வெள்ளி, 20 ஆகஸ்ட், 2010

ஒரு கொலை முயற்சியும்..அதன் நீட்சியும்...(பாகம் இரண்டு )

அன்று அதிகாலை ஆகும்பொழுது எல்லாம் ஒரு நேர்கோட்டில் சந்தித்த மாதிரி ஒரு தெளிவு பெற்ற நிலை போன்ற உணர்வது...காரணங்கள் என்று அலசி பார்க்கும்போதும் என் பக்கத்தில் இருந்து மட்டுமே யோசிக்க முடிந்தது....ஏனென்றால் பாதிக்கப்பட்டது நான் மட்டுமே, என்ற எண்ணம் மனதை முழுவதும் ஆக்கிரமித்து இருந்தது..

என் மேல் இருந்த கோபம் மற்றும் சமுதாயத்தின் பால் இருந்த கோபம்...மற்றும் என் இயலாமை போன்ற காரணங்கள் அனைத்தும் கடைசியில் கை காட்டியது அவளின் தந்தையை....மூன்று தலைமுறையாய் அந்த குடும்பத்தில் பெண் குழந்தை பிறக்காமல் போய் நான்காவது தலைமுறையில் பிறந்து தேவதையாய் மாறி மொத்த குடும்பத்தின் ஆசிர்வதிப்பிர்க்கு உள்ளான என்னவளின், பாசமிகு தந்தை...

ஏனோ அவரின் நடவடிக்கைகள் ஆரம்பம் தொட்டே தன் மகள் என் கைக்கு வந்து விட கூடாது என்ற ஒரு என்ன ஓட்டதிநூடையே செயல்படுத்தியது போன்றே அமைந்தன...அனைத்தும் சேர்ந்து எல்லாவற்றிற்கும் மேலாக என்னை ஒரு கேவலமான பிறவியாக அந்த தேவதையிடம் உணர்தியத்தின் மிக முக்கிய பங்கு அவரையே சார்ந்தது என்று தெரிந்ததால்....முடிவு செய்தேன் அவரை கொலை செய்து விடுவதென்று....

அவள் வாழ்நாள் முழுவதும் கதறி அழ வேண்டும் என்ற ஒரு கூருர எண்ணம் மனதில் தோன்றிய பொழுதே அவ்வளவு ஒரு பரவசம் கொண்டது மனது....அவள் தந்தை இறந்த உடன் அவர் உடலை பார்த்து அவள் கதறி அழுவதை ஒளிந்திருந்து ரசிக்கவேண்டும் என்றும் தீர்மானித்து கொண்டேன்...ரத்த ஓட்டத்தில் அவ்வளவு ஒரு வேகம் உடல் முழுவதும் ஒரே பரவசம்...ஏதோ ஒரு பெரிய சாதனை செய்யபோவதாக ஒரு பிரம்மிப்பு மனதினுள்.....

ரயில்வே துறையில் பணியாற்றிக்கொண்டிருந்தார் என்னுடைய வில்லன் மாமனார்...கொச்சியில் இருந்து தினமும் இருபத்தைந்து கிலோமீட்டர்கள் பயணம் செய்தால்தான் அவர் பணிபுரியும் ரயில்நிலையம் வரும்....கொச்சியில் வேலை செய்த உடன்பயின்ற நண்பனின் உதவியோடு அவனின் வண்டியை வாங்கிக் கொண்டு முதல் நாள் பின் தொடர்ந்து சென்றதன் விளைவு தூர வித்தியாசங்கள்....மற்றும் அவர் காலை அலுவலகம் வந்து மற்றும் மாலை வீடு திரும்பும் நேரம் சரியாக கணிக்க முடிந்தது....

இரண்டு நாட்கள் பின்தொடர்ந்ததன் விளைவு, சம்பவம் அரங்கேற்ற வேண்டிய இடமும் தெரிவு செய்யப் பட்டது...அது சற்று மக்கள் நடமாட்டம் அற்ற பகுதி...மேலும் நெறைய மரங்கள் சூழ்ந்த பகுதி...இதுவே ஏற்ற இடம் என்று முடிவு செய்துகொண்டேன் மனதினுள்...அன்று இரவு நிறைய குடித்தேன்....மனது ஏனோ பாரமாக இருந்தது....அழுத்தம் அதிகமாகிக் கொண்டே இருந்தது....நியாய தர்மங்கள் என் முன் தராசு தட்டில் ஆடிக் கொண்டிருந்தன...ஆனாலும் இடையிடையில் அவளின் முகம் தெரியும்பொழுது எல்லாம் அனைத்தும் மறந்து போய்விடும்....தீர்க்கப் பட வேண்டிய அசுரனாகவே தெரிந்தார் அவளின் தந்தை...

