப்பவன் அன்பை அறுவடை செய்பவன் என்றுணர்ந்து மெல்ல என்னை கடந்து செல்ல ஆரம்பிக்கிறது அந்த யானை கூட்டம். கூட்டத்தின் முடிவில் செல்லும் இரண்டு இளம் பெண் யானைகள் அதீதமான காம உணர்வுடன் என்னை நோக்கி பார்வை வீசி செல்கின்றன. அந்த இடத்தில ஆண்மை பொருந்திய ஆதீத காதல் வேட்கை கொண்ட உயிரினம் நான் மட்டுமே என்று சொல்லாமல் பார்வையால் என்னை நோக்கி புரிதல் வீசி சென்றன. என் தோளில் காகம் ஒன்று வந்தமர்ந்து கரையவும் கனவு கலைந்து கண் விழிக்கிறேன். பால்கனியில் காகம் ஒன்று கரைந்திற்று. அதிகாலை கனவு பலிக்குமா என்ற கனவு தாக்கத்தின் மிச்சத்தோடு எழுந்தேன். யானைகள் பற்றி கூகுளை தேடினேன் அன்று முழுவதும் ஆச்சிரியமூட்டும் அளவிற்கு தகவலை தந்து போதித்தது கூகிள். மிக மிக நுண்ணுணர்வுகளை கொண்ட உயிரினம் யானை என அறிந்து கொண்டேன். அதீத நியாபக சக்தி கொண்டவை யானைகள்.யானைக்கும் மனிதனுக்குமான காதல் சாத்தியங்கள் பற்றி யோசித்து கொண்டே ஒரிஜினல் ப்ளாக் சிகரெட்டை(மறுபடியும் புகைக்க ஆரம்பித்திருக்கிறேன்) பற்ற வைத்து விட்டு தேநீர் கடையில் தேநீர் சொன்னேன். அலைபேசி மிளிர எடுத்து பார்த்தால் பள்ளி நண்பர்கள் குழுவில் ஒரு நண்பர் தனது மனைவியின் நண்பிக்கு வேலை வேண்டி தகவல் பரிமாறியிருந்தார் அந்த பெண்ணின் வேலை அனுபவத்தை போல உள்ள வேலையாள் தேவை என என் அலுவலகத்தில் வேலை செய்யும் நண்பர் அவரின் நண்பரின் கம்பெனியில் தேவையை என்னிடம் முன்பு பகிர்ந்தமையால் பள்ளி நண்பனுக்கு அலைபேசியில் அழைத்து அவருடைய பயோடேட்டா மற்றும் மேல் விவரங்கள் பகிரும்படி கேட்டுக் கொண்டேன். பின்பு அதை பற்றிய சிந்தனை மறந்து என்னுடைய தின வேலைகளில் மூழ்கிப்போனேன் இரண்டு நாட்களுக்கு பிறகு கம்பெனி க்ளையண்ட்டுடன் அலைபேசி உரையாடல் முடித்த பொழுது ஓர் அழைப்பு என் அலைபேசியில். வணக்கம் சார் என் பெயர் அஸ்வதி. கீதா ஹஸ்பண்ட் உங்க நம்பர் குடுத்தாங்க என்று. மிக இளமையான குரல் அவர்களுடையது. வேலையினூடே வந்த அழைப்பாகையால் ரொம்பலாம் அறிமுக படலம் நடத்தாமல் நேரிடையாக விஷயத்துக்கு வந்து விட்டோம். அவருடைய பழைய வேலை அனுபவங்கள் மற்றும் இந்த வேலைக்கான அனுபவ எதிர்பார்ப்பு என பகிர்ந்த பின்பு அழைப்பு அணைக்கப்பட்டது பயோ டேட்டா அனுப்பிகிறேன் என்பதோடு. வருடத்தின் கடைசி கால் பகுதி என்பதால் வேலைப்பளு சற்று அதிகமாக இருந்ததால் மற்ற எந்த விஷயமும் மண்டைக்குள் நிற்கவில்லை.