ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

மனங்களை(மலர்களை) கொன்றவன்(கொண்டவன்)!

நண்பன் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தான்..! அதில் சில உரலிகள் இணைக்கப்பட்டிருந்தது..! பார்த்துவிட்டு பதில் போடும்படி சொல்லியிருந்தான்...
உரலிகளை சொடுக்கி பார்த்த பொழுது அதிர்வின் விளிம்பிற்கு சென்று மீண்டேன்...அந்தரங்கமான பொழுதினில் காதலர்கள் அல்லது கணவன் மனைவி தங்களுடைய அலைபேசியில் உள்ள படமெடுக்கும் கருவி கொண்டு தங்களையும் அவர்கள் உறவு கொள்வதையும் படம் பிடித்திருக்கிறார்கள்...அதில் ஒரு காதலி பாத்துட்டு டெலிட் பன்னிருடா என்று அன்பொழுக கேட்டுகொள்கிறாள்....அனைத்தும் தங்க தமிழ் தமிழச்சிகளும் தமிழ் மகன்களும்தான்..

பரஸ்பர நம்பிக்கையுடன் வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி கொண்டிருப்பவர்கள் அவர்கள் ...அவர்களில் யாரும் பொருப்பாகமாடார்கள் அந்த படகாட்சி இணையத்தில் வந்ததற்கு...பின்பு எப்படி என்பர்வகளுக்கு....மின் சாதன பொருட்கள் எப்பொழுதும் நீண்டநாள் உழைக்கும் தன்மை கொண்டதில்லை...அப்படி பிரச்சினைகள் வரும்பொழுது அலைபேசிகள் வேறொரு கைகளுக்கு போகிறது குறைபாடுகளை சரிசெய்ய...அப்படி செல்லுமிடத்தில் RETRIVE என்ற சாப்ட்வேரை கொண்டு அலைபேசிகளில் அழிக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் தரவிறக்கம் செய்யப்பட்டு பின்பு இணையத்தில் உலவவிட படுகிறது...இதில் வருத்தமான விஷயம் சமந்தபட்டவருக்கே இந்த விஷயம் தெரியுமா என்பதுதான்...தெரிய வரும்பொழுது எப்படி எதிர்கொள்வார்கள் என்று நினைக்கும்பொழுது நிறைய அதிர்வுகளை கொள்கிறது மனம்....

மனங்களை கொன்றாலும் அது கொலைக்கு சமம் தான்....இறந்த மனம் கொண்டவர்கள் நடைபிணம் என்று கூறிகொள்கிரார்கள்...கொள்ளபடுகிறார்கள்..

பெரிதாக கவனம் கலைக்கும் அழகு கிடையாது அவள்...ஆனால் உற்று நோக்கினால் கண்களில் குறும்புத்தனத்தை தாங்கி செல்பவள் அவள்...திரைப்படம் போல இருந்தாலும் உண்மையாக நடந்தது...அவளுக்கு சிறு வயதிலேயே தாய்மாமன் ஒருவனை பேசி வைத்திருந்திருக்கிறார்கள்...அவன் அவள் மேல் மிக மிக அக்கறையாக இருந்தான்...அவளை எங்கும் வெளியில் செல்ல விடுவதில்லை...கல்லூரி விட்டால் வீடு வீடு விட்டால் கல்லூரி என்ற வட்டத்தினுள்லையே தான் சுற்றி வந்தாள்....என் கண்களில் சிக்கும்வரை.....

வீட்டிலும் பெரிதாக அவளிடம் அக்கறை காட்டப்படவில்லை போதாக்குறைக்கு இந்த தாய்மாமனின் அன்புத் தொல்லை(சந்தேகம்) வேறு....இதெல்லாம் எனக்கு தெரிய வருவதற்கு முன்னமே அவளை வீழ்த்தியிருந்தேன்...! கல்யாணம் செய்துகொள்கிறேன் என்று ஆசை வார்த்தை கூறி மோசம் செய்பவனல்ல நான்...பழக ஆரம்பிக்கும்போதே தெளிவு படுத்திவிடுவேன் பெண்களிடம் பொதுவாக...அவர்கள் என்னிடம் பழகும் வரையறையை பொருத்து.