அன்று இரவுதான் நண்பனிடம் நான் போட்டிருக்கும் திட்டத்தினை விளக்கி கூறினேன் .....அவர் தன்னுடைய ஹோண்டா ஆக்டிவாவில் செல்லும்பொழுது நண்பனின் மாருதி ஓம்னி வண்டியை கொண்டு பின்னால் இடித்து சாகடிப்பதே என்னுடுடைய திட்டம்..நண்பன் அரண்டு விட்டான்...சமாதான படித்தினேன்...எல்லாம் நல்ல படியாக முடியும் நான் பொறுப்பு என்று உறுதி கூறினேன்...அந்த நள்ளிரவுக் குளிரிலும் அவனுக்கு உடல் நடுங்கி வேர்த்துக் கொண்டிருந்தது.....

அடுத்த நாள் நண்பன் வேலைக்கு போகவில்லை....நானும் வெளியில் எங்கும் போகவில்லை....கொஞ்சம் மது அருந்தினால் தேவலை என்று தோன்றிய பொழுது நானும் நண்பனும் கொஞ்சம் மது அருந்தினோம்....இரவாக ஆரம்பித்த பொழுது கிளப்பினோம் ஒம்னியை....வழிநெடுக ஏனோ அம்மா அப்பா நியாபகம் வந்து கொண்டே இருந்தது...நண்பன் வேறு கண்டிப்பாக இப்படி செய்ய வேண்டுமா என்றான் இரு முறை.....

எட்டரை மணிபோல என்னுடைய வில்லன் மாமனார் பணிசெயும் இடத்திற்கு சென்றடைந்தோம்...சென்ற பத்தாவது நிமிடத்திலேயே மாமனார் வெளியே வந்து வண்டியை கிளப்பிவிட்டார்....குறிப்பிட்ட இடைவெளியில் அவரை பின்தொட்ரந்தோம்...சில இடங்களில் எங்களுடைய வண்டியின் முகப்பு விளக்குகளை அனைத்து விட்டோம்....சம்பவம் அரங்கேற்ற குறிக்கப் பட்ட இடமும் நெருங்கிக் கொண்டே வருகிறது....அங்கு ஒரு மனித தடயமும் இல்லை...ஒரு வாகனமும் கடக்கவில்லை...எல்லாம் திட்டமிட்ட படி சரியாக சென்றுகொண்டிருக்கிறது...சில மீட்டர்கள் தூரத்தான் அவருக்கும் எங்களுக்கும்....வண்டியின் வேகத்தை அதிகரிக்க சொல்கிறேன் நண்பனிடம்....அவனும் வேகத்தை கூடி விட்டான்....ரத்த நாளங்கள் வெடித்துவிடும் அளவிற்கு ரத்த ஓட்டம் தாறுமாறாக இதயத்தில்...நெருங்கிவிட்டோம் அவரை...கண்களை மூடிக் கொண்டேன் ஒரு நிமிடம்...ஒரே ஒரு நிமிடம் தான்....அப்பாவும் தங்கையும் வந்து போனார்கள் நினைவில்....கண் விழித்த பொழுது முன்னே செல்வது அப்பா போலவே தோன்றியது.....நண்பனின் காலோடு சேர்த்து பிரேக்கை அழுத்தி மிதித்தேன்....தேய்த்து கொண்டே வண்டி திரும்பி சற்று நிலை தடுமாறி நின்றுவிட்டது....அவர் சென்று கொண்டே இருக்கிறார்....

நண்பன் ஏதும் பேசவில்லை என்னிடம்....நானும் கூட......அன்றிரவு குடிக்கவில்லை....ஏனோ நன்றாக உறங்கினோம்...அடுத்த நாள் காலை கேரளா மண்ணிற்கு விடை கொடுத்து கிளம்பிவிட்டேன் தாய்நாட்டை நோக்கி....
இன்றும் என் வில்லன் மாமனார் சந்தோஷமாக பேரன் மார்களை கொஞ்சி விளையாடிக் கொண்டிருக்கிறார் தன் தேவதை மற்றும் தேவதையின் அமெரிக்க கணவனோடும்....

12 கருத்துகள்:

காமராஜ் சொன்னது…

இன்னும் அழுத்தமாகச் சொல்லி ஒரு சிறந்த சிறுகதையாக்கி இருக்கலாம். அல்லது நினைவடுக்குகளில் சேர்த்திருக்கலாம்.ஆனாலும் ரொம்பத்தில்லுதான்.முயர்சியைச்சொல்லவில்லை எழுதியதைச்சொல்லுகிறேன்.