இரண்டு நாட்கள் கழித்து அஸ்வதியிடம் இருந்து அழைப்பு. திருத்தியமைக்க பட்ட பயோடேட்டா அனுப்பியிருந்தாள். நண்பனுக்கு அனுப்பி வைக்கிறேன் பின்பு அவர்கள் உங்களை அழைப்பார்கள் மேற்கொண்டு என சொல்லி அழைப்பை அணைத்து விட்டு வேலையில் மூழ்கினேன். இரண்டு நாட்கள் கடந்த பின் வாட்ஸப்பில் ஒரு காலை வணக்கம் வந்திருந்தது அஸ்வதியிடம் இருந்து. பதில் வணக்கம் வைத்து விட்டு. நண்பரிடம் தகவல் சொல்லி விட்டேன். நீங்க ரிலாக்ஸ் ஆக இருங்க என்றேன். நன்றி என்று பதிலோடு சாட் முடிந்தது. வாட்ஸுப் ஸ்டேட்டஸ் பார்க்கும் பழக்கம் எனக்கு உண்டென்பதால் ஸ்டேட்டஸ் பார்க்க முற்படும் போது அஸ்வதியுடைய ஸ்டேட்டஸ் சில நேரங்களில் பார்க்க நேரிடும், ஒரு சுமைலி அல்லது நன்று என்று ஸ்டேட்டஸ் பதிலிடுவேன். ஒரு சிரிக்கும் எமோஜி பதிலாக வரும். மூன்று வாரங்களுக்கு பின்பு அலுவலக நண்பர் அழைத்து நீங்கள் Refer பண்ண கண்டிடேட் செலக்ட் பண்ணிட்டாங்க என் நண்பரின் கம்பெனியில் என்றார். நன்றி தெரிவித்து கொண்டேன். அஸ்வதியிடம் இருந்து சில நிமிடங்களில் அழைப்பு வந்தது. மிக சந்தோஷப்பட்டாள் நிறையநன்றிகள் சொன்னாள். சிறிது பரஸ்பர உரையாடலுக்கு பிறகு நன்றி கூறி அழைப்பை முடித்து கொண்டேன். இப்போது தினமும் காலை வணக்க குறுந்செய்திகள் அஸ்வதியிடம் இருந்து வர ஆரம்பித்தது. பதில் வணக்கங்கள் மற்றும் வேலை பற்றிய சில பகிர்தலுடன் முற்றுபெற்றுவிடும் அந்த உரையாடல்கள்.வேலையில் நன்கு பெயெர்தெடுப்பதாக அலுவலக நண்பர் அஸ்வதி பற்றி பகிர்ந்து கொண்டார். அதை தெரிவித்து மேலும் சிறக்க வாட்ஸுப் வாழ்த்து பரிமாறினேன். சந்தோச எமோஜிக்களுடன் நன்றி தெரிவித்தாள். நாட்கள் செல்ல சிற்சில உரையாடல்கள் பகிர ஆரம்பித்தோம், என் குடும்பம் மற்றும் குழந்தைகள் அவர் குடும்பம் மற்றும் குழந்தைகள் பற்றியெல்லாம் பேசி கொண்டோம்.பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கும் பெண்ணிற்கு தாய் என்பதை கேள்விப்பட்டு ஆச்சிரியமுற்று எப்படி இப்படி கல்லூரி பெண் போன்ற குரல் வளத்தோடு இருக்கிறீர்கள் என்றேன். கலகலவென்று சிறிது விட்டு சொன்னாள் எனக்கு இருபத்தொரு வயதிலேயே திருமணம் ஆகிவிட்டதென்று. முதல் மாத சம்பளம் வாங்கினால் உங்களுக்கு கண்டிப்பாக ட்ரீட் குடுப்பேன் என்றாள். நன்றி. என்றேன். இப்பொழுது வாட்ஸுப் போய் நேரிடையாகவே அலைபேசி அழைப்புகளில் உரையாடினோம். உங்கள் குரலில் அதீதமான ஆண்மை கலந்திருக்கிறது என்றாள்(your voice is so manly). உங்கள் குரலுக்கு நான் அடிமை என்றாள். நீங்கள் பேசும் போது உங்களுக்கு தெரியாமல் சில வார்த்தைகளை மட்டும் ரெகார்ட் செய்து அதை எடிட் செய்து என்னுடைய அலைபேசி அலாரமாக வைத்திருக்கிறேன் காலை எழும்போதே உங்கள் குரலுடன் விழித்தால் நாள் முழுவதும் எனர்ஜி இருக்கிறது என்றாள். சில நேரங்களில், பத்தாயிரத்தில் ஒரு ஆணைதான் உன்னை போல காண முடியும் என்றாள். ரொம்ப புகழாதே என்றேன். :-) மென்மையாக நாங்களிருவரும் நண்பர்கள் என்ற வட்டத்தை அடைந்திருந்தோம் வா போ என அழைத்து கொள்வது Odd uhகா இல்லை இப்பொழுது. முதல் சம்பளம் வாங்கினாலும் அவளால் என்னை சந்திக்க முடியாத படிக்கு எனக்கு Busy Schedule இருந்தது கோவா,ஹைதராபாத்,பெங்களூரு என மாறி மாறி பறந்து கொண்டும் இடையில் நெல்லை கன்னியாகுமரி திருவனந்தபுரம் என சாலை மார்க்கமுமாக வாழ்க்கை சக்கரம் அதிவேகமாக சுழன்று கொண்டிருந்த்தது.