வெள்ளி, 18 அக்டோபர், 2024

 இரண்டாயிரத்து ஒன்பதில் ஈழ போர் முடிந்த வேளையில்  எழுதியது .....ஏனோ வலையேற்றம் செய்ய தோன்றாமல் வைத்து விட்டேன்... 



காத்திருக்கும் அகதிகள்

நவயுக கடவுள்களாக புத்தரும் இயேசுவும் ஆயுதமேந்தி...

கொன்றழிக்க பெற்றன உலகின் தொன்மையான

இனமும் அதன் கடவுளும்..

இரத்த குளியலில் கடவுள்கள். ஆயினும் கோபம்

அடங்கவில்லை அவர்களுக்கு...

தொன்மையான இனத்தின் பெயரை சொல்லித் திரியும்,

கருங்காலிகள் வசிக்கும் இந்த பகுதிக்கும் ஆசைப் பட்டன

கடவுள்கள்..

கடவுள்களின் படை சூழ்ந்தது...கூடங்குளமும் கல்பாக்கமும்

தீண்டப் பெற்றன...

பஸ்பமானது கருங்காலிகளின் கூடாரம்,லெமூரியக் கண்டம்

இப்போது புத்தருக்கும் இயேசுவுக்கும் சொந்தமானது...

உடற்பாகங்கள் இழந்து குற்றுயிரும் குலையுருமாய்

அகதிகளாக ஆரிய தேசத்தை நோக்கி ஓடுகின்றன

கருங்க்காலிகளில் மீதி.....

காத்திருக்கின்றன கல்லறைகளும் அருங்காட்சியகமும்

இவர்களின் வாழ்வியலையும் கலாச்சாரத்தையும்

பற்றி பேச..!