லெமூரியன்... சொன்னது…

வணக்கம் காமராஜ் அண்ணா....!
ஹ்ம்ம்.....எனக்கும் தோன்றியது இன்னும் அழுத்தம் கொடுத்திருக்கலாமோ என்று...!

ஆனால் அன்னைக்கு அனுபவித்த உணர்வுகளை இப்பொழுது சற்று கால இடைவெளிக்கு பின்பு கொண்டுவருவதில் கொஞ்சம் சிக்கல்....
மேலும் சம்பவம் என்று சொல்லப்படும் நிகழ்வுகள் நடந்து ஒரு 6 ஆண்டுகள் ஆகிவிட்டபடியால் சற்று தொய்வு ஏற்ப்பட்டு விட்டதோ என்னவோ
:-) :-) :-)
மறுமொழிக்கு நன்றிகள் பல, அண்ணா...!

பனித்துளி சங்கர் சொன்னது…

ஆமா தலைவரே இது புனைவா ! ? இல்லை உண்மைதானா . எதற்கு கேட்க்கிறேன் என்றால் வில்லன் மாமனார் ஏதாவது பண்ணிடப்போகிறார் இதையெல்லாம் படித்தால் அதற்குதான் . நல்ல இருக்கிறது . அடுத்தப் பாகம் எப்பொழுது ? மீண்டும் வருவேன்

லெமூரியன்... சொன்னது…

வாங்க தோழர் பனித்துளி சங்கர் ...!
முக்கியமான விஷயம்...நான் காதலித்த பெண் மலையாள நாட்டை சேர்ந்தவள்....
பேச்சுத் தமிழ் மட்டுமே பரிட்சயம் உள்ளவள்.....அவளின் தந்தையும் கூட..!
:-) :-) :-)

ஆஹா....ஒரு முடிவோடதான் இருக்கீங்களா ??? :-) :-) :--)
கண்டிப்பா இன்னொரு தரம் தோல்வியை தழுவ மாட்டேன்...
அப்படி தழுவினாலும் மாமனாரை தூக்க மாட்டேன் இனி....
நேரா மாமியார்தான்... :-) :-)
தப்ப நினைச்சிடாதீங்க...(மாமியாரை கடத்திட்டு போயிடுவேன்) அப்டினுதான் சொன்னேன்...
அதனால அடுத்த பாகம் உருவான...அது இன்னும் சுவாரசியமா இருக்கும்...
:-)
வருகைக்கும் மறுமொழிக்கும் மிக்க நன்றி தோழர் சங்கர்(பனி துளி)

ஹேமா சொன்னது…

நாம் மனிதர்.தமிழர்.இதுதான் எம் இயல்பும் உண்மையும் லெமூரியன்.
நாம் கொடூரமானவர்கள் அல்ல !

லெமூரியன்... சொன்னது…

வணக்கம் ஹேமா...!
நலமா??
முதலில் மன்னிக்கவும்...
ஒரு மதிகெட்ட தருணத்தில் எடுத்த முடிவும்..அதைசெயர்ப் படுத்த கூடிய
குறைந்தபட்ச தைரியமும் அற்றவனாக நான் அலைந்த போது நிகழ்ந்த
சில நிகழ்வுகள் இது...
\\நாம் கொடூரமானவர்கள் அல்ல ! ........//
கண்டிப்பா இல்லை....
என்ன இப்படி சொல்லிடீங்க ஹேமா???
:-(

Chitra சொன்னது…

villain????? Sorry, I will come back later.....

ராசராசசோழன் சொன்னது…

லெமூரியன்... பனித்துளி சங்கரின் கவலையை பார்தீர்களா...உடன் பிறந்த உறவுகள் தப்பு செய்தலும்...நாம் விட்டு கொடுக்கமாட்டேம்...வாழ்த்துக்கள்...

லெமூரியன்... சொன்னது…

:-) :-) வணக்கம் தோழர் ராசாராசா சோழன்..!
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி..!
\\உடன் பிறந்த உறவுகள் தப்பு செய்தலும்...நாம் விட்டு கொடுக்கமாட்டேம்...//
அன்புக்கு அடி பணிகிறேன் தோழர்..!
:-)

பெயரில்லா சொன்னது…

u r a romantic person like goutam menon

லெமூரியன்... சொன்னது…

நன்றி பெயரில்லா பெயரில் வந்த தோழனே...!
:-)

பெயரில்லா சொன்னது…

hey goutam waiting for ur next post