ஒரு வழியாக புது வருடம் பிறப்பதற்கு பத்து நாட்களுக்கு முன்பு ஒரு மாலை நாங்கள் சந்திக்க நேரம் அமைந்தது. பெரம்பூரில் உள்ள ஒரு Coffee Day சென்று காரை நிறுத்தி விட்டு காத்திருந்தேன். ஒரு மாருதி ஸ்விப்ட் காரில் வந்திறங்கினாள் அஸ்வதி. நாங்கள் ஜாதி மதம் பற்றி பேசிக் கொள்ளாவிட்டாலும் அவள் பேசுவது ஐயர் பாஷை என அப்பட்டமாக தெரியும். ஒரு மத்திம வயது ஐயர் பெண் போல கொழகொழ என்றில்லாமல் மிக அழகாக இருந்தாள் கூலர்ஸ் கழற்றியபடியே ஹய் என்றாள். ஹலோ என்று கை குலுக்கினேன் காபி ஆர்டர் செய்து விட்டு அமர்ந்தோம். முகம் பார்க்காவிட்டாலும் குரல் பரிட்சயம் என்பதால் பெரிதாக ஒரு அசௌகரியம் நான் உணரவில்லை என்றேன் நான்தான் உன்னோட டிபி தினமும் பாக்கறேனே என்றாள் சிரித்து கொண்டே. ஆர்டர் செய்த காபி வந்தது.காபி பருகிக் கொண்டே அவளை பற்றி பேசினாள் பெரிய ரோடு கன்டராக்ட்ர் அவளுடைய அப்பா. இரண்டே பெண்கள். அக்காள் திருமணம் ஆகி அமெரிக்க போகும்போது இவள் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து விட்டு மேற்படிப்புக்கு தயார் ஆகிக்கொண்டிருக்கும் நேரம். அப்பொழுது ப்ரொவ்சிங் பண்ண இன்டர்நெட் சென்டர் போவேன் அப்டி போகும்போது தான் அவரை பார்த்தேன் லயோலா வில் பி.பி.ஏ முடித்து விட்டு சொந்தமாக ப்ரொவ்சிங் சென்டர் வைத்திருந்தார். தினமும் அங்கு செல்ல ஆரம்பித்தேன் தோழிகளுடன். பத்ம சேஷாத்திரி ,அம்மன் கோயில் ,செக்டர் ஏ என இருந்த என் வாழ்வில் திடீரென ஒரு மாற்றத்தை உணர ஆரம்பித்தேன்...அப்பா இன்ஜினியரிங் படிக்க சொன்னார் நான் முடியாதென ஸ்டெல்லாவில் பி.பி.ஏ சேர்ந்தேன். இரண்டு வருட காதல் வாழ்க்கை அவனுக்காக உயிரை கொடுக்கும் அளவிற்கு என்ன மாற்றியது. அவரும் தன்னுடைய பிசினஸ் விரிவாக்கம் செய்திருந்தார் இந்நிலையில் தான் அரசல் புரசலாக அப்பாவிற்கு என்னுடைய காதல் பற்றி தெரிய வந்தது. சாதி பார்க்காத மனிதர் தான் அப்பா ஆனால் தனக்கு மாப்பிள்ளையாக வர போறவன் கண்டிப்பாக அய்யங்காராக இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தார். அதனால் அக்கா மற்றும் மாமாவுடன் அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்தார் அப்பா. எனக்கு இந்த விவரம் தெரியாததால் செமஸ்டர் விடுமுறைக்கு ஸ்டேட்ஸ் போகிறோம் என்ற குதூகுலத்தில் அவரிடத்தில் சொல்லி பெர்மிசன்(என்ன நடந்தாலும் அவரிடத்தில் சொல்லாமல் முடிவெடுக்க மாட்டேன்) வாங்கி கொண்டு கிளம்பி பறந்து போனேன்.