காதல் எப்பொழுதும் யாரிடம் வேண்டுமானால் வரலாம்..! புனிதம் அல்லது உடலாசை என்று வேறுபடுத்துவது அவரவர் மனநிலையை பொருத்தது..எனக்கு அவளிடமும் அவளுக்கு என்னிடமும் காதல் இருந்தது..ஆனால் அது கல்யாணம் என்ற உறவைக்கொண்டு கட்டுபடுத்தக் கூடிய காதல் அல்ல....

அந்தரங்கமான பொழுதினில் இப்பொழுது நாமிருவரும் கையும்களவுமாக மாட்டினால் என்ன நடக்கும் என்று அவளிடம் கேட்டேன்...சிரித்துக்கொண்டே நமக்கு கல்யாணம் நடக்கும் என்றாள்..ஆனால் நான் கல்யாணத்தை பற்றி யோசிக்கும் நிலையில் இல்லையே என்றேன்...நானும் கூட என்றாள்...

நான் சொன்னது போலவே நடந்தே விட்டது...அதுவும் அவளின் தாய்மாமனிடம்...அவனுக்கு ஒரு சிறு சந்தேகம் என்னிடத்தில் இருந்திருக்கிறது...அதை ஊர்ஜிதபடுத்த அவன் முயற்சிக்கையில் அது உண்மையாகிப் போனது...எனது வீட்டில் இருந்து அவள் வீடு வரை தெருவில் அடி வாங்கிய படியே இழுத்துசெல்லப் பட்டாள்....என்னால் ஒரு வார்த்தை கூட கேட்க்க முடியவில்லை...

ஒரு பெண்ணை அதுவும் இப்படி நடுத்தெருவில் இழுத்து செல்லும்பொழுது கேள்வியெழுப்ப முடியாமல்...நான் ஆண்தானா என்ற குற்ற உணர்விர்க்குள்லானேன்...வெட்டுவேன் குத்துவேன் என்று அவளின் சொந்தபந்தகள் கொதிதெளுந்தார்கள்..நான் நண்பனின் வீடிற்கு சென்றுவிட்டேன்...என் பயமெல்லாம் அந்த பெண்ணின் வாழ்க்கை என்னால் பாழாகிவிடுமே என்பதுதான்....மேலும் கல்யாணம் என்ற விஷயத்தை நினைக்கவே குழப்பமாகி இருந்தது அப்பொழுதைய மனநிலை..

விஷயம் காவல் நிலையம் சென்றபொழுது...எனக்கும் அவளுக்கும் நட்பு ரீதியிலான பழக்கம் மட்டுமே என்றேன்...மேலும் அவள்தான் என் வீட்டிற்க்கு வந்தாள் என்றேன்....என் கண்களை அவள் பார்க்கவே இல்லை...அவளிடம் கேட்ட பொழுதும் நான் சொன்ன விஷயத்தையே சொன்னாள்...விஷயம் முடிந்து போனது...நான் அந்த பகுதியிலிருந்து கிளம்பி வந்துவிட்டேன்...வேறொரு பகுதிக்கு...வேறொரு வசிப்பிடம்...

அதன்பின்பு நான் கேள்விப்பட்ட விஷயம் அவளின் தாய்மாமன் அவளை கல்யாணம் செய்யவில்லை...அவளின் கல்லூரி படிப்பும் நிறுத்தப்பட்டது....பின்பு யாரோ ஒருவனின் மனைவியாகிபோனாள் என்று ...

முதல் மனதை கொல்லும் கொலையை கச்சிதமாக செய்திருந்தேன்...கேவலமான ஒரு மனிதபிறவி நான் என்ற குற்ற உணர்வுடன்...



அவள் செய்த தப்புக்கு அவளின் தந்தை எப்படி பொறுப்பாக முடியும் . அவரை கேட்டா என்னை அவள் காதலித்தாள்?? என்ற கேள்வியோடுதான் கேரளாவில் இருந்து பயணத்தை தொடங்கினேன்...(இது கொலைமுயற்சியின் நீட்சி..)

