வெள்ளி, 7 ஜனவரி, 2011

பேரிச்சை(DATES) = பேர்+இச்சை DATE

நிறைவான காதல் இது என்று நினைத்து, பின்பு முறிந்து போன போது , சில நாட்கள் வெளிக் கிரகத்தில் சென்று இருந்து விடலாம் என்று நினைத்துக் கொண்டிருந்த காலம் அது... அந்த சந்தர்ப்பத்தில் தான் ஹைதராபாத் சத்யம் நிறுவனத்தில் வேலைக்கான ஓலை வந்திருந்தது.. புது வசிப்பிடம், புதிய மனிதர்கள், புதிய கலாசாரம் மற்றும் மொழி, உணவு.....வெளிக் கிரகத்திற்கு வந்தது போன்ற உணர்வு....லேசாக மனதிற்குள் ஒரு சந்தோசம் எட்டி பார்க்க ஆரம்பித்தது....வேலைப் பளுவுடன், கூட ஒரு தமிழ் கூட்டமும் சேர்ந்திருந்தது(சத்யம் தமிழர்களாலேயே நிரப்பப்பட்டிருந்தது)...

வட இந்திய முகங்கள் நிறைந்த அந்த டெக் பார்க் எனக்கு ஒரு பணக்கார கல்லூரியை நினைவுபடுத்தியது...இப்படியான ஒரு இரவு நேரப் பணியில் இருக்கும் போது வேலைப் பளு காரணமாக ஏற்ப்படும் மன உளைச்சலை போக்க அவ்வப்பொழுது வலை அரட்டைக்கு போவது வழக்கம்...அப்படி யாகூ அரட்டை தளத்திற்கு சென்றேன்...


அப்பிடித்தான் சந்தித்தேன் இசையின் பெயர் கொண்ட அவளை..! முதல் அரட்டையே மிகவும் குறும்புத் தனமாக இருக்க....எனக்கு அவளை மிகவும் பிடிக்க ஆரம்பிக்க இருந்தது... முதல் சந்திப்பில் நேரம்போகவில்லை என்ற அவளிடம் கதை சொல்லவா என்று கேட்டு பாட்டி வடை சுட்ட கதையை சற்று மாற்றி சொல்லியது தான்...! :) :) அப்பொழுது அவள் பதினொன்றாம் வகுப்பு..!
அந்த வயதிற்கே உண்டான குறும்புடன் அவள் இருக்க....அந்த குறும்பு தனத்தை உடைய ஒரு தோழியை நான் அப்பொழுது எதிர்ப் பார்த்திருக்க....மானசீகமாக அவளுடன் நெருக்கமாக விரும்பினேன்...!

பின்பு ஹைதராபாத் வாழ்க்கை என் நினைவுகளை புரட்டிப் போட்டு விட்டது...ஆனாலும் என்னுடன் தொடர்பில் இருந்தாள் என் இசை நாயகி....ஏனோ சில பெண்களுடன் நான் உடனடியாக காதல் வயப் பட்டு விடுகிறேன்....பின்பு அவர்களிடம் இருந்து வெளியேற மிகவும் சிரமப் படுகிறேன்...அதே போலத் தான் இந்த இசை நாயகியிடம் காதல் வயப் பட்டு இருக்கிறேன் என்பதைக் கண்டு கொண்டேன்....ஆனால் சாத்தியம் இல்லாத விஷயங்களைப் பற்றி நான் அதிகம் அலட்டிக் கொள்வது கிடையாது....ஹைதராபாத்தில் இருந்து சென்னையில் உள்ள ஒரு பெண்ணிடம் வெறும் மின்னஞ்சல் முகவரி மட்டும் தெரிந்து கொண்டு காதல் வளர்ப்பதின் சாத்தியங்கள் அறிந்து கொண்டதால்..சற்று வருத்தத்துடன் தான் அவளை நான் பட்டியலில் வைத்து இருந்தேன்...