போன பத்து நாட்கள் மிக சந்தோஷமாக கழிந்தது கிடைக்கின்ற இடைவெளியில் இவரிடத்தில் யாஹூ சாட்டில் பேசி கொள்வேன். மேலும் ஒரு வாரம் கழிந்த பொழுது அக்கா மற்றும் மாமாவுடன் ஒரு தமிழ் குடும்பங்கள் இணையும் கெட் டுகெதர் நிகழ்விற்கு சென்றேன் அங்கே அக்காவின் கணவர் ஒரு இளைஞனை அறிமுகம் செய்தார் ஸ்ரீ ரங்கத்து அய்யங்கார் சாப்ட்வேர் என்ஜினீயர் என்று அறிமுக படலம் முடிந்தது அமெரிக்கா வாழ்க்கை பற்றி எதிர்காலம் பற்றியெல்லாம் நெறைய பேசினான் உன் எதிர்கால திட்டங்கள் என்ன என்று கேட்டான் என்னிடம் சிரித்துக் கொண்டே அப்பா பாக்கிற பையன கட்டிக்கிட்டு குடும்பம் நடந்த போறது தான் என்றேன் சிரித்துக் கொண்டே. என்னை கட்டிகிரிய என்றான். பொளேர் என்று அவன் கன்னத்தில் அறைய வேண்டும் என்பது போல கோபம் வந்தது கூடவே அழுகையும் வந்தது ஒரு வாறாக கட்டு படுத்திக் கொண்டேன். காரில் வீடு திரும்பும் பொழுது அக்காவின் கணவர் உயர்வாக பேசி கொண்டே வந்தார் அவனை பற்றி. எனக்கு வெறுப்பும் அழுகையும் முட்டி கொண்டு வந்தது வீட்டிற்கு வந்ததும் என்னவனிடம் உடனடியாக சாட்டில் நடந்த விஷயங்களை சொல்லி அழும்பொழுது சற்று சப்தமாக அழ ஆரம்பித்தேன். அக்காவும் அக்காவின் கணவரும் என்னறையினுள் வந்தனர் விஷயம் வெளியே வந்தது .கன்னத்தில் அக்கா மாறி மாறி அறைந்தாள் வேசியாடி நீ என்ற அக்காவின் கணவரின் வார்த்தை என்னை கொன்றே போட்டு விட்டது. என் அப்பா கூட இப்படியெல்லாம் என்னை பேசியதில்லை அப்பாவிற்கு பேச வேண்டும் என்று அழுதேன் அப்பா பேசினார் பொறுமையாக கேட்டு கொண்டு அக்கா சொன்ன பையனை தனக்கு ரொம்ப பிடித்திருப்பதாகவும் அவன் வீட்டிற்கு சென்று பேச போவதாகவும் அப்பா சொன்னார்.கூண்டில் அடைபட்ட பறவையானேன். எனக்காக இன்டர்நெட் வசதியும் தடுக்க பட்டது. அக்கா மாமா தூங்கும் வரை நடித்து பின்பு அவர்கள் உறங்கிய பின்பு என்னவனுக்கு தோலை பேசியில் பேசினேன்.நிலைமையை சொன்னேன்.அவன் இரண்டு நாள் டைம் குடு என்றான் சரியாக இரண்டாவது நாள் வீட்டின் அலைபேசி அலறியது.எடுத்து பேசிய அக்காவின் முகம் குழப்பம் ஆனது. அலைபேசியை என்னிடம் கொண்டு வந்தாள்,வரும்போதே காயத்திரி அக்கா இங்கேயே இருக்கா என்றாள் ஆமா என்றேன் அவங்க தான் லைன்ல என்றாள். ஹலோ என்றேன். எதிரில் பேசிய பெண் அமைதியா நான் சொல்றத கேளு என் தம்பியும் உன்னவனும் கல்லூரி தோழர்களாம் உன் நிலைமையை என் தம்பி எனக்கு சொன்னான் உன்னவன் உனக்கு ரிட்டர்ன் டிக்கெட் எடுத்து அனுப்ப சொல்லியிருக்கிறான். இந்த வார இறுதியில் நான் உன்னை பார்க்க அங்கு வருவேன் வந்து உன்னை வெளியில் கூட்டி செல்வது போல ஏர் போர்ட் கொண்டு விடுவேன் அங்கிருந்து நீ பார்த்து கொள்