கேவலமான ஒரு மனிதப் பிறவி நான் என்பதை இன்னும் முழுமையாக நம்பத் தொடங்கினேன்...அவள் எனக்கு அலைபேசியில் அழைத்து அவளுக்கு இன்னும் இரு மாதங்களில் திருமணம் என்று சொன்ன பொழுது.....நல்ல வேளை உன்னை போன்ற ஒருவனிடம் மாட்டி என் வாழ்க்கையை சிதைக்க யோசித்திருந்தேன் என்றாள்.....

இந்த வேலையும் இந்த பணமும்தானே உன்னை என்னிடம் இருந்து வேறுபடுத்தி காட்டுகிறது....இதுதானே ஒருவரின் உயரத்தையும் ஒருவனின் தாழ்மையும் வேறுபடுத்துகிறது...இது தானே உன்னிடத்தில் கட்டில் மாறும் தைரியத்தை கொடுக்கிறது....அப்பொழுது தண்டனைக்குரியவள் நீயே....நல்ல வேளை உன் தந்தையை கொன்று மேலும் பாவம் சேர்க்கவில்லை என்று எண்ணிக் கொண்டேன்.....

யானைக்கும் அடி சறுக்கும்....அவள் பார்த்த வேலையை அவள் மிகவும் நேசித்தாள்....ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் நாற்பதுக்கு மேற்பட்ட ஆண்களை மேய்க்கும் ப்ராஜெக்ட் லீடாக இருந்தாள்...அவளுக்கும் அவளின் சம பதவியிலுள்ள வேறொரு ஆணுக்கு ஆகவே ஆகாது....இருவரும் சமயம் பாத்து காத்திருந்தார்கள் ஒருவரை ஒருவர் காலை வாருவதற்கு....

அவள் என்னை தூற்ற தூற்ற அவளை பழிவாங்கியே தீர வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கிக்கொண்டே இருந்தது...பழி தீர்க்க சமயம் பார்த்து கொண்டிருந்த பொழுதுதான்...நியபகத்திர்க்குள் வந்தது நானும் அவளும் சேர்ந்து எடுத்துக்கொண்ட அந்தரங்கமான புகைப் படங்கள்...

முகத்தில் ஒரு வெற்றிபுன்னகயோடு அந்தப் படங்களில் ஒன்றை மட்டும் (அது ரொம்ப அந்தரங்கமான ஒன்று அல்ல ) அவளின் எதிரியான அந்த ஆணிற்கு அனுப்பிவைத்தேன்......சிறிது நேரத்தில் அவளிடம் இருந்து அழைப்பு வந்தது...கடும்கோபத்துடன் கேட்டாள் ஏன் அப்படி செய்தாய் என்று...பலமாக சிரித்தேன்....நீ வேசிமகன் என்றாள்....நீ முதலில் உன் தாயிடம் உறுதிபடுத்திக் கொள் என்றேன்...மீதி புகைப் படங்களை தந்து விடு என்று கெஞ்சினாள்....முடியாதென்றேன்.....உறுதியாக சொன்னாள்....இந்த படத்தால் தன் வேலையோ தன் மண வாழ்க்கையோ பாதிக்கப்படபோவதில்லை என்றும் உன்னை விட சந்தோஷமாகவும் உயர்ந்த நிலையிலுமே தன் வாழ்க்கை இருக்கும் என்றாள்........கொஞ்சமிருந்த மதிப்பையும் இழந்து என் மனதில் மறக்க வேண்டிய ஒரு பொருக்கி தெரு நாயாகிவிட்டாய் என்றாள்.....இனி இது போல் பொட்டைத்தனமாக வேறெந்த பெண்ணின் வாழ்விலும் விளையாண்டுவிடாதே என்றாள்..!

எதையோ வென்று விட்டதாய் நினைத்து இரண்டாம் மனதை கொல்வதிலும் கச்சிதம் கான்பித்துருந்தேன்..!


செய்த தவறுகளை திருத்திக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும் போது அதை பயன்படுத்தி பக்குவபடுதலே மனித வாழ்க்கையின் வாழ்வின் அர்த்ததிர்க்குல்லானதாக மாற்றும் என்பது என் எண்ணம்...

பொதுவாக நான் நெருங்கிப் பழகிய அத்தனை பெண்களுடனும் மிக மிக அந்தரங்கமான பொழுதுகளில் எடுக்கப்பட்ட புகைப் படங்கள் என் கணினியில் பூட்டப்பட்ட ஒரு போல்டரில்(locked folder) இருக்கிறது...இன்றும்...

