சித்தனாவது போல ஒரு கனவு. வரக்கூடாத கனவல்ல அது..! அதிகாலைக் கனவு பலிக்காது என்ற கனவுபலன் நினைவோடு எழுந்து பார்த்தால் மணி எட்டரை..! என் பெயர் சக்தி. கற்பனையில் நினைப்பதை திரையில் கொண்டு வரும் ஒரு விளம்பர பட இயக்குனர் நான்.
பள்ளி நாட்களில் கற்பனைகளை பற்றிய ஒரு சிந்தனை கூட அற்று போயிருந்தேன் என்பதை இப்பொழுது நினைத்து பார்த்தால் சற்று விந்தயாகத்தான் இருக்கிறது..! இப்பொழுது கற்பனை பட்டறையில் வேலை. எனக்கென்று வேலை நேரம் கிடையாது. மனதும் உடலும் ஒரு நிலையில் இருக்கும் பொழுதெலாம் எனக்கு அது வேலை நேரம் தான்.
தென்னகத்தை சேர்ந்தவன் என்பதால், அதிலும் வீரம் பழகிய இனத்தைச் சேர்ந்தவன் என்பதால் இனப்பற்று ஊட்டப்பட்டு இருந்தேன் பள்ளி நாட்களில்.! அதலால் கனவு கற்பனை என்பதெல்லாம் வெள்ளித்திரையில் காண்பதோடு மட்டுமே முடிந்து போக கூடிய சங்கதி. நிஜத்தில் எனக்கு தெரிந்ததெல்லாம் ஹாக்கி விளையாட்டு மற்றும் முத்து ராமலிங்கத் தேவர். அந்த பள்ளி நாட்களில்.
கல்லூரி படிப்பு முடியும் தருவாயில் யதார்த்த
வாழ்வின் பிடியில் வந்து விழுந்து சற்று தத்தளித்து பின்பு கரை சேருவதுதான் பெரும்பான்மையான தென்னகத்து இழைங்கர்களின் வாழ்வுப் பாதை. காரணம் ஒன்றும் பெரிதாக கிடையாது. மொழி அறிவு சற்று கம்மியாகவே இருக்கும் தென்னக மாணவர்களுக்கு.
தமிழ் தோன்றிய முதல் மண் என்பதால் இயற்கையாகவே தென்னகத்து மக்கள் மற்றைய மொழிகளை ரசிப்பதில்லை. அதன் காரணமாகத்தான் இன்னும் பிரெஞ்சு ஹிந்தி ஸ்பானிசு போன்ற மொழிகளின் ஆதிக்கம் பழகவில்லை இந்த திராவிட பூமி. அதன் காரணமாகவே மற்றைய தமிழக பகுதி மாணவர்களுடன் போட்டி போட்டு வேலையை வெற்றி கொள்வதில்லை தென்னகத்து புலிக்குட்டிகள்.
இந்த புலிக்குட்டியும் அதில் ஒன்றென்பதால் நிறைய தத்தளித்தது அதன் வழியை தேடி கண்டு பிடிக்க..! பின்பு சிறுது காலம் உற்பத்தி துறையில் வேலை. ஆனால் மனதென்னவோ வேறொரு தேடுதல் தளத்தில் இயங்கிக் கொண்டிருந்தது.! என்ன தேடுகிறது என்பதை கண்டு முடிக்கும் பொழுது வாழ்வின் முக்கியமான நான்கு வருடங்களை இழந்திருந்தேன்.! யதார்த்த வாழ்வின் கடமைகள் என்னை பயமுறுத்திக் கொண்டிருக்கும் பொழுது எனது தந்தையை இழந்தேன்.
இந்த உலகில் யாரையும் நம்ப வேண்டாம் என்ற கடைசி வார்த்தையுடன் இவ்வுலகம் பிரிந்தார் என் தந்தை, தோல்வியை தழுவி விட்டோம் இவ்வாழ்வில் என்ற நீங்கா ரணத்துடன்.
பிடித்தம் அற்றுப் போனேன் வாழ்வின் மீது. ஆனாலும் வாழ வேண்டிய கட்டாயம். வேலையை காதலிக்க ஆரம்பித்தேன். காதல்??? மறந்தே போய்விட்டேன் இந்த தலைப்பை. எல்லார் வாழ்விலும் வந்து செல்லும் இந்த காதல் என் வாழ்விலும் ஒருதலை காதலாக வந்து சென்றது.
என் கனவுகளுக்கும் கற்பனைகளுக்கும் சிறிய வித்தாக இந்த ஒரு தலை காதல்கல்தாம் காரணம் என எண்ணுகிறேன் இப்பொழுது. :)
இன்றைக்கு ஒரு முக்கியமான ரீ ரெகார்டிங் இருக்கிறது.
வேலையை முடித்து விட்டு அடுத்த பாகத்தில் சந்திக்கிறேன்..! :)