வெள்ளி, 1 அக்டோபர், 2021

பள்ளி பழைய மாணவர் சந்திப்பு

பள்ளிப்பருவத்தில் சொல்லாமல் விட்டுப்போன பட்டியலில் இது இரண்டாம் காதல். இருபத்தைந்து வருடங்களுக்கு பிறகு பள்ளி பழைய மாணவர்கள் ஒன்றுகூடும் நிகழ்வில் அவளை சந்திக்க நேர்ந்தது அதன் விளைவு இந்த பதிவு. (இரு வருடங்களுக்கு முன்பு எழுதியது )

சனி, 23 மே, 2020

சருகுகள்



இலைகளாய் மரத்தில் துளிர்த்து வெயிலை மிருதுவாக்கும் இளம்பச்சையில் மின்னி பின்பு அடர்பச்சைக்கு மாறி அதன்பிறகு உதிர்ந்து காற்றில் அலைந்து காய்ந்து குப்பையாக மாறும்.
அதை போல பசுமையாய் இருந்து பின்பு ரணமாக மாறி சிறிது காலங்கள் கழித்து வடுவாய் ஆகி போன நினைவலைகளின் மீட்சி இப்பதிவு

ஜிமெயில் உட்பெட்டி நிரம்பியதால்..சரி வேண்டாத குப்பை மின்னஞ்சல்களை அழிக்கலாமே என ஆரம்பித்த போது சில பழைய நினைவுக் கிளர்ச்சியில் ஆழ்த்தும் நினைவடக்ககங்களை காண நேர்ந்தது..
அப்படி 10 வருடங்களுக்கு முன்பு வந்த இந்த முதல் முயற்சி கன்னி கவிதை...என் வாழ்வில் அதிகம் நேசித்த பெண்ணிடமிருந்து.!

I m taking a single brick,
sending it into lots of planning,developing,testin,implementing modules and
constructing my life step by step,
but f ur missing n my construction..
my success is totally f!@#$^*d up:)

தமிழாக்கம் கீழே

நான் ஒரு செங்கல்லை எடுத்து,
அதை நிறைய திட்டமிடல், உருவாக்குதல், பரீட்சித்தல், செயல்படுத்துதல் மற்றும்
உருவேற்றுதல் என படிப்படியாக என் வாழ்க்கையை கட்டமைக்கிறேன்,
ஆனால் என் கட்டுமானத்தில் நீ விடுபட்டுப்போயிருப்பின் ..
எனது வெற்றி முற்றிலும் fucked up

செவ்வாய், 13 நவம்பர், 2018

அசுரன்


\\ஆழ் நித்திரையில் கனவில் தோன்றி ஒரே ஒரு வரம் மட்டும் கேட்க
சொன்னது தேவதை..
பேராசையின் உச்சத்தில் தேவதையையே வரமாக கேட்டேன்
சினம் கொண்டு சீறி மறைந்து போனது தேவதை

தேவதைகளை துரத்தியலைந்து தோல்வியுற்ற அசுரர்
கூட்டத்தில் ஒருவனானேன் கலைந்து போன கனவின் முடிவில் //


\\அசுரரின் காதல் மிருகத்தையொத்தது
தேவரின் காதல் மனிதத்தையொத்தது

மிருகத்தின் காதல் வஞ்சகம் சூழ்ச்சிகளற்றது
மனிதத்தின் காதல் வஞ்சகம் சூழ்ச்சிகள் கொண்டது...

வஞ்சக சூழ்ச்சிகளில் மயங்கி கிறங்கி தேவரிடம் இரையாகி போகவே
இசைந்து உருகுகிறது தேவதைகள்...

மிருக காதல்களை உதைத்து உதாசீனப்படுத்துவதை
சிலாகித்து செய்கின்றது தேவதை //

\\ தேவதைகளுக்கும் அகவை விதிவிலக்கல்ல
குட்டி போட்டு வயிறு பெருத்து பருத்து விரிந்து தொங்கும்
மார்பகங்களை பெற்று மூட்டு வலியின் ஆரம்ப நிலையை நெருங்கும்
போது....

தேவர்களின் காதல் வஞ்சகமானது சூழ்ச்சிகளை கொண்டது என்றுணரும்
தேவதைகள்.//

\\ஏக்கத்துடனும் ஆற்றாமையுடனும் உன்னை மிஸ் பண்ணிட்டேன்டா
என அசுரர்களை நோக்கி அழுது புலம்பியபடியே தேவதைகள் //