மிருக ஜாதியில் தோன்றியதுதான் மனிதயினமும்...அது கடவுளும் மிருகமும் ஒரு சேரப் பெற்ற ஒரு ஜாதி..அதில் உள்ள கடவுள் வெளிப்படும் நேரமும் மிருகம் வெளிப்படும் நேரத்திற்கு உள்ள கால இடைவெளி மிகக் குறைவே...

நான் மீண்டும் மிருகமாகமாட்டேன்..! இந்த பதிவை எழுதிமுடித்த பொழுது என்னிடம் இருந்த என்னுடன் பழகிய பெண்களின் அந்தரங்க புகைப் படங்கள் அனைத்தையும் அழித்திருந்தேன். நான் மனிதன். மனிதம் பழகி இன்புற்றிருக்க விரும்புபவன் .

12 கருத்துகள்:

காமராஜ் சொன்னது…

ஒரே த்ரில்லாக இருக்கிறது தம்பி லெமூரியன்.எழுதத்தொடங்கியது மகிழ்ச்சியாக இருக்கிறது.

ஹேமா சொன்னது…

உங்களை மதிக்கிறேன் லெமூரியன்.நன்றி.படிக்கும்போது கசப்பு,புளிப்பு,உவர்ப்பு இப்படியான பல உணர்வுகள்.மனிதம் பழகவேண்டாம்.அது உணர்வோடு கலந்துவிட்டாலே போதும் !

உரலி..நல்லதொரு தமிழ்ச்சொல்.

பெயரில்லா சொன்னது…

hi gautam.happy ramzan. may be ur different love experiences made u more romantic

vinthaimanithan சொன்னது…

மனசுக்குள்ள ஏதோ ஒரு மெல்லிய இடத்துல உங்களை நெருக்கமா உணர்றேன் லெமூரியன். உங்க புனைப்பெயரும்கூட ஒரு காரணமோ? ஏற்கனவே கேஆர்பி அண்ணன் பதிவில் எனது 'இந்தியா' பயோடேட்டாவின் போதே உங்கள் பின்னூட்டம் என்னை ஈர்த்தது. ஏனோ உங்கள் தளத்தை கவனிக்காமலேயே இருந்துவிட்டேன். இன்றுதான் வர நேர்ந்தது.... நன்றாய் இருக்கின்றது

Kannan சொன்னது…

your blogs are so arranged,structured and in-depth very nice of you lemurian

லெமூரியன்... சொன்னது…

வணக்கம் காமராஜ் அண்ணா...!
உண்மையில் நான்தான் மிகவும் பயந்து போயிருந்தேன்
கடிவாளத்தை கட்டவிழ்த்து கொண்டு தடம் மாறிவிடுமோ மனது என்று..!

லெமூரியன்... சொன்னது…

வாங்க ஹேமா..!
சந்தோசம்..! உங்களிடம் கொஞ்சம் மதிப்பை தக்க வைத்துக் கொண்டுள்ளேன் :)

லெமூரியன்... சொன்னது…

வணக்கம் பெயர் சொல்லா தோழனே..!
:) :)
என்னை +ive பக்கத்தில் காணும் ஒரே நபர் நீங்கள்தான் :) :)

லெமூரியன்... சொன்னது…

வணக்கம்
விந்தை மனிதன்...!
சந்தோஷமா இருக்கு
உங்களை போன்ற தோழர்கள் என் வலைப் பூவை மேய்ந்து விட்டு செல்லும்பொழுது.....
நன்றி தோழா..!

லெமூரியன்... சொன்னது…

வாங்க பிரேமா..!
உங்களுடைய கருத்துரை ரொம்ப சந்தோஷத்தை தருது...!
நன்றிகள் பல தோழர் பிரேமா..!

மாலா வாசுதேவன் சொன்னது…

அன்பு லெமூரியன் என் blog address மாறியுள்ளது - http://personaldiaryofpadma.blogspot.com

மேலும் தங்களின் இடுகைகள் prema சொன்னது போல் மிகவும் structured ஆக உள்ளது. வாழ்த்துக்கள்

பெயரில்லா சொன்னது…

hi gautam,how long should i wait?pls post