பின்பு வாழ்க்கை தன வழியில் பயணிக்கத் தொடங்கியிருந்தது...ஆனாலும் என்னுடன் தொடர்பில் இருந்த அத்துனை பெண் தோழிகளுடனும் நான் தொடர்பில் இருந்தேன்...குறிப்பாக இசை நாயகியுடன் மிகுந்த நெருக்கமான தொடர்பில் இருந்தேன்....ஆனால் அது வலையிநூடக மட்டுமே என்றளவில் இருந்தது......இப்படியான ஒரு காலத்தில் தான் ஹைதராபாத் வேலை காலியாகி தாய்நாட்டிற்கு திரும்ப வர வேண்டிய சூழ்நிலை...

இடையில் சில மாதங்கள் இசை நாயகியுடன் தொடர்பு அறுத்து விட்டது....அவளும் கல்லூரியின் வாயிலில் அடி எடுத்து வைத்திருந்தாள்...தமிழகத்திற்கு திரும்பிய பிறகு ஒரு நாள் வலை அரட்டையில் அவளைத் தொடர்பு கொண்ட பொழுதுதான் தெரிந்தது...அவளை சில மாதங்களாக துரத்தி தன காதலை வெளிப் படுத்திய ஒரு
கலாபக் காதலன் அவளின் மனத்தைக் கொள்ளை கொண்டிருந்தான் என்று...

எல்லாமே எனக்கு வேண்டும் என்று அழும் குழந்தை அல்ல நான்...ஆனாலும் சின்ன வருத்தம் மனதில் நாம் எங்கோ சறுக்கி இருக்கிறோம் என்று. பின்பு வேலை வெட்டி
இல்லாமல் வலையிலேயே உலவிக் கொண்டு தினமும் அவளிடம் மின்னரட்டை அடித்துக் கொண்டு ஆர்குட்டில் புதிய நண்பர்களை பிடிப்பது நண்பர் வட்டத்தை சந்திப்பது , வலைப் பதிவு ஆரம்பித்தது என்று நாட்கள் மிக இனிமையாக போய்க் கொண்டிருந்த காலம் அது..

எனது இசை நாயகியுடன் சேர்ந்து அவளின் காதலனும் வலை அரட்டையில் எங்களுடன் கலந்து கொண்டான்... எல்லாம் சில மாதங்களுக்கு பின்பு காணவில்லை...என்னை தன்னுடைய ஆர்குட் நண்பர் பட்டியலில் இருந்தும் நீக்கியிருந்தாள் என் நாயகி. ஏழு வெவ்வேறு பெண்களுடன் அப்பொழுது சுற்றிக் கொண்டிருந்ததால் வலையில் மட்டும் இவளை சந்திக்கும் இவளை சற்று மறந்து தான் போனது...ஆனாலும் எப்பொழுதெல்லாம் வலையில் இருக்கிறேனோ அப்பொழுதெல்லாம் மின்னஞ்சல் செய்து கொண்டே இருப்பேன்... பதில்தான் இல்லை அவளிடத்தில்.

2 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

gautam yet another classic ......

ஹேமா சொன்னது…

லெமூரியன் சுகம்தானே.நானும் நல்ல சுகம்.

போன வாரம் முழுதும் குழந்தைநிலாவில் (நீங்க அங்க வாறதில்ல )தமிழ்மண நட்சத்திரப் பதிவுகள்,3 நாள் பரீஸ் பயணம்.
கொஞ்சம் ஓய்வெடுப்போமெனச் சும்மாதான் உங்கள் தளம் வந்தேன்.
நிறையவே எழுதியிருக்கிறமாதிரி இருக்கு.இபோதான் முதல் பதிவு
வாசித்தேன் !

ம்ம்ம்...காதல்.உங்களின் இந்தப் பதிவைப் பார்த்தால் விளையாட்டாகக் காதலிப்பீர்களா இல்லை மனதில் ஆழமாகக் காதலிப்பீர்களா என்கிற சந்தேகம் எனக்கு.விளையாட்டாகக் காதலித்தால் மனதில் வேதனை இருக்காது.தொலைந்த காதலை திரும்பவும் தேட வராது.ஆழமாகக் காதலித்தால் இன்னொரு காதல் உடனடியாக வராது.இதில் நீங்கள் எந்தமாதிரியென்று நிதானிக்கமுடியவில்லை !